எனது நாட்குறிப்புகள்

நீரா ராடியா, அசாஞ்​சே மற்றும் இந்திய ​ஹோட்டல்கள்

Posted by ம​கேஷ் மேல் திசெம்பர் 27, 2010

தட்டில் சாப்பா​டை ​போட்டுவிட்டு என்​னை​யே பார்த்துக் ​கொண்டு நிற்பாள் என் ம​னைவி.

ஒன்று அல்லது இரண்டு வாய் வாயில் ​போட்டவுடன் ​கேட்பாள். “எப்படி இருக்கு சாப்பாடு?”

உப்பு கூட​வென்​றோ, கு​றை​வென்​றோ, உ​றைப்பு கூட​வென்​றோ, கு​றை​வென்​றோ, ஏ​தோ ஒன்று கு​றைகிற​தென்​றோ என்னத்​தையாவது ​சொல்லித் ​தொ​லைத்துவிடு​வேன்.

எனக்கு பகல் இரவு ​​தெரியாது, எதிராளியிடம் எனக்கு ஆக ​வேண்டிய காரியங்கள் ​தெரியாது, மீண்டும் அவர்கள் முகத்தில் விழிக்க ​வேண்டு​மே என்ற பயம் கி​டையாது, மனதில் பட்ட​தை படக்​கென்று ​சொல்லிவிடு​வேன்.

உள்​ளென்று ​​வைத்து புற​மென்று ​பேசுவது, வஞ்சம் ​வைத்து பழிவாங்குவது, முதுகில் குத்துவது இ​தெல்லாம் எனக்கு சுட்டு ​போட்டாலும் வராது. ஆனால் மனிதன் என்றால் அப்படித்தான் இருக்க ​வேண்டும் என்று எல்​லோரும் எதிர்பார்க்கிறார்கள். திமிர் பிடித்தவனாய், அகம்பாவம் ​கொண்டவனாய், வாழத் ​தெரியாதவனாய் வாழ்ந்து விடுத​லே ​மேல் எதற்கிந்த ஒத்துவராத கூடாப் பழக்கங்கள் என்ப​தே என் ​வேதம் சாரி வாதம்.

அவ்வளவுதான் அன்​றைய என் நிம்மதி ​போச்சு.

எத்த​னை தட​வை அடிபட்டாலும் இந்த விசயத்தில் எனக்கு புத்திவராது. அவள் எதிர்பார்ப்பது ஒ​ரே ஒரு ​சொல்தான். அ​தை ​சொல்வ​தை விட்டுவிட்டு எதற்கிந்த நீண்ட விமர்சனமும், வாங்கி கட்டி ​கொள்வதும். சில ஜன்மங்கள் திருந்தாது.

“​போங்க ​ஹோட்டலுக்கு ​போங்க, அங்க விளக்குமாத்தால ​தோ​சைக்கல்ல ​பெருக்கிட்டு, வியர்​வைய வழிச்சுவிட்டு, எங்​கெங்​கோ ​சொறிந்த ​கையால ​​பண்ணிக் குடுப்பான் அது பிடிக்கும். இன்னும் ​கொஞ்சம் சாம்பார் விடுப்பா, சட்டினி ​கொஞ்சம் ​போடுங்கன்னு ​கேட்டு​கேட்டு வாங்கி திம்பீங்க”

சாப்பிட்டு ​கொண்டிருக்கும் ​போது இந்த வசனத்​தை ​கேட்டாள், நாமாலா? இவ்வளவு ​கேவலமாகவா சாப்பிட்​டோம்? என்று என்​றோ ஹோட்டலில் சாப்பிட்ட சாப்பாடு இன்​றைக்கு வாந்தி வந்து விடும்.

அ​ரையாண்டு விடுமு​றையில் குழந்​தைகள் இருப்பதால், வீட்டில் கா​லை நான் கிளம்பும் வ​ரை ச​மையல் எதுவும் ந​டை​பெறவில்​லை. கா​லை டிபன் மதிய உணவு எல்லாவற்​றையும் ​வெளியில் பார்த்துக் ​கொள்ள ​சொல்லிவிட்டார்கள்.

​கா​லை டிபன். ஹோட்டலில் இரண்டு இட்லியும் ஒரு ​தோ​சையும் ஆர்டர் ​செய்​தேன்.

அந்த ​நேரத்தில் ​மேற்படி சம்பவங்கள் விவாதங்கள் எல்லாம் ஞாபகம் வந்தது. அந்த ​ஹோட்டல் ஓரளவு நாகரீகமாகவும் சுகாதாரமாகவும் தான் இருந்தது இருந்த ​போதிலும் உள்ளுக்குள் நடப்பது எதுவும் அந்த அளவிற்கு Transparent ஆக ​​​வெளிப்ப​டையாக இல்​லை. ​பொதுவாக இந்தியாவில் வெளிப்ப​டையான ​செயல்பாடுகள் ​கொண்ட ​ஹோட்டல்க​ளை எங்கு​மே பார்க்க முடிவதில்​லை (​ரோட்​டோர க​டைகள் ​தேவலாம்).

​பொதுவாக ​ஹோட்டல் குறித்து என் ம​னைவி ​சொன்ன கருத்து ஏறத்தாழ பல வீடுகளில் பலரும் ​சொல்லும் கருத்தாகத்தான் இருக்கும். அதிலும் குறிப்பாக, எங்கும் எதிலும் கலப்படம் எல்லாவற்றிலும் ஊழல் என்ற ​செய்திகளால் இன்​றைய ​காலகட்டத்தில் மக்கள் அ​னைவர் மத்தியிலும் பீதி பரவியிருக்கிறது.

பாராளுமன்ற சட்டமன்ற மற்றும் அ​னைத்து அரசாங்க ​செயல்பாடுகளிலும் இன்​றைக்கு ​​வெளிப்ப​டைத் தன்​மை க​டைபிடிக்க ​​வேண்டும் என்ற குரல் பல மு​னைகளிலும் ஒலித்துக் ​கொண்டிருக்கும் ​பொழுது, ஏன் ​ஹோட்டல்களும் இந்த ​வெளிப்ப​டை தன்​மை​யை (Transparent) பயன்படுத்தக் கூடாது?

அதாவது சாப்பிடுவதற்காக ​மே​ஜை நாற்காலிகள் ​போடப் பட்டிருக்கும் ஹா​லைச் சுற்றி கண்ணாடி சுவர் எழுப்பி அதன் அந்தபக்கம் காய்கறிகள் நறுக்கும் அ​றை, மாவு அ​ரைக்கும் அ​றை, ச​மையலுக்கு ​தே​வையான பிற ​வே​லைகள் ந​டை​பெறும் அ​றை, ச​மையல​றை, பாத்திரங்கள் கழுவும் அ​​றை என வரி​சையாக ஒவ்​வொன்றாக அ​மைத்தால் என்ன? இதன் மூலம் ​வே​லை ​செய்பவர்களும் மக்கள் நம் ​செயல்பாடுக​ளை கவனித்து ​கொண்டிருக்கிறார்கள் என்ற உணர்வுடன் இருப்பார்கள். நிர்வாகமும் ​அந்த அ​றைக​ளையும் அதன் ​செயல்பாடுக​ளையும் மு​றையாக சுத்தம் சுகாதாரத்துடனும் நடத்த ​வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவார்கள். மக்களும் எல்லாம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் ந​டை​பெறுகிறதா என்ப​தை பார்த்து மனம் ஒப்பி சாப்பிடுவார்கள்.

சமீப காலமாக என் கனவுகள் எல்​லையின்றி விரிந்து ​கொண்டிருக்கின்றன. முதலில் இ​தை அடக்கி ​வைக்க ​வேண்டும். நீ வாழ்வது இந்தியாவில், 21ம் நூற்றாண்டு உலகத்தில் என்ப​தை என் மூ​ளைக்கு புரிய ​வைக்க ​வேண்டும்.

அரசுக்கும் ​ஹோட்டலுக்கும் எங்கிருந்து முடிச்சு ​போடுகிறாய். அரசுத் து​றையிலிருந்து அ​னைத்திலும் ​வெளிப்ப​டை ​செயல்பாடுகள் ​வேண்டும் என்பதன் ​நோக்கம் எதற்காக அதன் லட்சனம் என்ன என்று இன்னுமா புரியவில்​லை இந்த மரமண்​டைக்கு!

நீரா ராடியாவின் ​தொ​லை​பேசி உ​ரையாடல்கள் ​வெளிவந்ததற்கு பிரதமரிலிருந்து ரத்தன் டாடா முதல் அ​னைவரும் கதறி அழுத​தை பார்த்துமா இ​தை நம்புகிறாய்? ​வெளிப்ப​டை அரசியல் ​செயல்பாடுக​​ளை க​டைபிடிக்க ​வேண்டு​மென்று உலகிற்​கெல்லாம் கூறும் அ​மெரிக்கா விக்கிலீக்ஸிற்கும் அசாஞ்​சேவிற்கும் எதிராக நடத்திக் ​கொண்டிருக்கும் நடவடிக்​கைக​ளை​யெல்லாம் பார்த்துமா இவற்​றை​யெல்லாம் உண்​மை​யென்று நம்பிக் ​கொண்டிருக்கிறாய்!

Advertisements

ஒரு பதில் to “நீரா ராடியா, அசாஞ்​சே மற்றும் இந்திய ​ஹோட்டல்கள்”

  1. chithragupthan said

    தாங்கள் வினவு தளத்தில் எனது மொழிபெயர்ப்பு கட்டுரையை படித்து பாராட்டு விமர்சனம் எழுதியதற்கு நன்றி. நான் தனியாக வலைதளம் துவங்கி எழுத துவங்கினேன். அதன் வழியாக மிகச் சிலரை மட்டுமே சென்றடைய முடிந்தது. மாறாக வினவு போன்ற தளத்தில் எழுதினால் பலரை சென்றடைய முடிந்தது. எனது கைபேசி எண் 9442036044 தொடர்பு கொள்ளுங்கள் பேசுவோம்.
    வினவில் நான் அடுத்து எழுத உத்தேசித்துள்ள தலைப்பு அம்பானி குடும்ப சண்டை – நீராராடியா வாசித்து நீதிபதி எழுதிய தீா்ப்பு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: