எனது நாட்குறிப்புகள்

Archive for ஜூன், 2010

உன் இல்லாமையில் ஏங்குகிறேன்

Posted by ம​கேஷ் மேல் ஜூன் 22, 2010

எல்லோரும் நம்புவது போல்
நீ மட்டும் உண்மையில் இருப்பாயானால்
வாழ்க்கை எத்தனை சுலபமானதாய் இருந்திருக்கும்!

நீ இருப்பதாய்
உளமார ஒரு முறை நினைத்துவிட்டு
இல்லாததை உணரவரும் பொழுது
வாழத் தகுதியற்றவனாய்
வாழ்க்கை என்னை வாட்டி வதைக்கிறது!

“நல்ல புத்தியைக் கொடு”
உன்னை நோக்கிய ஒரு பிரார்த்தனை போதுமே
ஒழுக்கத்தை ஓம்புதல்
இந்த உலகில் எத்தனை சுலபமாகிவிடும்!

“நல்ல ஆரோக்கியத்தைக் கொடு”
உன்னை நோக்கி இறைஞ்சும்
ஒரு வாக்கியம்
என்னுடைய
கடும் பயிற்சிகளையும் கட்டுப்பாடுகளையும்
அவசியமற்றதாக்கி இருக்குமே!

“நல்ல படிப்பைக் கொடு”
உன்னை நோக்கிய
ஒரு விண்ணப்பம்
கணினியில் இட்ட வட்டில்
கோப்புகளை பதிவு செய்வது போல்
என் மூளையை நிரப்பியிருப்பாயே நீ
படிப்பறிவுக்கும் பட்டறிவுக்குமாய்
வாழ்க்கை முழுவதுமான ஒரு போராட்டம்
புறங்கையால் தள்ளப்பட்டிருக்குமே!

“எல்லோரையும் நல்லபடியாய் வை”
எத்தனை சுலபமான வார்த்தைகள்
காணச் சகிக்காத பெரும் புரட்சிகளை
கண்டு வெல்லாமலேயே
உலகம் உய்த்துவிடுமே!

நீ இல்லாததில்
எனக்கு எந்த சந்தோசமுமில்லை
உன் இல்லாமையில் ஏங்குகிறேன்

January 27, 2000

Posted in கவிதைகள் | Leave a Comment »

சகுனம்

Posted by ம​கேஷ் மேல் ஜூன் 22, 2010

வேகமாக வந்த காருக்கு
குறுக்கே பாய்ந்த பூனை
நசுங்கிச் சாவு

November 27, 2009

Posted in கவிதைகள் | Leave a Comment »

பிரார்த்தனை

Posted by ம​கேஷ் மேல் ஜூன் 19, 2010

“மூளையை நம்புவதைவிட
முழங்காலை நம்பு”
சரிதான்
முழங்காலை இயக்குவதற்கேனும்
மூளை வேண்டுமே
மூதேவி!

Posted in கவிதைகள் | Leave a Comment »

ஈழ மக்களின்

Posted by ம​கேஷ் மேல் ஜூன் 8, 2010

எனக்கு
ஈழ மக்களின்
கதி குறித்து
எல்லா நம்பிக்கைகளும்
வற்றிவிட்டன

ஏமாற்றுதல்,
வஞ்சகம், வெறி,
முரட்டு பிடிவாதம், துரோகம்,
பசப்பு, பகட்டு
மாபெரும் சதிகள்
எல்லாமுமாய் சேர்ந்து
என்னை நிர்மூலமாக்கிவிட்டன

எனினும் வேரற்று
இனமே அழிந்துவிடாமல்
எங்கேனும்
மீண்டும் துளிர்க்கும்
என்ற கடைசி நம்பிக்கைக்கு
காரணம்
சிங்கள வீரனே!

Posted in கவிதைகள் | Leave a Comment »