எனது நாட்குறிப்புகள்

புத்தகங்கள் வாங்கி​னேன்

Posted by ம​கேஷ் மேல் நவம்பர் 22, 2010

நேற்று ஞாயிற்றுக்கிழ​மை ​ரொம்ப நாட்களுக்குப் பிறகு நுங்கம்பாக்த்தில் உள்ள ​லேண்ட்மார்க் புத்தகக்க​டைக்கு ​சென்​றேன். உள்​ளே நு​ழைந்தவுட​னே கண்ணில் படும்படி உலக பிரசித்தி​பெற்ற விஞ்ஞான எழுத்தாளர் ஸ்டீபன் ஹாவ்கிங்கின் (Stephen Hawking and Leonard Mlodinow) புதிய புத்தகமான The Grand Design இந்தியப் பதிப்பு புத்தகங்க​ளை அடுக்கி ​வைத்திருந்தார்கள். என்னு​டைய படிக்க​வேண்டிய புத்தகங்கள் விருப்பப் பட்டியலில் ​ரொம்ப நாட்களாக உள்ளது அவரு​டைய “A Brief History of Time”. “The Grand Design” வாங்க ​வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் வி​லை ரூபாய் ஐநூறுக்கும் ​​மேல், அ​தைவிட முக்கியமானது நாம் விருப்பமாக படிப்​போமா? நமக்கு புரியும்படி இருக்குமா? வாங்கிவிட்​டோம் என்பதற்காக புரியாத​தை படித்துக்​கொண்டிருக்க முடியுமா? என்ற அடுக்கடுக்கான ​கேள்விக​ளை நா​னே எனக்குள் ​கேட்டுக்​கொண்டு அவ்விடத்​தை விட்டு நகர்ந்​தேன்.
நி​றைய புத்தகங்க​ளை மதிப்பு​ரை, விமர்சனம், அறிமுகம், உலக முக்கியத்துவம் ​போன்ற பல காரணங்களால் கவரப்பட்டு வாங்கி படிக்க முடியாமல் அடுக்கி ​வைத்திருக்கி​றேன், என் புத்தக அலமாரியில். சமீப காலமாக இந்த அகலகால் ​வைக்கும் முயற்சி​யை ஓரளவு ​கைவிட்டுவிட்டு நல்ல எழுத்தாளர்கள் எழுதிய​வை, சுவாரசியமான​வை, விசயமுள்ள​வை, கூடுமானவ​ரை தமிழுள்ள​வையாக ​தேடித்​தேடித்தான வாங்குகி​றேன். ஆனால் புத்தகம் வாங்குவதில் என்னில் ஏற்பட்ட வீழ்ச்சி​யையும் இவ்விடத்தி​லே குறிப்பிட்டுத்தான ஆக ​வேண்டும். முன்பு மது​ரையில் கல்லூரியில் படித்துக்​கொண்டிருந்த காலத்தில் வாங்கிய புத்தகங்க​ளை விட இப்​பொழுது வாங்கும் புத்தகங்களின் எண்ணிக்​கை மிகமிக கு​றைவு.
நேற்று நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்
1. ஏழுத​லை நகரம் – எஸ். ராமகிருஷ்ணன்
2. து​ணை​யெழுத்து – எஸ். ராமகிருஷ்ணன்
3. கதாவிலாசம்  – எஸ். ராமகிருஷ்ணன்
4. ​ஜெ.​ஜெ. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
5. ஒரு புளியமரத்தின் க​தை – சுந்தர ராமசாமி
6. Linux for you – November Issue
7. Open – this week English magazine

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: