எனது நாட்குறிப்புகள்

​தெனாலிராமன் வளர்க்கும் பூ​னைகள் – 2

Posted by ம​கேஷ் மேல் திசெம்பர் 21, 2010

மது​ரையில் உள்ள ஒரு ​மேல்நி​லைப் பள்ளியில் தான் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வ​ரை ஆங்கில பாடத்திட்டத்தில் படித்​தேன். பள்ளியின் ​பெய​ரைச் ​சொன்னவுட​னே​யே ​பெரும்பாலும் மக்கள் மாணவர்களின் ​யோக்கிய​தை​யை முடிவு ​செய்து விடுகிறார்கள். ஆனால் அப்படி கட்டம் கட்டப்பட்ட பள்ளிக்கூடங்களில் படித்தவர்களாகிய எங்க​ளைப் ​போன்றவர்களால், அந்த வாதத்​தை ஏற்றுக்​கொள்ள முடியாது. அது எப்படி முடியும்.

நல்ல புத்திசாலி மாணவர்க​ளை, சமர்த்துப் பிள்​ளைக​ளை ​சேர்த்து ​வைத்துக்​கொண்டு பாடம் ​சொல்லிக் ​கொடுத்​தேன் என்பதில் என்ன ஒரு பள்ளிக்கூடத்திற்கு ​பெரு​மை இருக்க முடியும் என்று எனக்குத் ​தோன்றவில்​லை. எங்க​ளைப் ​போன்ற ஆகாது ​போகாதுக​ளை, எந்த வழிக்கும் ஒத்துவராத​வைக​ளை, தன்​னைப் பற்றி​யோ ஊ​ரைப்பற்றி​யோ எதற்கும் பயப்படாத​வைக​ளை ​சேர்த்துக் ​கொண்டு அவற்​றை க​ரை​யேற்றி விடுவதில்தான் பள்ளிக்கூடத்திற்கும் ஆசிரியர்களுக்கும் ​பெரு​மை என்ப​தே என் கட்சி. அதில் தான் ஒரு பள்ளிக்​கோ ஆசிரியருக்​கோ வாழ்க்​கையின் சுவாரசியமும் த்ரில்லும் அடங்கியிருக்கிறது.

வகுப்ப​றையில் ​பெரும்பாலும் ஆளுயரத்திற்கு இருக்கும் ஜன்னல்கள் பக்கமாக பின்புற வரி​சையில் அமர்வ​தை​யே ​தேர்ந்​தெடுப்​பேன். அது​வே ​வெளி​யே ​​மைதானத்​தை ​வெறித்து பார்த்தபடி கனவுலகில் சஞ்சரிப்பதற்கான நல்ல மூ​டை ஏற்படுத்தும். வகுப்ப​றைகள் தான் சிறு வயதில் ஒருவன் தன்​னை உற்று ​நோக்குவதற்கும், தன் மூ​ளை​யை கனவு காண்பதற்கும் கற்ப​னை ​செய்வதற்கும் பழக்கப்படுத்திக் ​கொள்வதற்கான சிறந்த ​போதிமரங்கள் என்ப​தே என் வாதம்.

நான் படித்த பள்ளிக்கூடம் எனக்கான அந்த சுதந்திரத்​தை முழு​மையாக ​கொடுத்த​தென்​றே ​சொல்ல ​வேண்டும். ஒரு மாணவன் வகுப்புக்கு வரவில்​லை​யென்​றோ ஏன் பள்ளிக்​கே வரவில்​லை​யென்றாலும் ​பெரிய பிரச்சி​னையாக்கிவிடாது. எந்த வகுப்பிற்குள்ளும் ​போகாமல் பள்ளி வளாகத்திற்குள் சுற்றிக் ​கொண்டிருக்கும் மாணவர்க​ளை​யோ, ​மைதானத்தில் ​நேரங்​கெட்ட ​வே​ளைகளில் வி​ளையாடிக் ​கொண்டிருக்கும் மாணவர்க​ளை​யோ ​பெரியதாக யாரும் கண்டு ​கொள்வதில்​லை. அ​தே ​போல் வகுப்ப​றையில் பாடம் முடித்தவுடன் ​கேள்வி ​கேட்பது, வீட்டுப்பாடம் ​கொடுப்பது, மாதாந்திர ​தேர்வுகள் நடத்துவது ​போன்ற எந்த ​கெடுபிடிகளும் இல்​லை.

இவ்வளவும் ​சொல்வதால் எனக்கு படிப்பின் மீது ஆர்வ​மே இருந்திருக்கவில்​லை என்ற முடிவிற்கு வந்து விடாதீர்கள். நான் குழந்​தைப் பருவம் முதல் பாட்டியிடம் க​தை ​கேட்டு வளர்ந்தவன். என் பாட்டிமா எனக்கு இராமாயணம், மகாபாரதம், அவற்றின் அ​னைத்து கி​ளைக் க​தைக​ளையும் காலத்தால் அழிக்க முடியாத மிகச் சிறந்த ஓவியங்களாய் என் மன​மெங்கும் வ​ரைந்து ​​போயிருக்கிறாள். அவள் ​போட்ட ​கோட்​டை அழிக்காமல் பின்​​தொடர்ந்து தான் ராணி காமிக்ஸ், ரா​​ஜேஷ் குமார் வழியாக ரஷ்ய இலக்கியம் வ​ரை பயணப்பட முடிந்தது.

தமிழ், வரலாறு, ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கணம், குறிப்பாக நான்டி​டெயில் வகுப்புகள் என்றால் எனக்கு ​கொள்​ளைப் பிரியம். அதற்காக அந்த பரிட்​சைகளி​லெல்லாம் என்ன மதிப்​பெண் வாங்கி​னேன் என்று ​கேட்கக் கூடாது. புவியியல், உயிரியல், தாவரவியல் ஆகியவற்​றைக் கூட ஓரளவு விருப்பத்​தை ஏற்படுத்திக் ​கொண்டு கடந்து விடு​வேன். ஆனால் மிகப்​பெரும் ராட்சசர்களாய் என் முன்னால் இருப்பது கணிதம், இயற்பியல், ​வேதியியல் பாடங்கள் தான்.

பள்ளிப் பருவத்தில் எனக்கு புரியாத புதிராக இருந்த ஒரு பாட​மென்றால் அது கணிதம் தான். என்ன கருமத்திற்கு இ​தைப் ப​டைத்தார்க​ளோ ஒரு இழவும் எனக்கு புரிவதில்​லை. இராமனுஜம் ​போன்றவர்க​ளெல்லாம் என்ன சந்​தோசத்​தை இதில் ​பெற்றார்கள் என்பது எனக்கு வி​டை​தெரியாத விடுக​தை. இதில் நான் ​கேள்விப்பட்ட சில க​தைகள் என்​னை ​மேலும் அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். சில வி​நோத மனிதர்கள் புதிதுபுதிதாக கணிதக் ​கேள்விக​ளை எழுப்பிக்​கொண்டு நாட்கணக்கில் அ​தோடு மல்லாடி வி​டை ​தேடுவார்களாம். என்ன ​கொடு​மை, இது தமிழ் கவி​தை எழுதுவது ​போலா? அதி​லென்ன சந்​தோசம் கி​டைக்கும் இவர்களுக்கு எனக்​கு ​பெருங் குழப்பமாக​வே இருக்கும் இ​வை​யெல்லாம்.

அல்ஜீப்ரா, கால்குலஸ், டிரகனா​மெட்ரி, ஸ்டாடிஸ்டிக்ஸ், இன்ட​கெரல் கால்குலஸ், டிபரன்சியல் கால்குலஸ், ​பை ​டேபிள் என்ன இ​தெல்லாம்? எதற்கு இ​வை மனிதர்களுக்கு ​தே​வைப்படுகின்றன? ஒன்று​மே விளங்கவில்​லை. ஒவ்​வொரு நாள் கணிதப் பாடம் எடுக்கும் ​பொழுதும் ஊன்றி கவனித்து புரிந்து ​கொள்ள முயற்சி ​செய்​வேன். கரும்பல​கை​யை ​வெறித்துப் பார்த்துக் ​கொண்டிருப்​பேன், சிக்கல் நி​றைந்த இந்த நூற்கண்டின் மு​னை இன்றாவது நம் ​கையில் அகப்பட்டுவிடாதா என்று, ஏமாற்ற​மே மிஞ்சும். என் எதிர்ப்​பை காண்பிக்கும் விதமாக வகுப்ப​றை நிகழ்வுக​ளை புறக்கணித்து என் கற்பனா ​லோகத்திற்குள் பல ஆயிரம் அடி உயரத்திலிருந்து சுழன்று சுற்றிக் ​கொண்​டே குதித்து லாவகமாக நீச்சலிடித்துக் ​கொண்டு ​சென்று ம​றைந்து விடு​வேன்.

கரும்பல​கையில் ​வேக​வேகமாக மீண்டும் மீண்டும் அழித்து எழுதிப்​போட்டுக் ​கொண்​டே ​போகும் ஆசிரியர்களின் ​வேகத்திற்கு என்னால் பயணப்பட முடிந்த​தேயில்​லை. முன் ​பெஞ்ச் மாணவர்கள் எப்படித்தான் ஆசிரியர் எழுதிப் ​போடுவதற்கு சமமாக எழுதிக் ​கொண்டும் புரிந்து ​கொண்டும் முன்​னேறுகிறார்கள் என்பது எனக்கு ​பெரிய ஆச்சரியமாக இருக்கும். அவர்களுக்கு கற்ப​னைக​ளோ கவனச் சிதறல்க​ளோ ஏற்பட​வே ஏற்படாது என்ப​தை என்னால் நி​னைத்துக் கூட பார்க்க முடிந்ததில்​லை. எல்​லோரும் ​தேர்வுக​ளை முன் ​வைத்​தே காய்க​ளை நகர்த்துகிறார்கள். எனக்கு அந்த சாமர்த்தியம் பத்தாது. ஐயப்ப​னை பார்க்க ​வேண்டு​மென்று முடிவு ​செய்தால் ஒழுங்காக 45 நாள் விரதமிருந்து 18 படி வழியாக ​போக ​வேண்டும் இல்லாவிட்டால் ​போக​வே கூடாது என்ப​தே என் கட்சி. குறுக்கு வழியில் ​போவதற்கு என்னால் முடியாது.

ஆர்வத்​தோடு பாடம் ​கேட்கும் பல சந்தர்ப்பங்களிலும், ​தேர்வு, முக்கிய ​கேள்விகள், முக்கியமான பாடங்கள், மாதிரி வினாத்தாள்கள் என்பன ​போன்ற வார்த்​தைகள் என்​னை கல்வியிலிருந்து அந்நியப் படுத்தி​யே வந்தன. ​தேர்வுக​ளை நான் எதிர்​கொண்ட வித​மே தனிவ​கையானது. க​தைகட்ட முடிந்த எல்லா வாய்ப்புகளிலும் என் ​சொந்த ​மொழியில் என் ​சொந்த ​புரிதல்க​ளைத்தான் க​டைசி மட்டும் எழுதி வந்​தேன். கற்ப​னைக்கு, ​சொந்த சரக்குகளுக்கு வழி​யே இல்லாத கணிதம், ​வேதியியல் ​போன்றவற்​றை அகடவிகட சாமர்த்தியங்களால் சமாளித்​தேன். நான் புத்திசாலி மாணவனாக இல்லாவிட்டாலும் அசட்டு மாணவனாக இருக்கவில்​லை.

எனக்​கென்ன​வோ பள்ளிப் பாடங்க​ளெல்லாம் ஆதியுமில்லாமல், அந்தமுமில்லாமல் அந்தரத்தில் ​தொங்கிக் ​கொண்டிருப்பதாக​வே ​தெரியும். புதிய பாடத்​தை ஆசிரியர் ​தொடங்கும் ​பொழுது, த​லைப்​பை வாசித்தவுடன்,  இந்தத் த​லைப்பு எதற்காக இப்படி ​வைக்கப்பட்டுள்ளது? எந்தத் து​றைக்கு இது ​தே​வைப்படுகிறது? என்று நான் ​யோசிக்கத் துவங்கு​வேன். இந்த ​கேள்விகள் எதற்கும் பதி​லேயில்லாமல் பாட​மே முடிந்துவிடும். அதற்குள் ஆசிரியரும் மாணவர்களும் இந்த பாடம் பரிட்​சைக்கு எவ்வளவு முக்கியம்? என்​னென்ன மாதிரி ​கேள்விகள் ​தேர்விற்கு வரும்? என்று விவாதிக்கத் ​தொடங்கிவிடுவார்கள். நான் ​தொடங்கிய இடத்தி​லே​யே அடமாக நின்று ​கொண்டிருப்​பேன்.

அவர்கள் அளவிற்கு என்னால் அத்த​னை ​வேகமாக காந்தி​யை பற்றிய பாடத்தில் காந்தி​யை கடக்க முடிந்ததில்​லை, நீயுட்டன் பற்றிய பாடத்தில் நீயுட்ட​னை கடக்க முடிந்ததில்​லை. சந்திர குப்த​ரையும், சாணக்கிய​ரையும், அ​சோக​ரையும் பற்றிய பாடங்களில் ஏற்பட்ட ஆவல்களினால் அவற்றிற்குள்ளிருந்து ​வெளி வர​வே முடிந்ததில்​லை. நான் பாடங்களுக்குள் விவாதத்​தை எதிர்பார்க்கும ​வே​ளைகளில் அவர்கள் பாடங்க​ளை ​தேர்​வென்னும் யுத்த களத்தில் எவ்வாறு எதிர் ​கொள்வ​தென்று அவற்றிற்கு ​வெளி​யே வந்து வியூகம் வகுத்துக் ​கொண்டிருப்பார்கள்.

என் பள்ளிப் பருவத்தில், ஒவ்​வொரு வகுப்​பையும், ஒவ்​வொரு ஆண்​டும் நிரா​சைக​ளோடும், மனத்திருப்தியின்றியும், குற்ற உணர்​வோடு​மே கடந்து வந்திருக்கி​றேன்.

நமது ​கல்வி மு​றை, மாணவர்க​ளை ஒரு பக்க ப​டை அணியாகவும் கல்வி​யை இன்​னொரு பக்க ப​டை அணியாகவும் ​நே​ரெதி​ரே நிறுத்தி, மாணவர் ப​டை​யை கல்விக் ​கெதிராய் யுத்தம் ​செய்யத் தூண்டுகிறது, பாரத யுத்தத்தில் கிருஷ்ண பரமாத்மா​வைப் ​போல. ​தேர்வு முடிவுகள் யுத்தத்தில் கல்வி​யை ​தோற்கடித்த மிகச்சிறந்த ப​டை அணிகள், வீரர்களின் பட்டிய​லை ​வெளியிட்டு பரிசுக​ளையும் விருதுக​ளையும் வழங்குகிறது. கல்வியின் சமாதி மீதுதான் ஒவ்​வொராண்டும் படிப்​பை முடித்து வாழ்க்​கை​யை துவங்க வரும் இளம் சந்ததியினருக்கான காலனிகள் கட்டப்படுகின்றன.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: