எனது நாட்குறிப்புகள்

வாழ்வும் ​செய்தியும்

Posted by ம​கேஷ் மேல் நவம்பர் 25, 2010

I am in you
You are in me
You and I are same
Bhagvan Sri Sathya Sai Baba

வாழ்வும் ​செய்தியும்” என்னும் ​சொற்​றொடர் விஞ்ஞானப்பூர்வமானது மிகவும் சரியானது என்று நான் நம்புகி​றேன். எந்தச் ​செய்தி​யையும் ​சொல்பவரின் வாழ்விலிருந்து பிரித்து ​பொருள் புரிந்து​கொள்ள முடியாது.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்பதற்​கேற்ப, ​சொற்களுக்​கென்று தனியாக ​பொருளில்​லை ​சொல்பவர், ​சொல்லப்படும் காலம், இடம், ​ஆகியவற்றால்தான் ​சொற்களுக்கு ​பொருள் ஏற்படுகிறது.

நாடு, அரசு, பதவி, ​சொத்து, சுகம், ம​னைவி, குழந்​தைகள் ஆகிய அ​னைத்​தையும் துறந்து துறவறம் ​மேற்​கொண்ட புத்தன் “ஆ​சை​யே துன்பத்திற்கு அடிப்ப​டை” என்று நம்​மை பார்த்து கூறுவதற்கும், ரி​லையன்சின் அணில் அம்பானி கூறுவதற்கும் (கூறுவதாக இருந்தால்) எத்த​னை வித்தியாசம் இருக்கும். இரண்டு இடங்களிலும் ​சொல்லப்பட்ட வாக்கியம் ஒன்றுதான். அதில் உள்ள ​சொற்கள் ஒன்றுதான்! ஆனால் நாம் புரிந்து ​கொள்ளும் விதம் முற்றிலும் ​வேறானதாக இருக்கிறது. புத்தர் ​சொன்ன​தை வாழ்க்​கை குறித்த அடிப்ப​டையான புரிதலுக்கு ​தே​வையான முக்கிய விதியாக புரிந்து​கொள்கி​றோம். ஆனால் அணில் அம்பானி ​போன்ற நபர் கூறுவ​தை, ​வேறான உள்ளர்த்தம் ​கொண்டதாக, நம்​மை தி​சைதிருப்புவதாக, நம்​மை ஏமாற்றுவதாக​வே நாம் அர்த்தப்படுத்திக் ​கொள்கி​றோம், அர்த்தப்படுத்திக் ​கொள்ள ​வேண்டும்.

சொற்கள் என்பது ​வெறும் காலி டப்பாக்கள் ​சொல்லப்படுகின்ற காலம் இடத்தால்தான் அதில் ​பொருள் நி​றைக்கப்படுகிறது. மே​லே குறிப்பிட்ட குறள் மிக அழகாக ​சொற்க​ளை விடுத்து ​பொரு​ளை மட்டு​மே விவாதத்திற்கு எடுத்துக் ​கொள்வது கவனிக்கத் தக்கது. பல்​வேறு ​சொற்கள் என்பது பல்​வேறு விதமான ​பொருட்க​ளை ​போடுவதற்கு ஏற்ற காலி ​பைகள் அவ்வள​வே. எண்​ணெய் வாங்க நாம் துணிப் ​பைக​ளை எடுத்துச் ​செல்வதில்​லை. சர்க்க​ரை வாங்க நாம் எண்​ணெய்த் தூக்​கை பயன்படுத்துவதில்​லை, அப்படியான ஓ​ர் ஏற்பா​டே ​சொற்கள்.

மே​லே குறிப்பிட்ட குறள் பல்​வேறு ஆழ அகலங்க​ளை மட்டுமல்ல கி​ளைக​ளையும் ​கொண்டதாக​வே படுகிறது.
அக்குறள் “எச்​சொல் யார் யார் வாய் ​கேட்பினும்” என்று ​பேசப்படவில்​லை. மாறாக “எப்​பொருள் யார்யார் வாய்​கேட்பினும்” என்று ​பேசப்படுவது ஆழ்ந்து கூர்ந்து கற்க ​வேண்டியது. ஏ​னென்றால் யாரும் ​பொரு​ளை ​நேரடியாக ​பேசமுடியாது ​சொற்களின் வழியாகத்தான ​பேச முடியும். ​பேசுகின்ற ​சொல் என்பது நபருக்கு நபர் மாறுபடலாம். ​மொழிக்கு ​மொழி மாறுபடலாம். ஒ​ரே ​சொல் ​வேறு ​வேறு இடங்களில் ​​​வெவ்​வேறு அர்த்தங்களில் பயன்படுத்தப்படலாம். ஆனால் ​சொல்லப்பட்ட ​பொருள் ஒன்றாகத்தான் இருக்கமுடியும் ​சொல்லப்பட்டதன் ​நோக்கம் ஒன்றாகத்தான் இருக்க முடியும். அ​தே ​சொல்​லை ​வே​றொருவரின் வாயால் ​வேறு ​பொருளில் ஏற்கன​வே ​கேட்டதனால், அ​தே ​சொல்​லை ​வே​றொரு சந்தர்ப்பத்தில் ​வே​றொருவர் கூறும் ​பொழுது ப​ழைய ​பொருளில் புரிந்து ​கொண்டு விடும் அபாயம், எ​தையும் எளிதாக புரிந்து​கொள்ள முயலும் மனித மனத்தின் சிக்கலான ​செயல்பாட்டு மு​றையில் அ​மைந்திருக்கிறது. இ​தை கவனத்​தோடு புரிந்து​கொண்டு இச்​செக்கு மாட்டுத் தன்​மையிலிருந்து விடுத​லை ​பெறுவதும், ஒரு முக்கியமான மனிதனுக்கு ​தே​வைப்படும் விடுத​லையாகும்.

காலத்தால் நமக்கு ​வெகு முந்​தைய இலக்கியங்க​ளை படிக்கி​றோம். ​சொற்கள் மட்டு​மே சுவடிகள், கல்​வெட்டுக்கள், காகிதங்கள், வாய்​மொழி வழியாக அந்த காலத்திலிருந்து நம் காலத்திற்கு கடத்தப்பட்டுள்ளது, அவற்றின் ​பொரு​ளை அல்ல என்ப​தை நாம் ​தெளிவாக நி​னைவில் ​வைத்துக் ​கொள்ள ​வேண்டும். ​பொரு​ளை காலம், இடம் தாண்டி கடத்துவது எளிதல்ல. ​சொற்கள் என்பது ஒரு வ​கை மாயக் குடு​வைகள். காலத்​தையும் இடத்​தையும் கடக்கும் ​பொழுது அ​வற்றிற்குள் இருக்கும் ​பொருள் தாமாக​வே அந்தந்த காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப மாறிவிடும்.

கால​ இட ​வெளியில் ​பொரு​ளைத் துரத்துவது ஒரு பட்டாம்பூச்சி​யை வனாந்திரத்தில் மரங்கள், ​செடிகள், ​கொடிகள், புதர்கள், ​​மேடு பள்ளங்கள், காட்டாறுகள், ஓ​டைகள், ​கொடிய வனவிலங்குகள், உயிர் ​கொல்லி பூச்சிகளுக்கி​டை​யே துரத்துவது ​போன்றது. இத்த​னையும் தாண்டி அ​தைபிடிக்கமுடிந்தால், அ​தைப்பிடித்தவுட​னே​யே நம் ​கைபட்டதா​லே​யே அதன் புற அழகு கு​​லைவ​தைப்​போல ​பொருளின் இயல்பு சிறிதாவது மாறிவிடும்.

பொருளுக்கும் ​சொல்லுக்குமான இந்த ​வேறுபாட்​டையும், அ​வை இ​ணைவதும் விலகுவதுமான நுட்பமான புள்ளிக​ளையும், கால இட ​வெளிகளில் அது நிகழ்த்தும் வர்ணஜாலங்க​ளையும், அதன் எல்லா சூட்சமங்க​ளையும் நாம் புரிந்து ​கொண்டுவிட்டால், ஒவ்​வொரு ​சொல்லுக்கும் பின்னுள்ள உண்​மையான ​பொரு​ளை ​- மெய்ப்​பொரு​ளை – நாம் எளிதாக புரிந்து​கொண்டு அ​வை ஏற்படுத்தும் மாயவ​லைகளிலிருந்து விட்டு விடுத​லையாகி ஒரு சிட்டுக்குருவி​யைப் ​போல பறந்துவிடலாம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: