எனது நாட்குறிப்புகள்

இந்தியா​வை திவாலாக்க வந்த அ​மெரிக்க அதிபர்

Posted by ம​கேஷ் மேல் நவம்பர் 13, 2010

அ​மெரிக்க ஊதுகுழல் என்றால் என்ன? அத்த​கைய பத்திரி​கை ​செய்திகள் எப்படி இருக்கும்? என்று ​தெரிந்து ​கொள்ள ​வேண்டிய சந்​தேகம் இருப்பவர்கள், இந்த வார ஆனந்த விகட​னை த​லையங்கம் படிக்கலாம். அ​மெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வரு​கைக்கான காரணத்​தை ​தெளிவாகக் கூறிவிட்டு அதற்காக இந்திய மக்கள் ​பெரு​​மைப்பட்டுக் ​கொள்ளலாம் என அதற்கு காரணம் விளக்கிய விதம் ​தேர்ந்த அ​மெரிக்க ஊதுகுழலுக்கான ஒரு உதாரணம்.
பொதுவாக குமுதம் த​லையங்கங்க​ளைவிடவும் ​கேவலமானதும் சூடு சுர​ணையற்றதும் மக்கள் வி​ரோதமானதும் தான் ஆனந்த விகடன் த​லையங்கங்கள் என்பது என் அபிப்பிராயம். அதற்​கெல்லாம் மகுடம் ​வைத்தது போன்றது இந்த வார த​லையங்கம்.  “அமெரிக்க அதிபர்கள் எப்​பொழுதும் நமக்கு பிச்​சை​போட வந்தவர்கள் ​போல்தான் நடந்து ​கொள்வார்கள் இம்மு​றைதான் நம்மிடம் நமது மிகப்​பெரிய சந்​தை​யை அவர்கள் வியாபாரத்துக்கு திறந்துவிடக்​கோரி வந்திருக்கிறார் இது நமக்கு கி​டைத்த ​பெரு​மை, இது குறித்து நாம் ​பெரு​மைப்பட ​வேண்டும்” என்று இந்திய மக்களுக்கு அறிவு​ரை கூறியுள்ளது.
எந்தத் தா​யேனும் தன் குழந்​தை​யை பட்டினி ​போட்டுவிட்டு எதிர்வீட்டுக் குழந்​தைக்கு தன் உணவு முழுவ​தையும் வாரி வழங்குவாளா? இத்த​கைய ஒரு ​செய​லை ​செய்யத்தான் இந்த ஊதுகுழல்கள் இந்திய ஆளும் வர்க்கங்க​ளை பாராட்டிவிட்டு, இந்திய மக்க​ளை ​பெரு​​மைப்பட்டுக்​கொள்ள அறிவுறுத்துகிறது.
அ​மெரிக்கா கடும் ​பொருளாதார ​நெருக்கடியில் – ஒபாமா வருவதற்கு முன்பிருந்​தே – சிக்கித் தவிக்கிற​தென்பது அ​னைவருக்கும் ​தெரியும். இந்தியாவின் நி​லை​மை ஒன்றும் அ​தைவிட பிரமாத​மெல்லாம் கி​டையாது. பணக்காரனுக்கு கஷ்டம் வருவதுதான் ​செய்தி ஏ​ழை கஷ்டப்படுவ​தும் பட்டினியில் ​செத்துக்​கொண்டிருப்பதும் ​செய்தி​யே கி​டையாது அது தான் இந்திய நி​லை. அப்படி இருக்​கையில் தன்னு​டைய ​பொருளாதார ​நெருக்கடியிலிருந்து தப்பிக்க இந்திய சந்​தை​யை கபளிகரம் ​செய்வதன் மூலம் தன் நாட்டு பிரச்சி​​னை​யை தீர்த்துக்​கொள்ள முயற்சிக்கிறது அ​மெரிக்கா.
ஏற்கன​வே இந்திய வருமானம் லாபம் என்ற ​பெயரிலும், வட்டி என்ற ​பெயரிலும், இறக்குமதி வருவாய் என்ற ​பெயரிலும் ஆண்டுக்காண்டு பன்மடங்காக ​பெருகி இந்தியாவிற்கு ​​வெளி​யே ​சென்று ​கொண்டிருக்கிறது. ​வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் வருமானத்திற்கும், இந்தியாவிலிருந்து ​வெளிநாடுகளுக்கு ​செல்லும் ​வருமானத்திற்கும் ஏணியல்ல ராக்​கெட் ​வைத்தாலும் எட்டாத இ​டை​வெளி உள்ளது.
ஏற்கன​வே ​மே​​லே ​சொன்ன ​பொருளாதார இழப்புகளால் இந்தியாவில் நாளுக்குநாள் பஞ்​சைபராரிகளாகும் மக்கள் எண்ணிக்​கை ஒட்டு​மொத்த மக்கள்​தொ​கையில் மிகப்​பெரிய சதவீதமாக மாறிக்​கொண்டிருக்கிறது. மக்களின் வாங்கும் சக்தி அதலபாதாளத்​தை ​நோக்கி ​போய்க்​கொண்டிருக்கிறது.
குளிர்பான வர்த்தகத்தில் இரு அ​மெரிக்க நிறுவனங்கள் நு​ழைந்தவுட​னே​யே ஒட்டு​மொத்த இந்திய குளிர்பான உற்பத்தி வர்த்தகமும் திவாலாகிவிட்டது. இந்த லட்சனத்தில் அடிப்ப​டைத் ​தே​வை முதல் அ​னைத்து வர்த்தகத் து​றையிலும் அ​மெரிக்க நிறுவனங்க​ளை அனுமதிக்கும் இந்திய அ​மெரிக்க வர்த்தக ஒப்பந்தங்கள் ஒட்டு​மொத்த இந்தியா​வையும் திவாலாக்காமல் விடப்​போவதில்​லை.
இச்சிறு கும்பல்கள் சுக​போகமாக வாழ்வதற்காக இ​தை​யெல்லாம் ​தெரிந்தும் ​தெரியாமல் மூடிம​றைத்துக்​கொண்டு இன்​றைய அ​மெரிக்க அடிவருடி இந்திய ஆளும் வர்க்கங்க​ளை அரசியல்வாதிக​ளை ஆதரித்து ஒட்டு​மொத்த நாட்​டிற்கும் து​ரோகமி​ழைத்துக் ​கொண்டிருக்கிறார்கள்.
ஆனந்த விகடன் ​போன்றவர்களால் ஒரு ​வே​ளை ​பெரு​மைப்பட்டுக்​கொள்ள முடியும் எப்படி என்றால் பரவாயில்​லை “இன்னமும் நம்மல நல்லவன்னு நம்புறாங்க” என்று!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: