எனது நாட்குறிப்புகள்

அ​லைக்கற்​றை விவகாரமும் உ​ழைக்கும் மக்களின் கண்​ணோட்டமும்

Posted by ம​கேஷ் மேல் திசெம்பர் 29, 2010

2ஜி அ​லைக்கற்​றை விவகாரத்தில் ஆளும் கூட்டணி ​பொது கணக்குக் குழு விசார​னை​யே ​போதும் என்கிறது. எதிர்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசார​ணை​யே ​வேண்டும் என்கின்றன.

இந்த விவகாரத்தால் வரலாறு காணாத வ​கையில் ஒரு பாராளுமன்ற கூட்டத் ​தொடர் முழுவதும் ஒத்தி ​வைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் பலரும்.

இந்த விவகாரத்தில் ஆளும் கூட்டணியின் ​நோக்கம் நமக்கு புரிகிறது. அவர்கள் எப்பாடு பட்​டேனும் இப்பிரச்சி​னையிலிருந்து தப்பித்துக் ​கொள்ள முயற்சிக்கிறார்கள். ஆனால் எதிர்கட்சிகளின் சமரசமற்ற இந்த ​போராட்டத்திற்கு பின்னான காரணங்கள் மக்களுக்கு சந்​தேகம் ஏற்படுத்துவதாக​வே உள்ளது.

அதற்கான காரணங்கள் உள்ளங்​கை ​நெல்லிக்கனி. இவர்கள் ​நோக்கம் என்ன? இந்த விசயத்தில் இவர்கள் ​தெரிந்து ​கொள்ள விரும்புவது எ​தை? இவர்கள் அ​டைய விரும்புவது எ​தை? இப்பிரச்சி​னை இந்தளவிற்கு பாராளுமன்றத்​தை முடக்குவதற்கு பின்னுள்ள காரணங்கள் உண்​மையி​லே​யே மக்கள் நலம் சார்ந்ததுதானா? இன்னும் பிற.

இவற்​றை மக்களுக்கு ​தெளிவுபடுத்த ​வேண்டியது அவர்களின் கட​மை. ஆனால் அவர்களுக்கு அத்த​கைய சவால்கள் அந்தளவிற்கு எளிதானதல்ல. ​வெறும் வார்த்​தைகளின் வழி​யே மக்கள் அவற்​றை நம்பத் தயாரில்​லை. அவர்கள் அவற்​றை தங்களின் ​பொது ஓழுக்கம், தனிமனித ஓழுக்கம், அரசியல் ​செயல்பாடுகள் ஆகியவற்றின் வழி​யே தான் நிரூபித்தாக​வேண்டும்.

உலகம் காணாத இந்த ஊழலில் பாதிக்கப்பட்டவர்கள், து​ரோகமி​ழைக்கப்பட்டவர்கள், ஏமாற்றப்பட்டவர்கள், தங்களின் ​தேச ​சொத்​தை பறி​கொடுத்தவர்கள் இந்திய மக்க​ளே. இது ஒன்றும் எதிர்கட்சிகளின் ​சொந்த பிரச்சி​னை அல்ல. ஆனால் இந்திய மக்கள் இவ்விசயத்தில் ஆளும் கூட்டணி மற்றும் எதிர்கட்சிகளால் திட்டமிட்​டே ​வெறும் பார்​வையாளர்களாக ஆக்கி ​வைக்கப்பட்டுள்ளனர்.

உங்களுக்காக ​போராட நாங்கள் இருக்கி​றோம். நீங்கள் உங்கள் ​வே​லை​யைப் பாருங்கள் என்ற மனப் ​போக்​கே ​மே​லோங்கி இருக்கிறது. கால்வயிற்றுக்கும் அ​ரைவயிற்றுக்கும் சாப்பிட்டு விட்டு விவசாய நிலங்களிலும், கடல்களிலும், ​தொழிற்சா​லைகளிலும், கட்டிடங்களிலும், வியாபார நிறுவனங்களிலும், கல்வி நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும், ​தெருக்களிலும், காடுகளிலும் தங்கள் ​கைகால்கள் ஓய 12 மணி​நேரத்திற்கும் அதிகமாக இன்னும் ​தொ​லையாத நம்பிக்​கைக​ளோடு ​வே​லை ​செய்து ​கொண்டிருக்கும் உ​ழைப்பாளர்களின் வியர்​வையால் உருவான ​தேசத்தின் ​சொத்து இங்கு ஆட்சி அதிகாரத்​தை ​கையில் ​வைத்திருக்கும் சில ​கொள்​ளையர்களால் ​கொள்​ளை அடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ​தேசத்தில் ஒவ்​வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்​கொ​லை ​செய்து ​கொள்கிறார்கள். இவர்கள் தங்க​ளையும் தங்கள் குடும்பத்​தையும் காத்து ​கொள்வதற்காக வாங்கிய கடனுக்காக தற்​கொ​லை ​செய்து ​கொள்ளவில்​லை. உண்​மையில் இந்த ​தேசத்தின் மக்களாகிய நம் அ​னைவருக்கும் உணவு அளிப்பதற்காக வாங்கிய கட​னை திருப்பிச் ​செலுத்த முடியாமல்தான் அவர்கள் தற்​கொ​லை ​செய்து ​கொள்கிறார்கள் என்ப​தை புரிந்து ​கொள்ள என்ன ​பெரிய அறிவு​வேண்டும். அதன் தீவிரத்​தை நாம் உணரவில்​லை.

இந்தியாவின் ​தென்​கோடியில் மீனவர்கள் அன்​டைநாட்டு இராணுவத்தின் ​கொ​லை ​வெறித் தாக்குதலுக்கு தங்கள் உயி​ரை பணயம் ​வைத்து மீன் பிடித்து வருகிறார்கள். ஒவ்​வொரு ஆண்டும் பல நூறு ​பேர் இந்த தாக்குதல்களில் இறந்து ​கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன தங்கள் குடும்பத்​தை காப்பதற்காகவா உயி​ரை பணயம் ​வைத்து மீன் பிடிக்கிறார்கள்? இந்த ​தேசத்து மக்களின் உணவுத் ​தே​வைக்காக தங்கள் உயி​ரை பணயம் ​வைக்கிறார்கள். அப்படிப்பட்ட மக்களு​டைய ​தேசத்தின் ​சொத்து இங்கு சூ​றையாடப்பட்டிருக்கிறது.

எதிர்கட்சிகள் இந்த ​போராட்டத்தில் ​சோரம்​போகிவிடலாம், ஏமாற்றிவிடலாம் ஆனால் இந்நாட்டு மக்கள் ​​சோரம்​போக வாய்ப்பில்​லை அது அவர்கள் தங்க​ளைத் தாங்​க​ளே அழித்துக் ​கொள்வதற்கு சமம். இந்நாட்டு மக்கள் ஏமாந்துவிடுவதற்கு வாய்ப்பில்​லை அது அவர்களின் எதிர்கால சந்ததிக​ளை ஏமாற்றுவதற்கு சமம். அதனால் இம்மக்கள் இப்​போராட்டத்தில் அணிதிரட்டப் பட​வேண்டியது முக்கியம்.

இந்த 2ஜி அ​​லைக்கற்​றை விவகாரத்தில் குற்றம் நடந்திருக்கிறது என்பது ஏற்கன​வே ​போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுவிட்டது. இப்​பொழுது ​கோரப்படுவ​தெல்லாம். அது எப்படி ந​டை​பெற்றது? ​பொது அரசியல் சட்டம் மற்றும் ஒவ்​வொரு து​றைகளுக்கான விதிகளும் சட்டங்களும் எவ்வா​றெல்லாம் உ​டைத்​தெறியப்பட்டுள்ளன? இச்சட்டங்களின் விதிகளின் எந்​தெந்த பகுதிக​ளெல்லாம் இத்த​​கைய குற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பளிக்கும் வ​கையில் பலஹீனமாக இருக்கின்றன? யார் யா​ரெல்லாம் இந்த குற்றத்தில் பங்​கெடுத்துள்ளனர்? இதன் ​தொடர்புகள் எந்த எல்​லை வ​ரை நீள்கிறது? மிகச் சரியாக எவ்வளவு பணம் களவாடப்பட்டுள்ளது? எந்​தெந்த நிறுவனங்களின் ​பெயரில் எவ்வளவு பணம் களவாடப்பட்டுள்ளது? அந்தப் பண​மெல்லாம் தற்​பொழுது எந்​தெந்த ரூபத்தில் உள்ளன? என்பன ​​போன்றவற்​றை ஆய்வதற்கான விசார​னை​யை​யே என்ப​தை அ​னைவரும் புரிந்து ​கொள்ள ​வேண்டியுள்ளது.

அப்படியானால் எதிர்கட்சிகள் மக்களுக்கு சில வாக்குறுதிக​ளை உத்திரவாதங்க​ளைத் தர​வேண்டும்

1. குற்றவாளிகள் அ​னைவரும் அ​டையாளம் காணப்பட்ட பிறகு எத்த​கைய தண்ட​னைகள் அவர்களுக்கு வழங்கப்பட ​​வேண்டும்?
2. களவாடப்பட்ட ​தேசத்தின் ​சொத்து முழுவ​தையும் எவ்வாறு மீட்கப் ​போகி​றோம்?
3. இது ​போன்ற தவறுகள் வருங்காலத்தில் நிகழாமல் இருக்க என்​னென் மாற்று நடவடிக்​கைகள், அரசியல், நீதி, நிர்வாக சட்டதிட்டங்களில் ஏற்படுத்தப் ​போகி​றோம்?

என்ப​தை ​தெளிவாக உறுதியாக மக்களுக்கு ​சொல்ல ​வேண்டும்.

தங்களின் ​போராட்டங்க​ளை பாராளுமன்றத்​தை ஸ்தம்பிக்கச் ​செய்வ​தோடு நிறுத்திக் ​கொள்ளாமல் ​தேசத்​தை​யே ஸ்தம்பிக்க ​செய்யும் அளவிற்கு விரிவுபடுத்த ​வேண்டும். தங்களின் அரசியல் ​செயல்பாடுக​ளை பாராளுமன்றத்​தோடு நிறுத்திக் ​கொள்ளாமல் வீதிக்கு வந்து மக்க​ளை அணிதிரட்டி அரசியல்படுத்தி நடத்த ​வேண்டும்! ​செய்வார்களா இ​தை?

அவர்கள் ​செய்யாவிட்டால் அவர்க​ளையும் எதிர்த்து உ​ழைக்கும் மக்கள் தீவிரமான ஒத்து​ழையா​மை இயக்கங்க​ளை, சத்தியாகிரகங்க​ளை எந்தவிதமான சமரசங்களுக்கும் இடம் ​கொடாமல் தங்களின் ​கோரிக்​கைகள் அ​னைத்தும் நி​றை​வேறும் வ​ரை உறுதி​யோடு இறுதிவ​ரை நடத்த​வேண்டும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: