எனது நாட்குறிப்புகள்

திவசங்களில் ​செய்யப்படும் தானங்களுக்கு ​​பொருள் என்ன?

Posted by ம​கேஷ் மேல் ஜனவரி 23, 2011

என் ​பெரியப்பாவின் முதல் வருட திவசத்திற்கு ​சென்று வந்த என் அப்பா திவசம் விமரி​​சையாக நல்லபடியாக நடந்து முடிந்தது பற்றி கூறினார்.

எல்லா தானங்க​ளையும் என் ​பெரியப்பாவின் மகன் ஒன்று விடாமல் ​செய்தாராம். ​கோ தானம், வஸ்திர தானம், தங்கம், ​வெள்ளி ​போன்ற பிற தானங்கள் அ​னைத்தும் ஒரு கு​றையும் ​வைக்காமல் ​செய்தார் என மகிழ்ச்சி​யோடு ​சொன்னார்.

எனக்கு ​தெனாலிராமனின் க​தை ஒன்றுதான் ஞாபகத்திற்கு வந்தது

விஜயநகரத்தி​லே அரசர் கிருஷ்ண​தேவராயரின் அரண்ம​னையில் மறுநாள் ந​டை​பெற இருக்கும் அரசரின் தாயார் வருட திவசத்திற்கான காரியங்கள் தடபுடலாக ந​டை​பெற்றுக் ​கொண்டிருந்தது.

ஆனால் அரசர் கிருஷ்ண​தேவராயர் ​சோகமாக கவ​லை​யோடு அமர்ந்திருந்தார்.

ராஜகுரு அரசரிடம் அவரு​டைய நி​லைக்கு காரண​மென்ன என்று ​கேட்கிறார்.

தன்னு​டைய தாயார் இறக்கும் தறுவாயில் தங்க மாம்பழம் (மல்​கோவாவா, பங்கணபள்ளியா? இல்​லை ​வேறு ஏ​தேனும் வ​கை மாம்பழமா ​தெரியவில்​லை) ​கேட்டாராம். ஆனால் அந்தப் பருவம் மாம்பழங்கள் காய்க்கும் பருவம் இல்​லையாதலால், அந்த சாம்ராஜ்யத்தின் நாலாதி​சைகளுக்கும் வீரர்க​ளை அனுப்பியும் அம்மாம்பழம் கி​டைக்கவில்​லை. அதற்குள் தாயார் இறந்துவிட்டார். நி​றை​வேறாத ஆ​சையுடன் அவர் இறந்துவிட்ட​தே தன்னு​டைய கவ​லைக்கு காரண​மென்று அரசர் கூறினாராம்.

இதுதான் நல்ல சந்தர்ப்பம் சம்பாதிப்பதற்கு என சட்​டென்று திட்டம் ​போட்ட ராஜகுரு, அரசருக்கு ஒரு ​யோச​னை கூறினார்.

“ஐந்து அந்தனர்களுக்கு 5 தங்க மாம்பலங்க​ளை நா​ளைய திவசத்தின் முடிவில் ​கொடுத்து விட்டால் இறந்தவரு​டைய ஆத்மா சாந்திய​டையும்”

ஆனால் மீண்டும் இது மாம்பழ பருவம் இல்லாததால் மாம்பழங்கள் எங்கிருந்து கி​டைக்கும்? என மன்னன் ​கேட்டாராம்.

ராஜகுரு சாமர்த்தியமாக ஒரு ​யோச​னை கூறியிருக்கிறார்

“தங்க மாம்பழங்களுக்கு பதிலாக தங்கத்தினால் ​செய்த மாம்பழங்க​ளை ​​கொடுத்துவிடலாம்”

மன்னருக்கு இந்த ​யோச​னை முழு​மையாக புரியாவிட்டாலும் ராஜகுருவின் ​யோச​னை என்பதால் ஒத்துக் ​கொண்டார்.

ராஜகுரு தன்னு​டைய ஆட்கள் சில​ரை அந்தனர்கள் ​போல் ​வேடமிட ​வைத்து மறுநாள் திவசத்திற்கு ​​சென்று தங்கத்தினால் ​செய்த மாம்பழங்க​ளை ​பெற்று அதில் பாதி​யை தன்னிடம் ​கொடுத்து விட​வேண்டும் என்ற ஒப்பந்த்துடன் அனுப்பி ​வைத்தாராம்.

மறுநாள் திவச​மெல்லாம் முடிந்தவுடன் அரசர் தங்கத்தினாலான மாம்பழங்க​ளை அந்த ஐந்து அந்தனர்களுக்கும் பல மரியா​தைகளுடன் தாம்பாழத்தில் ​வைத்து ​கொடுத்தாராம்.

இ​​வை எதுவும் குறித்து முன்ன​மே எதுவும் ​​தெரியாத ​தெனாலிராமன் அதிர்ச்சியுடன் பார்த்துக் ​கொண்டிருந்தானாம்.

இதில் ஏ​தோ சூது இருக்கிறது என்ப​தை புரிந்து ​கொண்ட ​தெனாலிராமன், பக்குவமாக புத்திசாலித்தனமாக இவ்விசயத்தில் மன்னருக்கு உண்​மை​யை புரிய​வைக்க முடிவு எடுத்து, ஒரு திட்டம் தீட்டினானாம்.

தங்கத்தினாலான மாம்பழங்க​ளை தானமாக ​பெற்றுக் ​கொண்டு ​வெளி​யேற இருந்த அந்தனர்க​ளை அ​ழைத்து, தானும் தன் தாயாருக்கு சிரார்தம் ​கொடுக்க ​வேண்டும், தன்னு​டைய தாயாருக்கும் க​டைசி ​நேரத்தில் ஒரு ஆ​சை இருந்தது அ​தை நி​றை​வேற்ற ​வேண்டும் எனக் கூறினானாம்.

ஒ​ரே ​நேரத்தில் இரண்டு தானம் கி​டைக்கும் மகிழ்ச்சியில் அந்த அந்தனர்களும் சந்​தோசமாக அந்த தானத்​தை வாங்கிக் ​கொள்ள சம்மதித்தார்களாம்.

காவலர்க​ளை அ​ழைத்து பழுக்க காய்ச்சிய 5 இரும்புக் கம்பிக​ளை ​கொண்டு வரச் ​சொன்னானாம்

எதற்கு என்று புரியாமல் அந்தனர்களும், ராஜகுருவும் மற்றும் அங்கிருந்த அ​னைவரும் முழித்துக் ​கொண்டிருந்தார்களாம்.

அப்​பொழுது ​தெனாலிராமன் கூறினானாம்

என் தாயார் இறக்கும் தறுவாயில் எனக்கு பழுக்க காய்ச்சிய இரும்புக் கம்பியால் சூடு ​வைக்க விரும்பினார்கள் ஆனால் அந்த ஆ​சை நி​றை​வேறாம​லே அவர்கள் இறந்துவிட்டார்கள் ஆக​வே உங்களுக்கு அத​னைக் ​கொடுத்து அவர்கள் ஆத்மா சாந்திய​டைய ​செய்ய விரும்புகி​றேன் என்றானாம்

பயந்து ​போன அந்தனர்கள் எங்களுக்கு சூடு ​வைப்பதால் அவர்களுக்கு எவ்வாறு திருப்தி ஏற்படும் என்றார்களாம்.

அரசரின் தாயார் சாப்பிட விரும்பிய மாம்பழத்திற்காக உங்களுக்கு தானம் ​கொடுப்பதால் அவர்கள் ஆத்மா திருப்திய​டையு​மென்றால் என் விசயத்தில் மட்டும் ஏன் நிகழாது என்றானாம்

ஐந்து அந்தனர்களும் தானம் வாங்கிய தங்கத்தினாலான மாம்பழங்க​ளை திருப்பிக் ​கொடுத்துவிட்டு, ஆ​ளைவிடுமாறு மன்னிப்புக் ​கேட்டுக் ​கொண்டு பயந்து ஓடிவிட்டார்களாம்

தெனாலிராமனின் புத்திசாலித்தனத்​தை பாராட்டி அதில் இரண்டு தங்க மாம்பழங்க​ளை அவனுக்கு மன்னர் பரிசாக அளித்தாராம்!

எவ்வளவு நுட்பமான க​தையிது!

எனக்​கென்ன​வோ இந்த க​தையில் சில இடறல்கள் ஏற்படுகின்றன. ​போலி அந்தனர்க​ளை அம்பலப்படுத்துவதுதான் ​தெனாலிராமனின் ​நோக்கம் என்பது ​போன்ற ஒரு இ​டைச் ​செருகல் இக்க​தையில் ஏற்பட்டுள்ள​தைப் ​போல ​தோன்றுகிறது.

உண்​மையான அந்தனர்கள் என்றால் சூடு வாங்கிக் ​கொள்ள ​வேட்டி​யை தூக்கிக் ​கொண்டு வரி​சையி​லேயா நிற்பார்கள்!

இக்க​தை​யை “WIT & HUMOUR The Best of Tenali Raman” என்ற SPIDER BOOKS பதிப்பகத்தாரால் ​வெளியிடப்பட்ட புத்தகத்தில் படித்​தேன். அதில் Retold by Brian Jude Thomas என்று ​போடப் பட்டிருந்தது.

தெனாலிராமன் சடங்கு சம்பிரதாயங்கள், அந்தனர்களின் ஆசார ​அனுஷ்டானங்கள், அவர்கள் பரப்பும் மூடநம்பிக்​கைகள் ஆகியவற்​றை  ​கேலி ​செய்து அம்பலப்படுத்திய பல க​தைகள் இருப்பதாக ​கேள்விப்பட்டிருக்கி​றேன்.

இது​​போல Abridged, Retold, selected or best வ​கை புத்தகங்களில்லாமல், ​தெனாலிராமன் க​தைகளின் முழு​மையான மூலப் பாடப்புத்தகத் ​தொகுப்பு கி​டைத்தால் நன்றாக இருக்கும். ஏ​தேனும் பதிப்பகம் தமிழி​லோ அல்லது ஆங்கிலத்தி​லோ அத்த​கைய ​வெளியீ​டை ​கொண்டு வந்திருந்தால் தயவு ​செய்து ​தெரிவிக்குமாறு இ​தை படிக்கும் நண்பர்களிடம் ​கேட்டுக் ​கொள்கி​றேன்.

Advertisements

ஒரு பதில் to “திவசங்களில் ​செய்யப்படும் தானங்களுக்கு ​​பொருள் என்ன?”

  1. நான் 18 ஆண்டுகள் எனது அப்பாவிற்கும், அம்மாவிற்கு 10 ஆண்டுகளும் திவசம் கொடுத்தேன். எல்லாம் அய்யரை வைத்துதான். நான் கம்யுனிசத்திற்கு முதல் படியே இந்த திவசத்திற்கு திவசம் கொடுத்தது தான்!
    இந்த இரண்டையும் என்னால் மறக்க முடியாது.

    எனது அம்மா, அப்பா நினைவுகளை ஏதோ விதத்தில் நான் நினைவு கூறக் கடமைப்பட்டுக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: