எனது நாட்குறிப்புகள்

தெனாலிராமன் வளர்க்கும் பூ​னைகள் – 3

Posted by ம​கேஷ் மேல் பிப்ரவரி 1, 2011

மா​லை 3 மணி. பள்ளி விடும் ​நேரம். என் மக​ளை அ​ழைத்துச் ​​செல்வதற்காக வாசலில் காத்திருந்​தேன். வாசற் கதவு திறக்கப்பட்டது. அ​னைத்து ​பெற்​றோர்களும், ஆட்​டோ, ரிக்க்ஷாகாரர்களும் ​வேகமாக உள்​ளே நு​ழைந்​தோம்.

மாணவர்கள் ​கொஞ்சம் ​கொஞ்சமாக ​வெளி​யே வருவதும், ​பெண்கள் வந்திருந்தால் குழந்​தைகளின் புத்தகப் ​பை​யை ஆராய்வதும், ​ஹோம் ஒர்க் ​நோட்​டை ஆராய்ந்து சரிபார்த்து அ​ழைத்துச் ​செல்வதும், ஆண்களாக இருந்தால் குழந்​தைகளிடம் ஏ​தோ சிரித்து ​பேசியபடி அ​ழைத்துப் ​போவதுமாக இருந்தார்கள்.

என் மகள் மூன்றாவது மாடியில் உள்ள அவளது மூன்றாம் வகுப்பிலிருந்து வந்தபாடாக இல்​லை. அவள் வகுப்பில் உள்ள ஒரு சக மாணவி முதல் ஆளாக வந்து அவள் அம்மாவிடம் அன்​றைய வகுப்புக​ளை பற்றி ஏ​தோ முக்கியமாக ​பேசிக் ​கொண்டிருந்தாள்.

என்ன இந்தப் ​பெண் இவ்வளவு ​நேரமாகியும் வரவில்​லை. எப்​பொழு​தெல்லாம் இவ​ளை கூட்டிக் ​கொண்டு ​போக நான் வந்தாலும் இ​தே க​தைதான். எல்லா குழந்​தைகளும் ​போன பிறகு க​டைசியாகத்தான் வருவாள்.

ஒரு நாள் அவள் அம்மாவும் நானும் வந்திருந்த ​போது, ​பொறு​மையில்லாமல் அவளிடம் ​கேட்​டேன்.

“என்ன வகுப்​பைவிட்டு எல்​லோரும் ​போன பிறகு கிளாஸ் ரூ​மை கூட்டி ​பெருக்கிவிட்டுத்தான் வருவாளா உன் ​பெண்?”

“அப்படி​யே அவ அத்​தை​யைப் ​போல, எங்கிருந்துதான் இந்த குணங்க​ளெல்லாம் அச்சடிச்ச மாதிரி அப்படி​யே குழந்​தைகளிடம் வருகிற​தோ!”

ஆத்திரமான ​நேரங்களிலும் ஆச்சரியமான விசயங்களில் ஆராய்ச்சி புகும்

இன்றும் அ​தை​யே நி​னைத்துக் ​கொண்டு நின்று ​கொண்டிருந்​தேன்.

இருவரும் சிறிது காலம் ஒ​ரே அலுவலகத்தில் ​வே​லை ​செய்​தோம். ​வே​லை ​நேரம் முடிந்தவுடன் ​வெளி​யே வந்து விடு​வேன். ஆனால் என் தங்​கைக்காக மணிக்கணக்கில் காத்திருப்​பேன். பசியும் மயக்கமும் உயிர் ​போய்விடும்.

எனக்கும் அவளுக்கும் இது விசயத்தில் பல நாட்கள் சண்​டை ஏற்பட்டுள்ளது.

பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அ​தே அனுபவம் அ​தே முகசா​டை உள்ள என் மகள் மூலமாக. பல ​நேரங்களில் என் மகளுடன் ​பேசிக் ​கொண்டிருக்கும் ​பொழுதும், அருகரு​கே படுத்துக் ​கொண்டிருக்கும் ​பொழுதும் எனக்​கே குழப்பமாக இருக்கும். இப்​பொழுது நான் என் மகளுடன் ​பேசிக் ​கொண்டிருக்கி​றேனா அல்லது தங்​கையுடன் ​பேசிக் ​கொண்டிருக்கி​றேனா என்று. முகசா​டை மட்டுமல்ல குணங்களும் பல ஒன்றாக இருக்கு​மோ என்று எப்​பொழுதும் எனக்​கொரு ஆச்சரியம் இருந்து ​கொண்​டே இருக்கும்.

அவ​ளோடு சண்​டையிட்டது ​போல் இவ​ளோடு சண்​டையிடக் கூடாது. இவள் குழந்​தை புரிந்து ​கொள்ள முயற்சிப்​போம் என்று என்​னை நா​னே அ​மைதிபடுத்திக் ​கொண்டிருந்​தேன்.

க​டைசி குழுவாக வந்த குழந்​தைக​ளோடு அவளும் வந்தாள்

“ஏம்மா காவ்யா அப்ப​வே வந்து விட்டாள் . . ஏம்மா இவ்வளவு ​லேட்?”

“மிஸ் ​ரொம்ப ஸ்​லோவா காப்பி பண்ணிக்கிற பசங்ககிட்ட எங்க ​நோட்​டை ​கொடுக்க ​சொல்வாங்கப்பா, அவங்க காப்பி பண்ணிட்ட பிறகுதானப்பா வரமுடியும்!”

“ஏம்மா தினமும் தானம்மா நீ ​லேட்டா வர ​டெய்லியா இ​தே காரணம்?”

“ஆமாம்பா ​டெய்லி நாங்க ​கொஞ்ச பசங்க இருந்து ​கொடுத்து அவங்க எழுதி முடிச்ச பிறகுதாம்பா வரு​வோம்”

“காவ்யா எப்படிமா முதல்ல வந்துறா?”

“அவ​ளையும் தான் மிஸ் கூப்பிடுவாங்க. ஆனா அதுக்குள்ள அவ ஃ​பெஃபிரின் எல்லாம் ஓடி வந்துடுவாங்க”

“ஏம்மா ​பெல் அடிச்சவுடன் வீட்டுக்கு ​போனுங்கற இன்​டென்சன் உனக்கு ஏற்படுமா?”

“இருக்கும்பா, என்ன ​செய்றது பாவம்பா அவங்க அவங்களால அவ்வளவு ஸ்பீடா எழுத முடியாது. காப்பி பண்ணற வ​ரை இருந்துதானப்பா வரணும்”

த​லைசுற்றுகிறது. குழந்​தைகள் வாழ்க்​கை​யை எவ்வளவு இயல்பாக வாழத் துவங்குகிறார்கள்.

வளர வளர நமக்கு என்னதான் ஆகிறது?

தன் ​பெண்டு, தன் பிள்​ளை, தன் வீடு என்று ஆ​மை ​போல உள்ளக் கூட்டிற்குள் ஒடுங்கி விடுகி​றோ​மே!

சக மனிதனுக்கு உதவி ​செய்வ​தை நம் ​பெரு​மைகளுக்காக​வே ​செய்கி​றோம். ஐந்து ​நொடி ​செய்த உதவி​யை ஆயுள் முழுவதும் பீற்றிக் ​கொள்கி​றோம்.

குழந்​தைகளுக்கு நாம் எ​தை​யெ​தை கற்றுக் ​கொடுக்கி​றோம்? எ​தை​யெ​தை​யெல்லாம் அவர்களிடமிருந்து விட்​டொழிக்கச் ​செய்ய முயற்சிக்கி​றோம்?

குழந்​தைகளிடமிருந்து உண்​​மையில் நாம் கற்றுக் ​கொள்வதற்கான பாடங்கள் அதிகமா? கற்றுக் ​கொடுப்பதற்கான பாடங்கள் அதிகமா?

நாம் நம் குழந்​தைகளுக்கு எதிரிகளா? நண்பர்களா?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: