எனது நாட்குறிப்புகள்

குடும்பமும் ஊழலும் ஒருகடிதம்

Posted by ம​கேஷ் மேல் பிப்ரவரி 1, 2011

இரண்டு நாட்களுக்கு முன்பு எழுத்தாளர் ​ஜெய​மோகன் அவர்களின் வ​லைப்பூவில் கீழ்கண்ட வாசகரின் கடிதத்​தையும் அதற்கான ​​ஜெய​மோகன் அவர்களின் பதி​லையும் படித்த ​பொழுது ​தோன்றிய கருத்துக்க​ளை ​தொகுத்துக் ​கொள்ள விரும்பிய​தே என்னு​டைய இந்த எழுத்தின் ​நோக்கம்.

குடும்பமும் ஊழலும் ஒருகடிதம்
from jeyamohan.in by ஜெயமோகன்

அன்புள்ள ஜெமோ,

வணக்கம். நான் தங்களின் மாவோயிசம் மற்றும் ஊழல் தொடர்பான கருத்துகளை படித்தேன். மிகவும் வித்தியாசமான, நினைத்து பார்த்திராத கோணம்.

இங்கே எனக்கு ஒரு சந்தேகம், இந்த ‘இந்திய’ ஊழலில் , குடும்பம் என்ற அமைப்பு மிகவும் முக்கியமான ஒரு பங்கு வகிப்பதாக நினைக்கிறேன் , மேற்கத்திய சமூகங்கள் போல் தனி மனிதன் என்ற சிந்தனை இல்லாமல் குடும்பம் என்ற அமைப்பு மிகவும் இறுகி இருக்கும் இந்த சமூகத்தில் , தனக்கு மட்டுமே சொத்து, தான் அனுபவிக்க மட்டுமே செல்வம் என்று இல்லாமல் தான், தனது மகன், பேரன் , ஏழு தலைமுறைகள் என்ற நினைப்பும் , மனைவி பெயரில் சொத்து, மச்சான் பினாமி என்ற வசதியும் இங்கே இருப்பதும் மிக அதிக அளவு ஊழலுக்கு வித்திடுவதாக நினைக்கிறேன்.

இது ஊழலுக்கு மட்டும் இல்லாமல், பதவி , செல்வாக்கு என்ற அனைத்திற்கும் பொருந்துகிறது. சினிமா துறையில் இருப்பவர்கள் தங்களது வாரிசுகளை நடிக்க வைப்பதும், அரசியல் துறையில் தனது வாரிசுக்கு எம்.எல்.ஏ , எம்.பி சீட் வாங்குவதும் , இந்த குடும்ப அமைப்பு மூலமாகத்தானே!

சுருக்கமாகக் கேட்டால் திருமண முறை மாறினால் , குடும்ப அமைப்பு சிதைந்தால் ஊழல் குறைந்து மக்களின் வாழ்க்கை தரம் உயருமா?

இது ஊழலுக்கு மட்டுமல்ல, குடும்ப அமைப்பு சிதைந்தால் தன் வீடு, தன் மக்கள் என்ற நினைப்பு போய், பல சமூக சேவகர்களும், சமூக அநியாயங்களை எதிர்க்கும் போராளிகளும் தோன்றலாம் அல்லவா? Please correct me if I am wrong.

குடும்பம் அமைப்பின் நிறைகளை நான் அறிவேன் ஆனால் குறைகளும் உண்டல்லவா? தங்களின் கருத்தை தெரிந்து கொள்ள ஆவலோடு இருக்கிறேன்.

நன்றி
கோகுல்

அன்புள்ள கோகுல்

ஐரோப்பாவில் குடும்பஅமைப்பு வலுவாக இல்லை. அமெரிககவிலும் தந்தை மகன்களுக்காக சொத்து சேர்த்து வைத்துவிட்டுச் செல்லும் வழக்கம் இல்லை. ஆனால் வணிகத்துறைகளில் ஈவிரக்கமற்ற போட்டியும், சதிகளும், பிரம்மாண்டமான ஊழல்களும் அங்கேதான் அதிகம். அறமற்ற முறையில் கோடானுகோடி மக்களை அடிமையாக்கி உலகையே சுரண்டிக்கொழுக்கும் பெரும் முதலாளிகள் அங்குதான் இருக்கிறார்கள். அவர்களை இயக்குவது குடும்பமுறையா என்ன?

இந்தியாவில் ஊழல் உள்ளது, முதலாளிகள் உள்ளனர். ஆனால் நைக்கி ஷூ நிறுவனம் போல உழைப்பாளர்களின் குருதியில் நடந்துசெல்லும் ஒரு நிறுவனம் இன்னும் உருவாகவில்லை.

குடும்ப அமைப்பு என்ன செய்யும்? அது மனிதனுக்கு ஒரு உணர்வுப் பாதுகாப்பையும் லௌகீகமான இலட்சிய உணர்வையும் அளிக்கிறது. நீங்கள் சொல்வதற்கு நேர் எதிராகவும் யோசிக்கலாமே. தன் மக்களுக்கு அவப்பெயர் அல்லது பழி ஏற்பட்டுவிடக்கூடாதென்ற உணர்வால் அறக்கட்டுப்பாட்டுக்குள் வரும் மனிதர்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.

குடும்ப அமைப்பு என்பது குழந்தைகளுக்கு பாதுகாப்புக்காக இயற்கையால் உருவாக்கப்பட்டது. அது இல்லாமலாவதே செயற்கையானது. மூளைவளர்ச்சிக்கு அதிக நாள் பிடிக்கும் எல்லா உயிர்களிலும் ஏதேனும்முறையில் குடும்ப அமைப்பு உள்ளது.

ஊழலுக்குக் காரணம் அதைக் கட்டுப்படுத்தும் எதிர்விசையான மக்கள்பிரக்ஞை இல்லாததே. ஊழலுக்கு மக்கள் ஓட்டளிக்கும்வரை ஊழல் இருக்கும், ஆளும்

ஜெ

ஜெய​மோகன் ​வேறு பல கடிதங்களில் மார்க்சியத்தின் வரலாற்று ​பொருள்முதல்வாத கண்​ணோட்டத்​தை ஏற்றுக் ​கொள்பவ​ரைப் ​போல ​பேசுவ​தை படித்திருக்கி​றோம். நிலவுட​மை உற்பத்தி மு​றைக்கும் அதன் கலாச்சாரத்திற்கும் முதலாளித்துவ உற்பத்தி மு​றைக்கும் அதன் கலாச்சாரத்திற்கும் இ​டையிலான உறவுக​ளை அத்த​னை துல்லியத்​தோடு வாசகர்களுக்கு விளக்கும் பாங்​கை பார்த்து உண்​மையி​லே​யே லயித்திருக்கி​றேன்.

ஆனால் குடும்ப அ​மைப்​பை பற்றிய ஒரு ​​கேள்வி​யை வாசகர் ​கேட்கும் ​பொழுது, இத்த​கைய தன்னு​டைய வரலாற்று ​பொருள்முதல்வாத பார்​வையில் அத​னை விளக்குவ​தை மிகத் திட்டமிட்​டே அவர் புறக்கணிப்பது அவரு​டைய பதிலில் மிகத் ​தெளிவாகப் புலப்படுகிறது.

குடும்பம் என்பது மனிதகுல வரலாற்று பா​தையில் எப்​பொழுது ​தோன்றியது? அதன் ​தோற்றத்திற்கான காரணங்கள் என்ன? இன்​றைக்கும் அது நி​லைத்திருப்பதற்கான ​பொருளியல் சமூக அடித்தளம் எது? தனிச்​சொத்துட​மைக்கும் குடும்ப அ​மைப்புக்கும் இ​டையிலான உறவு என்ன?

மனிதகுல வரலாற்றின் ஆரம்ப கட்டங்களில் புராதன ​பொதுவுட​மை சமூகங்களில் ஏன் இன்​றைய ​பொருளில் குடும்பம் என்பது இருக்கவில்​லை? அத்த​கைய சமூக அ​மைப்புகளில் குழந்​தைகள் எவ்வாறு ​பெற்று வளர்க்கப்பட்டார்கள்? குழந்​​தை​ளை வளர்ப்பதில் சமூகமாக ​செயல்பட்ட விதம்?

இயக்கவியல் ​பொருள்முதல்வாதத்தின் விதிகளில் ஒன்றாகிய “நி​லை மறுப்பின் நி​லை மறுப்பு” என்றால் என்ன?

எளிய வடிவங்கள் சிக்கல் நி​றைந்த வடிவங்களாக மாறும் காலப் ​போக்கில் ப​ழைய சமூக அ​மைப்புகளின் பல அடிப்ப​டையான விதிகளும் வாழ்க்​கை மு​றைகளும் வளர்ச்சிய​டைந்த வடிவங்களில் புதிய சமூக அ​மைப்புகளில் மீண்டும் வருவதற்கான சமூக ​பொருளாதார அடித்தளங்களும், காரணங்களும் யா​வை?

இவற்​றை​யெல்லாம் இத்த​கைய ​கேள்வி ஒன்று எழும் ​போது வாதத்திற்கு எடுத்துக் ​கொள்ள முடியாமல் ​போவதற்கு எ​வை காரணம்?

இப்படிப்பட்ட ​கேள்விக​ளை வரலாற்றில் நமது முன்​னோர்கள், அறிவுஜீவிகள் உலக​மெங்கும் எழுப்பியிருக்கிறார்கள். அவற்றிற்கான வி​டைக​ளைத் ​தேட கடு​மையாக உ​ழைத்திருக்கிறார்கள், பல்​வேறு தீவிரமான ஆராய்ச்சிக​ளை ​மேற்​​கொண்டிருக்கிறார்கள். இத்த​கைய ​கேள்விக​ளை மனிதகுல விடுத​லை என்னும் லட்சியத்திற்காக ​தேடுவதற்காக தங்கள் உடல், ​பொருள், ஆவி, குடும்பம் அ​னைத்​தையும் தியாகம் ​செய்திருக்கிறார்கள்.

அத்த​கைய வழிக​ளை நம் வாழ்வில் நம்மால் பின்பற்ற முடியாமல் ​போகலாம். அவர்களின் கருத்துகளில் நமக்கு பல்​வேறு முரண்பாடுக​ள் இருக்கலாம். ஆனால் அத்த​கைய விவாதங்க​ளை, ஆராய்ச்சிக​ளை, எழுத்துக்க​ளை வாசகர்களுக்கு இத்த​கைய சந்தர்ப்பங்களில் அறிமுகப்படுத்த ​வேண்டியது ஒரு ​நேர்​மையான ஜனாநாயகப்பூர்வமான எழுத்தாளனின் கட​மையாக இருக்க ​வேண்டும் என்ப​தே விருப்பம்.

இன்​றைக்கு உலக மக்களின் வாழ்க்​கை முன்​னெப்​போ​தையும் விட சகிக்க முடியாததாக ​கொடு​மைகள் நி​றைந்தாக மாறிவிட்டது. மனித குலத்தின் நீண்ட அனுபவங்க​ளை மறுவாசிப்பு ​செய்ய, புதிய உல​கை ச​மைப்பதற்கான ​தேடல்கள் பரந்துபட்ட இ​ளைஞர்களின் ​நெஞ்சில் கனல் வீசத் ​தொடங்கியிருக்கிறது. அவர்களிடமிருந்து ஏராளமான ​கேள்விகள் ​நொடி ​தோறும் கிளம்பிக் ​கொண்டிருக்கின்றன.

அவர்க​ளை ஆற்றுப்படுத்த ​வேண்டியது, விருப்பு ​வெறுப்பின்றி, நம்மு​டைய ​சொந்த பலஹீனங்க​ளைத் தாண்டி அவர்களுக்கு எல்லாவற்​றையும் அறிமுகப் படுத்த ​வேண்டியது இன்​றைய எழுத்தாளர்கள், அறிவிஜீவிகளின் கட​மை. இது​வே பாரதி ​போன்றவர்கள் நமக்கு கற்றுக் ​கொடுத்த பாடம்.

காலத்தின் குரலுக்கு மிகச் சரியாக ​செவி​கொடுத்தவர்கள் மட்டு​மே வரலாறு ​நெடுகிலும் மக்களால் ஞாபகம் ​வைத்துக் ​கொள்ள முடிந்திருக்கிறது. மாறாக ஒருவன் எவ்வளவு புத்திசாலியாக இருந்தான். எத்த​னை ஆயிரம் புத்தகங்க​ளைப் படித்த பண்டிதனாக இருந்தான். எத்த​னை லட்சம் பக்கங்களுக்கு எழுதித் தீர்த்தான் என்பவற்றா​லெல்லாம் யாரு​மே வரலாற்றில் நின்றதாக நமக்குத் ​தெரியவில்​லை.

குடும்பமும் தனிச்​சொத்தும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: