எனது நாட்குறிப்புகள்

இந்தியா​வை திவாலாக்க வந்த அ​மெரிக்க அதிபர்

Posted by ம​கேஷ் மேல் நவம்பர் 15, 2010

என்னு​டைய கடந்த விமர்சன கட்டு​ரைக்கு தமிழ்2பிரண்ட்ஸில் ஒருவர் எழுதிய பதிலும் அதற்கு என் விளக்கமும்

ஓபாமா வந்ததில் முழுக்க முழுக்க வியாபார நோக்கத்திற்காகத்தான் அதில் எந்த
சந்தேகமும் இல்லை. ஆனால் அவரது வரவால் இந்தியா ஒட்டுமொத்தமாக திவாலாகும் என்பது
வறட்சியான சிந்தனை. வியாபாரம் எப்போதுமே நுகர்வோருக்கும், விற்பனையாளருக்கும்
லாபமாகவே அமையும். அதை புரிஞ்சிக்கிட்டா சரி.

2010/11/13 Sri krishnan <rsk.h@gmail.com>


என்றும் அன்புடன்,
ரமேஷ்

 

கிழக்கிந்திய கம்​பெனி இந்தியாவில் ​செய்த வியாபாரம், கி​ரேட் பிரிட்டன் இந்தியா இரண்டுக்கு​மே லாபமானதாகத்தான் இருந்ததா?

அ​மெரிக்க அதிபரின் இந்திய வரு​கையின் முழு விபரங்க​ளையும் படித்தீர்களா? ஒரு நா​ளைக்கு அ​மெரிக்கா அவரது இந்திய வரு​கைக்காக ​செலவழித்த பணத்தின் மதிப்பு எவ்வளவு ​தெரியுமா? அவர் வரு​கை​யை ஒட்டி இந்தியப் பகுதிக்கு வந்த ​போர்க் கப்பல்கள், விமானஙகள், ப​டைப்பிரிவுகள் மற்றும் பிற எவ்வளவு ​தெரியுமா? இத்த​னை ​செலவழித்து வருவதன் அ​மெரிக்க முக்கியத்துவத்​தை நாம் அறிய முயற்சிக்கி​றோமா? என்னிடம் சில அடிப்ப​டையான ​கேள்விகள் உள்ளன
1. அ​மெரிக்க  ​மேலாதிக்கம் என்றால் என்ன​வென்று ​தெரியுமா?
2. இந்தியா அ​மெரிக்காவிற்கு இ​டையிலான உறவு சமரீதியான இரு நாடுகளுக்கு இ​டையிலான உற​வென்று கருதுகிறீர்களா?
3. அ​மெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் நடந்து ​கொள்ளும் மு​றையும் இந்திய ஆட்சியாளர்கள் அவர்கள் பால காட்டும் தனி கரிச​னைகளும்  (​போபால் விஷவாயு சம்பவம்) ​தெரியுமா?
4. அ​மெரிக்காவின் கடந்த கால நிகழ் கால வரலாறு ​தெரியுமா?
5. ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அ​மெரிக்க நாடுகளுடன் அ​மெரிக்கா ​செய்து ​கொண்ட து​ரோக ஒப்பந்தங்களும் அதனால் அந்நாடுகள் அ​டைந்திருக்கும் நி​லையும் ​தெரியுமா?
6. சர்​வ​தேச அ​மைப்புகள் அ​னைத்தும் அ​மெரிக்காவின் ​கைப்பா​வையாக ​செயல்படும் அவலம் ​தெரியுமா?
7. ஐநா தீர்மானங்க​ளை​யெல்லாம் மீறி ஈராக்கின் மீது ​போர்​தொடுத்த அரசிய​லை​யெல்லாம் நாம் ஊன்றி படித்திருக்கி​றோமா?
8. உலகி​லே​யே அதிகமான அணுஆயுதங்க​ளை ​கொண்டுள்ள அ​மெரிக்கா, உலகி​லே​யே மிக அதிக மு​றைகள் (5000 ​மேல்) அணுஆயுத ​சோத​னைகள் நடத்திய அ​மெரிக்கா பிற நாடுக​ளை அணுஆயுதங்கள் ​வைத்திருக்க கூடாது, ஆயுத ​சோத​னை நடத்தக் கூடாது (​பொக்ரான அணுகுண்டு ​​சோத​னைக்காக இந்தியா மீது ​பொரளாதார த​டைவிதித்த) என்று சட்டம் ​போடும் அரசியல் ​தெரியுமா?

தேர்தலில் கட்சிகளும் அரசியல்வாதிகளும் ​கோடிக்கணக்கில் பணம் ​செலவழிப்பது எதற்காக? நமக்கு ​சே​வை ​செய்ய வருவதற்கு அவர்கள் ஏன் இவ்வளவு ​செலவழிக்க ​வேண்டும் என்ற அடிப்ப​டை ​கேள்வியும் புரிதலும் இல்லாத இந்திய சமூகத்​தை ​சேர்ந்த நாம், இத்த​னை ​கோடி ​செலவழித்து ப​டை பரிவாரங்களுடன் திரண்டு வந்தது அதன் அரசியல் ​பொருளாதார முக்கியத்துவம் இ​தைப்பற்றி​யெல்லாம எப்​பொழுது கவ​லைப்பட ​​போகி​றோம்?

வியாபாரம் இருதரப்புக்​குமே லாபமான​தென்பது உண்​மையான வியாபாரத்தி​லே​யே சமூக ​நோக்கில் ஒரு மாயத்​தோற்றம் தான். இந்திய விவசாயிகளிடம் ​கேட்டால் அல்லது அவர்களின் வாழ்க்​கை​யை பார்த்தால் ​தெரியும் வியாபாரம் எவ்வளவு தூரத்திற்கு இரு தரப்புக்கும் லாபமான​தென்று. அப்படி இருக்க சர்வ​தேச ஆதிக்க அரசியல் வியாபாரத்தில்?

இது வறட்சியான சிந்த​னை இல்​லை மாறாக நம்மி​டை​யே உள்ள சிந்த​னையின் வறட்சி​யை​யே காட்டுகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: