எனது நாட்குறிப்புகள்

சிறகுகள் இல்லாத ​தேவ​தையா!

Posted by ம​கேஷ் மேல் திசெம்பர் 4, 2010

எங்​கே கிட்ட வா
உனக்கு சிறகுகள் இருக்கிறதா
பார்க்கி​றேன்
சிறகுகள் இல்லாத ​தேவ​தையா!

இன்னு​மொரு மு​றை சிரி
எனக்​கென்ன​வோ
உன் வாயிலிருந்து
கிளம்பி
சில நட்சத்திரங்கள்
வானில் ​சென்று
ம​றைவதாய் ​தெரிகிறது

எங்​கே
உன் ​கொலுசுக​ளை காட்டு
அது பூமியில்
செய்ததாய் ​தெரியவில்​லை​யே
நீ ஓடும் ​பொழுது
இ​சை ​தெறித்து
த​ரை​யெங்கும் விழுகிற​தே

உனக்கு பரிசாய்
க​டைகளில் விற்கும்
ஆ​டைகள் ​வேண்டாம்
உன்​னைப் பற்றிய
என் கனவுகள் ​கோர்த்து
கவி​தையாய் ​நெய்து தருகி​றேன்
நீ எனக்​கொரு
முத்தம் தா!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: