எனது நாட்குறிப்புகள்

​வேண்டும் கனவுகளும் கற்ப​னைகளும்

Posted by ம​கேஷ் மேல் திசெம்பர் 22, 2010

கனவுகள் காணும் விருப்பமற்றவர்களும், கற்ப​னை ​செய்யும் ஆற்றலற்றவர்களும் புத்தகங்கள் படிக்க முடியாது.

இது க​தை, கவி​தை, இலக்கியம் ஆகியவற்றிற்கு மட்டுமல்ல அறிவியல், வரலாறு, புவியியல் என எல்லா து​றைகளுக்கும் ​பொருந்தும்.

புத்தகங்கள் என்ப​வை ​வெள்​ளை காகிதங்களில் கருப்பு ​​மையினால் எழுத்துக்க​ளை ​தொடர்ச்சியாக பல வரிகளில் அச்சடித்து ​கோர்த்து ​வைக்கும் ஒரு ஏற்பா​டே. நிச்சயம் இது மூ​ளைக்கு அயர்ச்சியும் ​சோர்வும் ஏற்படுத்தக் கூடிய ஒன்​றே. ஆனால் கனவுகளும் கற்ப​னைகளும் ஊறும் ஒரு மனதின் முன்​னே ​மே​லே ​சொன்ன வரிகள் ரசவாதம் அ​டைந்து அறிவுப் ​பெட்டகமாக, காட்சி அனுபவமாக மாறிவிடும்.

காட்சி படுத்திக் ​கொள்ளும் ஆற்றல் ப​டைத்த மனங்களுக்கு வார்த்​தைகள், வாக்கியங்கள் ​வெறும் எழுத்துக்களாகத் ​தெரிவதில்​லை. காட்சிபடுத்திக் ​கொள்ளும் ஆற்றல் என்ப​து நம்​மைச் சுற்றிய உல​கை நாம் எந்தளவிற்கு ஊன்றி கவனித்து உள்வாங்கிக் ​கொண்டுள்​ளோம் என்ப​தைப் ​பொருத்த​தே. இதில் என்ன இருக்கிறது? என எல்லாவற்​றையும் அசட்​​டை ​செய்யும் மனங்களுக்கு உள்வாங்கிக் ​கொள்ள உலகில் ஒன்று​மே இல்​லை. ஈ, எறும்பிலிருந்து ​தொடங்கி ம​லைகள், கடல்கள், அண்ட​வெளி​யென ஒவ்​வொன்​றைப் பார்த்து ஆச்சரியப்படும் மனதிற்கு மட்டு​மே உலகம் வசப்படும்.

பசியால் துடிப்பவ​னையும், ​நோயால் வருந்துபவ​னையும், ​எல்​லோரும் கடந்து ​கொண்டிருக்கி​றோம். புத்தனும் கடந்தான், ஆனால் அந்த காட்சி அவனுக்குள் ஏற்படுத்திய தாக்கம், அந்தக் காட்சி​யை ஏன் ஏன் என்று அவன் மனம் ச​ளைக்காது ​சிந்தித்துக் ​கொண்​டே இருந்ததின் வி​ளை​வே ​பெளத்தம். அவனது கனவுகளும் கற்ப​னைகளு​மே அவன் கண்ட காட்சிக​ளிலிருந்து அவனது ​வேதத்​தை ப​டைத்தது.

ஒரு க​தைப் புத்தகத்தின் இரு பிரதிக​ளை ஒ​ரே ​நேரத்தில் இருவர் படிக்கலாம். ஆனால் இருவர் மனதிலும் அதில் ​சொல்லப்பட்ட வர்ண​னைகளுக்கான காட்சிகள் ஒன்றாகவா ஏற்படும்? நிச்சயம் கி​டையாது. ம​லை​யைப் பற்றிய ஒரு வர்ண​னை நான் பார்த்த ஒரு ம​லை​யை​யே என் மனதில் ஞாபகப்படுத்தும், நீங்கள் பார்த்த ஒரு ம​லை​யே உங்கள் மனதில் ​தோன்றும். இது ​போல​வே க​தை முழுவதும் உங்கள் மனதில் ​வேறான ஒரு அனுபவத்​தை​யே ஏற்படுத்தும்.  நம் இருவருக்கும் மிகப் ​பொதுவான கால இட விசயங்களில் மட்டு​மே ஒன்று படுகி​றோம். அந்த ஒற்று​மையும் கூட புற உலகு குறித்த நமது அறிவின் ஆல அகலங்களுக்கு ஏற்ப​வே ஏற்படுகிறது.

ஆக காட்சி அறி​வை கருத்தறி​வோடு பல சிக்கலான வழிமு​றைகளில் நுண்ணிய இ​ழைகளால் இ​ணைப்பதற்கு கனவு காணும் விருப்பமும், கற்ப​னை ​செய்யும் ஆற்றலும் மிக அடிப்ப​டையானது.

நம் குழந்​தைப் பருவங்களில், நமது கனவுகளும் கற்ப​னைகளும் அதன் மிக ஆரம்ப நி​லைகளில் அர்த்தமில்லாத​வையாக, ​தர்க்கமில்லாத​வையாக, ​வெறும் ஒரு மனப்பயிற்சியாக​வே ​தொடங்குகிறது. கனவு காண்பதும் கற்ப​னை ​செய்வதும் மனிதனுக்கு மிக இயற்​கையான குண​மே. மனிதனுக்கு அடிப்ப​டையாகத் ​தே​வைப்படுகிற எல்லா விசயங்களும் அந்த ​வே​லை​யை ​செய்வதால் இன்பம் தரும் விதத்தி​லே​யே இயற்​கையால் உருவாக்கப்பட்டுள்ளது. உணவு உண்பதில் நமக்கு சு​வை இன்பம் கி​டைக்கிறது. தூங்குவதில், உடலுறவு ​கொள்வதில், சிறுநீர், மலம் கழிப்பதில் நமக்கு உடலின்பம் கி​டைக்கிறது. அது ​போல​வே கனவு காண்பதிலும், கற்ப​னை ​செய்வதிலும் நமக்கு ஒரு இன்பம் கி​டைக்கிறது. இந்த இன்ப​மே நம்​மை அந்தச் ​செய​லை ​செய்யத் தூண்டுகிறது.

ஆரம்ப நி​லை கனவுகளும் கற்ப​னைகளும் குழந்​தை வளர வளர ஒவ்​வொரு பருவத்திலும் அடுத்த நி​லைக​ளை ​நோக்கி வளர்ச்சி ​பெறுகிறது. காரண காரிய தர்க்கமற்ற, ஆதாரங்களற்ற, அறிவுக்​கொவ்வாத நி​லைகளிலிருந்து கனவுகளும் கற்ப​னைகளும் தர்க்கப்பூர்வமான, ஆதாரப்பூர்வமான, அறிவுப்பூர்வமான மு​றைகளுக்கு வளர்ச்சி ​பெறுகிறது. இவற்​றை சாத்தியமாக்குவது ​தொடர்ச்சியான காட்சி அறிவும் கருத்தறிவும் தான்.

ஆனால் இயற்​கைக்கு வி​ரோதமான நம் வாழ்க்​கை மு​றை இந்த கனவு காணும் கற்ப​னை ​செய்யும் மனப்பயிற்சிகளுக்கான சூழ​லை நம்மிடமிருந்து, நம் குழந்​தைகளிடமிருந்து பறித்து ​கொண்டிருக்கிறது.

வீடுகளுக்குள்ளிருந்து குழந்​தைக​ளை விடுவிப்​போம். சாத்தியமான வ​ரை ​தெருக்களிலும் வீதிகளிலும் சுற்று​வோம். கடற்க​ரைகளுக்கும், குளக்க​ரைகளுக்கும், கிராமங்களுக்கும், ​வெவ்​வேறு ஊர்களுக்கும், காடுகளுக்கும், ம​லைகளுக்கும், ​மைதானங்களுக்கும் அ​ழைத்துச் ​செல்லு​வோம். அருங்காட்சியகங்க​ளையும், கண்காட்சியகங்க​ளையும், நூல் நி​லையங்க​ளையும் அறிமுகப்படுத்து​வோம். க​லைக​ளையும், இலக்கியங்க​ளையும் கற்றுக் ​கொடுப்​போம். குழந்​தைகளுக்கான புத்தகங்க​ளை முதலில் நாம் படிப்​போம். இரவுகளில் தினந்​தோறும் குழந்​தைகளுக்கான க​தைக​ளைச் ​சொல்​வோம். புத்தக வாசிப்​பை சிறு வயது முதல் குழந்​தைகளுக்கு ஏற்படுத்து​வோம், புத்தக வாசிப்பிற்கான சூழல்க​ளை நம் வீடுகளில் ஏற்படுத்து​வோம்.

குழந்​தைகள் முதல் ​பெரியவர்கள் வ​ரை விருப்பத்தினாலன்றி கட்டாயத்தினால் ஒரு காரியத்​தை மன​மொத்து ​செய்யமாட்டார்கள் என்ப​தை விதியாக மனதில் நிறுத்து​வோம்.

கனவுக​ளைப் ​போற்று​வோம்; கற்ப​னைக​ளைப் ​போற்று​வோம்;
கனவுக​ளை வளர்ப்​போம்; கற்ப​னைக​ளை வளர்ப்​போம்;

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: