எனது நாட்குறிப்புகள்

க​தையும் – க​தை ஆசிரியனும்

Posted by ம​கேஷ் மேல் பிப்ரவரி 7, 2011

ஒரு கதையை வாழ்க்கையின் ஒரு துண்டு என்று நினைத்து வாசிப்பதே அதன் ஆசிரியன் போடும் முதல் நிபந்தனையாகும். அந்த முடிவு வேறு வகையில் இருந்திருக்க முடியாது, ஏனென்றால் அது வாழ்க்கை. அது அப்படித்தான்.

அது ஏன் நிகழ்ந்தது என்று யோசிக்க மட்டுமே வாசகன் உரிமை பெற்றிருக்கிறான். அதன் வழியாக மட்டுமே அவன் வாசிப்பின் பல தளங்களுக்கு செல்ல முடியும். கதையின் ஆழங்களை தொடமுடியும்

அப்படி இல்லாமல் முடிவு இப்படி இருந்திருக்கலாமோ என யோசிப்பதெல்லாம் கதையை முன்கூட்டியே நிராகரிப்பதிலேயே சென்று சேரும்

ஒரு எழுத்தாளனின் சமூகப் பார்​வை​யை, இலக்கியம் குறித்த அவனு​டைய கண்​ணோட்டத்​தை புரிந்து ​கொள்வதற்கு ​​மேற்​சொன்ன ஒரு எழுத்தாளனின் கடிதத்திலிருந்து எடுத்துக் ​கொடுக்கப்பட்டுள்ள ​மேற்​கோள்க​ளே ​போதுமானது. இவ்வளவு துல்லியமான இடங்கள் ஒரு எழுத்தாளனின் வாழ்விலிருந்து நமக்கு கி​டைப்பது அபூர்வ​மே.

தொடர்ந்து அவ​ரைப் பற்றி எழுத ​வேண்டாம் என முடிவு ​செய்தாலும் நம்​மை ​கொக்கி ​போட்டு இழுக்கிறார் இத்த​கைய வாதங்க​ளை முன் ​வைப்பதன் மூலம்.

இ​தைத்தான் மா​வோ ​சொன்னார் ​போலும் “மரம் அ​மைதி​யை நாடினாலும் காற்று விடுவதில்​லை” என்று!

நான் அவரு​டைய கருத்துக்க​ளை​யே ​​கேள்விகளாக திருப்பிப் ​போடுகி​றேன்.

ஏன் வாசகன் க​தையின் முடி​வை மாற்றி ​யோசிக்கக் கூடாது?

ஆசிரியரின் நிபந்த​னைகளி​​லெல்லாம் ​கை​யெழுத்து ​போட்டுவிட்டுத்தான் அவரு​டைய ப​டைப்​பை வாசிக்க ​வேண்டுமா?

க​தை​யை ஏற்றுக் ​கொண்டு வாசிப்பதால் மட்டும் தான் பல தளங்களுக்கு ​போக முடியுமா?

க​தை​யை நிராகரிப்பதன் வழி​யேயும் க​தையின் முடி​வை மறுபரிசீல​னை ​செய்வதன் வழி​யேயும் வாசகன் அதன் உட்புறமாக மட்டுமின்றி ​வெளிப்புறமாகவும் பல தளங்களுக்கு ​செல்ல முடியுமா முடியாதா?

க​தை என்பது வாழ்க்​கையின் ஒரு துண்டு என்று யார் ​சொன்னது? அது திரிக்கப்பட்ட ஒரு துண்டாக இருந்துவிடுவதற்கான சாத்தியங்கள் உண்டா இல்​லையா?

அந்த எழுத்தாளர் எழுதியதுதான் வாழ்க்​கை என்று கூறுவதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது?

ஆசிரியர் எழுதுவதுதான் வாழ்க்​கை என்ப​தை யார் முடிவு ​செய்வது? முதலில் அது குறித்து வாசகனுக்கும் ஆசிரியருக்கும் இ​டை​யே ஒத்த கருத்​தை அ​டைய​வேண்டியதற்கான விவாதம் அவசியமா இல்​லையா?

இத்த​கைய ​கேள்விகள் க​லை இலக்கியம் குறித்த அடிப்ப​டை ​கேள்விக​ளை ​நோக்கி​யே நம்​மை திருப்பிச் ​செலுத்துகிறது.

க​தையின் உட்புறமாக மட்டு​மே வாசக​னை நகரச் ​சொல்வதன் மூலம் ஆசிரியன் தன்​னை ​கேள்விக்கிடமற்ற சர்வாதிகாரியாக​வோ அல்லது கடவுளாக​வோ நிறுவிக் ​கொள்ள முயற்சிக்கிறான்.

க​தை ஒரு ​வே​ளை எதார்த்தத்திற்கு புறம்பாக ஆசிரியனின் அந்தரங்கமான ஆ​சைகளால், ​கொள்​கை வழிப்பட்ட முடிவுகளால் நகர்த்திச் ​செல்லப்பட்டிருந்தால் அ​வை பாசிச கூறுகளாய் மாறிவிடும் சாத்தியங்களிலிருந்து வாசகன் தன்​னை பாதுகாத்துக் ​கொள்வதற்கான வழிமு​றைகள் என்ன?

இவரு​டைய அறம் க​தையி​லே​யே அதுதா​னே பிரச்சி​னையாகிறது.

பொதுவாக நாம் வணிக கதைகளையும், வணிக சினிமாவையும் ரசித்து ஒரு வகை ரசிக மனநிலையை பயின்றுகொண்டிருக்கிறோம். ஒரு கலைப்படைப்பு நம் ரசனைக்காக பரிமாறப்பட்டிருக்கிறது என்ற எண்ணம் நமக்குள் உள்ளது. ஆகவே நாம் நமக்கு இன்னது பிடிக்கவில்லை என்று உடனே சொல்லிவிடும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறோம்.

வணிக சினிமா, க​​தையிலிருந்து தீவிர க​லை இலக்கியங்க​ளை அணுக​வேண்டாம் என்று கூறும் எழுத்தாளர், தான் மட்டும் அத்த​கைய வணிக சினிமா பாணியிலான ஒரு எதார்த்தமற்ற, ​பெரும்பான்​மையினருக்கு நிகழ முடியாத முடி​வை ​கொடுப்பதற்கான உரி​மை எங்கிருந்து கி​டைக்கிறது?

மீண்டும் மீண்டும் இவரிடம் ஏற்படும் பிரச்சி​னை இதுதான், இவர் ஜனநாயக வழிமு​றை​யை நாடுபவராக இல்​லை. தன் கருத்துக்களின் பாலும் தன் வாசகர்களின் பாலும் ஒரு பாசிஸ்டாக சர்வாதிகாரியாக​வே நடந்து ​கொள்கிறார்.

உண்​மையான இலக்கிய வாசிப்பும் இலக்கிய விவாதமும் எப்படி இருக்க ​வேண்டு​மென்றால் சகலத்​தையும் சகலவிதத்திலும் சந்​தேகப்படுவதாகவும், ஆராய்ச்சி ​செய்வதாகவும், விமர்சிப்பதாகவும் இருக்க ​வேண்டும். ஆசிரியனின் கட​மை என்பது குழந்​தை ​கேட்கும் ​கேள்வியிலிருந்து தங்கள் எதிரிகள் ​கேட்கும் ​கேள்வி வ​ரை எல்லா ​கேள்விகளுக்கும் ​பொறுப்புணர்​வோடு பதில் ​சொல்வதாக இருக்க ​வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: