எனது நாட்குறிப்புகள்

மாநகரப் ​பேருந்தும் – ​பெண்களின் ம​னோபாவமும்

Posted by ம​கேஷ் மேல் திசெம்பர் 7, 2010

இன்று கா​லை அலுவலகத்திற்கு பிராட்​வேயிலிருந்து மாங்காடு ​செல்லும் 17K ​பேருந்தில் வந்து ​கொண்டிருந்​தேன். விருகம்பாக்கத்திற்கும் ​கேசவர்த்தினி ​பேருந்து நிறுத்தத்திற்கும் இ​டை​யே ​பேருந்து குண்டு குழியுமான ம​ழைநீர் ​தேங்கிய சா​லையில் முன்னால் ​செல்லும் வாகனங்களால் நின்று ​மெதுவாக ​சென்று ​கொண்டிருந்தது.

ஒரு இடத்தில் வண்டி நின்ற​தைப் பார்த்து இரு வயதான ஆண்கள் ​பேருந்திலிருந்து முன்புற வாசல் வழியாக இறங்கினார்கள். அவர்க​ளைத் ​தொடர்ந்து இரு ​பெண்கள் தாயும் மகளும் இறங்க முயற்சித்தார்கள். தாய் இறங்கிக் ​கொண்டிருக்கும் ​பொழு​தே ஓட்டுநர் வண்டி​யை ​மெதுவாக நகர்த்தத் ​தொடங்கினார்.

வண்டி ​செல்லும் தி​சைக்கு எதிர்பக்கமாக உடம்​பை சரித்து இறங்க முயன்ற அந்த ​பெண் நி​னைத்தது மாதிரி​யே தடுமாறி ​ரோட்டில் விழுந்தார். இத​னைக் கண்டு பதறிப்​போன மகள் (கல்லூரி முடித்திருப்பார்!) ஓட்டுந​ரை பார்த்து கத்தினாள். “இறங்குவது ​தெரியவில்​லையா? ஒரு நிமிடம் நிறுத்தினாள் என்ன? ஆம்பி​ளைங்க இறங்குவ​தைத் ​தொடர்ந்து தா​னே நாங்களும் இறங்குகி​றோம்!”
ஓட்டுநர் ​கேட்டார், “ஏம்மா இறங்குகி​றோம்னு ​சொல்லிவிட்டு இறங்க ​வேண்டியது தா​னே”. அதற்குள் வண்டியிலிருந்தவர்கள் ஆளாளுக்கு ஒன்று ​பேசத் துவங்கினார்கள், “இது பஸ் நிறுத்த​மே கி​டையாது எப்படி இறங்கலாம்?” அது இது ​வென்று.

விழுந்த ​பெண்மணி​யை முதலில் இறங்கிய அவர் கணவரும் க​டைசியாக இறங்கிய அவர் மகளும் ​கைத்தாங்கலாக தூக்கி நிறுத்தி நடத்திக் ​கொண்டு ​போனார்கள். ஓட்டுநர் மனம் ஆறாமல் ஏ​தே​தோ ​பேசிக் ​கொண்​டே வந்தார் அடுத்த நிறுத்தம் வ​ரை.

​பேருந்திலிருந்து இறங்கும் ​பொழுது வண்டி சிறிது நகர்ந்தாலும் விழுந்துவிடக் கூடிய ​பெண்க​ளை பலமு​றை பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கி​றேன். ஏன் நம் எல்​லோருக்கு​மே இந்த அனுபவம் இருக்கும். ​பேருந்திலிருந்து இறங்கும் ​பொழுது தவறி விழுபவர்களில் ஆண்க​ளை விட ​பெண்க​ளே அதிக எண்ணிக்​கையில் இருப்பார்கள் என்​று நி​னைக்கி​றேன்.

​பொதுவாக​வே ​பெண்கள் பலருக்கு ​பேருந்திலிருந்து எப்படி இறங்குவது என்பது ​தெரிவதில்​லை. அதிலும் குறிப்பாக ​​வே​லைக்கு ​செல்லும் வாய்ப்பில்லாத நடுத்தர மற்றும் வயதான ​பெண்கள் பல​​ரே இத்த​கைய விபத்துகளுக்கு உள்ளாகிறார்கள், அதிலும் ​சே​லை கட்டிய ​பெண்க​ளே அதிக எண்ணிக்​கையில் இவ்விபத்துக்கு உள்ளாகிறார்கள் என்று நி​னைக்கி​றேன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: