எனது நாட்குறிப்புகள்

Archive for திசெம்பர், 2009

எச்சரிக்கையா சாபமா

Posted by ம​கேஷ் மேல் திசெம்பர் 22, 2009

எச்சரிக்கை
சாபமாய்
தப்பர்த்தப் படுத்துவதற்கான
வாய்ப்பு
எப்பொழுதும்
எதிர்பார்ப்புகளுக்கும்
எதார்த்தர்த்திற்கும்
இடையே
ஊசலாடிக் கொண்டிருக்கிறது

Posted in கவிதைகள் | Leave a Comment »

கவிதை பக்கங்கள்

Posted by ம​கேஷ் மேல் திசெம்பர் 18, 2009

இலக்கிய இதழின்
கவிதைப் பக்கத்தை
திறக்கும் பொழுது
எனக்குள்
அவை புரிபடுமா
என்ற பயம்
புரிய வேண்டுமே
என்ற தவிப்பு
புரியாத முதல் கவிதையால்
அந்த பக்கத்தின்
அனைத்துக் கவிதைகளையும்
தவிர்த்து
அடுத்த பக்கத்திற்கு
திருப்பும் அவசரத்தில்
தோல்வியின் வெறுப்பு

Posted in கவிதைகள் | Leave a Comment »

யுத்த காண்டம்

Posted by ம​கேஷ் மேல் திசெம்பர் 5, 2009

இராமாயணம் தொடர்கிறது . . .

மீண்டும் யுத்த காண்டம்
இம்முறை
இராவணப் படையால்
இராமன் கொல்லப்பட்டான்

இராமனின் பெயரால்
சீதை சபதமேற்றாள்

ஆரிய சூழ்ச்சி வென்றது
போர்களத்தில்
இராவணன் வீரமரணமடைந்தான்

கதைக்களம் அதே தான்
காரண காரியங்கள் மாறின
யுத்த காண்டம் முடிவதில்லை

ஆரியம் திராவிடம்
பெளத்தம் சைவம்
தொழிலாளி முதலாளி
பிரிவுகள் ஒழிந்து
மானுடச் சமுத்திரமாய்
மனிதகுலம் எழும்வரை!

Posted in கவிதைகள் | Leave a Comment »