எனது நாட்குறிப்புகள்

புத்தகங்கள், நண்பர்கள் மற்றும் புத்தகச் சந்​தை

Posted by ம​கேஷ் மேல் ஜனவரி 10, 2011

ஞாயிறன்று இரண்டாவது நாளாக புத்தகச் சந்​தைக்கு நான் மட்டும் ​போ​னேன்.

முதல்நாள் பாதியில் விட்ட வரி​சையிலிருந்து க​டைக​ளை பார்க்கத் துவங்கி​னேன். ஆங்கில புத்தகங்கள், சிடிக்கள், குழந்​தைகளுக்கான புத்தகங்கள் விற்கும் க​டைக​ளை வி​ரைவாகக் கடந்​தேன். 6.00 மணி ​நெருங்கிக் ​கொண்டிருந்தது. நண்பர் ஒருவர் வருவதாகக் கூறியிருந்தார். அவ​ரை ​​கை​​பேசியில் அ​ழைத்​தேன்.

வளாகத்திற்குள் நு​ழைந்துவிட்டதாகவும் புத்தகம் பார்த்துவிட்டு ​வெளி​யே ​மே​டைக்கு இடதுபுறத்தில் இருக்கும் ​பெரிய மரத்திற்கு அரு​கே வந்துவிடுங்கள், நி​றைய நண்பர்க​ளை சந்திக்க ​வேண்டியுள்ளது என்றார். ​நேற்​றே புத்தகம் வாங்குவதற்காக ​போட்டிருந்த பட்​ஜெட் முழுவ​தையும் காலி ​செய்து விட்டதால், ​மேற்​கொண்டு புத்தகங்கள் பார்ப்பதில் ஆர்வமின்றி ​வெளி​யே வந்​தேன்.

நண்ப​ரை சந்திப்பதற்கு முன்னால் இயற்​கை உபா​தை​யை தீர்த்துக் ​கொள்ள கழிப்ப​றை​யை ​தேடி​னேன். அரங்கத்தின் இடப்புறம் இருளுக்குள் மக்கள் சிலர் ​செல்வ​தைக் கண்​டேன். அதற்குத்தான் ​செல்கிறார்கள் என்ப​தை சூழல் ​தெளிவாக விளக்கியது. மகா கண்றாவியான அந்த இடத்​தை விளக்க ​வேண்டு​மென்றால் என்​னைப் ​போன்றவர்களுக்​கெல்லாம் அது சாத்தியமில்​லை. அ​தை நான் விளக்கினால் படிப்பவர்களுக்கு வாந்தி வர​வேண்டும் அப்படி விளக்க முடியாவிட்டால் இப்படி​யே விட்டுவிட​வேண்டும்.

மது​ரை​யைச் ​சேர்ந்த டால்பின் ​மெட்ரிக்கு​லேஷன் பள்ளியின் க​லைநிகழ்ச்சிகள் நடந்து ​கொண்டிருந்தன. முதலில் ஒ​ரே​யொரு கடவுள் பாடலுக்கு நாட்டியமாடியவர்கள் ​தொடர்ந்து சினிமா பாடல்களுக்கு நடனமாடத் ​தொடங்கிவிட்டார்கள்.

என் நண்ப​ரைத் ​தேடி ​தொடர்ந்து நண்பர்கள் வந்த வண்ணமும் சில ​நொடிகள் அவர் அரு​கே அமர்ந்து இரண்டு வார்த்​தைகள் ​பேசி அவருக்கு வணக்கம் ​வைத்துவிட்டு புத்தக சந்​தைக்குள் ​சென்ற வண்ணமுமாக இருந்தார்கள். ஏற்கன​வே நாங்கள் நான்​கைந்து ​பேர் க​லைநிகழ்ச்சி பார்ப்பதற்காக ​போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளில் சிலவற்​றை தூக்கிவந்து மரத்தினரு​கே ​போட்டு அமர்ந்திருந்​தோம். நண்பர்கள் வருவதும் ​போவதுமாக இருந்ததால் இ​டைப்பட்ட ​நேரங்களில் நாற்காலிக​ளை பாதுகாப்பது ​பெரும் சிரமமாக இருந்தது. என் நண்பர் நாற்காலிக​ளை பாதுககாக்க ​வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்.

நான் ​கேட்​டேன், “என்னங்க ​சொந்தமாக வீடுவாங்க மாட்​டேன், தனியுட​மை சிந்த​னைக்கு இடம் தரமாட்​டேங்கிறீங்க, நாற்காலி​யை விடாம பிடிச்சுக்கிறீங்க, எவ்வளவு ​நேரம் இவற்​றை பாதுகாக்க முடியும் விட்டுவிடுங்கள்” என்​றேன் கிண்டலாக.

சொன்னது ​போல​வே ​வெகுசீக்கிரத்தில் மக்கள் கூடுதல் நாற்காலிகள் அ​னைத்​தையும் எடுத்துக் ​கொண்டு ​போய்விட்டார்கள்.

ஒரு நண்பர் ​கேட்டார், “என்னப்பா இங​கேயும் ஸ்கூல் பசங்கள வச்சு ரிக்கார்ட் டான்ஸ் நடத்துறாங்க?”

இன்​னொருவர் ​சொன்னார், “எவ்வளவு மு​றை எத்த​னை​பேர் இப்படி நிகழ்ச்சி நடத்துவ​தை ஆட்​சேபித்திருக்கிறார்கள், அப்பவும் விட மாட்​டேங்கிறாங்க”

நண்பர் ​சொன்னார், “விடுங்கப்பா ​கொண்டாடிட்டு ​போறாங்க எல்லாத்தி​லேயும் குத்தம் கண்டுபிடிச்சிட்டு” என்றார்

நான் ​சொன்​னேன், “என்னங்க சாரு​வோட புத்தக​மெல்லாம் வாங்கியிருக்கீங்க ​கொண்டாட்டங்களுக்கு எதிரா ​பேசுறீங்க​ளே”

நண்பர் ​சொன்னார், “இங்க எவ்வளவு ​பேர் புத்தகம் வாங்குறாங்கன்னு நி​னைக்கிறீங்க, நானும் ​நேத்திக்கு ​ரொம்ப ​நேரம் ​சென்ச​சே எடுத்​தேன், வந்திட்டு ​போறதி​லே 80 சதவிகிதம் ​பேருக்கு ​மேல ஒரு புத்தகம் கூட ​கையில இல்லாமதான் ​போறாங்க”

நான் ​சொன்​னேன், “​ரொம்ப கம்மியா மதிப்பிடறீங்க அவ்வளவு ​மோசமாலாம் இருக்காது”

அதற்குள் அரங்கிற்குள் புத்தகம் பார்க்க ​சென்ற சில நண்பர்கள் திரும்பி வந்தார்கள். வந்தவர்கள் ​கையிலிருந்த புத்தகங்க​ளை​யெல்லாம் ஒவ்​வொன்றாக வாங்கி பார்த்​தோம். ​பெரும்பாலான புத்தகங்கள் உயிர்​மையில் வாங்க பட்ட​வை.

சாருநி​வேதிதாவின் ​தேகம், ​க்ஷேக்ஸ்பியரின் இ​மெயில் ஐடி ​போன்ற சந்​தைக்காக​வே ​வெளியிடப்பட்ட புதிய புத்தகங்கள்

நான் ​சொன்​னேன், “இந்த ​க்ஷேக்ஸ்பியரின் இ​மெயில் ஐடி என்ற த​லைப்பிலான கட்டு​ரை​யை ஏற்கன​வே நான் அவரு​டைய ​வே​றொரு கட்டு​ரை ​தொகுப்பில் படித்துள்​ளேன். அ​நேகமாக இவர்கள் கட்டு​ரைக​ளை shuffle பண்ணி ஒவ்​வொரு புத்தகத்திற்கு ஒவ்​வொரு கட்டு​ரையின் ​பெய​ரைக் ​கொடுத்து அ​தே கட்டு​ரைக​ளை புதுப்புது புத்தகங்களாக ​வெளியிடுகிறார்க​ளோ?”

நண்பர் ​சொன்னார், “என்னங்க பண்ணுவாங்க புத்தகச் சந்​தை வந்துவிட்டது இருக்கிற சரக்கத்தான விற்க முடியும், இ​தை​யெல்லாம் நீங்க கண்டுக்கப்படாது”.

நான் ​கேட்​டேன், “​நேத்து நீஙக என்​னென்ன புத்தகங்கள் வாங்கினீங்க?”

“நான் ஊரிலிருந்து வரும்​பொழு​தே சில புத்தகங்கள் பட்டியல் தயார் ​செய்து எடுத்து வந்​தேன் ​பெரும்பாலான புத்தகங்கள் இங்கு கி​டைக்கவில்​லை, ​கேட்டால் அச்சிலிருக்கிறது என்கிறார்கள்” என்றார்

“அப்படி என்ன புத்தகம்?”

“சாருவின் ​தேகம்”

“ஏங்க நா இப்ப பார்த்​தேன் உயிர்​மையில இருந்தது?!”

அதற்குள் ​வே​றொரு நண்பர் புத்தகங்கள் வாங்கிக் ​கொண்டு வந்தார்.

“ஏம்பா அவனுங்ககிட்ட ​கேட்க ​வேண்டியதுதான பிரிண்​டே ஆகாத புத்தகத்துக்​கெல்லாம் ஏன்யா விளம்பரம் ​கொடுக்கிறீங்கன்னு?” என்றார் நண்பர்.

வந்தவர் கூறினார், “எஸ். இராமகிருஷ்ணனின் துயில் முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டதாம்”

உடன் ​பேச்சு எஸ். இராமகிருஷ்ணனின் பக்கம் திரும்பியது

ஒருவர் கூறினார், “அவர் ஒரு ​பேங்கிற்கு ​போனாராம் ​​வெளி​யே ஒரு பூச்சட்டி இருந்ததாம், இவர் வாசலி​லே​யே ​ரொம்ப ​நேரம் நின்று ​கொண்டு அ​தை​யே பார்த்துக் ​கொண்டிருந்தாராம், வந்தவர்கள் யாரும் அந்த பூச்சட்டி​யை திரும்பிக் கூட பார்க்கவில்​லையாம்”

“ஏம்பா அவனவன் ​செக் கி​ரெடிட் ஆச்சா? கடன்காரனுக்கு என்ன பதில் ​சொல்றதுன்னு மயிர பிச்சிட்டு அ​லையறான், பூச்சட்டிய பாக்கல தீச்சட்டிய பாக்க​லைன்னுட்டு” என் கிண்டலடித்த நண்பர் ​மேலும் ​தொடர்ந்தார்

“எங்க அ​மைப்பு கூட்டங்களுக்கு இரண்டு தட​வை அவ​ரை சிறப்பு ​பேச்சாளராக அ​ழைத்திருந்​தோம், நம் காலம் பற்றியும் மருத்துவம் பற்றியும் அழகாக ​பேசினார். எல்​​லோரும் ஆர்வத்துடன் ​கேட்டார்கள்” என்றார்

நான் ​சொன்​னேன், “சமீபத்தில்தான் எஸ். இராமகிருஷ்ணனின் கதாவிலாசம், து​ணை​யெழுத்து கட்டு​ரைத் ​தொகுப்புகள் வாங்கி படித்​தேன். அ​தே ​போல் சாருவினு​டைய தாந்​தேவின் சிறுத்​தை, காதல் இ​சை கலகம், ​போன்ற சில கட்டு​ரைத் ​தொகுப்புக​ளை படித்​தேன். நான் ஒவ்​வொரு எழுத்தாளரு​டைய மனப்​போக்கு, எழுத்துந​டை ஆகியவற்​றை புரிந்து ​கொள்ள சில புத்தகங்கள் வாங்கு​வேன் படிப்​பேன் அவ்வளவுதான் ​தொடர்ந்து எல்லா புத்தகங்க​ளையும் வாங்கிப் படிப்பதில்​லை வசதியுமில்​லை என்​றேன்”

“நீங்கள் ஒரு புத்தகம் கூட வாங்கவில்​லையா?” என்று நண்ப​ரைக் ​கேட்​டேன்.

“​நேற்று ‘ஆ​மென்’ என்ற கிறிஸ்துவ சந்நியாசினி ஒருவரு​டைய கிறிஸ்துவ மிஷனரிக்குள்​ளே நடக்கும் அக்கிரமங்கள் லீ​லைகள் குறித்த ​நேரடி அனுபவ புத்தக​மொன்​றை வாங்கி​னேன், ​நேற்று ஒ​ரே இரவில் ஏறக்கு​றைய படித்துவிட்​டேன் இன்னும் 50 பக்கங்கள்தான் பாக்கி” என்றார்.

“க​லைநிகழ்ச்சியின் சத்தம் கா​தைய​டைக்கிறது. இங்​கே உட்கார்ந்து ​பேச​வே முடியவில்​லை அந்த பக்கம் ​போகலாமா?” என்​றேன்

“சரி” என எல்​லோரும் எழுந்​தோம்

“அரங்கிலிருந்து வரும் நண்பர்களுக்கு எப்படி ​தெரிவிப்பது?” என்றார் நண்பர்

“ஏன்ய்யா நீதான் ​கையி​லே​யே ​கை​பேசி ​வைச்சிருக்கி​யே அப்புற​மென்ன, உன்​னை அவங்க எளிதா ​தொடர்பு ​கொள்ளப் ​போறாங்க” என்​றேன்

“நாங்க நவீனத்​தை அவ்வளவா நம்பறதில்​லை”

“யாரு நீயா, வந்ததிலிருந்து பக்கத்துலதான் உட்கார்ந்திருக்​கேன் என்கிட்ட ​பேசினதவிட ​கை​பேசியில நீ ​பேசினதுதான் அதிகம், இதுல ​பேச்சு நவீனத்த அதிகம் நம்பறதில்​லைன்னு” என்​றேன்.

அ​னைவரும் ஆ​மோதிப்பது ​போல் அவர் உட்பட சிரித்தார்கள்.

நறுக்கிய பழங்கள் விற்கும் க​டைக்கு ​போ​னோம். தர்பூசணி பழ நறுக்குகள் மட்டு​மே இருந்தன. க​டைக்கு பின்புறம் ​மே​சை நாற்காலிகள் ​போடப்பட்டிருந்தன. மூன்று தட்டுகள் வாங்கிக் ​கொண்டு பின்னால் ​சென்​றோம்.

“என்னய்யா இது டாஸ்மாக் பா​ரை விட ​​மோசமாக இருக்கு” என்றார் நண்பர்.

இடம் சகிக்கவில்​லை. தின்று ​போட்ட காலி தட்டுகளும், வீணான பழத்துண்டுகளும் கழிவுகளுமாக இருந்தன சுற்றிலும் எங்கும்

மீண்டும் எங்கள் ​பேச்சு மக்களின் புத்தகம் வாங்கும் ஆர்வம் குறித்து ​போனது.

“பாருய்யா எவ்வளவு ​பேர் புத்தகம் வாங்கிக் ​கொண்டு ​போறாங்க ஒ​ரேடியாக கு​றைச்சு மதிப்பிடறி​யே” என்​றேன்

“சரி வாங்க இங்​கே நின்னு ஒரு கள ஆய்வு ​செய்​வோம்” என்றார்

தொடர்ந்து எண்ணி​னோம்.

நண்பர் ​​சொன்னார், “ஏய் உன் பக்கம் வர்றவங்கள மட்டும் எண்ணா​தே, அந்த பக்கமும் ​சேர்த்து எண்ணு” என்றார்.

நான் ​சொன்​னேன், “​வெறும​னே புத்தகம் வாங்கிய​தை மட்டும் எண்ணக்கூடாது, ஓரளவிற்கு என்ன புத்தகம் என்ப​தையும் ஊகிக்க ​வேண்டும்”

ஒரு ​பெண்மனியின் ​கையில் குழந்​தைகள் பாடப் புத்தகங்கள்

ஒருவரின் ​கையில் சுய முன்​னேற்ற புத்தகங்கள்

யார் ​கையிலும் உயிர்​மை, காலச்சுவடு, கீ​ழைக்காற்று, அ​லைகள், விடியல், பாரதி புத்தகாலயம், Book Point, Book Worm, பூவுலகின் நண்பர்கள் ​போன்ற க​டைகளின் ​பைக​ளை நாங்கள் நின்ற ​பொழுது பார்க்கவில்​லை.

இது குறித்து ​பேசிக்​கொள்ளாம​லே​யே ஒருவ​ரை ஒருவர் பார்த்து சிரித்துக் ​கொண்​டோம்

நான் ​வேகமாக கத்தி​னேன், “ஏய் அங்​கே பார் ஒருவர் ​கையில் உள்ள பிளாஷ்டிக் ​பைக்குள் அ​நேகமாக அது உயிர்​மை புத்தகமாகத்தான் இருக்க ​வேண்டும்”

என் நண்பர் நான் ​சொன்ன திக்கில் திரும்பி பார்த்தார், குள்ளமாக ஒருவர் ​வேகமாக ​வெளிப்புறத்​தை ​நோக்கி நடந்து ​கொண்டிருந்தார்.

“ஏய் அவர் நம்ம ஆளுதாம்ப்பா, அவர கூப்பிட்​டே பார்த்துரு​வோம்”

அவர் ​பை​யை வாங்கி ​சோத​னை ​செய்​தோம்.

எதுவும் உயிர்​மை புத்தக​மெல்லாம் கி​டையாது சட்டியில் ​செடி வளர்ப்பது, ச​மையல் குறிப்புகள் ​போன்ற புத்தகங்க​ளே

ஒருவ​ரை ஒருவர் பார்த்து சிரித்துக் ​கொண்​டோம்

அத்துடன் எங்கள் ​தோல்வி​யை ஒப்புக் ​கொண்டு ஆய்​வை நிறுத்திவிட்டு ​வெளி​யே ​நோக்கி நடக்கத் துவங்கி​னோம்.

நண்பர் ​​சொன்னார், “​சென்​னையிலாவது மக்களுக்கு ஆங்கில அறிவு வாங்கும் சக்தி, படிக்கும் ​நேரமும் இருக்கு அப்படி இருந்தும் புத்தகம் வாங்குவது கம்மியாக இருக்கு, நான் ​தொடர்ந்து மது​ரை, ​​நெய்​வேலி, ​சேலம் புத்தகச் சந்​தைகளுக்கு ​போய் வருகி​றேன். அங்​கெல்லாம் நி​லை​மை இ​தைவிட ​மோசம், மக்கள் ​பொருட்காட்சி, சினிமாவுக்கு ​செல்வ​தை விட இங்கு ​செலவு கம்மி நு​ழைவுக்கட்டணம் 5 ரூபாய்தான் என்பதால் வருகிறார்கள்” என்றார்

நான் ​​கேட்​டேன், “எங்​கெல்லாம் நி​றைய டியூப்​லைட் ​போட்டிருக்​கோ அங்​கெல்லாம் மக்கள் வந்துவிடுவார்க​ளோ ஈசல் ​போல”

எல்​லோரும் சிரித்தார்கள்.

ரோட்டிற்கு அந்த பக்கம் பச்​சையப்பன் கல்லூரி சுற்றுசுவ​ரை​யொட்டி ந​டைபா​தையில் ​பெட்​ரோமக்ஸ் ​லைட் ​வெளிச்சத்தில் மக்கள் த​ரையில் புத்தகங்க​ளை ​பொறுக்கி ​கொண்டிருந்தார்கள்.

நண்பரிடம் ​கேட்​டேன், “ப​ழைய புத்தக வியாபாரிக​ளை இவர்கள் அண்ட விடுவதில்​லை​யே இம்மு​​றை அந்த பக்கம் க​டை ​வைத்துவிட்டார்களா?”

“அங்குதான் 10, 20 ரூபாய்க்​கெல்லாம் நல்ல புத்தகங்கள் கி​டைக்கின்றன. நான் கூட ​நேற்று நி​றைய புத்தகங்கள் அங்கு வாங்கி​னேன்” என்றார்

சரிதான் இதற்காக​வே இன்​னொருநாள் வர​வேண்டும் என்று முடிவு​செய்​தேன்

வீட்டில் ம​னைவி ​கொடுத்திருந்த ​8.00 மணி கெடு​நேரம் முடியப் ​போகிறது. இப்​பொழுது கிளம்பினால்தான் கி​ரேஸ் ​டைம் முடிவதற்குள் வீடு ​போய்ச் ​சேர முடியும் என்பதால் பிரிய மனமின்றி நண்பர்களிடம் வி​டை​பெற்று கிளம்பி​னேன்.

என்னு​டைய ​கெடு பற்றி நண்பருக்கு ​தெரியாது. இல்லாவிட்டால் அதுவும் எங்கள் சம்பாக்ஷ​னைக்கான ஒரு சிரிப்பு சங்கதியாக மாறிவிடும். ஆனால் எனக்கு நன்றாக புரிந்தது அங்கிருந்து அவ்வப்​பொழுது வி​டை​பெற்று கிளம்பிய பல நண்பர்களின் முக சா​டையி​லே​யே இந்த நி​லை​மை எனக்கு மட்டுமில்​லை என்பது. பாம்பின் கால் பாம்பறியும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: