எனது நாட்குறிப்புகள்

எனக்​கொரு சந்​தேகம்?

Posted by ம​கேஷ் மேல் திசெம்பர் 2, 2010

பாலம் கட்டுவது, பூங்கா கட்டுவது, நூலகம் கட்டுவது, சட்டச​பை கட்டிடம் கட்டுவது, ப​ழைய பாலங்க​ளை அழகு படுத்துவது ​போன்றவற்றில் இருக்கும் அளவிற்கு லாபம் ​ரோடு ​போடுவதில் கி​டையாதா?

சென்​னைக்கு வந்து 15 வருடங்களுக்கு ​மேல் ஆகிவிட்டது. இத்த​னை ​மோசமான சா​லைக​ளை இதுவ​ரை பார்த்ததில்​லை. இவ்வருட ம​ழையின் புண்ணியத்தில் ​சென்​னையின் அ​னைத்து ​ரோடுகளும் (எனக்குத் ​தெரிந்து) குண்டும் குழியுமாகிவிட்டிருக்கிறது. கா​லையும் மா​லையும் வீடு ​போய்ச் ​சேர்வதற்குள் உயிர் ​போய் வருகிறது கழுத்து வலியால்.

எனக்கு இன்​னொரு சந்​தேகம் ​சென்​னையின் அரசியல்வாதிகள், மாநகராட்சி அதிகாரிகள், இன்னும் இன்னும் எல்லா பிரபலங்களின் வீடுகளும் ​சென்​னையில்தான் உள்ளதா? இல்​லை ​சென்​னைக்குள்​ளே​யே நமக்குத் ​தெரியாத ரகசிய நகரம் ​வேறு ஏ​தேனும் இருக்கிறதா? யாராக இருந்தாலும் வீட்டிற்கு ​வெளி​யே தினமும் வந்து பல சா​லைக​ளைக் கடந்துதா​னே ஆக​வேண்டும். அவர்களின் வாகனங்களும் சா​லைகளில்தா​னே ஓடும்? எத்த​னை வசதியான வாகனமும் எனக்குத் ​தெரிந்து இந்த சா​லைகளில் உள்​ளே இருப்பவர்க​ளை ஒரு ​கை பார்க்காமல் விடாது தா​னே? என்ன​வோ ​போங்கள் எல்லா​மே மர்மமாகவும் குழப்பமாகவு​மே இருக்கிறது!

நேற்று நான் எஸ். இராமகிருஷ்ணனின் ஒரு கட்டு​ரை​யை படித்​தேன். மாதம் 1500 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு வயதான காவலாளி தினமும் தினசரிகளில் வரும் மிகப்​பெரிய மருத்துவ சிகிச்​சை ​தே​வைப்படும் ஏ​ழைகளின் “உதவுங்கள்” ​செய்தி​யை படித்துவிட்டு, தன்னால் இயன்ற 50, 100 ரூபாய் பணம் மணியார்டரில் அனுப்புகிறாராம். அவருடன் ஆசிரியர் ​பேசும் ​பொழுது அவர் பணம் குறித்து கூறிய ​செய்தி​யை ஒவ்​வொரு மனிதனும் படிக்க ​வேண்டும்!

என்​றோ ஒரு நாள் ஒரு புதுக்கவி​தை படித்​தேன். யார் எழுதியது? அதன் சரியான வரிகள் எப்படி இருக்கும் என்று ஞாபகமில்​லை? என் ஞாபகத்திலிருந்து கீ​ழே தருகி​றேன்.

இ​யேசு​வே
அன்று நீ
ஒரு அப்பத்​தை
ஐயாயிரம் ​பேருக்கு
பகிர்ந்தளித்தீர்
இன்று
ஆயிரக்கணக்கா​னோரின்
அப்பத்​தை
ஒரு சில​ரே
தின்று ​கொண்டிருக்கிறார்கள்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: