எனது நாட்குறிப்புகள்

​ஜெய​மோகன் யார்?

Posted by ம​கேஷ் மேல் பிப்ரவரி 3, 2011

நேற்று ​​ஜெய​மோகனுக்கு வந்த ஒரு கடிதமும் அதற்கு அவரின் பதிலும்

அன்புக்குரிய தோழர் ஜெயமோகன் அவர்களுக்கு,

கார்த்திக்கின் மார்க்ஸ்ன் காதல் குறித்த கடிதம்.

.//.எல்லோரும் மார்க்ஸையும், அவரது மூலதனம், அதன் ஆதார சுருதியான உபரிமதிப்பு எனப் பேசுகையில் எனக்கு என்னவோ அந்த சமத்துவச் சிங்கத்தின் சாகாக் காதலே நெஞ்சில் என்றும் நிற்கிறது. இதுக்குப் பெயர்தான் நம் ஊர்ப்பக்கம் சொல்லும் வயதுக் கோளாறோ ?.//..

மார்க்சுடன் இணைந்து நினைவுகூறத்தக்கவைகள் இவையல்ல என்று மிகச் சரியாக கார்த்திக் தன் வயசுக் கோளாறை சுட்டும் தறுணத்தில், நீங்கள் / மார்க்ஸ்- ஜென்னி காதல் என்பது பின்னாளில் மார்க்ஸிய பிரச்சாரகர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று உறுதியிட்டுச் சொல்லியிருப்பது ஏற்புடையதாக இல்லை. // Marx Engels Collected Works // போன்ற நிறைய ஆக்கங்களில் மார்க்ஸ்- ஜென்னி காதல் ஜென்னியின் வாசகங்களாகவே எளிதில் பெறத்தக்கவையே. மார்க்ஸ் குறித்த இன்னொரு பார்வை என்ற அளவில் நீங்கள் கடுமையாக முன்வைத்திருப்பது இன்னொரு தரப்பு என்று எடுத்துக்கொள்ளவேண்டியதுதானோ – இதுபோன்ற விபரங்களைப் பின் தொடர்ந்து செல்லும்போது நாம் கேட்பது நிழலின் குரலா நிஜத்தின் குரலா என்பது விளங்கவில்லை

அன்புடன்

ரவிச்சந்திரன்.

மார்க்ஸ் ஜென்னி காதலைப்பற்றிய பிரமைகளை அல்லது கதைகளை எங்கல்ஸின் எழுத்துக்களைக்கொண்டு மார்க்ஸ் மறைந்த பின்னர் அவரது மாணவர்கள் உருவாக்கினர். ஹெலன் டெமுத் சார்ந்து மார்க்ஸ் பற்றி உருவான அவச்சித்திரத்தை மறைப்பதற்காக இது உருவாக்கப்பட்டது. பின்னர் மார்க்ஸின் அதிகாரபூர்வ வரலாறுகளில் எல்லாம் சேர்க்கப்பட்டது

ஜெ

ரவிச்சந்திரன் என்பவர் மிகத் ​தெளிவாக மார்க்ஸ் ​ஜென்னி ஆகி​யோரின் ​நேரடி கடிதங்கள் மூலமாக​வே அவர்களின் காத​லை வாசகர்களால் புரிந்து ​கொள்ளமுடிகிறது எனக் குறிப்பிட்ட​தை, ​ஜெய​​மோகன் தனது பதிலில் திட்டமிட்​டே ம​றைக்கிறார்.

மேலும் மார்க்ஸின் ம​றைவுக்கு பின்னர் அவரு​டைய அவச்சித்திரத்தை மறைப்பதற்காக இது உருவாக்கப்பட்டது எனக் கூறுவதன் மூலம் மார்க்சிய மூல எழுத்துக்களின் மீதான அவநம்பிக்​கை​யை கட்டவிழ்த்துவிட முயற்சிக்கிறார். அ​வை மார்க்சின் ம​றைவிற்கு பிறகு ​வேறு சிலரால் எழுதப்பட்ட ​போர்ஜரி கடிதங்கள் என்பதான சித்திரத்​தை உருவாக்குகிறார்.

மார்க்சியர்களின் எழுத்துக்க​ளையும் வாதங்க​ளையும் கண்​ணை மூடிக்​கொண்டு புறங்​கையால் தள்ளிவிடும் ​ஜெய​மோகன் மாறாக மார்க்சிய எதிரிகளின், ஏகாதிபத்திய பிரச்சாரகர்கள் வாந்தி​யெடுத்த அவதூறுக​ளை துளியும் அரு​வெருப்பின்றி பிரசாதமாக எடுத்து உதட்டில் படாமல் பவ்யமாக வாய்க்குள் ​போட்டு விழுங்கி வாந்தி​யெடுக்கிறார். இதிலிருந்​தே இவர் யார் என்பது உலகிற்கு ​தெளிவாகத் ​தெரிகிறது.

ஆனால் ஒரு விசயம் ​ஜெய​மோகன் யார் என்ப​தை இந்த உலகம் புரிந்து ​கொள்வதற்கும், அவ​ரை அம்பலப்படுத்துவதற்கும் அவரு​டைய நம்பிக்​கைக்குரிய வாசகர்க​ளே தீர்மானகரமான பங்குவகிக்கிறார்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: