எனது நாட்குறிப்புகள்

வேறு பூமி​யைத் ​தேடுங்கள்!

Posted by ம​கேஷ் மேல் திசெம்பர் 8, 2010

நில​மெல்லாம் விற்று தீர்த்த பின்
என்ன ​செய்யப் ​போகிறீர்கள்?
மண​லெல்லாம் விற்று தீர்த்த பின்
என்ன ​செய்யப் ​போகிறீர்கள்?
கனிமங்க​ளெல்லாம் விற்று தீர்த்த பின்
என்ன ​செய்யப் ​போகிறீரக்ள?
மரங்க​ளெல்லாம் ​வெட்டி தீர்த்த பின்
என்ன ​செய்யப் ​போகிறீர்கள்?
நீ​ரெல்லாம் விற்று தீர்த்த பின்
என்ன ​செய்யப் ​போகிறீர்கள்?
காற்​றெல்லாம் விற்று தீர்த்த பின்
என்ன ​செய்யப் ​போகிறீர்கள்?
போய்த் ​தேடுங்கள்
எங்​கேனும் இந்த அண்ட​வெளியில்
எம்​மைப் ​போல
எதற்கும் வாய் ​பேசாது
அழியக் காத்திருக்கும்
மானுடச் சமுத்திரம்
நி​றைந்த
இன்​னொரு பூமி
இருக்கிறதா என்று!
காடுகள் அழிந்த இந்த பூமி​யை
ஆறுகள் தூர்த்த இந்த பூமி​யை
நீரற்றுப் ​போன இந்த பூமி​யை
காற்​றை இழந்த இந்த பூமி​யை
கனிமங்கள் தீர்ந்த இந்த பூமி​யை
க​தைக்குதவாத இந்த பூமி​யை
எங்களிடம் விட்டுச் ​செல்லுங்கள்
எப்​பொழு​தேனும் நீங்கள்
திரும்பி வர ​நேர்ந்தால்
மீண்டும் நீங்கள் களவாட
ஏ​தேனும் புதிதாய்
செய்து ​வைத்திருப்​போம்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: