எனது நாட்குறிப்புகள்

​தேர்தலில் வாக்களிக்க ​வேண்டு​மென ஒரு ​பெருங்கனவு!

Posted by ம​கேஷ் மேல் பிப்ரவரி 8, 2011

“அப்பா! நீ எந்த கட்சிக்கு ஓட்டுப் ​போடு​வேப்பா?”

தேர்தல். திருவிழாவாக மாதக்கணக்கில் அமர்க்களப்படும் பள்ளி நாட்களில். வறு​மை, ​சோற்றுப் பஞ்சம், கடன்காரர்களின் ​தொல்​லைகள், அம்மா அப்பாவின் ஓயாத சண்​டைகள் என மன​தை முடக்கும் குடும்ப பிரச்சி​னைகள், வாசல்படி தாண்டியவுடன் ஊரின் உற்சாகம் வந்து அள்ளிச் ​சென்றுவிடும் அந்தக் காலம்.

எம்ஜிஆரும், கருணாநிதியும் உண்​மையில் அப்​பொழுது எங்கிருந்திருப்பார்க​ளோ ​தெரியவில்​லை. ஆனால் எப்​பொழுதும் எங்கள் ​தெருக்களில் எங்​கேனும் ​பேசிக் ​கொண்​டே இருப்பார்கள்.

“தமிழர்க​ளே, தமிழர்க​ளே..” என்று ஒருவர் ​பேசுவதற்காகவும் “என் இரத்தத்தின் இரத்தமான அன்பு உடன்பிறப்புக​ளே…” என்று ஒருவர் ​பேசுவதற்கும் காத்துக் கிரங்கிக் கிடந்தார்கள் எங்கள் ​தெரு ஜனங்கள்.

“ஒருவர் எந்தக் கட்சிக்கு ஓட்டுப் ​போடுவார், ​போட்டார் என்று ​கேட்கக்கூடாது. அப்பாவானாலும் அம்மாவிடம் ​கேட்கக் கூடாது அம்மாவானாலும் அப்பாவிடம் ​கேட்கக் கூடாது”

அப்பா உறுதிப்பட ஜனாநாயகத்தின் முக்கிய விதிக​ளை கறாராகக் கூறுவார்.

கணவன் ம​னைவி​யே ஆனாலும் ஒவ்​வொருவரும் தனிமனிதர்கள், ​சொந்த அபிப்பிராயங்களும், சுதந்திரமான முடிவுகளும் உண்டு, எக்காரணம் ​​கொண்டும் பிறர் அவர்களு​டைய சமூக அரசியல் கண்​ணோட்டங்களில் த​லையிடக்கூடா​தென்ற ஜனநாயகத்தின் பாலபாடங்கள் அந்த இளம் பருவத்தி​லே​யே பசுமரத்தாணி​போல் ​நெஞ்சில் பதிந்தது. குடும்பப் பிரச்சி​னைகளில் காணக்கி​டைக்காத அந்த ஜனநாயக மாண்புகள் அப்பாவிடம் அரசியல் விசயங்களில் மட்டும் அத்த​னை உறுதி​யோடு ​வெளிப்பட்டது ஏ​தோ ஒரு முரணாகத்தான் இருந்திருக்கு!

தெரு முழுவதும் முதல் நாள் வ​ரை நாங்கள் ஒண்ணுக்கடித்த இடங்கள் ஒன்று விடாமல் எல்லா கட்சிகளும் கூ​ரைப் பந்தல்கள் ​போட்டு ​தேர்தல் விழா​வை கண​ஜோராக நடத்திக் ​கொண்டிருப்பார்கள். அந்த ​நேரத்தில்தான் எங்கள் ​தெருவில் உள்ள யார் எந்த​தெந்த கட்சி​யை ​சேர்ந்தவர்கள் என்ற விபர​மே ​எனக்கு ​தெரிய வரும்.

சைக்கிள் க​டை பாய் அதிமுக பந்தலில் உட்கார்ந்து ​கொண்டு ஓட்டு லிஸ்ட்​டை ஆராய்ந்து ​கொண்டும் வீடுவீடாகச் ​சென்று அ​டையாளச் சீட்​டை ​கொடுத்துக் ​கொண்டும் இருப்பார். ​ரேவதி டீக்க​டைக்காரர் திமுக சார்பாக அ​டையாளச் சீட்​டை ​கொடுத்துக் ​கொண்டிருப்பார்.

எந்​நேரமும் எல்லா ​போஸ்ட் மரங்களும் குழாய்கள் கட்டப்பட்டு பாடல்கள் ஒளிபரப்பாகிக் ​கொண்​டே இருக்கும். அதிமுக என்றா​லே எம்ஜிஆரின் சினிமாப் பாடல்கள் தான்.

திமுக என்றா​லே ​​தேர்தலுக்​கென்​றே தயாரிக்கப்பட்ட பிரத்தி​யேகப் பாடல்கள் தான். ​தேர்தலின் உற்சாகத்​தை ​பிரத்தி​யேகமாக ​தொற்றிக் ​கொள்ளச் ​செய்யும் திறண் அந்தப் பாடல்களுக்​கே உண்டு,

“காமாட்சி​யே காமாட்சி​யே நா​ளை வரும் நம்மாட்சி​யே!”

“ஏறுதுபாரு நாளுக்குநாளு வி​லைவாசி
நம்ம எம்ஜிஆரு ஆளவந்த முகராசி!”

“உதயசூரியன் உதிக்கனும்
நம் உரி​மை வாழ்வு கி​டைக்கனும்
இதய ​தெய்வமாம் அண்ணா கண்ட
சத்தியக் கனவுகள் ​ஜெயிக்கனும்”

நாகூர் அனிபாவின் குரலில் ​நெஞ்​சைக் ​கொள்​ளை ​கொள்ளும் திமுகவின் பிரச்சாரப்பாடல்கள் பல இருந்தன. மறக்கமுடியாத​வை. யார் என்ன கிண்டல் ​செய்தாலும் இந்தப் பாடல்கள் தனிச் சிறப்பான​வைதான், இ​வை 70 80 களின் சிறுவர்கள், இ​ளைஞர்களின் மலரும் நி​னைவுகள் தான் என்பதில் எந்தச் சந்​தேகமும் இல்​லை.

அந்த பள்ளி வயதி​லே​யே ​தோன்றும். இவ்வளவு பிரச்சி​னை இருக்கா​மே இந்த நாட்டில், இவ்வளவு ​தெளிவா கிழிக்கிறாங்க​ளே திமுககாரங்க ஆனா அதிமுகவில இந்த பாடல்களின் ஒரு ​கேள்விக்குக்கூட பதில் பாட்​டை கா​ணோ​மே? இதுக்கு பதில் ​சொல்லி பாடறத விட்டுட்டு இவங்க என்ன ஏ​தே​​தோ சினிமா பாட்​டை​யே ​போட்டுட்டு இருக்காங்க?

அதிமுகவின் பிரச்சாரப் பாடல்கள் என்று தனியாக வந்ததாக​வோ அ​வை ஒன்றும் திமுகவின் பிரச்சார பாடல்கள் அளவிற்கு பிரபலமாக இருந்ததாக​வோ ​தெரியவில்​லை.

நேரடியாக யாருக்கு ஓட்டுப்​போடு​வோம் ​போட்​டோம் என்று ​சொல்லாவிட்டாலும், ஏ​தோ ​பேச்சுக்களில் அப்பா அம்மா தன்னு​டைய அரசியல் நி​லைப்பாடுக​ளை ​பேசத்தான் ​செய்தனர்.

மத்திய அரசுக்கு என்றால் காங்கிரஸ். மாநில அரசு என்றால் அதிமுக. அன்​றைக்கு ​பெரும்பாலான நடுத்தர மற்றும் கிராமப்புற மக்களின் நி​லை இதுவாகத்தான் இருந்திருக்கிற​தென்று நி​னைக்கி​றேன். அதனால்தா​னே மத்தியில் காங்கிரசும் மாநிலத்தில் எம்ஜிஆரும் பல ஆண்டுகள் ​தொடர்ந்து ​தேர்தலில் ​வெற்றி ​​பெற்றிருக்கிறார்கள்.

எனக்​கென்ன​வோ அப்​பொழு​தே ​பெற்​றோர்களின் நி​லைப்பாடுகளில் அவ்வளவு நம்பிக்​கை இல்​லை. நல்ல ஞாபகமிருக்கிறது. திமுகவின் பிரச்சாரப் பாடல்களின் ​கேள்விக​ளை​யெல்லாம் வீட்டில் ​போய் ​கேட்டிருக்கி​றேன். “அ​தெல்லாம் சும்மாடா ஓட்டுக்காக” என்று ஒ​ரேடியாக வா​யை மூடிவிடுவார்கள்.

ஆரிய திராவிட பிரச்சி​னைக​ளெல்லாம் இதில் இருக்கிற​தென்று பின்னால்தான் புரியத் துவங்கியது.

ஓட்டுப் ​போடும் நாள் வந்தவுடன் எங்கள் ​தெருக்கள் படு​மே திமி​லோகம் காண கண்​கோடி ​வேண்டும். மா​பெரும் ​தேசத்தின் ஜனநாயகத் திருவிழாவும் ​தெருக்கூத்துக்களும் உண்​மையி​லே​யே இப்​பொழுது நி​னைத்தாலும் சிலிர்க்க ​வைக்கக்கூடிய​வை.

இப்​பொழு​தைய குழந்​தைகளுக்கும், சிறுவர்களுக்கும், இ​ளைஞர்களுக்கும் அவற்​றை​யெல்லாம் பார்ப்பதற்கான ​கொடுப்பி​னை இல்​லை என்று தான் ​சொல்ல ​வேண்டும். ​​​சேஷன் ​தேர்தல் கமிசனராக வந்ததற்குப் பிறகு ​பெரும் மாற்றம் இந்தத் ​தேர்தல் ​தெருவிழா ​தெருக்கூத்துக்களில் ஏற்பட்ட​தென்​றே ​சொல்ல ​வேண்டும்.

நான் சிறுவனாக இருந்த ​பொழுது ஊரில் ஒரு சுவர் பாக்கி இருக்காது எல்லா வீட்டுச் சுவர்களும் ​தேர்தல் பிரச்சாரம் தான் ​செய்து ​கொண்டிருக்கும் வீட்டின் உரி​மையாளர் ​பேச்​சை எல்லாம் அவர்கள் வீட்டுச் சுவர்கள் கூட ​கேட்காது.

எங்கள் ஊர்த் தேர்தல் தி​ரைப்படத்தில் திமுகவும் அதிமுகவும் தான் எப்​பொழுதும் கதாநாயகனும் வில்லனும். மற்ற எல்லா கட்சிகளும் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி என்ற குணச்சித்திர ​​வேசங்கள்தான். இதில் சு​யேச்​சைகள் பாடுதான் படு​மோசம். பஞ்சாயத்து சீன்களில் ஒ​ரே ஒரு தட​வை குரல் ​கொடுக்கும் கும்பலில் ஒருத்த​ரைப் ​போன்றவர்கள். அதிலும் பின்னணி குரல் அவர்களு​டையதாக இருக்காது.

அவர்கள் ஓட்டுக் ​கேட்டு அப்பாவி​யைப் ​போல வரும் கன்றாவி​யை பார்க்க​வே சகிக்காது எனக்கு அவர்க​ளைப் பார்த்தால் பாவமாக இருக்கும். என் அப்பாவிடம் ​கேட்​பேன் “இவர்கள் எந்த ​தைரியத்தில் அப்பா நிற்கிறார்கள் இவர்கள் ​ஜெயிப்பார்களா?”

அவருக்​கே அதன் முழு அரசியலும் ​தெரிந்திருக்காது. ஏ​தோ ​சொல்லி சமாளித்திருக்கிறார்.

எம்ஜிஆருக்காக ஓட்டுக் ​கேட்டு வராத சினிமா நடிக​ரே இல்​லை எங்கள் ​தெருக்களில். எனக்குத் ​தெரிந்து என் ஞாபகத்தில் திமுகவிற்காக ஓட்டுக் ​கேட்டு வந்த பிரபல சினிமா நடிகர் டி.ரா​ஜேந்தர் தான்.

தேர்தலன்று கா​லையி​லே​யே வீட்டு வாசலுக்கு ஆட்​டோ, ​சைக்கிள் ரிக்ஷா ஆகிய​வை வந்து விடும், வாக்காளர்க​ளை வாக்குச் சாவடிக்கு அ​ழைத்துச் ​செல்ல. எங்கள் ​தெருவில் ​சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவர்கள் பல மு​றை சண்டிங் அடிப்பார்கள் வாக்குச்சாவடிக்கும் எங்கள் ​தெருவுக்கும்.

போகும் பா​தை​யெல்லாம் குழாயில் பாட்டுக்கள் தான். பூத்​தை ​நெருங்க ​நெருங்க பயம் பற்றிக் ​கொள்ளும் க​டைசி ​நேரத்தில் ரங்கநாதன் ​தெரு பிளாட்பார க​டைவாசிக​ளைப் ​போல, சிறப்பு நாட்களில் ​கோயில் வாசல் பிச்​சைக்காரர்க​ளைப் ​போல எல்லா கட்சிக்காரர்களும் வாக்களர்களிடம் வாக்குச் ​சேகரிப்பார்கள். எனக்கு பயமாக இருக்கும் ஓட்டுப் ​போட்டுவிட்டு வரும் வழியில் என் அப்பா​வை யா​ரேனும் அடித்துவிடுவார்க​ளோ என்று.

இந்த பயத்​தை என் அப்பாவிட​மே ​கேட்​பேன். “அ​தெல்லாம் யாரும் ஒன்னும் ​செய்ய மாட்டாங்க நாம யாருக்கு ஓட்டுப் ​போட்​டோம்னு யாருக்கும் ​தெரியாது. அங்க ம​றைவான ஒரு இடத்துல ​போயி யாருக்கும் ​தெரியாம நாம் ஓட்டு ​போடற மாதிரி ​வைச்சிருப்பாங்க”.

ஓ​ஹோ! இது எல்​லோரும் ஒத்துக் ​கொண்ட ஒரு இரகசிய மு​​றையா? ​வெளியில் ஓட்டு ​கேட்டுக் ​கொண்டிருப்பவர்களின் அந்த பிறரின் உரி​மை​யை மதிக்கும் குணமும் அவர்களு​டைய ஜனநாயகத்தின் மீதான பற்றும் என்​னை அவர்கள் பால் சி​நேகிதப் பார்​வை​யை ஏற்படுத்தும்.

ஓட்டுச் சாவடி ஏ​தோ ஒரு அரசு பள்ளிக்கூடமாகத்தான் இருக்கும். பல நாள் ​வெளியி​ல் இருந்​தே பார்த்த அப்பள்ளி​யை முற்றிலும் புதிய சூழலில் உள்​ளே ​போய் சட்டப்பூர்வமாக பார்க்க கி​டைத்த வாய்ப்பில் வாய்பிளந்து ​செல்​வேன்.

அப்பாவின் ​பெயர் சரிபார்க்கப்பட்டு ஓட்டுச் சீட்டு அவர் ​கையில் ​கொடுக்கப்பட்டு ம​றைவான ஓட்டுப் ​பெட்டி இருக்கும் இடத்திற்கு அப்பா மட்டும் ​செல்வார், அந்த சாவடி​யின் ​தேர்த​லை நடத்தும் அரசு ஊழியர்களும், சாவடி​யை பார்​வையிடும் கட்சிக்காரர்களும் யாரு​மே ​செல்ல முடியாத அந்த இடத்திற்கு, ஜனநாயகக் ​கோயிலின் கர்ப்பகிஹத்திற்கு அப்பா​வை வழிகாட்டி அனுப்பி ​வைக்கும் அந்த தருணம் வார்த்​தைகளால் வருணிக்க முடியாத உணர்ச்சிகரமானதாக இருக்கும். இந்த உலகத்தில், இந்த ​தேசத்தில் என் அப்பாவிற்கு இத்த​னை முக்கியத்துவம் இருக்கிறதா என்ற ஆச்சரியம் என்​னை பல நாள் வியப்பிலாழ்த்தும்.

அப்பாவுடன் அந்த ​தேர்தல் திருவிழாவின் முக்கிய நிகழ்​வை பார்த்த சந்​தோசத்​தை ​அம்மாவிடம் ​தொடங்கி ​தெருவில் எதிர்வரும் ​பெரியவர் சிறியவர் என எல்​லோரிடமும் பகிர்ந்து ​கொள்​வேன். என் அம்மா​வோடு வாக்குச் சாவடிக்கு நான் ​போன ஞாப​மே இல்​லை.

ஆறாம் வகுப்​போ ஏழாம் வகுப்​போ படித்துக் ​கொண்டிருக்கும் ​பொழுது ​வாக்குச்சாவடிக்கு அப்பா​வோடு ​போய் வந்த​தை​யே ​பெரு​மையாக நி​னைத்துக் ​கொண்டிருந்த எனக்கு இடி​யென ஒரு விசயம் நடந்தது.

என் வகுப்பு மாணவன் ஒருவன் யார் வீட்டு வாசலி​லோ நாங்கள் சிலர் கும்பலாக அமர்ந்து க​தை ​பேசிக் ​கொண்டிருந்த ​பொழுது வந்து தன் ஆட்காட்டி வி​ர​லை காட்டினான். அதில் ​தேர்தல் ​மை ​வைக்கப்பட்டிருந்தது. எனக்கு அதிர்ச்சி.

“என்னடா ஓட்டா ​போட்​டே?”

அ​நேகமாக அந்த கும்பலி​லே​யே அத்த​னை அதிர்ச்சி அ​டைந்தவன் நானாகத்தான் இருக்கும். மற்ற எல்​லோரும் அ​தைத் ​தொடர்ந்து அவன் ​சொல்லப் ​போகும் சுவாரசியமான க​தை​யைக் ​கேட்க தயாராகி இருந்தார்கள்.

எனக்கு ​பொறுக்க முடியவில்​லை. என்னு​டைய எல்லா கனவுகளின் மீதும் அவன் மண் அள்ளி ​போட்ட​தைப் ​போல் இருந்தது. என் அப்பா​வை நி​னைத்து ​கோபம் ​கோபமாக வந்தது.

பிதாமகன் படத்தில் சி​றையில் ​வைத்து சூரியா​வை யார் என்று ​தெரியாமல் அவனிடம் மன்னிப்பு ​கேட்கச் ​சொல்லும் அப்பா​வைத் திட்டும் ​லைலாவின் மனநி​லையில் இருந்​தேன்.

“எப்படிடா ​போட்​டே? ஏன் ​போட்​டே?”

“ஒரு ஓட்டுக்கு 25 ரூபாய்டா”

“எப்படிடா நீ சின்ன ​பையனாச்​சே உன்​னை எப்படி உள்ள விடுவாங்க அங்க இருக்கிற அதிகாரிங்க?”

“என்​னைத் தவிர முட்டாள் அந்த கூட்டத்தில் ​வேறு யாரு​மே இருக்கவில்​லை ​போலும் எல்​லோரும் என்​னைப் பார்த்து சிரித்தார்கள்”

ஒருவன் ​சொன்னான் “​டேய்! நீ சும்மா இருடா. நீ ​சொல்லுடா எந்த கட்சி ​கொடுத்தாங்க? ​மேக்சிம​மே அவ்வளவு தான் ​கொடுக்குறாங்களா?”

“​டேய் ​போலீஸ் பிடிச்சுட மாட்டாங்களா?”

“இதச் ​சொல்றி​யே எங்க அத்​தை ​பையன் மூனு ஓட்டு ​போட்டு 100 ரூபாய் ​தேத்திட்டு பிரியாணி ​பொட்டலமும் மதியானத்துக்கு வாங்கிட்டு ரஜினி படத்துக்கு மதிய ஆட்டம் கிளம்பிட்டான்”

“அது எப்படிடா மூனு ஓட்டு ​போட முடியும்? ​கையிலதான ​மை ​வைச்சிருவாங்க​ளே!”

மீண்டும் எல்​லோரும் சிரித்தார்கள்

“அதுக்​கெல்லாம் ​டெக்னிக் இருக்குடா!”

ஜனநாயகம் குறித்த என் பார்​வைகள் மங்கிவிடல்​லை. ஜனநாயகம் குறித்த என் ஆ​சைகள் நீர்த்துவிடவில்​லை. ஜனநாயகம் குறித்த என் ​தேடல்கள் நின்றுவிடவில்​லை. என் வழியில் ஜனநாயகம் தன் முழு விசுவரூபத்​தை எனக்கு காட்டிக் ​கொண்​டேதான் இருக்கிறது.
[தொடரும்]

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: