எனது நாட்குறிப்புகள்

பழ​மொழிகளும் அர்த்த குழப்பங்களும் – 2

Posted by ம​கேஷ் மேல் பிப்ரவரி 5, 2011

நேற்​றைய என் கட்டு​ரையின் ​தொடர்ச்சியாக இன்னும் நி​றைய விசயங்கள் ​பேச ​வேண்டியிருக்கிறது என்ற நி​னைப்பும் அ​தைத் ​தொடர்ந்த சிந்த​னைகளு​மே இந்த இரண்டாம் பாகத்திற்கான காரணம்.

பின் நவீனத்துவவாதிகள் ​பெருங்க​தையாடல்க​ளை (meta narratives) எதிர்க்கிறார்கள். அதற்கு மாற்றாக சிறுக​தையாடல்க​ளை முன் ​வைக்கிறார்கள். இத்த​கைய கருத்தியல்கள் க​லை இலக்கியத் து​றையில் அத்த​னை ஒன்றும் ஆபத்தானதாக இன்​றைய பார்​வையில் படவில்​லை. ஆனால் அரசியல் ​பொருளாதாரத் து​றைகளுக்கு இது நீட்டிக்கப்படும் ​பொழுது இ​வை மிகவும் ஆபத்தான​வையாக, கவனத்​தோடு ​கையாள ​வேண்டிய​வையாகப் படுகின்றன.

நம்மு​டைய அன்றாட வாழ்வியல் பிரச்சி​னைகளுக்கான ​போராட்டங்க​ளை அவர்கள் ஆதரிக்கிறார்கள். குடிதண்ணீர், சா​லைவசதி ​தொடங்கி ​போபால் விசவாயு பிரச்சி​னை வ​ரை அ​னைத்திற்காகவும் குரல் ​​கொடுப்ப​தையும் ​போராடுவ​தையும் ஆதரிக்கிறார்கள். ஆனால் அத​னை இந்திய அரசியல​மைப்பு, அயலுறவு ​கொள்​கைகள், அரசியல மாற்றத்​தோடு இ​ணைப்ப​தை ​பெருங்க​தையாடல்க​ளென மறுதலிக்கிறார்கள்.

அதாவது பஸ்தர் பழங்குடி ஆதிவாசி மக்களின் ம​லைக​ளை பாதுகாப்பதற்கான ​போராட்டங்க​ளை ஆதரிக்கிறார்கள். ஆனால் அத​னை மா​வோயிஸ்ட்கள் இந்திய ​சோசலிசப் புரட்சி​யோடு இ​ணைக்க முயற்சிப்ப​தை ​பெருங்க​தையாடல்கள், ​பெருங்க​தையாடல்களில் பாசிசத்திற்கான கூறுகள் பு​தைந்துள்ளன என மறுக்கிறார்கள். இத​னை மா​வோயிஸ்ட்களும் பகிரங்கமாக​வே ஒத்துக் ​கொள்கிறார்கள் தாங்கள் ஒரு சர்வாதிகார மாற்றத்​தை​யே முன்​வைக்கி​றோம் என்று கூறுவதன் மூலம்.

ஆனால் பிரச்சி​னை, நம் மக்களின் ம​லைகள் பறி​போய்க் ​கொண்டிருப்பதற்கான இன்​றைய உலக மற்றும் உள்நாட்டு அரசியலிலிருந்து அத​னை நாம் எவ்வாறு பிரித்து பார்க்க முடியும் என்று ​தெரியவில்​லை? உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்று ஏகாதிபத்தியம் உல​கை கபளிகரம் ​செய்வதற்கான ஒரு வ​லைப்பின்னலில்தான் நமது ம​லைகளும் இயற்​கை வளங்களும் சிக்கிக் ​கொண்டுள்ளன என்கிற அரசிய​லை நாம் எப்படி மறுக்க முடியும்?

உலகம் தழுவிய அளவில் மனித​நேயமிக்க முழு​மையான சமத்துவம் எல்லா நாடுகளுக்கும் இ​​டை​யேயும் உள்​ளேயும் ஏற்படுத்துவதற்கான திட்டமின்றி எவ்வாறு நாம் நம் ​தேசத்​தை காக்க முடியும்? சுகாதாரமற்ற ஆ​​ரோக்கியமற்ற நமது கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள ​தெருக்களில் இருக்கும் நம் வீடுக​ளை மட்டும் எப்படி நாம் சுகாதாரம் உள்ளதாகவும் ஆ​ரோக்கியம் உள்ளதாகவும் பாதுகாக்க முடியும்? எல்​லோருக்கும் ​நேர்வது தா​னே நமக்கும்!

கார்ல் மார்க்ஸின் “இந்தியா​வைப் பற்றி . . .” கட்டு​ரைத் ​தொகுப்​பை யா​ரேனும் படித்திருக்கிறீர்களா? ஒரு இந்தியனாக அவற்​றைப் படிக்க முடியாது! கண்களில் இரத்தக் கண்ணீ​ரை வரவ​ழைத்துவிடும். ஈவுஇரக்கத்திற்கு இடமில்லாது, மனிதகுலத்தின் உலக வரலாற்​றுப் பார்​வையில் விளக்கிச் ​செல்லும் ஒரு ந​டை அது.

இந்திய கிராம சமூகங்கள் பல நூற்றாண்டுகளாக எப்படி இருந்தன? ​வெள்​ளையர்களின் ஏகாதிபத்திய ​கொள்​ளைக்காக அ​வை எவ்வாறு ஈவுஇரக்கமற்று அடித்து ​நொறுக்கப்பட்டது? அது இந்தியாவிற்​கே உரித்தான நிலவுட​மை சமூக அ​மைப்​பை புறவயமாக எவ்வாறு முதலாளித்துவத்திற்கு அடித்து விரட்டிச் ​சென்றது? என்று விளக்கிச் ​செல்கிறது.

உண்​மை​யென்னும் ​நெருப்பின் ​வெப்பம் நம்மால் சகிப்பதற்கு இல்​லை.

“நாங்கள் நாய்க​ளோ பன்றிச் ​சேய்க​ளோ!” என்று கதற ​வைக்கிறது.

அதன் எதிர்வி​னையாக நம்​மை

“ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அந்நியர் புகல் என்ன நீதி?” என நம் கு​றைக​ளை மூடி ம​றைத்துக் ​கொண்டு அத​னை ஏற்றுக் ​கொள்ளும் நி​லைக்கு நம்​மை தள்ளுகிறது.

எம் மூதா​தையர்கள் கூட்டம் கூட்டமாக எதற்காக விரட்டப்படுகி​றோம் எங்கு  விரட்டப்படுகி​றோம் என்பத​னை அறியாமல் வரலாற்றில் முன்​னோக்கி விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏன் சாகி​றோம் என்ப​தே ​தெரியாமல் கூட்டம் கூட்டமாக ஆட்டு மந்​தைக​ளைப் ​போல ​கொ​லை ​செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒரு இந்தியனாக இந்த வரலா​றைப் படிக்கும் ​​பொழுதும் எழுதும் ​பொழுதும் ​பொங்கும் அழு​கை அடக்குவதற்கு இல்​லை.

என் ம​னைவியின் பிரசவ ​நேரத்தில் அவள் கத்திய கதறல்களும் அவள் பட்ட ​வேத​னைகளும் இன்றும் என்​ இதயத்​தை அதிரச் ​செய்து ​கொண்டிருக்கிறது. அந்த ​நேரத்தில் எனக்கு பிறக்கப் ​போகும் குழந்​தையின் மீது எனக்கு ​கோபம் உண்டானது. என்​னை​யே நான் ​வெறுத்​தேன். என்​னை நா​னே தூக்கு​மே​டையில் நிறுத்தி ​வைத்து சவுக்கால் அடித்துக் ​கொண்​டேன்.

ஆனால் என்ன ​செய்ய முடிந்தது? என்ன ​செய்ய முடியும்? அது தா​னே மனித குலத்தின் வரலாறு!

தீவிர ​வைணவப் பற்றாளன் ​சைவ மன்னனுக்கு முன்னால் “ஓம் ந​மோ நாராயணா” என்று தன் ​கொள்​கைப் பற்​றை உரத்து கத்திவிட்டு ​பெருமாளின் சி​லை​யை உட​லோடு கட்டிக்​கொண்டு உச்சி முகர்ந்தவா​றே கடலில் மூழ்கி மூச்சடுங்குவ​தைத் தவிர காட்டா​றென அடித்துக் ​கொண்டு ​போகும் வரலாற்று ​போக்கிற்கு முரண்பட்டு நாம் என்ன ​செய்ய முடியும்?

அதனால் தான் இந்திய மார்க்சியர்களும், இந்திய மார்க்சிய இயக்கங்களு​மே மார்க்சின் அந்தக் கட்டு​ரைகளுக்கு இந்தியச் சூழலில் அத்த​னை முக்கியத்துவம் ​கொடுக்கவில்​லை ​போலும்! அங்​கொன்றும் இங்​கொன்றுமாக சில ​மேற்​கோள்க​ளோடு நிறுத்திக் ​கொண்டு விட்டார்கள் ​போலும்! நானும் கூட என் புத்தக அலமாரியில் அந்த புத்தகத்​தை எப்​பொழுதும் ​பெரும் பயத்துட​னே விலகிக் ​கொண்டிருக்கி​றேன். ஒரு மு​றை படித்த​தே ஆயுளுக்கு மறக்காததாக மனதில் பதிந்துவிட்டது.

இ​வை ​பெருங்க​தையாடல்கள் தான் ஆனால் இந்த ​பெருங்க​தையாடல் தர்க்கமற்ற மு​றையிலும் ஆராய்ச்சிகளற்ற மு​றையிலும் கற்ப​னைகளில் கட்டப்பட்ட​வை அல்ல. இ​வை நம் உல​கைப் புரிந்து ​கொள்வதற்கான மிகத் துள்ளியமான முடிவுக​ளைத்தான் தருகின்றன. மனிதகுல வரலாற்றின் அடுத்ததடுத்த கட்டங்கள் அவற்​றை ​மெய்ப்பித்துக் ​கொண்​டே ​செல்கின்றன. இந்த அனுபவங்க​ளை ​தொகுத்துக் ​கொள்ளாமல் கண்​ணை மூடிக் ​கொண்டு மறுத்​தொதுக்குவது எதற்காக?

மாறாக புதிய கண்​ணோட்டங்கள் விடுத​லைக்கான நம்பிக்​கைகள் அ​னைத்​தையும் பறித்துக் ​கொண்டு மக்க​ளை அடித்துக் ​கொண்டு ​செல்லும் வரலாற்றின் காட்டாற்றில் நிர்கதியாக, நிராயுதபாணிகளாக நிற்க ​வைக்கத்தா​னே பயன்படுகின்றன. அவர்க​ளை ​செயலூக்கம் அற்றவர்களாக்குவ​தைத் தவிர ​வே​றெ​தைச் சாதிக்க முடியும்?

இந்த ​பெருங்க​தையாடல்கள் தவ​றெனப் பட்டால் இதற்கு நிகரான ​வேறு க​தையாடல்க​ளை கட்ட​மைத்துத்தான் தீர​வேண்டும் அல்லது இதில் உள்ள இ​டை​வெளிக​ளை, பிரச்சி​னைக​ளை க​லைந்​தெறியத்தான் ​வேண்டும்.

Advertisements

5 பதில்கள் to “பழ​மொழிகளும் அர்த்த குழப்பங்களும் – 2”

 1. ராஜன் குறை said

  அன்புள்ள ஸ்ரீஹரி,

  கார்ல் மார்க்ஸ் 1853 ஜூன்,ஜூலை மாதங்களில் நியூ யார்க் டெய்லி டிரிப்யூன்-இல் இந்தியா பற்றி எழுதிய இரண்டு கட்டுரைகளை படித்துள்ளேன். ஹெகல்-மார்க்ஸ் வரலாற்றுவாதத்தை புரிந்து கொள்ள உதவக்கூடிய மிக முக்கியமான கட்டுரைகள் அவை. நீங்கள் அவற்றைப் பற்றி பதிவு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

  ஆனால் உங்களுடைய இந்தப் பதிவுக்கும், ஜெயமோகன் கதைகளின் மேல் நீங்கள் வைத்துள்ள விமர்சனத்திற்கும் நான் காணும் முரண் சுவாரசியமானது – ஒருவேளை முழு மார்க்ஸியவாதியாகவோ, முதலீட்டியத்தை ஆதரிக்கும் தேசியவாதியாகவோ இருந்தால் இதில் முரணே இல்லை என்றும் சொல்லலாம். ஜெயமோகனுக்கு உங்கள் மேல் வரக்கூடிய கடும் கோபம் அவரும் அவருக்குள் செயல்படும் இந்த முரணை என்ன செய்வது என்று அறியாததால்தானோ என்று தோன்றுகிறது. அவரும் ஒரே நேரத்தில் ஹெகல், மார்க்ஸ், காந்தி அனைவரையும் அனுசரிக்க விரும்புபவர்.

  முதலீட்டிய நவீனத்துவத்திற்கு மாற்றான விழுமியங்கள் நம்மை “பழைய” சாதிச்சமூகத்திற்கு (அதாவது சாதிச்சமூகமாக நாம் அறிந்ததற்கு) கொண்டுபோய் விடுமோ என்ற அச்சமே பலரையும் நவனீமற்ற (non-modern) சிந்தனைமுறைகளை பரிசீலிக்கவே தயங்கச்செய்கிறது. அதே சமயம் அப்படி பரீசிலிக்கும் தருணங்களில் இந்த நியாயமான அச்சத்தை அங்கீகரிக்க முடியாமல் கோபப்படுகிறார்கள். அதானால்தான் ஜெயமோகனால் மூச்சுக்கு மூச்சு அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை போன்றவர்களை இழிவுபடுத்த முடிகிறது.

  மற்றபடி நீங்கள் கதையின் தர்க்கத்திற்கு புறம்பாக விமர்சனம் செய்யும்போதும் சிந்தனை உரம்பெறலாம் என்று கூறுவதை நான் ஆதரிக்கிறேன். ஆனால் அது எல்லா சமயங்களிலும் பயனுள்ளதாக இருக்காது என்ற எச்சரிக்கையும் வேண்டும். இதில் என்ன சுவாரசியம் என்றால் நீங்கள் ஜெயமோகனுக்கு கூறும் பதிலும் பின் நவீனத்துவம் பற்றி எழுதியுள்ளதும் மிகவும் சுவாரசியமாக முரண்படுவதாக நான் நினைக்கிறேன். இந்த முரண்களெல்லாம் நீங்கள் தீவிரமாகச் சிந்திப்பதை சுட்டுவதாகவே கொள்கிறேன்.

  உங்கள் எழுத்துக்களை அறிந்துகொண்ட மகிழ்ச்சியுடன்
  ராஜன் குறை

 2. ராஜன் குறை said

  பிழை திருத்தம்:

  மேலேயுள்ள கடிதத்தில் முதலீட்டிய நவீனத்துவத்திற்கு என்று எழுதியுள்ளதை முதலீட்டிய நவீனத்திற்கு என்று வாசிக்கவும். நவீனத்துவம் என்பதை modernism என்பதாகவும் நவீனம் என்பதை modern என்பதாகவும் பயன்படுத்தி வருகிறேன். Modern என்பதை பெரும்பாலும் புரூனோ லதூர் We have never been modern என்ற நூலில் கொடுக்கும் அர்த்தத்திலேயே பயன்படுத்தி வருகிறேன்.

  • எனக்​கென்ன​வோ அவற்றிற்கி​டை​யே என்னு​டைய எழுத்துக்களில் முரண் இருப்பதாகப் படவில்​லை. நீங்கள் குறிப்பிட்ட​தைப் ​போல “ஒருவேளை முழு மார்க்ஸியவாதியாகவோ, முதலீட்டியத்தை ஆதரிக்கும் தேசியவாதியாகவோ இருந்தால் இதில் முரணே இல்லை என்றும் சொல்லலாம்” என்று குறிப்பிட்ட​தைப் ​​போல முழு மார்க்சியவாதியாக இருக்க நி​னைப்பதாக இருக்கலாம்.

   நீங்கள் என்னு​டைய விமர்சனத்தின் பாணி​யை, அதில் பயன்படுத்திய ​சொற்க​ளை ​வைத்து அ​வை பின்நவீனத்துவ பாணியிலான விமர்சனம் எனக் கருதுகிறீர்களா ​தெரியவில்​லை.

   பின்நவீனத்துவ ​சொற்களில் ​சொல்வதானால் எனக்கு ​பெருங்க​தையாடல்களில் நம்பிக்​கை இருக்கிறது. அறிதலின் சாத்தியமின்​மைகளின் – தற்காலிகத் தன்​மை என்னும் அளவிலான – எச்சரிக்​கையுடன் சாத்தியங்க​ளை ஏற்றுக் ​கொள்பவனாக​வே இருக்கி​றேன். முழு முற்றான உண்​மை என்ப​தை அ​டைய முடியுமா முடியாதா என்ப​தை விட அத​னை ​நோக்கிய மனித குலத்தின் பயணத்தின் சாத்தியங்க​ளை ​கைப்பற்றிய​வைக​ளை குறித்த பிரமிப்பு அகலாதவனாக​வே இருக்கி​றேன்.

   மார்க்ஸ் குறிப்பிட்ட​தைப் ​போல நம்மு​டைய அறி​வை ந​டைமு​றை என்னும் உ​ரைகல்லில் உரசிப் பார்த்​தே அதன் உண்​மைத் தன்​மை​யை அறிந்து ​கொள்ள முடியும் என்பதற்​கேற்ப் மனித குலத்தின் விஞ்ஞான மற்றும் சமூக வளர்ச்சிகள் அறிதலின் சாத்தியப்பாடுக​ளையும், ​தொகுத்துக் ​கொள்வதின் சாத்தியப்பாடுக​ளையும், சாராம்சத்​தை புரிந்து ​கொள்வ​தையும் முழுமுற்றாக மறுக்கவில்​லை என்​றே உணர்கி​றேன்.

   பின்நவீனத்துவம் குறித்த என்னு​டைய பார்​வைகள் என்னு​டைய முந்​தைய கட்டு​ரைகளில் மிக ​மே​லோட்டமானதாக​​வே இருக்கிறது என்ப​தையும் அ​வை குறித்து ​மேலும் ஆழமாக என்னு​டைய கருத்துக்க​ளை ​தொகுத்து கட்டு​ரைகள் எழுத​வேண்டிய ​தே​வை​யையும் உணர்கி​றேன். படிப்​பையும் எழுத்​தையு​மே வாழ்க்​கையாக ​கொள்ள முடியா​மையும், ​சோம்​பேறித்தனங்களும் மிக ​மெதுவாக​வே இயங்கக் கூடிய சாத்தியங்க​ளை ஏற்படுத்தியுள்ளன.

   ​ஜெய​மோகன் க​தைக​ளை ​பொறுத்தவ​ரை தங்களின் கீழ்க்கண்ட கருத்துக்க​ளோடு எனக்கு உடண்பாடில்​லை

   ஜெயமோகனுக்கு உங்கள் மேல் வரக்கூடிய கடும் கோபம் அவரும் அவருக்குள் செயல்படும் இந்த முரணை என்ன செய்வது என்று அறியாததால்தானோ என்று தோன்றுகிறது. அவரும் ஒரே நேரத்தில் ஹெகல், மார்க்ஸ், காந்தி அனைவரையும் அனுசரிக்க விரும்புபவர்.

   முதலீட்டிய நவீனத்திற்கு மாற்றான விழுமியங்கள் நம்மை “பழைய” சாதிச்சமூகத்திற்கு (அதாவது சாதிச்சமூகமாக நாம் அறிந்ததற்கு) கொண்டுபோய் விடுமோ என்ற அச்சமே பலரையும் நவனீமற்ற (non-modern) சிந்தனைமுறைகளை பரிசீலிக்கவே தயங்கச்செய்கிறது. அதே சமயம் அப்படி பரீசிலிக்கும் தருணங்களில் இந்த நியாயமான அச்சத்தை அங்கீகரிக்க முடியாமல் கோபப்படுகிறார்கள்.

   எனக்கு நம்பிக்​கை சார்ந்த சமூகங்களின் ​தோல்வியிலிருந்து சட்டம் சார்ந்த சமூகங்களின் ​தோற்றத்​தை புரிந்து ​கொள்வதிலும், அதிலிருந்து அ​தைவிட உயர்வான சமூகங்க​ளை ​நோக்கி முன்​னேறும் லட்சியச் சமூகங்கள் குறித்த எந்த ஆட்​சேபமும் இருக்கப் ​போவதில்​லை. எழுத்தில் அத்த​கைய கண்​ணோட்டங்கள் இருக்கு​மேயானால் அவற்​றை ​கொண்டாடுவதில் எனக்கு எந்த குழப்பமுமில்​லை.

   ஆனால் பிரச்சி​னை அவரு​டைய எழுத்தில் சநாதன சமூக அ​மைப்பின் விருப்பம் குறித்த ஏராளமான குறிப்புகள் க​தை முழுவதும் ​பொதிந்து கி​டப்ப​து நாம் காணக் கி​டைப்பதாக​வே இருக்கிறது. அவற்​றை நான் என் விமர்சனத்தில் ஓரளவு ​தெளிவாக ​வெளிக் ​கொணர்ந்திருப்பதாக​வே உணர்கி​றேன். ​மேலும் நீங்கள் குறிப்பிடுவ​தைப் ​போல அவர் “மார்க்ஸ் காந்தி அ​னைவ​ரையும் அனுசரிக்க விரும்புபவராக” எனக்குப் படவில்​லை. அவரிடம் ​கு​றைந்தபட்ச நேர்​மைகூட இல்​லை என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. ​ஜெய​மோகன் குறித்த என்னு​டைய 6 பதிவுக​ளை நீங்கள் படிக்கும் வாய்ப்பு இருக்கு​மேயானால் புரிந்து ​கொள்ள முடியும் என நி​னைக்கி​றேன்.

   விவாதங்கள் ஆ​ரோக்கியமான​வை விவாதிக்க தயங்காமல் முன்வருபவர்கள் எல்​லோரும் ​யோக்கியமானவர்க​ளே என்ற புரித​லோடு தங்களின் மறு​மொழிக்காக காத்திருக்கி​றேன். தங்களின் கடிதம் எனக்கு நி​றைய உற்சாகத்​தையும் ​மேலும் எழுத ​வேண்டும் என்ற ஆர்வத்​தையும் ஏற்படுத்திய​தை தங்களுக்கு ​தெரியப்படுத்திக் ​கொள்கி​றேன்.

 3. ராஜன் குறை said

  ஸ்ரீஹரி,பொதுவாக நான் நேர்மை, நேர்மையின்மை என்றெல்லாம் வர்ணிப்பது பயனற்றது என்றே நினைக்கிறேன். எல்லோருமே பலவித எல்லைகளுகளுட்பட்டு ஏதோ கைக்கெட்டியவரை படித்து, அனுபவித்து, சிந்தித்து வாழ்கிறோம். இதில் சகஜீவித உணர்வு, பெருந்தன்மை, பரிவு ஆகியவைதான் முக்கியமே தவிர வாதங்களில் வெல்வதல்ல என்று நான் நம்பத்துவங்கியுள்ளேன். உங்கள் கட்டுரைகள் அனைத்தையும் நேரம் கிடைக்கும்போது வாசிக்கிறேன்.

  நான் நீங்கள் விவாதித்த ஜெயமோகனின் மூன்று கதைகளை இன்னம் படிக்கவில்லை.படித்த பிறகு உங்கள் வாசிப்பு பற்றியும் நான் ஏன் அதை குறிப்பிட்ட விதத்தில் வர்ணித்தேன் என்பது பற்றியும் மீண்டும் எழுதுகிறேன். பிறகு ஏன் அவசரப்பட்டு இந்தப் பின்னூட்டம் போட்டேன் என்ற நியாயமான கேள்வி இருக்கிறது.

  ஜெயமோகன் உங்கள் வாசிப்பை மிகக் கடுமையாக சாடியது தேவையற்றதாகத் தோன்றியது. அவ்வளவு அங்கீகாரம் பெற்ற எழுத்தாளர் உங்கள் வலைப்பூவை சுட்டி அதை நிராகரிப்பது ஏன் என்று வியப்பாக இருந்தது. உங்கள் வலைத்தளத்தைப் பார்த்தபோது நீங்கள் சில முக்கியமான வரலாற்றுச் சிக்கல்களை கவனப்படுத்துவதை கண்டேன். உங்கள் வாசிப்பு நவீனமற்ற (non-modern) வாழ்முறைகள் சாதீயத்திற்கு இட்டுச்செல்லும் என்ற கவலையிலிருந்து எழுவதாகத் தோன்றியது. வேறொரு கட்டுரையில், கார்ல் மார்க்ஸ்-இன் வரலாற்றுவாதம் பெருங்கதையாடல் என விமர்சிக்கப்படுவதை நீங்கள் அறிந்தும் ஏற்காதவர் என்பதையும் கண்டேன். அதே சமயம் உங்களிடம் மார்க்ஸின் கட்டுரைகள் ஏற்படுத்தும் அதிர்ச்சி/உணர்வெழுச்சியையும் கண்டேன். கதையின் தர்க்கத்திற்கு புறம்பாகவும், குறுக்குவெட்டாகவும் விமர்சன சிந்தனை செயல்படலாம் என்னும் நீங்கள், பெருங்கதையாடலுக்கும் அந்த விதி பொருந்தும் என்பதை ஊகிக்காமலிருக்க முடியாது. இப்படியாக சில முரண்களைக் கண்டதாக சொல்லுவதன் மூலம் வெறும் கோபதாபக் கண்டனங்களை கருத்தியல் அடிப்படைகள் சார்ந்த உரையாடலாக மாற்ற வேண்டும் என்ற விழைவில்தான் அவசரப் பின்னூட்டம் போட்டு அதை என் முகப்புத்தகத்திலும் நோட்-ஆகப் பிரசுரித்தேன். இதற்குமேல் இந்தச்சர்ப்பத்தில் விரிவாக எழுத முடியாது.

  இதையொட்டி ஒரு தகவல்: என்னுடைய மிகச்சிறிய நூல் ஒன்று “முதலீட்டியமும், மானுட அழிவும்” என்ற தலைப்பில் சென்ற ஆண்டு வெளியாகியது. அதில் என்னுடைய சில சிந்தனைப்போக்குகள் சுட்டப்பட்டுள்ளன. அந்தப்புத்தகத்தின் முன்னுரை தவிர பிற கட்டுரைகள் http://www.shobasakthi.com வலைத்தளத்தில் தோழமைப் பிரதிகள் என்ற பகுதியில் காணக்கிடைக்கும்.

  பின்னர் ஒரு சமயம் உரையாடலைத் தொடர்வோம். நன்றி – ராஜன் குறை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: