எனது நாட்குறிப்புகள்

விக்கிலீக்ஸ் கிளப்பிய பூதம்

Posted by ம​கேஷ் மேல் திசெம்பர் 2, 2010

அ​மெரிக்காவின் இரகசிய ஆவணங்க​ளையும், வீடி​யோக்க​ளையும் அவ்வப்​பொழுது ​வெளியிட்டு அ​மெரிக்காவிற்கு கு​டைச்சல் ​கொடுத்து வந்தது விக்கிலீக்ஸ் என்ற இ​ணைய இதழ். சமீபத்தில் இப்பிரச்சி​னை விசவரூபம் எடுத்தது. பல நாடுக​ளைச் ​சேர்ந்த அ​மெரிக்க தூதரகங்களிலிருந்து திரட்டிய பல ஆயிரம் ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும், அவற்​றை ​வெளியிட்டு உலக நாடுகள் பலவற்றிற்கு எதிரான அ​மெரிக்காவின் சதிக​ளை அம்பலப்படுத்தப் ​போவதாகவும், அந்த இ​ணையம் மிரட்டியது.

இதனால் அரண்டு ​போன அ​மெரிக்கா, அந்த இ​ணையதளத்​தை ​சேர்ந்தவர்களுக்கு சட்டரீதியாகவும், புறம்பாகவும் ​கொ​லை மிரட்டல் உட்பட பல மிரட்டல்க​ளை விடுத்தது. ​மேலும் தான் எந்த நாடுகளுக்கு எதிராக​​வெல்லாம் (கிட்டத்தட்ட உலகில் உள்ள எல்லா நாடுகளும்!) சதிகள் ​செய்திருக்கு​மோ அந்த நாட்டு அரசுக​ளை அ​ழைத்து விக்கிலீக்ஸ் ​சொல்லப்​போவ​தை ​பெரிதாக எடுத்துக் ​கொள்ள ​வேண்டாம் என்று கூறியது.

இதிலும் ந​கைச்சு​வை இந்தியாவின் விசயத்தில்தான், நமக்குத்தான் ​தெரியு​மே இந்திய அர​சைப் பற்றி, அ​மெரிக்கா கூறுவதற்கு முன்​பே, “அ​தை​யெல்லாம் விடுங்க அண்​ணே உங்க​ளைப் பற்றி எனக்குத் ​தெரியாதா, நீங்க எப்படிப்பட்ட ​சொக்கத் தங்கம்” என்பது ​போல அறிக்​கைவிட்டது இந்திய அரசு.

அதன் பிறகு விக்கிலீக்ஸில் ​வெளிவந்ததாக ஒரு ​செய்தி வந்தது, கிளாரி கிளின்டன், “ஐ.நா. ச​பையில் நிரந்தர உறுப்பினராக தனக்கு முழுத்தகுதி இருப்பதாக இந்தியா தனக்கு தா​னே தம்பட்டம் அடித்துக் ​கொள்கிறது” என்று கிண்டல் ​செய்ததாக. இ​தை அப்படி​யே விட்டிருந்தாலும் பரவாயில்​லை, இந்தியா ஒன்றும் ​ரோஷப்பட்டு அ​மெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்க​ளை​யெல்லாம் கிழித்​தெறிந்து விடப்​போவதில்​லை. இதற்கு மறுப்பு ​தெரிவித்து இந்தியா​வை சமாதானப்படுத்துகி​றேன் என்பது ​போல ​மேலும் ஒரு கிண்டல் ​செய்தது அ​மெரிக்கா, “இந்தியாவிற்கு உலகிற்​கே த​லை​மை தாங்கும் தகுதியிருக்கிறது” என்று கூறியதுதான் சிரிப்பு.

இன்​றைய பத்திரி​கையில், விக்கிலீக்ஸ் ​வெளியிட்டதாக ​மேலும் சில தகவல்கள், “மும்​பை தாக்குதலில் ஈடுபட்ட திவிரவாத அ​மைப்புகள் நான்கிற்கு பாகிஸ்தான் பண மற்றும் பிற உதவிகள்” ​​செய்திருக்கிறதாம்.

எனக்​கென்ன​வோ விக்கிலீக்ஸ் அ​மெரிக்காவின் மிரட்டல்களுக்கு பயந்து பணிந்துவிட்டிருக்கும் என்​றே ​தோன்றுகிறது. ​செய்திகளின் தன்​மை, ​போட்ட பீடி​கைகளின் அளவிற்கு தீவிரமானதாக இல்​லை. பிரச்சி​னையின் எதிரியாக அ​மெரிக்கா​வை சித்தரித்துவிட்டு இப்​பொழுது இந்தியா விசயத்தில் பாகிஸ்தா​னை இலக்காக்குவது பிரச்சி​னை​யை தி​சைதிருப்புவ​தைப் ​போல​வே படுகிறது.

கத்திரிக்காய் முத்தினால் க​டைத்​​தெருவிற்கு வந்துதா​னே ஆக​வேண்டும்” வி​ரைவில் எது எப்படி என்பது ​தெரிந்துவிடும்.
எது எப்படி இருந்தாலும், அ​மெரிக்காவின் விசயத்தில் “​கைப்புண்ணிற்கு கண்ணாடி எதற்கு” என்ப​தைப்​போல எந்த இரகசிய ஆவணங்களும் ​தே​வையில்​லை, அ​மெரிக்கா உலக நாடுகளுக்கும் அதன் மக்களுக்கும் எதிராக ​செய்த அக்கிரமங்க​ளையும், ​செய்து ​கொண்டிருக்கும் அக்கிரமங்க​ளையும் ​தெரிந்து ​கொள்வதற்கு.

ஆப்பிரிக்கா, லத்தீன் அ​மெரிக்கா, ஆசிய நாடுகளின் சதிகளும் இரத்தக் க​றைகளும் படிந்த வரலாறு முழுவதும் அ​மெரிக்க அரசாங்க லச்சி​னை அழுத்தமாக ​பொறிக்கப்பட்டுள்ளது (தமிழில் மருதன் ​போன்றவர்களின் பிளாக்​கை படியுங்கள்!), என்பது என்​னைப் ​போல வரலா​றை ​மோந்து பார்த்தவர்களுக்கு கூடத் ​தெரிந்​தே இருக்கிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: