எனது நாட்குறிப்புகள்

நமது குடியரசு தனது குழந்​தைக​ளை​யே ​கொல்லக் கூடாது – உச்ச நீதிமன்றம்

Posted by ம​கேஷ் மேல் ஜனவரி 15, 2011

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா​வோயிஸ்ட்) யின் ​செய்தித்​தொடர்பாளர் ​சேருகரி ராஜ்குமார் என்கிற ஆசாத் ​என்பவ​ரையும் பத்திரி​கையாளர் ​​​ஹேமச்சந்திர பாண்​டே என்பவ​ரையும் ஆந்திர பிர​தேச காவல்து​றை ஆயுதம் ஏந்திய ​மோதலில் சுட்டுக் ​கொன்றதாக முதல் தகவல் அறிக்​கை​ பதிவு ​செய்தது.

இது குறித்து ஆந்திர அரசு, காவல்து​றை மற்றும் மத்திய அரசுக்கு எதிராக சமூக ​சேவகர் சுவாமி அக்னி​வேஷ் என்பவரும் பத்திரி​கையாளர் ​​​ஹேமச்சந்திர பாண்​டேவின் து​னைவியாரும் உச்சநீதி மன்றத்தில் வழக்கு ​தொடர்ந்துள்ளனர். அவர்கள் தங்கள் மனுவில் ஆயுதந்தாங்கிய ​மோதலில் பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில்தான் ​கொ​லை ​செய்யப்பட்டார்கள் என்ப​தை ​பொய் என்று கூறி, திட்டமிட்​டே தான் அவர்க​ளை பிடித்து ​​மோதல் நாடகமாடி கொன்றுவிட்டார்கள் என குறிப்பிட்டுள்ளனர். அதற்கு ஆதாரமாக இறந்தவர்களின் பி​ரேதபரி​சோத​னை முடிவுக​ளையும், சம்பவம் ந​டை​பெற்ற​தை ஒட்டி ந​டை​பெற்ற நிகழ்வுக​ளையும் ஆய்வு​ ​செய்து அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இது விசயமாக உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அப்தப் ஆலம் மற்றும் ஆர்.எம். ​லோதா என்பவர்கள் ​வெளியிட்டுள்ள கருத்தில், “நமது குடியர​சு தனது குழந்​தைக​ளை​யே ​கொ​லை​ ​செய்கிற ​கொடு​மை​யை சகித்துக் ​கொள்ளாது. நாங்கள் இது குறித்து விளக்கம் ​கேட்டு அறிக்​கை ​வெளியிடுகி​றோம். சம்பந்தபட்டவர்கள் பதில் அளிக்க ​வேண்டும். நம்பும்படியாகவும் நல்லவிதமாகவும் அவர்களிடம் இருந்து பதில் வரும் என நம்புகி​றோம்” என ​தெரிவித்துள்ளனர்.

ஆந்திர பிர​தேசத்தின் அதிலாபாத் மாவட்டத்தில் உள்ள வான்காடி காவல் நி​லையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆசாத் உள்ளிட்ட மாவாயிஸ்ட் குழுவுடன் காவல்து​றை நடத்திய ​மோதலில் கடந்த ஆண்டு ஜூ​லை 1ம் ​தேதி இரவு ஆசாத்தும், பாண்​டேவும் ​கொ​லை ​செய்யப்பட்டு விட்டதாக காவல்து​றை ​​தெரிவித்திருந்தது.

இவ்விசயம் குறித்து உண்​மைக​ளை கண்டறிய அ​மைக்கப்பட்ட “ஜனநாயக உரி​மைகளுக்கான ஒருங்கி​ணைப்பு குழு” என்ற அரசுசாரா கூட்ட​மைப்​பொன்று ​வெளியிட்டுள்ள அறிக்​கையில் காவல்து​றையின் அறிக்​கை​யை ​பொய்​யென்று நிரூபிக்கிறது. அக்குழுவில் இடம்​பெற்றுள்ள முக்கியமானவர்களில் ஒருவரான உச்சநீதி மன்றத்தின் மூத்த வக்கீல் பிரசாந்த பூஷன் என்பவர், “ஆசாத் மிக அருகில் ஒரு அடிக்கும் கம்மியான இட​​வெளியில் தான் சுடப்பட்டுள்ளார். காவல்து​றை ​சொல்லும் அளவிற்கு தூரத்தில் இருந்து சுடப்படவில்​லை.”

ஆசாத் சமூக ​சேவகர் சுவாமி அக்னி​வேஷ் என்பவரின் முன்முயற்சியால் மத்திய அரசுடன் மா​வோயிஸ்ட்கள் அ​மைதிப் ​பேச்சுவார்த்​தை நடத்துவதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டிருப்பது மத்திய உள்து​றை அ​மைச்சகத்திற்கு ​தெரிந்தும் தான் இப்படு​கொ​லை ந​டை​பெற்றுள்ளது என ஜனநாயக உரி​மைகளுக்கான ஒருங்கி​ணைப்பு குழு குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் அது கூறுகிறது:

“உடலில் குண்டு து​​ளைத்த இடத்தின் மு​னைப்பகுதி சுற்றிலும் கருப்பு நிறத்தில் எரிந்திருக்கிறது. இத்த​கைய காயம் துப்பாக்கி​யை ஒரு அடிக்கும் கு​றைவான தூரத்திலிருந்து சுடும் ​பொழுது மட்டு​மே ஏற்படும். குண்டானது அவரின் இதயத்தின் ​மேற்பகுதி வழியாக ​சென்று உடலுக்குள் கீழ்​நோக்கி பயணித்திருக்கிறது. இது காவல்து​றையினர் கீ​ழே நின்று ​கொண்டு ம​லை மீது நின்று ​கொண்டிருந்த மா​வோயிஸ்ட்க​ளை சுட்டதாகக் கூறுவ​தை ​பொய்​யென்று நிரூபிக்கிறது.”

“இரவு 11 மணிமுதல் 11.30 மணிவ​ரை ந​டை​பெற்றதாகச் ​சொல்லும் துப்பாக்கிச் சண்​டையில் எவ்வாறு ஒரு காவலர் கூட தாக்கப்பட​வோ காயமுற​வோ இல்லாமல் சாத்தியமானது. நிருபர்கள் ​கேட்ட​பொழுது 20 க்கும் அதிகமான மா​வோயிஸ்ட்கள் தங்களுடன் சண்​டையிட்டதாக காவல்து​றையினர் கூறியுள்ளனர். அப்படியானால் தப்பித்துச் ​செல்லும் ​பொழுது மற்றவர்கள் ஒருவரு​மே தங்களு​டைய உட​மைக​ளை கீ​ழே ​போட்டுவிட்டுச் ​செல்லவில்​லையா? எப்படி இறந்த இரண்டு ​பேரின் ​பைகளும் ஆயுதங்களும் மட்டு​மே காவல்து​றையால் கண்​டெடுக்கப்பட்டது?”

“ஜூ​லை இரண்டாம் ​தேதி 9.30 மணிக்குத்தான் தங்களால் இறந்தவர்க​ளை அ​டையாளம் காண முடிந்தது என காவல்து​றை குறிப்பிட்டுள்ளது. ஆனால் பல்​வேறு ​தொ​லைக்காட்சிகள் எவ்வாறு கா​லை 6 மணிக்​கே ஆசாத் ​மோதலில் ​கொல்லப்பட்ட ​செய்தி​யை ​வெளியிட்டன? ஆக​வே இது மிகத் ​தெளிவாக புரிய​வைப்பது என்ன​வென்றால் காவல்து​றையினர் தாங்கள் யா​ரைக் ​கொன்​றோம் என்ப​தை ​தெரிந்​தே இருந்திருக்கிறார்கள்.”

“​மேலும் அந்த குழுவினருக்கு ஏற்பட்ட ஆச்சரியம் ஏன் காவல்து​றையினர் வான்காடி மண்ட​லை தங்களின் ‘​மோதலுக்கு’ ​தேர்ந்​தெடுத்தார்கள் என்பது. ஏ​னெனில் அந்த கிராமத்தினரின் ​தெளிவாக குறிப்பிட்டுள்ளபடி சமீப ஆண்டுகளாக அப்பகுதியில் எந்த​வொரு மா​வோயிஸ்ட்களின் நடவடிக்​கைகளும் ந​டை​பெறவில்​லை.”

மனித உரி​மை அ​மைப்பினரின் கூற்றுப்படி, ஆசாத்தும் பாண்​டேவும் ஜூன் 30ம் ​தேதி​யே நாக்பூரிலிருந்து காவல்து​றையால் பிடிக்கப்பட்டு ​ஹெலிகாப்டர் மூலம் ஆந்திர பிர​தேசத்திற்கு ​கொண்டு வரப்பட்டு சுட்டுக் ​கொல்லப்பட்டுள்ளனர்.

இரயில்​வே அ​மைச்சரும் திருணமுல் காங்கிரஸ் த​லைவருமான மம்தா பானர்ஜி பாராளுமன்றத்தில் ஆசாத் ​கொ​லை ​தொடர்பாக தன் சந்​தேகங்க​ளை எழுப்பி நீதிவிசார​ணை ​தே​வை என வலியுறுத்தியுள்ளார். ஆனால் உள்து​றை அ​மைச்சர் ப. சிதம்பரம் இது மாநில பிரச்சி​னை ஆந்திர பிர​தேச அரசுதான் முடிவு ​செய்ய ​வேண்டும் எனக் கூறி நிராகரித்துவிட்டார்.

நாட்டின் நடப்புக​ளை உற்று அல்ல ஓரளவு அவ்வப்​பொழுது கவனிப்பவர்களால் கூட இக் ​கொ​லை திட்டமிட்ட ​கொ​லைதான் என நம்பிவிட முடியும். காரணங்கள் ​தெளிவான​வை

வெளிநாட்டு ​தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்க​ளை இந்தியாவிற்குள் ​தொழில் மற்றும் வர்த்தகம் ​செய்ய அனுமதிப்பதுதான் இந்தியாவின் முன்​னேற்றத்திற்கான வழி என இந்தியா​வை ஆளும் அரசுகளும், கட்சிகளும், அரசியல்வாதிகளும், ​பெரும் பத்திரி​கைகளும், ​தொ​லைக்காட்சிகளும், இந்திய முதலாளிகளும், நீதிமன்றங்களும், ​பெரும் தரகர்களும் நம்புகின்றனர்.

வெளிநாட்டு ​தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் வந்து ​தொழில் மற்றும் வர்த்தகம் ​செய்வதற்கு தக்க நம் அரசியல் மற்றும் சட்டதிட்டங்க​ளையும் மாற்றி அ​மைத்துக் ​கொண்டிருக்கிறார்கள்.

நாடு முழுவதும் ஏழைகளும், விவசாயிகளும், பழங்குடிகளும், ஆதிவாசிகளும் அவர்களின் ​சொந்த நிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு ​கொண்டிருக்கிறார்கள். அந்நியர்களும் அவர்களின் உள்நாட்டு தரகர்களும் ​தொழிற்சா​லைகள் கட்டுவதற்காக.

அந்நியர்களின் நலன்களுக்காக அமுல்படுத்தப்பட்டுக் ​கொண்டிருக்கும் திட்டங்களாலும் மாற்றிய​மைக்கப்பட்டு ​கொண்டிருக்கும் சட்டதிட்டங்களாலும் நாடு முழுவதும் ​கோடிக்கணக்கான மக்கள் தங்கள் கு​றைந்தபட்ச வாழ்வாதாரங்க​ளை இழந்து பஞ்​சைபராரிகளாக்கப்பட்டுக் ​கொண்டிருக்கிறார்கள்.

வி​லைவாசி வரலாறு காணாத வ​கையில் விண்​ணை முட்டிக் ​கொண்டிருக்கிறது, காரணங்கள் ​கைப்புண்​ணைப் ​போல ​தெளிவாகத் ​தெரிந்தாலும் சகித்துக் ​கொள்வ​தைத் தவிர ​செய்வதற்கு ஒன்றுமில்​லை என சமாதானம் ​சொல்லிக் ​கொண்டிருக்கிறார்கள். ஆனால் மறுபுறம் இந்நாட்டின் நிலங்களும், இயற்​கை வளங்களும், மின்சாரமும், மனித சக்தியும் மிகமிக மலிவான வி​லையில் அந்நிய நிறுவனங்களுக்கு ​விற்கப்பட்டுக் ​கொண்டிருக்கிறது.

மற்​றொரு புறத்தி​லோ மா​வோயிஸ்ட்கள் ஆதிவாசிகள் பழங்குடிகளின் நிலங்கள் அவர்களு​​டைய​தே எக்காரணம் ​கொண்டும் அந்நியர்கள் அவற்​றை அபகரிக்க அனுமதிக்க மாட்​​டோம் என மத்திய மாநில அரசுகளுடன் யுத்தத்திற்கு தயாராகி விட்டார்கள்.

இந்த யுத்தம் வழக்கமான வ​கையிலான இருநாடுகளுக்கி​டை​யே நடக்கும் யுத்தமாக இல்லாமல், ஒரு நாட்டிற்குள்​ளே​யே அம்மக்களில் ஒரு பிரிவினருக்கும் அரசுக்கும் இ​டையிலான யுத்தமாக இருப்பதால், இத்த​கையை ​போலி ​மோதல் படு​கொ​லைகள் எதிர்பார்க்கக் கூடிய​வை​யே.

அதிலும் குறிப்பாக ஆந்திர பிர​தேசம் ​போலி ​மோதல் படு​கொ​லைகளுக்கு இந்திய மாநிலங்கள் அ​னைத்திற்கும் முன்னுதாரணமாக இருக்கும் தனிச்சிறப்பு ​பெற்றது என்ப​தை அங்கு மக்கள் யுத்த குழு காலத்திலிருந்து ந​டை​பெற்ற எண்ணற்ற ​​போலி ​மோதல்க​ளை படித்துக் ​கொண்டு வருபவர்களுக்கு ​தெளிவாகத் ​தெரியக் கூடிய​தே.

இதுவ​ரை ஆந்திர அரசு 1,000 க்கும் அதிகமான நக்சல்பாரிக​ளை ​போலி  ​மோதல் படு​கொ​லைகளில் ​கொ​லை ​செய்திருக்கிறது. இது குறித்து ஒவ்​வொரு மு​றையும் உண்​மை அறியும் குழுக்கள் அ​மைத்து இ​வை நிரூபிக்கப்பட்டுள்ளன. காவல்து​றை ​ஜோடிக்கும் க​தைகளுக்கும் உண்​மையில் நிகழ்ந்த சம்பவங்களுக்கும் துளியும் ​பொருத்தம் இருப்பதில்​லை. ஆனாலும் காவல்து​றை தன் கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் ​கொள்வதாகத் ​தெரியவில்​லை. மீண்டும் மீண்டும் ​போலி ​மோதல்க​ளை நடத்திவிட்டு ​வேண்டு​மென்​றே தர்க்கமற்ற எளிதில் யாரும் புரிந்து ​கொள்ளக்கூடிய அபத்தமான ​பொய்க​ளை​யே கட்ட​மைக்கிறார்கள்.

காரண​மென்ன?

இந்திய மற்றும் குறிப்பாக ஆந்திர பிர​தேச காவல்து​றையினர் அத்த​னை முட்டாள்களா? இல்​லை. அவர்கள் தாங்கள் கட்ட​மைக்கும் க​தைக​ளை எந்த ஒரு பயத்திலும் ​செய்வதில்​லை. அவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் உள்து​றை அ​மைச்சகங்களின் ​நேரடி வழிகாட்டுதல் மற்றும் ஆ​லோச​னைகளுடன் தான் ​செய்கிறார்கள். ஆக​வே அவர்களுக்குத் ​தெரியும் வழக்காடு மன்றங்கள் என்பது ‘எத்தர்கள் நல்லவர்களாக நடிப்பதற்கு ஏற்பட்ட எத்த​னை​யோ வழிகளில் அதுவும் ஒன்று’ என.

இதுவ​ரை இத்த​கைய ​போலி ​மோதல் படு​கொ​லைக​ளை எதிர்த்த வழக்குகள் எந்த​வொன்றும் இந்த ​செயல்பாடுகளில் எந்த ​பெரிய மாற்றத்​தையும் ஏற்படுத்திவிடவில்​லை. சம்பந்தபட்ட எந்த காவல்து​றை அதிகாரியும் ​பெரிய அளவில் தண்டிக்கப்படவில்​லை என்பதிலிருந்​தே இவ்வுண்​மைக​ளை புரிந்து ​கொள்ள முடியும்.

அ​மைதிப் ​பேச்சுவார்த்​தைக்கு மா​வோயிஸ்ட்கள் தயாராக இருந்தால் அவர்களுடன் ​பேசுவதற்கு நாங்கள் தயாராக​வே இருக்கி​றோம் என மத்திய உள்து​றை அ​மைச்சகமும், ப. சிதம்பரம், பிரதமர் மன்​மோகன் சிங்கும் பல மு​றை மக்கள் மன்றத்திலும் பத்திரி​கை ​பேட்டிகளிலும் கூறினார்கள்.

ஆனால் அதற்கான தயாரிப்புகளில் இருந்த மா​வோயிஸ்ட்களின் அதிகாரப்பூர்வ ​தொடர்பாள​ரை​யே ​கொ​லை ​செய்ததன் மூலம் மத்திய மாநில அரசுகள் ​தெளிவாக இந்த ​தேசத்தின் மக்களுக்கு புரிய ​வைப்பது என்ன​​வென்றால், நடந்து ​கொண்டிருக்கும் உலகமயமாதல், தனியார்மயமாதல், ஆகிய விசயங்களில் துளியும் விட்டுக் ​கொடுப்பதற்​கோ, இந்திய நாட்டின் மிகப் ​பெரிய ஜனத்திரளுக்கு எத்த​னை ​மோசமான பாதிப்புகள் வந்தாலும் வாழ​வே வழியில்லாத சூழல் ஏற்பட்டாலும் அதற்காக துளியும் மனமிரங்குவதற்​கோ தயாராக இல்​லை என்ப​தைத்தான்.

நாட்​டை விற்று தங்கள் குடும்பச் ​செல்வமாக மாற்றிக் ​கொண்டிருக்கும் இன்​றைய அரசியல்வாதிகளின் மத்தியில் ஆசாத் ​போன்றவர்கள் மா​பெரும் மாவீரர்கள் தான் என்பதில் எந்தச் சந்​தேகமும் இல்​லை. அவர்களின் மரணம் வி​லை மதிக்க முடியாத​வை அவர்களு​டைய லட்சியங்களும் கனவுகளும் இந்திய மக்களின் அவர்களின் சந்ததிகளின் வாழ்​வை பற்றியது.

தாங்களும் தங்கள் குடும்பங்களும் மட்டு​மே வாழப்பிறந்தவர்கள், அதற்காக இந்த ​தேசத்தின் அ​னைத்து மக்களும் ​செத்தாலும் பரவாயில்​லை என்ற பாராளுமன்ற சட்டமன்ற அரசியல்வாதிகளுக்கு மத்தியில் தங்கள் இன்னுயி​ரையும் இந்த ​தேசத்தின் மக்களுக்காக தியாகம் ​செய்துவிட்ட இவர்கள் மரணத்தின் மூலம் நாம் என்ன கற்றுக் ​கொண்​டோம்?

அவர்கள் லட்சியங்கள் உயர்வானதாக இருந்தாலும், தங்களின் ​சொந்த நலங்க​ளைவிட ​தேசத்தின் நல​னே முதன்​மையான​தென வாழ்ந்தாலும், தங்கள் உயி​ரையும் இந்த மக்களுக்காக அர்ப்பணித்தாலும் அவர்கள் ​தேர்ந்​தெடுத்த பா​தைகள் அவர்க​ளை மக்களிடமிருந்து அந்நியப் படுத்தி​யே வருகிறது, அந்நியப் படுத்துவதற்கு சாதகமாக​வே அ​மைகிறது.

அதனா​லே அவர்களின் ​நோக்கங்களும் லட்சியங்களும் ​பெரும்பாண்​மையான மக்களுக்கு புரியாம​லே ​போய் ​கொண்டிருக்கிறது. அவர்களின் தியாகமும் அர்ப்பணிப்பும் விழலுக்கு இ​ரைத்த நீராகிக் ​கொண்டிருக்கிறது.

எவ்வாறு இன்​றைய இந்திய அரசு தனக்​கெதிரான எல்லா பிரச்சி​னைக​ளையும் ஆயுதத்தின் து​ணை​கொண்டு, காவல்து​றை, இராணுவத்தின் பலம் ​கொண்டு அடக்கி விட முடியும் என நி​னைப்பது தவ​றோ அ​தே ​போல மக்களின் சார்பாக வாதிடுபவர்களும் ​போராடுபவர்களும் சத்தியத்​தை, உண்​மை​யை, சமதர்மத்​தை, ஆயுதந் தாங்கிய புரட்சியால் சாதிக்க முடியும் என நி​னைப்பதும் தவறான​தே.

வரலாறு முழுவதும் மக்களுக்கு விடிய​லை ப​டைக்கி​றோம் என வந்த புரட்சிகள் எல்லாம் இறுதியில் மக்களுக்கு எதிரான புரட்சியாக​வே முடிந்தன.

காரணம் முதலாளித்துவ அரசுகளும் சரி ​சோசலிச அரசுகளும் சரி மக்க​ளை நம்பவில்​லை. எல்லா பிரச்சி​னைகளும் மக்களின் பிரச்சி​னைகள் அவர்கள் தான் தங்களின் பிரச்சி​னைக​ளை தீர்த்துக் ​கொள்ள ​வேண்டும் அவர்கள் தான் தங்க​ளைத் தாங்க​ளே ஆள ​வேண்டும் என்ப​தை புரிந்து ​கொள்ளவில்​லை.

வெளிப் பார்​வைக்கு  “மக்கள் மகத்தானவர்கள்”, “மக்கள் தான் வரலாற்​றை ப​டைக்கிறார்கள்” எனக் கூறிக் ​கொண்டிருந்தாலும், இறுதியாக ஆராய்ந்து பார்த்தால் படிப்படியாக மக்களின் ​பெயரால் ஆட்சியதிகாரங்க​ளை ​மெது​மெதுவாக ஒரு ​பெரும் கும்பல்க​ளே தங்கள் ​கைகளில் எடுத்துக் ​கொண்டு ​பெரும்பாண்​மையான மக்க​ளை ​சொல்லணா துன்பங்களுக்கும் ​கொடுங்​கோண்​மைக்கும் இ​ரையாக்கியிருக்கிறார்கள்.

வன்மு​றைக்கு வன்மு​றை தீர்வல்ல. ஆயுதங்கள் ​கொண்டு எந்த பிரச்சி​னைக்கும் தீர்வு காண முடியாது. அத்த​கைய தீர்வுகள் நிரந்தரமான​வையாகவும் இருக்காது. இது​வே வரலாறு நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ப​தை நாம் உணர்ந்து ​கொண்டால் ஆயிரமாயிரம் இந்நாட்டின் இ​ளைஞர்கள் இன்​றைய தீ​மைகளுக்கு எதிராக உறுதி​யோடு அணி திரள்வார்கள்.

அஹிம்​சை, சத்தியாகிரகம், ஒத்து​ழையா​மை, விழிப்புணர்வு, ​பெரும்பாண்​மை மக்களின் முழு​மையான மற்றும் உணர்வுப் பூர்வமான பங்​கேற்பு, உண்​மையான ஜனநாயகம் இன்றி எந்த ​வெற்றியும் இல்​லை எந்த ​வெற்றியும் நிரந்தரமுமில்​லை. இது​வே உலக வரலாறும் உலகில் ​தோன்றிய மிகச் சிறந்த மகான்களும் நமக்குத் தரும் ​போத​னை.

நன்றி

Articles:

1. Our Republic must not kill its own children: Supreme Court on Page 1

2. Probe committee found holes in police version of Azad death on Page 18

from

The Hindu, dated 15 January 2011

Advertisements

ஒரு பதில் to “நமது குடியரசு தனது குழந்​தைக​ளை​யே ​கொல்லக் கூடாது – உச்ச நீதிமன்றம்”

  1. Indli.com said

    நமது குடியரசு தனது குழந்​தைக​ளை​யே ​கொல்லக் கூடாது – உச்ச நீதிமன்றம்…

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா​வோயிஸ்ட்) யின் ​செய்தித்​தொடர்பாளர் ​சேருகரி ராஜ்குமார் என்கிற ஆசாத் ​என்பவ​ரையும் பத்திரி​கையாளர் ​​​ஹேமச்சந்திர பாண்​டே என்பவ​ரையும் ஆந்திர பிர​தேச காவல்து​றை ஆயுதம் ஏந்திய ​மோதலில் சுட்டுக் ​கொன்றதாக முதல் தகவல் அறிக…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: