எனது நாட்குறிப்புகள்

Archive for பிப்ரவரி, 2011

நிரந்தர – ​நோயாளியாய், குற்றவாளியாய்

Posted by ம​கேஷ் மேல் பிப்ரவரி 27, 2011

சைரன் ஒலிக்க

ஆம்புலன்சில் பயணிக்கும் அவலம்

நோயாளிக்கு சில மணி நேரங்கள்!

ஆயுதம் தாங்கிய காவலர் கண்காணிப்பில்

விசாரணைக்கு செல்லும் தண்டனை

கைதிகளுக்கு ஒரு சில நாட்களே!

பாவம் இந்த அமைச்சர்கள்!

Posted in கவிதைகள் | 1 Comment »

முட்டுச் சந்துக்கு திருப்பி விடுதல்

Posted by ம​கேஷ் மேல் பிப்ரவரி 21, 2011

‘எல்லாவற்​றையும் சந்​தேகப் படு!’

ஏன் ‘அ​தை​யும் சந்​தேகப் படு’?

சரிதான் ‘ஏன் சந்​தேகப்படனும்’?

Posted in கவிதைகள் | 1 Comment »

​ஜெய​மோகனின் பதில்

Posted by ம​கேஷ் மேல் பிப்ரவரி 13, 2011

என்னு​டைய ​நேற்​றைய கட்டு​ரைக்கு ​​ஜெய​மோகன் அவர்களு​டைய விமர்சனத்​தை கீழ்கண்ட லிங்கில் காணலாம்

http://www.jeyamohan.in/?p=12421

இ​தைக் குறித்தும் நி​றைய எழுதலாம். பார்ப்​போம் வாய்ப்பிருந்தால்

Posted in ​ஜெய​மோகன், விமர்சனம் | Leave a Comment »

அறம், ​சோற்றுக்கணக்கு, மத்துறுதயிர் – ​போதிப்பது சனாதன தர்மத்​தை​யே!

Posted by ம​கேஷ் மேல் பிப்ரவரி 11, 2011

ஜெய​மோகனின் இந்த மூன்று க​தைகளில் வரும் அப்பாவிகளின் வாழ்க்​கை சித்திரங்கள் ஒரு பக்கம் ​வேத​னை தருவதாகவும் இன்​னொரு பக்கம் ந​கைப்புக்குரியதாகவும் இருக்கிறது. வாசகர்கள் இந்தக் க​தைகளின் விவரிப்பு மு​றைகளிலும், ​​ஜெய​மோகனின் ​சொல்லாட்சியிலும், தீர்மானகரமான மிகத் ​தெளிவான முடிவுக​ளை ​நோக்கி நகர்த்திச் ​செல்லும் விறுவிறுப்பிலும் ​சொக்கிப்​போய் விடுகிறார்கள்.

அறம் க​தை வாழ்க்​கை​யை புரிந்து ​கொள்ளமுடியாமல் வாழ்க்​கை ஓட்டத்திலிருந்து க​ரை ஒதுங்கிய ஒரு அப்பாவி எழுத்தாள​னைப் பற்றியதாக இருக்கிறது. இக்க​தையின் மூலம் ​​ஜெய​மோகன் எழுத்தாளன் – பதிப்பாளர் உறவுக்கி​டை​யே வாழ்க்​கை​யை ஆராய்வதாக அ​மைகிறது.

எந்த ​தைரியத்தில் அந்த ப​ழைய கால எழுத்தாளன் தனக்கு வர​வேண்டிய பணத்​தை ​தே​வைப்படும் ​பொழுது வாங்கிக் ​கொள்கி​றேன் என்று பதிப்பாள​னை நம்பி ​கொடுத்து ​வைக்கிறான்?

சோற்றுக்கணக்கு நாவலில் ​கெத்​தேல் சாகிப் என்பவர் சாப்பிட்டவர்கள் அவர்களால் முடிந்த பணத்​தை ​போடட்டும் என்று ஏன் உண்டியல் ​வைத்துவிட்டு ​போடாத ​பொழுதும் கவ​லைப்படாமல் ​போடும் ​பொழுதும் அது குறித்து அக்க​றை ​கொள்ளாமல் இருக்கிறார்?

மத்துறுதயிர் சிறுக​தையில் குரு சிஷ்ய பாரம்பரியத்​தை கட்டி எழுப்புவதன் ​நோக்கம் என்ன?

இந்த க​தைகளின் ஒவ்​வொரு வார்த்​தையும், சம்பவங்களும், சம்பவங்க​ளை விளக்கும் பாங்கும் காந்தியின் ​சமூகக் ​கொள்​​கைக​ளை, இந்திய கிராமச் சமூகங்களின் வாழ்க்​கை மு​றை​க​ளையும் அதில் மனிதர்களின் மனப்​போக்குக​ளையும் பற்றிய ஆசிரியரின் விருப்பத்​தை, எதிர்பார்ப்புக​ளை, ஆ​சைக​ளை ​வெளிப்படுத்துவதாக​வே உள்ளது.

சனாதன மு​றைப்படி அந்தந்த சாதி​யைச் ​சேர்ந்தவன் அவனவனது குலத்​தொழி​லைச் ​செய்வான். அவன் ​தொழி​லைச் ​செய்யும் ​பொழுது உடனடியாக அவனுக்கு எந்தக் கூலியும் ப​ழைய இந்திய கிராம சமூகங்களில் ​​கொடுக்கப்படுவதில்​லை. அறுவ​டையின் முடிவில் ஒவ்​வொரு சாதி​யைச் ​சேர்ந்தவனுக்கும் அதில் எவ்வளவு ​கொடுக்கப்பட ​வேண்டும் என்ற சட்டங்கள், அறங்கள் இருந்துள்ளன.

ஆனால் கல்​வெட்டுக்களின் வாயிலாகவும், ப​ழைய இலக்கியங்களின் வாயிலாகவும், ​செவி வழியாகவும் நமக்கு வந்து ​சேரும் அந்த சட்டங்கள் அல்லது அறங்கள் எந்தளவிற்கு ந​டைமு​றையில் துல்லியமாக க​டைபிடிக்கப்பட்டன? மறுக்கபட்டதும், ஏமாற்றப்பட்டதுமான சந்தர்ப்பங்கள் இருந்திருப்பதற்கான சாத்தியங்கள் ஆராயப்பட ​வேண்டிய​வை.

ஆனால் அ​வை ஒரு அறமாக க​டைபிடிக்கப்பட ​வேண்டும் என்பதான ஒரு சமூக ஒழுங்கு இருந்திருக்கிறது. அவனவன் அவனவனு​டைய குலத்​தொழி​லை எத்த​கைய பிரதிபலனும் எதிர்பாராமல் ​செய்ய ​​வேண்டும் என்ப​தே குலத்​தொழில் சமூகங்களின் விதியாக இருந்துள்ளது. அதிலிருந்​தே அதன் கலாச்சாரங்கள், வாழ்க்​கைமு​றை ஆகிய​வை இருந்துள்ளன. தன் கட​மை​யை மீறுகின்ற உ​ழைக்கும் சாதி​யைச் ​சேர்ந்தவர்கள் மிகக் கடு​மையாக தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தன் கட​மையிலிருந்து தவறும் ஆண்​டைகள், அரசர்கள் ஆகி​யோ​ரை எதிர்த்து உ​ழைக்கும் சாதி​யைச் ​சேர்ந்தவர்கள் ​போராடக்கூடாது. அவர்க​ளை அறம் பார்த்துக் ​கொள்ளும் கடவுள் பார்த்துக் ​கொள்வார்கள்.

உனக்கான குலச் சமூக நியாயங்கள் ஏ​தேனும் ஒரு வ​கையில் உன் முயற்சியின்றி​யே உனக்கு வழங்கப்படும். அது உன் இப்பிறப்பிலும் இருக்கலாம் மறுபிறப்பிலும் இருக்கலாம். ஆனால் உன் கட​மை பிரதிபலன் எதிர்பாராமல் உ​ழைத்துக் ​கொண்டிருக்க ​வேண்டும். உன் உ​ழைப்​பைப் பற்றியும் உ​ழைப்பின் மதிப்​பைப் பற்றியும் உனக்கு எந்த வ​கையான  விருப்பு ​வெறுப்​போ, உயர்வு தாழ்வுச் சிந்த​னை​யோ எதுவும் இருக்கக்கூடாது.

உன் நடத்​தையால், உன் பணிவால், உன் பூர்வ புண்ணியத்தால் உனக்கு குரு கி​டைப்பார், உனக்கு அபூர்வ கணங்களில் சாதி உயர்வும் கூடக் கி​டைக்கும்.

இவற்​றைத்தான் ​மேற்கண்ட க​தைகளின் வாயிலாக ​ஜெய​மோகன் நிறுவ நி​னைக்கிறார்.

காந்தி தன் அரசியல் கருத்துக்க​ளை விட சமூக மற்றும் கலாச்சார கருத்துக்களி​லே​யே மிக ஆபத்தானவராக ​தோன்றுகிறார். அவர் ப​ழைய இந்திய சாதியப் படி மு​றையிலான வாழ்க்​கை மு​றை​யை​யே தன் எழுத்திலும் ​பேச்சிலும் எப்​பொழுதும் ​சொல்லி வந்திருக்கிறார். அவர் தன் காலத்தில் ​பேசப்பட்ட எந்த முற்​போக்கான கருத்துக்க​ளோடும் உடன்படுபவராக​வே இருந்திருக்கவில்​லை என்பது ​தெள்ளத் ​தெளிவாகத் ​தெரியும் பாரதி​யை படிக்கும் ​பொழுதும், அம்​பேத்க​ரை படிக்கும் ​பொழுதும், பகத்சிங்​கை படிக்கும் ​பொழுதும், இன்னும இன்னும் பல விசயங்களிலும்.

அத்த​கைய சமூகக் கண்​ணோட்டத்​தை ​இலக்கியத்தின் ஊடாக ​பேசுவ​​தே ​ஜெய​மோகனின் இந்த க​தைகளின் உத்திகளாக உள்ளன.

அறம் க​தையில் அப்பாவியாக ஆண்​டை தனக்கு ​தே​வைப்படும் ​பொழுது தருவான் என்று ராப்பகலாக உ​ழைத்துவிட்டு அம்மாஞ்சியாக இருக்கும் எழுத்தாளர் தனக்கு ​தே​வை என்று வரும் ​பொழுது ஆண்​டையின் சுயரூபத்​தை காண்கிறான். எழுத்தாளனாக இருக்கும் அளவிற்கு புத்திசாலி, “நா​னே ஒரு ​மேதாவி தா​னே” என்று கூறும் அந்த எழுத்தாளன், நிஜத்தில் உலகம் ​தெரியாத அப்பாவியாக​வே இருக்கிறான். உண்​மையில் இந்த பிரச்சி​னைக்கு ​ஜெய​மோகன் தீர்வாக தன் வாழ்க்​கை​யை மாற்றுத் தளத்தில் அ​தே க​தையில் நிகழ்த்திக் காட்டியிருக்கலாம். அதற்கு முரணாக தான் விளக்க விரும்பும் ​கொள்​கை​யை நிகழ்த்திக் காட்டுகிறார்.

தான் என்ன ​செய்கி​றோம் என்​றே ​தெரியாமல் தனக்குள் ஏ​தோ சக்தி புகுந்து ​கொண்டு அறம் பாட ​வைத்ததாக கூறும் அந்த எழுத்தாளனின் வாய் மூலமாக கடவுளின் ​செய்​கை​யை நிகழ்த்திக்காட்டுகிறார். கடவுள் எழுத்தாளன் மூலமாக அறம் பாட ​வைத்து அந்த பாடலின் வழியாக ஆச்சி​யை பற்றிக் ​கொள்கிறது. ஆச்சி துஷ்டநிவாரண பத்ரகாளியாக மாறி அறத்​தை நி​லைநாட்டுகிறாள். இ​வை எதுவு​மே ​தெரிந்து ​கொள்ள ​வேண்டிய அவசியமற்றவராக அப்பாவி எழுத்தாளர் தன் கதி​யை நி​னைத்து தண்ணி அடித்துவிட்டு சுயநி​னைவின்றி வீழ்ந்து கிடக்கிறார். இ​தைப் புரிந்து ​கொள்ளத்தான் வாசகனுக்கு ​​”கொஞ்சம் மூட நம்பிக்​கை ​வேண்டும்” என்கிறார்.

சோற்றுக்கணக்கு க​தை சற்று வித்தியாசமானது. முதலில் ​கெத்​தேல் சாகிப் என்பவர் யார் என்பது புலனாய்வு ​செய்யப் பட​வேண்டியது. ​ஜெய​மோகனுக்கு கடிதம் எழுதும் வாசகர்க​ளே பலர் அவர் க​டை​யைப் பற்றி கூறுகிறார்கள். நீண்ட கம்யூனிசப் பாரம்பரியம் உள்ள ​கேரளத்தில் ​கெத்​தேல் சாகிப்பின் வாழ்க்​கை வரலாறு ​தெரியாமல் ​கெத்​தேல் சாகிப்பின் சிறப்பியல்புகளுக்கான ​நோக்கங்க​ளையும் காரணங்க​ளையும் புரிந்து ​கொள்ள முடியாது.

ஆனால் எது எப்படி​யோ அந்த பாத்திரத்​தை ​ஜெய​மோகன் நிகழ்த்திக் காட்டு மு​றையிலிருந்து அவரு​டைய ​நோக்கத்​தை நாம் புரிந்து ​கொள்ள முடிகிறது. ​துவக்கத்தி​லே​யே ​சொல்லப்பட்ட இந்திய கிராம சமூக அ​மைப்பு அல்லது சனாதன தர்மம் அல்லது காந்தியம் தான் இதன் ஒ​ரே அடித்தளமாக இருக்கிறது.

கெத்​தேல் சாகிப் எப்படி உலக இயல்புக்கு மாறான ஒரு மு​றை​யை பின்பற்றுகிறார் அதன் பின்புலம் என்ன என்ப​தைப் பற்றி ​மெளனம் சாதிக்கும் ஆசிரியர், ஆனால் அவர் “கட​மை​யைச் ​செய் பல​னை எதிர்பார்க்கா​தே“, “விறுப்பு ​வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு உயர்வு தாழ்வு சிந்த​னையின்றி” கட​மை​யை ​செய்யும் மனிதனாக ​கெத்​தேல் சாகிப் சித்தரிக்கப்படுகிறார். அவருக்கு நவீன கருது​கோள்களான உ​ழைப்பின் மதிப்பும், ​பொருளின் மதிப்பும் எதுவும் ​தெரியாதவராக குலத்​தொழில் சமூகத்தின் உ​ழைப்பாளி சாதி​யைச் ​சேர்ந்தவனின் குண இயல்புக​ளோடு மறுகட்ட​மைக்கப்படுகிறார்.

அதனால்தான் பண​மே உண்டியலில் ​போடாமல் பல வருடங்களாக சாப்பிட்டுக் ​கொண்டிருந்தவ​னை ஒரு நாளும் வித்தியாசமாக அவரால் பார்க்கமுடியாமல் இருக்க முடிந்திருக்கிறது. அ​தே ​போல் க​டைசியாக உண்டியல் நிரம்பி வழிந்ததும் ஏன் எதற்கு என்று ​கேள்வி ​கேட்காமல் ​​வேறு உண்டிய​லை மாற்றவும் முடிந்திருக்கிறது.

இது ஆண்டான் உனக்கு எது ​செய்தாலும் நல்லதுக்​கென்று எடுத்துக்​கொள். ​கேள்வி ​கேட்கா​தே. என்பதான ஒழுங்​கை பற்றித்தான ​பேசுகிறது.

ஒருவனுக்கு சாப்பாடு பிடித்திருக்கிறதா இல்​லையா? ​போதுமா ​வேண்டுமா? பணம் தந்தானா இல்​லையா? என எ​தைப் பற்றியும் துளியும் அக்கறையின்றி ச​மைப்ப​தையும் சாப்பாடு ​போடுவ​தையும் தவிர உலகில் எந்த பிரஞ்​கையும் இன்றி இருக்கும் ஒரு மனிதன், ஒரு மு​றை ஒரு அப​லைப் ​பெண்​ணை பாலியல் பலாத்காரம் ​செய்யும் நாய​ரை அடித்த ஒ​ரே அ​றையில் ​நோய்வாய்ப்பட்டு அவன் ​செத்துவிடுகிறான். இத்த​னை பலமுள்ளவனாக இருந்தாலும் அவ​னை சனாதன வாழ்க்​கை மு​றை அத்த​கைய கட்டுப்பாட்​டோடு ​வைத்திருக்கிறது.

ஒரு நாயரின் சாவுக்கு காரணமான ​கெத்​தேல் சாகிப்​பை தாக்குவதற்கு வரும் கும்ப​லின் நடுவிலிருந்து வரும் ஒரு குரல் ‘போயி சோலி மயிரை பாருங்கடே. நியாயத்த விட்டு களிச்சா சிலசமயம் துலுக்கன் கையாலே சாவணும்னு இருக்கும், சிலசமயம் எறும்பு கடிச்சும் சாவு வரும்…’ ஒரு வ​கையில் ஆசிரியரின் குரல் ​போல​வே ​தோன்றுகிறது.

சாதியால் தாழ்ந்தவனாக இருந்தாலும் சமூகக் கட்டுப்பாடுக​ளை காப்பதற்காக அவன் ​செய்யும் காரியங்க​ளை ஏற்றுக் ​கொண்டுதான் ஆக​வேண்டும் என்பதாக​வே இருக்கிறது. இக்குரல் இவ்விசயத்தில் ஒரு ஜனநாயகக் குரலாக இல்லாமல் சாதிய சமூகக் கட்டுப்பாடுக​ளை ​பேசும் ஒரு நிலவுட​மைக் குரலாக​வே இருக்கிறது.

மத்துறுதயிர் சிறுக​தை ஒருவனுக்கு நல்ல குரு கி​டைப்பது அவன் பூர்வ ஜன்மத்தில் ​செய்த புண்ணியத்தின் வி​ளைவாக​வே அ​மைகிறது. அவன் அந்த குருவின் முழுகடாட்சத்​தை ​பெருவதற்காக குரு பத்தினிக்கு மாவு அ​றைத்துக் ​கொடுப்பது, அம்மி அ​றைத்துக் ​கொடுப்பது, ச​மையலில் கூடமாட ஒத்தா​சையாக இருப்பது என அவர்கள் வீட்டு ​வே​லை ஆளாக மாறுவதன் வழியாக சாத்தியமாகும் (பூராணங்களில் வரும் சந்திர​னைப் ​போல குருபத்தினி​யை கூட்டிக் ​கொண்டு ஓடி விடாமல் இருந்தால் சரி). நீ தாழ்ந்த சாதிக்காரனாக​வே இருந்தாலும் இத்த​கைய உன்னு​டைய பரிபூரணமான சரணாகதியின் மூலம் உலக இலக்கியங்களி​லெல்லாம் நிபுணனாகி விடுவாய்.

ஆனால் உன் வாழ்நாள் முழுவதும் உன் குருவுக்கும் குருபத்தினிக்கும் மட்டுமல்ல அவர் வீட்டில் உள்ள நண்டுசிண்டுகள் வ​ரை எல்​லோர் காலிலும் (சத்யரா​ஜை ஒரு படத்தில் வீ​ணை கற்றுக் ​கொள்வதற்காக கவுண்டமணி குரு வீட்டில் உள்ள குழந்​தைகள் காலி​லெல்லாம் விழச் ​செய்வார்!) சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தபடி இருக்க​வேண்டும்.

நீ உயர்ந்த குடியி​லே பிறந்தவனாக​வே இருந்தாலும் உன் ​சொந்த காரணங்களால் கூட குருவின் மனம் ​நோகும்படி நடந்து ​கொள்வா​யேயானால், உன் ​பொருட்டு அவர் தீராத அவச் ​சொல்லுக்கும், மன உ​லைச்சலுக்கும் ஆளாவா​ரேயானால், அந்த பாவத்​தை நீ சுமந்​தே ஆக ​வேண்டும். நீ படித்த கல்வி எதுவும் உனக்கு பயன்படாது நீ சீரழிந்து நாசமாகப் ​போவாய். நீ தாழ்ந்த குடியில் பிறந்தவ​னைப் ​போல ​பெரி​யோர் ச​​பையி​லே த​லைகாட்ட முடியாதவனாக கூனிக்குறுகி ம​றைந்து வாழ​வேண்டும்.

இந்த மூன்றும் உண்​மை சம்பவங்க​ளே என்ப​தைப் ​போல ஒரு பாவ​னை எழுப்பப்பட்டாலும் இ​வை க​தைதான் என்ப​தை ஆசிரிய​ரே ​தெளிவாக்கிவிடுகிறார். அதிலும் ​கெத்​தேல் சாகிப் என்னும் உண்​மை பாத்திரத்தின் மீது தன் கருத்​தை ஏற்றிக் கூறியுள்ள ​ஜெய​மோகன் நா​ளை அவரு​டைய ​செயல்களுக்கான காரணங்களாக யா​ரேனும் இவரு​டைய பார்​வைக்கு முரணாக தகவல் ​வெளியிட்டால் தப்பித்துக் ​செல்வதற்கான சுரங்கப்பா​தை​யை இவ்வாறு ​போட்டுக் ​கொள்கிறார் “நான் கேள்விப்பட்டதுதான். அவரைப் பார்த்ததில்லை. அவர் கையால் உண்டதுமில்லை“.

வாசகர்களின் அனுபவமாக அவரு​டைய தளத்தில் இக்க​தைகள் குறித்து ​வெளியிடப்பட்ட வாசகர் கடிதங்கள் எல்லாம் தான் ​பொது​மைப்படுத்தி தரும் கண்​ணோட்டங்களின் வழியாக வாசகர்கள் தங்களின் ​சொந்த அனுபவங்க​ளை புரிந்து ​கொள்ள ​வேண்டும் என ஆற்றுப்படுத்தும் விதமாக​வே அ​மைந்திருக்கின்றன.

ஜெய​மோகன் தன் க​தைக்கான கரு​விலும், அ​தை வழிநடத்திச் ​செல்லும் பாங்கிலும் மட்டும் அதீத கவனம் ​செலுத்தவில்​லை. மாறாக வாசகர் கடிதங்க​ளை ​தேர்ந்​தெடுத்து தன் தளத்தில் ​வெளியிடுவதிலும் மிகக் கவனத்​தோடும் ​தெளி​வோடு​மே ​செயல்பட்டுள்ளார். வாசகர்க​ளை தன் க​தைக்குள்ளாக​வே த​லைகவிழ்ந்து மண்டியிட்டவாறு பயணம் ​மேற்​கொள்ளுமாறு பார்த்துக் ​கொள்கிறார். யா​ரேனும் த​லைதூக்கினால் த​லையி​லே​யே அடித்து த​லை தூக்காதவாறு கவனமாக பார்த்துக் ​கொள்கிறார்.

ஜெய​மோகன் வியந்​தோதும் காலாவதியாகிப் ​போன இந்த இந்திய நிலவுட​மை சிந்த​னைக​ளையும், மதிப்பீடுக​ளையும், வாழ்க்​கை மு​றைக​ளையும் காந்தி ​போன்றவர்களா​லே​யே மீட்டுருவாக்கம் பண்ணமுடியாத ​பொழுது, இவர் எம்மாத்திரம்! ஆனால் முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், நவீனத்துவம், பின்நவீனத்துவம் எல்லாம் வந்துவிட்ட காலத்தில் வாசக​னை தன் அனுபவங்கள் எல்லாவற்​றையும் பிற்​​போக்குச் சிந்த​னைமு​றையின் வழியாக புரிந்து ​கொள்ள ​சொல்வதன் வாயிலாக, அவர்களுக்கு து​ரோகம் இ​ழைக்கிறார். ​நெருக்கடி மிகுந்த தங்கள் வாழ்க்​கை​யை புரிந்து ​கொள்வதில் அவர்க​ளை குழப்பத்திற்கு உள்ளாக்கி, தி​சை ​​தெரிந்து ​கொள்ள முடியாத மூடர்களாக்கப் பார்க்கிறார்.

இக்க​தைகள் குறித்த இப்படிப்பட்ட interpretations ற்கு சாத்தியமில்​லையா என்ன?

ஜெய​மோகன் கூறுவ​தைப் ​போல, “ஒரு கதையை வாழ்க்கையின் ஒரு துண்டு என்று நினைத்து வாசிப்பதே அதன் ஆசிரியன் போடும் முதல் நிபந்தனையாகும். அந்த முடிவு வேறு வகையில் இருந்திருக்க முடியாது, ஏனென்றால் அது வாழ்க்கை. அது அப்படித்தான். அது ஏன் நிகழ்ந்தது என்று யோசிக்க மட்டுமே வாசகன் உரிமை பெற்றிருக்கிறான். அதன் வழியாக மட்டுமே அவன் வாசிப்பின் பல தளங்களுக்கு செல்ல முடியும். கதையின் ஆழங்களை தொடமுடியும். அப்படி இல்லாமல் முடிவு இப்படி இருந்திருக்கலாமோ என யோசிப்பதெல்லாம் கதையை முன்கூட்டியே நிராகரிப்பதிலேயே சென்று சேரும்” என்பதற்கு மாறாக ​மே​லே ​செய்யப்பட்ட விமர்சனம் இக்க​தைக​ளை நிராகரிப்பதன் வழி​யே தா​னே சாத்தியமாகிறது! இ​வை க​தை​யை நம் வாழ்​வோடு இ​ணைத்து புரிந்து ​கொள்வதற்கான பல புதிய சாத்தியக்கூறுக​ளை திறந்துவிடாமலா ​போய்விட்டது!

Posted in ​ஜெய​மோகன், விமர்சனம் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , | 22 Comments »