எனது நாட்குறிப்புகள்

அறம், ​சோற்றுக்கணக்கு, மத்துறுதயிர் – ​போதிப்பது சனாதன தர்மத்​தை​யே!

Posted by ம​கேஷ் மேல் பிப்ரவரி 11, 2011

ஜெய​மோகனின் இந்த மூன்று க​தைகளில் வரும் அப்பாவிகளின் வாழ்க்​கை சித்திரங்கள் ஒரு பக்கம் ​வேத​னை தருவதாகவும் இன்​னொரு பக்கம் ந​கைப்புக்குரியதாகவும் இருக்கிறது. வாசகர்கள் இந்தக் க​தைகளின் விவரிப்பு மு​றைகளிலும், ​​ஜெய​மோகனின் ​சொல்லாட்சியிலும், தீர்மானகரமான மிகத் ​தெளிவான முடிவுக​ளை ​நோக்கி நகர்த்திச் ​செல்லும் விறுவிறுப்பிலும் ​சொக்கிப்​போய் விடுகிறார்கள்.

அறம் க​தை வாழ்க்​கை​யை புரிந்து ​கொள்ளமுடியாமல் வாழ்க்​கை ஓட்டத்திலிருந்து க​ரை ஒதுங்கிய ஒரு அப்பாவி எழுத்தாள​னைப் பற்றியதாக இருக்கிறது. இக்க​தையின் மூலம் ​​ஜெய​மோகன் எழுத்தாளன் – பதிப்பாளர் உறவுக்கி​டை​யே வாழ்க்​கை​யை ஆராய்வதாக அ​மைகிறது.

எந்த ​தைரியத்தில் அந்த ப​ழைய கால எழுத்தாளன் தனக்கு வர​வேண்டிய பணத்​தை ​தே​வைப்படும் ​பொழுது வாங்கிக் ​கொள்கி​றேன் என்று பதிப்பாள​னை நம்பி ​கொடுத்து ​வைக்கிறான்?

சோற்றுக்கணக்கு நாவலில் ​கெத்​தேல் சாகிப் என்பவர் சாப்பிட்டவர்கள் அவர்களால் முடிந்த பணத்​தை ​போடட்டும் என்று ஏன் உண்டியல் ​வைத்துவிட்டு ​போடாத ​பொழுதும் கவ​லைப்படாமல் ​போடும் ​பொழுதும் அது குறித்து அக்க​றை ​கொள்ளாமல் இருக்கிறார்?

மத்துறுதயிர் சிறுக​தையில் குரு சிஷ்ய பாரம்பரியத்​தை கட்டி எழுப்புவதன் ​நோக்கம் என்ன?

இந்த க​தைகளின் ஒவ்​வொரு வார்த்​தையும், சம்பவங்களும், சம்பவங்க​ளை விளக்கும் பாங்கும் காந்தியின் ​சமூகக் ​கொள்​​கைக​ளை, இந்திய கிராமச் சமூகங்களின் வாழ்க்​கை மு​றை​க​ளையும் அதில் மனிதர்களின் மனப்​போக்குக​ளையும் பற்றிய ஆசிரியரின் விருப்பத்​தை, எதிர்பார்ப்புக​ளை, ஆ​சைக​ளை ​வெளிப்படுத்துவதாக​வே உள்ளது.

சனாதன மு​றைப்படி அந்தந்த சாதி​யைச் ​சேர்ந்தவன் அவனவனது குலத்​தொழி​லைச் ​செய்வான். அவன் ​தொழி​லைச் ​செய்யும் ​பொழுது உடனடியாக அவனுக்கு எந்தக் கூலியும் ப​ழைய இந்திய கிராம சமூகங்களில் ​​கொடுக்கப்படுவதில்​லை. அறுவ​டையின் முடிவில் ஒவ்​வொரு சாதி​யைச் ​சேர்ந்தவனுக்கும் அதில் எவ்வளவு ​கொடுக்கப்பட ​வேண்டும் என்ற சட்டங்கள், அறங்கள் இருந்துள்ளன.

ஆனால் கல்​வெட்டுக்களின் வாயிலாகவும், ப​ழைய இலக்கியங்களின் வாயிலாகவும், ​செவி வழியாகவும் நமக்கு வந்து ​சேரும் அந்த சட்டங்கள் அல்லது அறங்கள் எந்தளவிற்கு ந​டைமு​றையில் துல்லியமாக க​டைபிடிக்கப்பட்டன? மறுக்கபட்டதும், ஏமாற்றப்பட்டதுமான சந்தர்ப்பங்கள் இருந்திருப்பதற்கான சாத்தியங்கள் ஆராயப்பட ​வேண்டிய​வை.

ஆனால் அ​வை ஒரு அறமாக க​டைபிடிக்கப்பட ​வேண்டும் என்பதான ஒரு சமூக ஒழுங்கு இருந்திருக்கிறது. அவனவன் அவனவனு​டைய குலத்​தொழி​லை எத்த​கைய பிரதிபலனும் எதிர்பாராமல் ​செய்ய ​​வேண்டும் என்ப​தே குலத்​தொழில் சமூகங்களின் விதியாக இருந்துள்ளது. அதிலிருந்​தே அதன் கலாச்சாரங்கள், வாழ்க்​கைமு​றை ஆகிய​வை இருந்துள்ளன. தன் கட​மை​யை மீறுகின்ற உ​ழைக்கும் சாதி​யைச் ​சேர்ந்தவர்கள் மிகக் கடு​மையாக தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தன் கட​மையிலிருந்து தவறும் ஆண்​டைகள், அரசர்கள் ஆகி​யோ​ரை எதிர்த்து உ​ழைக்கும் சாதி​யைச் ​சேர்ந்தவர்கள் ​போராடக்கூடாது. அவர்க​ளை அறம் பார்த்துக் ​கொள்ளும் கடவுள் பார்த்துக் ​கொள்வார்கள்.

உனக்கான குலச் சமூக நியாயங்கள் ஏ​தேனும் ஒரு வ​கையில் உன் முயற்சியின்றி​யே உனக்கு வழங்கப்படும். அது உன் இப்பிறப்பிலும் இருக்கலாம் மறுபிறப்பிலும் இருக்கலாம். ஆனால் உன் கட​மை பிரதிபலன் எதிர்பாராமல் உ​ழைத்துக் ​கொண்டிருக்க ​வேண்டும். உன் உ​ழைப்​பைப் பற்றியும் உ​ழைப்பின் மதிப்​பைப் பற்றியும் உனக்கு எந்த வ​கையான  விருப்பு ​வெறுப்​போ, உயர்வு தாழ்வுச் சிந்த​னை​யோ எதுவும் இருக்கக்கூடாது.

உன் நடத்​தையால், உன் பணிவால், உன் பூர்வ புண்ணியத்தால் உனக்கு குரு கி​டைப்பார், உனக்கு அபூர்வ கணங்களில் சாதி உயர்வும் கூடக் கி​டைக்கும்.

இவற்​றைத்தான் ​மேற்கண்ட க​தைகளின் வாயிலாக ​ஜெய​மோகன் நிறுவ நி​னைக்கிறார்.

காந்தி தன் அரசியல் கருத்துக்க​ளை விட சமூக மற்றும் கலாச்சார கருத்துக்களி​லே​யே மிக ஆபத்தானவராக ​தோன்றுகிறார். அவர் ப​ழைய இந்திய சாதியப் படி மு​றையிலான வாழ்க்​கை மு​றை​யை​யே தன் எழுத்திலும் ​பேச்சிலும் எப்​பொழுதும் ​சொல்லி வந்திருக்கிறார். அவர் தன் காலத்தில் ​பேசப்பட்ட எந்த முற்​போக்கான கருத்துக்க​ளோடும் உடன்படுபவராக​வே இருந்திருக்கவில்​லை என்பது ​தெள்ளத் ​தெளிவாகத் ​தெரியும் பாரதி​யை படிக்கும் ​பொழுதும், அம்​பேத்க​ரை படிக்கும் ​பொழுதும், பகத்சிங்​கை படிக்கும் ​பொழுதும், இன்னும இன்னும் பல விசயங்களிலும்.

அத்த​கைய சமூகக் கண்​ணோட்டத்​தை ​இலக்கியத்தின் ஊடாக ​பேசுவ​​தே ​ஜெய​மோகனின் இந்த க​தைகளின் உத்திகளாக உள்ளன.

அறம் க​தையில் அப்பாவியாக ஆண்​டை தனக்கு ​தே​வைப்படும் ​பொழுது தருவான் என்று ராப்பகலாக உ​ழைத்துவிட்டு அம்மாஞ்சியாக இருக்கும் எழுத்தாளர் தனக்கு ​தே​வை என்று வரும் ​பொழுது ஆண்​டையின் சுயரூபத்​தை காண்கிறான். எழுத்தாளனாக இருக்கும் அளவிற்கு புத்திசாலி, “நா​னே ஒரு ​மேதாவி தா​னே” என்று கூறும் அந்த எழுத்தாளன், நிஜத்தில் உலகம் ​தெரியாத அப்பாவியாக​வே இருக்கிறான். உண்​மையில் இந்த பிரச்சி​னைக்கு ​ஜெய​மோகன் தீர்வாக தன் வாழ்க்​கை​யை மாற்றுத் தளத்தில் அ​தே க​தையில் நிகழ்த்திக் காட்டியிருக்கலாம். அதற்கு முரணாக தான் விளக்க விரும்பும் ​கொள்​கை​யை நிகழ்த்திக் காட்டுகிறார்.

தான் என்ன ​செய்கி​றோம் என்​றே ​தெரியாமல் தனக்குள் ஏ​தோ சக்தி புகுந்து ​கொண்டு அறம் பாட ​வைத்ததாக கூறும் அந்த எழுத்தாளனின் வாய் மூலமாக கடவுளின் ​செய்​கை​யை நிகழ்த்திக்காட்டுகிறார். கடவுள் எழுத்தாளன் மூலமாக அறம் பாட ​வைத்து அந்த பாடலின் வழியாக ஆச்சி​யை பற்றிக் ​கொள்கிறது. ஆச்சி துஷ்டநிவாரண பத்ரகாளியாக மாறி அறத்​தை நி​லைநாட்டுகிறாள். இ​வை எதுவு​மே ​தெரிந்து ​கொள்ள ​வேண்டிய அவசியமற்றவராக அப்பாவி எழுத்தாளர் தன் கதி​யை நி​னைத்து தண்ணி அடித்துவிட்டு சுயநி​னைவின்றி வீழ்ந்து கிடக்கிறார். இ​தைப் புரிந்து ​கொள்ளத்தான் வாசகனுக்கு ​​”கொஞ்சம் மூட நம்பிக்​கை ​வேண்டும்” என்கிறார்.

சோற்றுக்கணக்கு க​தை சற்று வித்தியாசமானது. முதலில் ​கெத்​தேல் சாகிப் என்பவர் யார் என்பது புலனாய்வு ​செய்யப் பட​வேண்டியது. ​ஜெய​மோகனுக்கு கடிதம் எழுதும் வாசகர்க​ளே பலர் அவர் க​டை​யைப் பற்றி கூறுகிறார்கள். நீண்ட கம்யூனிசப் பாரம்பரியம் உள்ள ​கேரளத்தில் ​கெத்​தேல் சாகிப்பின் வாழ்க்​கை வரலாறு ​தெரியாமல் ​கெத்​தேல் சாகிப்பின் சிறப்பியல்புகளுக்கான ​நோக்கங்க​ளையும் காரணங்க​ளையும் புரிந்து ​கொள்ள முடியாது.

ஆனால் எது எப்படி​யோ அந்த பாத்திரத்​தை ​ஜெய​மோகன் நிகழ்த்திக் காட்டு மு​றையிலிருந்து அவரு​டைய ​நோக்கத்​தை நாம் புரிந்து ​கொள்ள முடிகிறது. ​துவக்கத்தி​லே​யே ​சொல்லப்பட்ட இந்திய கிராம சமூக அ​மைப்பு அல்லது சனாதன தர்மம் அல்லது காந்தியம் தான் இதன் ஒ​ரே அடித்தளமாக இருக்கிறது.

கெத்​தேல் சாகிப் எப்படி உலக இயல்புக்கு மாறான ஒரு மு​றை​யை பின்பற்றுகிறார் அதன் பின்புலம் என்ன என்ப​தைப் பற்றி ​மெளனம் சாதிக்கும் ஆசிரியர், ஆனால் அவர் “கட​மை​யைச் ​செய் பல​னை எதிர்பார்க்கா​தே“, “விறுப்பு ​வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு உயர்வு தாழ்வு சிந்த​னையின்றி” கட​மை​யை ​செய்யும் மனிதனாக ​கெத்​தேல் சாகிப் சித்தரிக்கப்படுகிறார். அவருக்கு நவீன கருது​கோள்களான உ​ழைப்பின் மதிப்பும், ​பொருளின் மதிப்பும் எதுவும் ​தெரியாதவராக குலத்​தொழில் சமூகத்தின் உ​ழைப்பாளி சாதி​யைச் ​சேர்ந்தவனின் குண இயல்புக​ளோடு மறுகட்ட​மைக்கப்படுகிறார்.

அதனால்தான் பண​மே உண்டியலில் ​போடாமல் பல வருடங்களாக சாப்பிட்டுக் ​கொண்டிருந்தவ​னை ஒரு நாளும் வித்தியாசமாக அவரால் பார்க்கமுடியாமல் இருக்க முடிந்திருக்கிறது. அ​தே ​போல் க​டைசியாக உண்டியல் நிரம்பி வழிந்ததும் ஏன் எதற்கு என்று ​கேள்வி ​கேட்காமல் ​​வேறு உண்டிய​லை மாற்றவும் முடிந்திருக்கிறது.

இது ஆண்டான் உனக்கு எது ​செய்தாலும் நல்லதுக்​கென்று எடுத்துக்​கொள். ​கேள்வி ​கேட்கா​தே. என்பதான ஒழுங்​கை பற்றித்தான ​பேசுகிறது.

ஒருவனுக்கு சாப்பாடு பிடித்திருக்கிறதா இல்​லையா? ​போதுமா ​வேண்டுமா? பணம் தந்தானா இல்​லையா? என எ​தைப் பற்றியும் துளியும் அக்கறையின்றி ச​மைப்ப​தையும் சாப்பாடு ​போடுவ​தையும் தவிர உலகில் எந்த பிரஞ்​கையும் இன்றி இருக்கும் ஒரு மனிதன், ஒரு மு​றை ஒரு அப​லைப் ​பெண்​ணை பாலியல் பலாத்காரம் ​செய்யும் நாய​ரை அடித்த ஒ​ரே அ​றையில் ​நோய்வாய்ப்பட்டு அவன் ​செத்துவிடுகிறான். இத்த​னை பலமுள்ளவனாக இருந்தாலும் அவ​னை சனாதன வாழ்க்​கை மு​றை அத்த​கைய கட்டுப்பாட்​டோடு ​வைத்திருக்கிறது.

ஒரு நாயரின் சாவுக்கு காரணமான ​கெத்​தேல் சாகிப்​பை தாக்குவதற்கு வரும் கும்ப​லின் நடுவிலிருந்து வரும் ஒரு குரல் ‘போயி சோலி மயிரை பாருங்கடே. நியாயத்த விட்டு களிச்சா சிலசமயம் துலுக்கன் கையாலே சாவணும்னு இருக்கும், சிலசமயம் எறும்பு கடிச்சும் சாவு வரும்…’ ஒரு வ​கையில் ஆசிரியரின் குரல் ​போல​வே ​தோன்றுகிறது.

சாதியால் தாழ்ந்தவனாக இருந்தாலும் சமூகக் கட்டுப்பாடுக​ளை காப்பதற்காக அவன் ​செய்யும் காரியங்க​ளை ஏற்றுக் ​கொண்டுதான் ஆக​வேண்டும் என்பதாக​வே இருக்கிறது. இக்குரல் இவ்விசயத்தில் ஒரு ஜனநாயகக் குரலாக இல்லாமல் சாதிய சமூகக் கட்டுப்பாடுக​ளை ​பேசும் ஒரு நிலவுட​மைக் குரலாக​வே இருக்கிறது.

மத்துறுதயிர் சிறுக​தை ஒருவனுக்கு நல்ல குரு கி​டைப்பது அவன் பூர்வ ஜன்மத்தில் ​செய்த புண்ணியத்தின் வி​ளைவாக​வே அ​மைகிறது. அவன் அந்த குருவின் முழுகடாட்சத்​தை ​பெருவதற்காக குரு பத்தினிக்கு மாவு அ​றைத்துக் ​கொடுப்பது, அம்மி அ​றைத்துக் ​கொடுப்பது, ச​மையலில் கூடமாட ஒத்தா​சையாக இருப்பது என அவர்கள் வீட்டு ​வே​லை ஆளாக மாறுவதன் வழியாக சாத்தியமாகும் (பூராணங்களில் வரும் சந்திர​னைப் ​போல குருபத்தினி​யை கூட்டிக் ​கொண்டு ஓடி விடாமல் இருந்தால் சரி). நீ தாழ்ந்த சாதிக்காரனாக​வே இருந்தாலும் இத்த​கைய உன்னு​டைய பரிபூரணமான சரணாகதியின் மூலம் உலக இலக்கியங்களி​லெல்லாம் நிபுணனாகி விடுவாய்.

ஆனால் உன் வாழ்நாள் முழுவதும் உன் குருவுக்கும் குருபத்தினிக்கும் மட்டுமல்ல அவர் வீட்டில் உள்ள நண்டுசிண்டுகள் வ​ரை எல்​லோர் காலிலும் (சத்யரா​ஜை ஒரு படத்தில் வீ​ணை கற்றுக் ​கொள்வதற்காக கவுண்டமணி குரு வீட்டில் உள்ள குழந்​தைகள் காலி​லெல்லாம் விழச் ​செய்வார்!) சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தபடி இருக்க​வேண்டும்.

நீ உயர்ந்த குடியி​லே பிறந்தவனாக​வே இருந்தாலும் உன் ​சொந்த காரணங்களால் கூட குருவின் மனம் ​நோகும்படி நடந்து ​கொள்வா​யேயானால், உன் ​பொருட்டு அவர் தீராத அவச் ​சொல்லுக்கும், மன உ​லைச்சலுக்கும் ஆளாவா​ரேயானால், அந்த பாவத்​தை நீ சுமந்​தே ஆக ​வேண்டும். நீ படித்த கல்வி எதுவும் உனக்கு பயன்படாது நீ சீரழிந்து நாசமாகப் ​போவாய். நீ தாழ்ந்த குடியில் பிறந்தவ​னைப் ​போல ​பெரி​யோர் ச​​பையி​லே த​லைகாட்ட முடியாதவனாக கூனிக்குறுகி ம​றைந்து வாழ​வேண்டும்.

இந்த மூன்றும் உண்​மை சம்பவங்க​ளே என்ப​தைப் ​போல ஒரு பாவ​னை எழுப்பப்பட்டாலும் இ​வை க​தைதான் என்ப​தை ஆசிரிய​ரே ​தெளிவாக்கிவிடுகிறார். அதிலும் ​கெத்​தேல் சாகிப் என்னும் உண்​மை பாத்திரத்தின் மீது தன் கருத்​தை ஏற்றிக் கூறியுள்ள ​ஜெய​மோகன் நா​ளை அவரு​டைய ​செயல்களுக்கான காரணங்களாக யா​ரேனும் இவரு​டைய பார்​வைக்கு முரணாக தகவல் ​வெளியிட்டால் தப்பித்துக் ​செல்வதற்கான சுரங்கப்பா​தை​யை இவ்வாறு ​போட்டுக் ​கொள்கிறார் “நான் கேள்விப்பட்டதுதான். அவரைப் பார்த்ததில்லை. அவர் கையால் உண்டதுமில்லை“.

வாசகர்களின் அனுபவமாக அவரு​டைய தளத்தில் இக்க​தைகள் குறித்து ​வெளியிடப்பட்ட வாசகர் கடிதங்கள் எல்லாம் தான் ​பொது​மைப்படுத்தி தரும் கண்​ணோட்டங்களின் வழியாக வாசகர்கள் தங்களின் ​சொந்த அனுபவங்க​ளை புரிந்து ​கொள்ள ​வேண்டும் என ஆற்றுப்படுத்தும் விதமாக​வே அ​மைந்திருக்கின்றன.

ஜெய​மோகன் தன் க​தைக்கான கரு​விலும், அ​தை வழிநடத்திச் ​செல்லும் பாங்கிலும் மட்டும் அதீத கவனம் ​செலுத்தவில்​லை. மாறாக வாசகர் கடிதங்க​ளை ​தேர்ந்​தெடுத்து தன் தளத்தில் ​வெளியிடுவதிலும் மிகக் கவனத்​தோடும் ​தெளி​வோடு​மே ​செயல்பட்டுள்ளார். வாசகர்க​ளை தன் க​தைக்குள்ளாக​வே த​லைகவிழ்ந்து மண்டியிட்டவாறு பயணம் ​மேற்​கொள்ளுமாறு பார்த்துக் ​கொள்கிறார். யா​ரேனும் த​லைதூக்கினால் த​லையி​லே​யே அடித்து த​லை தூக்காதவாறு கவனமாக பார்த்துக் ​கொள்கிறார்.

ஜெய​மோகன் வியந்​தோதும் காலாவதியாகிப் ​போன இந்த இந்திய நிலவுட​மை சிந்த​னைக​ளையும், மதிப்பீடுக​ளையும், வாழ்க்​கை மு​றைக​ளையும் காந்தி ​போன்றவர்களா​லே​யே மீட்டுருவாக்கம் பண்ணமுடியாத ​பொழுது, இவர் எம்மாத்திரம்! ஆனால் முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், நவீனத்துவம், பின்நவீனத்துவம் எல்லாம் வந்துவிட்ட காலத்தில் வாசக​னை தன் அனுபவங்கள் எல்லாவற்​றையும் பிற்​​போக்குச் சிந்த​னைமு​றையின் வழியாக புரிந்து ​கொள்ள ​சொல்வதன் வாயிலாக, அவர்களுக்கு து​ரோகம் இ​ழைக்கிறார். ​நெருக்கடி மிகுந்த தங்கள் வாழ்க்​கை​யை புரிந்து ​கொள்வதில் அவர்க​ளை குழப்பத்திற்கு உள்ளாக்கி, தி​சை ​​தெரிந்து ​கொள்ள முடியாத மூடர்களாக்கப் பார்க்கிறார்.

இக்க​தைகள் குறித்த இப்படிப்பட்ட interpretations ற்கு சாத்தியமில்​லையா என்ன?

ஜெய​மோகன் கூறுவ​தைப் ​போல, “ஒரு கதையை வாழ்க்கையின் ஒரு துண்டு என்று நினைத்து வாசிப்பதே அதன் ஆசிரியன் போடும் முதல் நிபந்தனையாகும். அந்த முடிவு வேறு வகையில் இருந்திருக்க முடியாது, ஏனென்றால் அது வாழ்க்கை. அது அப்படித்தான். அது ஏன் நிகழ்ந்தது என்று யோசிக்க மட்டுமே வாசகன் உரிமை பெற்றிருக்கிறான். அதன் வழியாக மட்டுமே அவன் வாசிப்பின் பல தளங்களுக்கு செல்ல முடியும். கதையின் ஆழங்களை தொடமுடியும். அப்படி இல்லாமல் முடிவு இப்படி இருந்திருக்கலாமோ என யோசிப்பதெல்லாம் கதையை முன்கூட்டியே நிராகரிப்பதிலேயே சென்று சேரும்” என்பதற்கு மாறாக ​மே​லே ​செய்யப்பட்ட விமர்சனம் இக்க​தைக​ளை நிராகரிப்பதன் வழி​யே தா​னே சாத்தியமாகிறது! இ​வை க​தை​யை நம் வாழ்​வோடு இ​ணைத்து புரிந்து ​கொள்வதற்கான பல புதிய சாத்தியக்கூறுக​ளை திறந்துவிடாமலா ​போய்விட்டது!

Advertisements

22 பதில்கள் to “அறம், ​சோற்றுக்கணக்கு, மத்துறுதயிர் – ​போதிப்பது சனாதன தர்மத்​தை​யே!”

 1. guru said

  Purposfully written. no basis for the criticism. pre determined.

  • நம் உணர்வுக​ளை தூண்டுகின்ற விசயங்களில் எளிதில் மன​தை இழந்துவிடுகிற நாம், நம் அறி​வை தூண்டச்​செய்கின்ற ​நேரடி விமர்சனங்களில் நாம் மிகத் ​தெளிவாக​வே இருக்கி​றோம்.

   இந்த மூன்று க​தைகளுக்கு எதிரான நி​லைப்பாடுக​ளை ​பெரும்பான்​மையான மக்களுக்கு சாத்தியப்படுகிற நி​லைப்பாடுக​ளை முன் ​வைக்கிற மிகச்சிறந்த சிறுக​தைக​ளை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்து​வே​னேயானால் நீங்கள் அத​னையும் ஏற்றுக் ​கொள்வீர்கள். ஆனால் அவற்றில் ஊடும் பாவுமாக ​நெய்யப்பட்டிருக்கும் அரசிய​லையும், தத்துவங்க​ளையும் நான் புரிந்து ​கொள்ளச் ​சொல்லும் ​பொழுது சிக்கல் துவங்கிவிடுகிறது.

   தான் நம்புகின்ற ஒவ்​வொன்​றை பற்றியும் எவ​னொருவன் தீவிரமான சுயபச்சாதாபங்களுக்கு இடம் ​கொடுக்காத சுயவிமர்சனங்களுக்கு – முரணில்லாத மனித குல விடுத​லை​யை முன்​வைத்து – தன்​னை ஆட்படுத்திக் ​கொள்கிறா​னோ அவனால் மட்டு​மே இவற்​றை புரிந்து ​கொள்ள முடியும்.

   எனக்கு எந்த அவசரமும் இல்​லை. எந்த கட்டாயங்களும் இல்​லை. எந்த நிர்பந்தங்களும் இல்​லை. யாரின் மீதும் இனம் புரியாத ​கோபமும் இல்​லை. இதற்கு முன் ​ஜெய​மோகன் பற்றிய எந்த விமர்சனத்​தையும் நான் படித்ததுமில்​லை. படிக்க ​வேண்டிய அவசியமுமில்​லை. நான் எழுத்தாள​​னை எந்த முன்நிபந்த​னைகளும் இன்றி தான் ஒவ்​வொருமு​றையும் படிக்கி​றேன். நிச்சயமாக நா​ளை ​​ஜெய​​மோகனின் ஒரு க​தை என் வாழ்க்​கை குறித்த கண்​ணோட்டங்க​ளோடு ​நெருங்கி வருமானால் ​கொண்டாடவும் தயங்க மாட்​டேன்.

 2. Unmai Thamizhan said

  stupid blog! First try to write a good story. Then you can criticize. What an idiot you are!

  • இது நல்ல க​தை என்று ​சொல்வதற்கு என்ன அனுபவம், என்ன அறிவு, என்ன கல்வி உங்களுக்கு ​போது​மென்று நீங்கள் நி​னைக்கிறீர்க​ளோ, அ​தைவிட அதிகமாக அ​தை ​மோசமான க​தை என்று ​சொல்வதற்கு எனக்கு ​வேண்டு​மென்று ​சொல்ல எப்படி முடிகிறது உங்களால்?

   நல்ல க​தை என்று ​சொல்வதற்கும் நீங்கள் எனக்குச் ​சொன்ன தகுதிகள் உங்களுக்கும் ​வேண்டும் என்பதும் தா​னே இதிலிருந்து நாம் புரிந்து​கொள்ள ​வேண்டியதாக இருக்கிறது!

   அல்லது நல்ல க​தை என்று ​சொல்வது ஊ​ரோடு ஒத்து வாழ்வது அதற்கு நான் சராசரியாக இருப்ப​தே ​போதுமான தகுதி என்று கருதுகிறீர்களா?

 3. punnaku said

  mattamaana pathivu..unakku ellam vera velaiyae illaya?

 4. yugandar said

  I am a novice reader. However, the truth I see in Jeyamohan stories is definitely NOT from the twisted angle you mentioned. You are wasting your time. If you want to fight, show your mettle in constructive creativity. I reject all your points simply because that if Jeyamohan wants to say those things, he can say it directly.

  • நன்றி! பிரச்சி​னை என்பது ஒரு எழுத்தாளர் ​வேண்டு​மென்​றே திட்டமிட்டு அத்த​கைய கருத்துக்க​ளை தன் ப​டைப்புகளில் ​வெளிப்படுத்துகிறாரா இல்​லையா என்பதல்ல.

   யார் ஒருவரும் தனக்கு ஒவ்வாத கருத்துக்க​ளை வலுக்கட்டாயமாக தன் ப​டைப்புகளில் திணிக்க முடியாது. ​அ​வை நல்ல இலக்கியமாகவும் அ​மைய முடியாது. பிரக்​ஞை​யோ​டோ பிரக்​ஞையற்​றோ தான் மனப்பூர்வமாக ஏற்றுக் ​கொண்ட வாழ்க்​கை ​நெறிகள், கருத்தியல்க​ளே எழுத்தாளனின் எழுத்​தை வழிநடத்துகிறது என்ப​தே என் வாதம்.

   எனக்கு எந்தவிதமான தத்துவப்​போக்குகளுடனும் முன் தீர்மானிக்கப்பட்ட முடிவுகள் இருந்திருக்க வாய்ப்பில்​லை. எல்லா மனிதர்களுக்கும், எல்லா ​தேசங்களுக்கும் முரணில்லாத விடுத​லைப் பா​தை சாத்தியமா இல்​லையா என்ற ​தேட​லே பிரதானமானது.

   உண்​டென, சாத்திய​மென நம்பு​வோர் ஒரு புறமாகவும் இல்​லை​யென, அசாத்திய​மென நம்பு​வோர் மறு​புறமாகவும் க​றை ஒதுங்குவ​தே வரலாறு ​நெடுகிலும் காணக் கி​டைக்கும் விவாதமாக இருக்கலாம்.

   பரவாயில்​லை எல்லா விவாதங்களும், எல்லா ப​டைப்புகளும் வர​வேற்கத்தக்க​வை​யே. ஏ​தேனும் ஒரு வ​கையில் நாம் ஒவ்​வொருவரும் விரும்பி​யோ விரும்பாம​​​லோ வரலாற்​றுத் ​தே​​ரை வடம்பிடித்து முன்​னெடுத்துக் ​கொண்டுதான் ​செல்கி​றோம். பார்ப்​போம் ​தே​ரை இழுத்து ​தெருவில் விடாமல் இருந்தால் சரி

   • yugandar said

    When Creativity stems from inner concious, no writer can become the owner of his own creations if he doesn’t use his mind/language to control it. Also, the writer and his end-product becomes a victim to his own culturo/social web. I still can’t agree that is true. Reason being, his mind plays around his spring of ideas and present it to his audience. In the process, the concious part always supercedes sub-concious. Even in cases, where literature stemmed from inner conciousness without the writters effort, then can you really blame him ? Isn’t it a mere reflection as a dream ? I understand the part that you can be scared of dreams but to blame the dreamer is not fair.

   • நான் எங்கு​மே எழுத்தாளனின் ப​டைப்​பை கனவுக​ளோடு ஒப்பிடவில்​லை. கனவுகள் குறித்து ஆய்வு என்பது ஒரு தனிக்க​தை.

    இங்கு தான் விமர்சனம் மற்றும் சுயவிமர்சனம் ஆகியவற்றிற்கான ​தே​வை ஏற்படுகிறது. நம் உணர்வுக​ளை, கற்ப​னைக​ளை, ப​டைப்புக​ளை அறிவினால் ஆய்வு ​செய்ய ​வேண்டியது அவசியமாகிறது.

    மீண்டும் இந்த ஆய்வு என்பது அவரவரது வாழ்க்​கை குறித்த கண்​ணோட்டங்களாலும், தத்துவத் ​தேர்வுகளாலு​மே ந​​டை​பெறுகிறது.

    இந்த அடிப்ப​டைகள் குறித்த விமர்சனமும் சுயவிமர்சனமு​மே எல்லா ​தேடல்களிலும் அடிப்ப​டையான ​தேடலாக அ​மைய ​வேண்டும்

 5. paanjasanyan said

  Hi, very excellent work. I never thought the stroreis in this way. Really you have wonderful brain, please by using that, find all the different hidden meanings for stories from SiruvarMalar, gogulam, and all. I will be very thank full.

  • நிச்சயமாக ​செய்ய ​வேண்டிய​வைதான். இதில் கிண்டலுக்கு எங்கு இடம் வந்தது?

   வாழ்க்​கை​யைச் ​சொல்லிக் ​கொடுப்பதற்கான நீதி ​போத​னைகள் தான் நம்மு​டைய காப்பியங்கள், இலக்கியங்கள், நீதி ​நெறிக் க​தைகள் அ​னைத்தும் என்று ​சொல்லும் ​பொழுது எத்த​கைய நீதி​யை அ​வை ​பேசுகின்றன என்பது விவாதத்திற்கு உரிய​வை தா​னே.

   ஆராய்ச்சிக்கான விசயங்கள் நம்​மைச் சுற்றி ம​லை ​போல் குவிந்து கிடக்கிறது. எல்லாவற்​றையும் சந்​தேகப்படு, எல்லாவற்​றையும் மறுவாசிப்பு ​செய் என்பது தா​னே ​தேடலுக்கான முதல் விதிகள்!

   • paanjasanyan said

    மிக சரியாக சொன்னிர்கள், எனக்கு இதைப் படித்த பின்னர் ஒரு சந்தேகம் வருகின்றது. நாம் நமது குழநதைகளுக்கு வெகு நாளாக போதித்து வரும் “பாட்டி வடை சுட்ட கதையிலும் இது போல ஏதாவது உள்குத்து இருக்குமோ என்று. தயை செய்து அதையும் இது போல கட்டுடைப்பு, குடலப்ரேஷன் செய்து உண்மையை தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டு கொள்கின்றேன். உங்கள் சேவை தமிழ் இலக்கிய உலகுக்கு தேவை (கிண்டல் அல்ல நிஜம் )

 6. Senthil said

  ஹரி,
  உஙகள் பதிவு எந்த விதத்திலும் logic இல்லை.
  ஒரு விமர்சகன் முன் முடிவுகளுடன் தொடுங்குவதே அவனின் கற்றுகுட்டிதனத்தை காட்டுகிறது.

  கதை க்ளத்தை தாண்டி காந்திக்கு போய் ஏதொ நிறுவ முயற்ச்சி செய்துவிட்டு பரிதாப தோல்வியுற்று மீண்டும் ஜெயமொகனின் இலக்கு என்று நீங்களாய் ஒன்றை சொல்லி அதையும் நிறுவ யேதும் கிடைக்காமல் சொதப்பி வ்ழி தெரியாமல் உங்கள் அரை குறை வலை பதிவை முடித்து இருக்கிறீகள்.best luck next time.

 7. ARAVINDHAN said

  எந்த ​தைரியத்தில் அந்த ப​ழைய கால எழுத்தாளன் தனக்கு வர​வேண்டிய பணத்​தை ​தே​வைப்படும் ​பொழுது வாங்கிக் ​கொள்கி​றேன் என்று பதிப்பாள​னை நம்பி ​கொடுத்து ​வைக்கிறான்?
  Dear Mr Hari,

  I have to share my own experience. We had two acres of land in Madurai from 1965 to 1980. During that time my father engaged a person Mr Vellaichamy and a lady Mrs Seeniyammal for maintenance. They get some amount as cooli from my father every week. I found they returned some amount again to my father to keep it and got back whenever necessary arose. My father was very honest and they continued upto we sold that land. My father gave an amount of Rs. 48,000 to Mrs Seeniyammal as her savings and Rs. 1,15,000 as his savings with the accounts details. It is possible in the world where there is faith on the boss. Please read a story as story. ARAVINDHAN.S.

  • நண்பர் அரவிந்தனுக்கு.

   தங்கள் அனுபவங்கள் எ​தையும் யாராலும் மறுக்க முடியாது. அ​வை வாழ்க்​கை எதார்த்தங்கள் என்னும் ​பொழுது அவற்​றை ஏற்றுக்​கொண்டு அதன் இன்​றைய ​பொருத்தப்பாடுக​ளை ஆய்வு ​செய்வது தான் சரியான அனுகுமு​றை.

   நீங்கள் ​சொல்வது ​போன்ற அந்த நல்ல சமூகங்கள் ஏன் காலாவதியாகிப் ​போனது? சட்டம், நீதி மன்றங்கள், நீதிபதிகள், வழக்கு​ரைஞர்கள், நிலப் பத்திரம், ​சொத்து பத்திரம், கடன் பத்திரம், ஒப்பந்த பத்திரம், உரி​மைப் பத்திரம், காப்பி​ரைட்ஸ் என நம் வாழ்க்​கையின் மதிப்பீடுகள், அணுகுமு​றைகள் ஏன் மாறுகின்றன? அதற்கான சமூக மாற்றங்களின் பின்புலம் என்ன?

   ப​ழைய நிலவுட​மை சமூக அ​மைப்பின் நம்பிக்​கைகள் சார்ந்த மதிப்பீடுகள் இவற்றால் ஏன் மாற்றீடு ​செய்யப்பட்டது? வாழ்வின் சகலத்திலும் நிலவுட​மை வாழ்க்​கை மு​றைக்கும் முதலாளித்துவ வாழ்க்​கை மு​றைக்குமான வித்தியாசம் என்ன?

   நீங்கள் வியந்​தோதுவ​தைப் ​போல ப​ழைய நம்பிக்​கை சார்ந்த சமூகங்களில் அத்த​னை உன்னதங்கள் இருந்த​பொழுதும் எ​வை அவற்​றை தவிர்க்க முடியாத அழி​வை ​நோக்கி இட்டுச் ​சென்றது?

   என்ற ​கேள்விக​ளை உங்களுக்கு நீங்க​ளே ​கேட்டுக் ​கொள்ளுங்கள் வி​டை ​தேடத் துணியுங்கள்!

   அப்பாவும் தாத்தாவும் எவ்வளவுதான் எனக்கு பிரியமானவராக இருந்தாலும் ஒரு நாள் இரு நாள் ​வேண்டுமானால் இறந்த பிணத்​தை வீட்டில் ​வைத்துக் ​கொள்ளலாம். ​வெகு சீக்கிரத்தில் இடுகாட்டிற்கு ​கொண்டு ​செல்லத்தான் ​வேண்டும் அது ​போல​வே ப​ழைய கலாச்சாரங்களும் வாழ்க்​கை மு​றைகளும்.

   நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வாழ்வில் அது தான் நடக்கிறது. ஆனால் அத​னை சுயபுத்தி​யோடு புரிந்து ​கொள்வ​தே வாழ்​வை மனத்​தெளி​வோடு எதிர்​கொள்வதற்கான கட்டாயம் என்ப​தே என் வாதம்.

 8. Siva said

  ஜெ,வின் கதைக்கான உங்களுடைய விமர்சனத்தில் எனக்கும் முழுதும் உடன்பாடில்லை. எனினும் உங்களது சில கருத்துக்களுடன் நான் உடன்படுகிறேன். உன்மை தமிழன், புன்னாக்கு, பாஞ்சசன்யம் ஆகியோர் சுத்தமாக விமர்சனத்தையும் மாற்றுக் கருத்துக்களையும் புரிந்துகொள்ளாமல் மிக மேலோட்டமான பதிவுகளுக்குக்கூட தாங்கள் விரிவான கருத்தினை முன் வைக்கின்றீர்கள். வாழ்த்துக்கள். (எல்லாவற்றையும் சந்தேகப்படு என்ற கருத்தின்படி தொடர்ந்து விமர்சியுங்கள்)

  • நன்றி! தங்களு​டைய மாற்றுக் கருத்துக்க​ளையும் மரியா​தையுடன் அணுகும் அந்த உயர்ந்த குணத்திற்கு. நிச்சயமாக நம்மு​டைய சூழல் ஆ​ரோக்கியமாக இல்​லை. நம் எல்​லோருக்குள்ளும் இனம் புரியாத வன்மமும் கு​ரோதமும் நி​றைந்திருக்கிறது. ஒன்று புரிகிறது அதற்கு நாம் தீணியாகிவிடக்கூடாது என்பது மட்டும்.

   எப்பாடுபட்​டேனும் இந்தச் சூழ​லை ​வென்றாக ​வேண்டும். சாத்தியங்கள் கண்ணுக்கு எதி​ரே இல்லாவிட்டாலும், நம்பிக்​கை ​நெஞ்சினில் இருக்கிறது.

   என்னு​டைய விமர்சனத்திலும் சரி கருத்தியல்ரீதியாக மிகக் கடு​மையாக எழுதியிருந்தாலும், தனிப்பட்ட ரீதியில் தரம் தாழ்ந்து ஒரு வார்த்​தையும் ​பேசிவிடக்கூடாது என்பதில் மிக இயல்பான ​தெளிவுட​னே இருக்கி​றேன்.

   “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு”. கருத்தியல் தளத்தில் ஆத்திரம் இயலா​மையின் ​வெளிப்பாடு. எப்​பொழுதும் உணர்வுகள் அறிவால் வழிநடத்தப்படவும் ​மேம்படுத்தப்படவும் ​வேண்டும். எல்லாவற்​றையும் தாண்டி என் சக மனிதனின் இருப்​பை ஏற்றுக் ​கொள்ளும், மாற்றுக் கருத்​தை அங்கீகரிக்கும் ஜனநாயகம் மிகமிக முக்கியம்.

   மாற்றுக் கருத்​தை அங்கீகரிப்ப​தென்பது அத​னை எதிர்ப்பதல்ல என்று ​பொருள் ​கொள்ளக்கூடாது.

   என் தளத்தில் தங்களு​டைய மூன்று க​தைகளுக்கான விமர்சனத்​தை எழுதியிருக்கி​றேன் வாய்ப்பிருந்தால் படியுங்கள் என்று நான் அனுப்பிய முதல் இ​மெயில் ​ஜெய​மோகன் அவர்களுக்குத்தான்.

   அதற்கு அவரு​டைய பதில்:

   அன்புள்ள ஸ்ரீகிருஷ்ணன்

   உங்களுடையது ஒருவகை மனச்சிக்கல்

   நலம்பெற வாழ்த்துகிறேன், என்றாவது
   ஜெ

   என்​னை ​பைத்தியம் என்று ​சொன்னதில் எனக்கு எந்த வருத்தமும் இல்​லை. யா​ரோ ஆள் ​பெயர் ​தெரியாத ஒரு சராசரி ஒரு உலகம் ​​தெரிந்த ​பெரிய எழுத்தாளரின் ப​டைப்​பைப் பற்றி அத்த​னை காட்டமாக விமர்சனம் ​செய்யும் ​பொழுது, அவருக்கு அந்த உரி​மை இல்​லையா என்ன?

   பிரம்மரிஷியின் வாயால் நம் ​பெயர் ஏ​தோ ஒரு விதத்தில் உச்சரிக்கப்படுவ​தே பாக்கியம் தா​னே!

   இலக்கியத்​தை ​பொறுத்தவ​ரை வடிவம் உள்ளடக்கம் என்ற இரண்டு விசயங்கள் ​பேசப்படும். விமர்சன இலக்கனத்திற்காக இ​வை பிரித்து ​பொருள் ​கொள்ளப்பட்டாலும், உள்ளடக்கத்தால் வடிவம் தீர்மானிக்கப்படுகிறது. மாற்றீடாக வடிவத்தால் உள்ளடக்கம் தீர்மானிக்கப்படுகிறது. இரண்டும் ஒன்​றை​யொன்று ஊடும் பாவுமாக தழுவிச் ​செல்கின்றன.

   வடிவ ​​நேர்த்தியில் ​ஜெய​மோகன் ​போன்றவர்க​ளை அடித்துக் ​கொள்ள இன்​றைக்கு தமிழகத்தில் ஆள் இல்​லை என்ப​தை என்னால் அடித்துச் ​சொல்ல முடியும். இலக்கிய ​செய்யும் ​தொழில்நுட்பத்தில் அவர் ​கை​தேர்ந்தவர். என்னால் இ​​வை குறித்து எத்த​னை பக்கங்களுக்கும் எழுது முடியும். பிரச்சி​னை அதுவல்ல. எனக்கு ​​ஜெய​மோக புராணத்தின் உபண்யாசகனாக இருப்பதில் விருப்பமில்​லை.

   அவரு​டைய வாசகர்க​ளெல்லாம் சங்பரிவாரத்​தை ​சேர்ந்தவர்கள் என்​றோ, பார்ப்பனர்க​ளென்​றோ, இந்து மத​வெறியர்க​ளென்​றோ என்னால் கூறமுடியாது. அப்படி ​சொல்வ​தென்றால் என்​னை நா​னே கூறிக் ​கொள்வ​தைப் ​போன்றது. நானும் அவரு​டைய வாசக​னே. ஒரு ​வே​ளை அந்த நவீன து​ரோணாச்சாரியாரின் குருகுலத்திற்கு ​வெளி​யே நின்று பாடம் ​கேட்கும் நவீன ஏக​லைவனாக இருக்கலாம்.

   அவரு​டைய ப​டைப்புக​ளைத் ​தொடர்ந்து வரும் வாசகர்கள் கடிதங்க​ளை அதிக விருப்பத்​தோடு ​விடாது படித்து வருகி​றேன். எனக்கு வந்த அவரு​டைய வாசகர்கள் கடிதங்க​ளையும் ​சேர்த்து என்னு​டைய புரிதல், மிகப் ​பொதுவாக எல்​லோரு​மே வடிவ ​நேர்த்தியில் மயங்கி அங்​கே நின்று விடுகிறார்கள். அத​னைத் தாண்டி அதன் உள்ளடக்கம் குறித்த விவாதங்க​ளை எங்​கெனும் காண முடியவில்​லை.

   ஒரு க​தையில் இருந்து நி​றைய கி​ளைகள் பிரியலாம். வாசகனின் ​சொந்த அனுபவங்களாலும், வாசிப்பு அனுபவங்களாலும். ஆனால் அவற்றுடன் நின்று விடுவ​தோ. இலக்கியத்தின் சமூகப் பார்​வை​யை மறுத்துவிடுவ​தோ மறந்துவிடுவ​தோ உண்​மையான வாசிப்பாகாது.

   மூன்று நாட்களாக நான் நடத்திய இந்த விவாதங்க​ளை ​எனக்குள்​ளே​யே ​தொகுத்துக் ​கொண்டிருந்​தேன். இதிலிருந்து நான் கற்ற​தென்ன? ​இதில் நான் ​செய்த சரி எ​வை? தவறு எ​வை? என்பதாக. மிகப் பிரதானமாக எனக்கு மன நி​றைவு தந்தது நான் ஆன்​றோர் அ​வையில் மிக கண்ணியத்துடன் நடந்து ​கொண்​டேன் என்ப​தே. அ​​தே ​நேரத்தில் அ​தை​யே ஒரு ​ஜெய​மோகனின் வாசகரும் கூறக் ​கேட்டதில் அசரீரி ​போல் இருந்தது உங்கள் வாக்கு. மிக்க மகிழ்ச்சி.

   வாய்ப்பிருந்தால் நான் ​தொகுத்துக் ​கொண்டவற்​றை​யெல்லாம் ​வே​றொரு பதிவில் எழுதுகி​றேன்.

 9. ராஜன் குறை said

  அன்புள்ள ஸ்ரீஹரி, நீங்கள் குறிப்பிட்ட ஜெயமோகனின் மூன்று கதைகளையும் படித்துவிட்டேன். உங்கள் வாசிப்பு அவற்றை மிகவும் குறுக்குவதாகவே படுகிறது; நீங்கள் கூறுவதுபோல அதில் முதலீட்டிய நவீனத்திற்கு மாற்றான விழுமியங்கள் விதந்தோதப்படுகின்றன என்றாலும், கதைகள் அவற்றைப் பற்றியது மட்டுமேயில்லை என்று நினைக்கிறேன். மேலும் நீங்கள் நிலவுடமை மதிப்பீடுகள் என்று கூறப்படுவது குறித்தெல்லாம் பல்வேறு விதமான சிந்தனைகள் வெளிவந்துள்ளன என்பதை கவினித்திருப்பீர்கள். Karl Polyani-இன் The Great Transformation இந்த விதத்தில் குறிப்பிடத்தகுந்த நூல். முன்காலத்தில் நிலவியது எல்லாமே நிலவுடமை, சாதீயம் என்று குறுக்க முடியாது என்றே நினைக்கிறேன். உங்களிடம் தொடர்ந்து பயணம் மேற்கொள்ளக்கூடிய மனோபாவத்தைப் பார்க்கிறேன். வசைகளுக்கு எதிர் வசைகளை பொழியாத மனோபாவம் ஆரோக்கியமானது. தொடர்ந்து உரையாடும் சந்தர்ப்பங்களை எதிர்நோக்கியிருப்பேன்.

  ராஜன் குறை

  • உங்களு​டைய பின்னூட்டத்திற்கு நன்றி!

   நீங்கள் குறிப்பிட்டுள்ள​தைப் ​​போல “முன்காலத்தில் நிலவியது எல்லாமே நிலவுடமை, சாதீயம் என்று குறுக்க முடியாது என்றே நினைக்கிறேன்.” எல்லா சமூகங்களிலும் நம்பிக்​கை, அன்பு, பரஸ்பர மனித ​நேயம், சக மனிதனும் (அவன் எந்த சாதியாக இருந்தாலும்) வாழ இடம் தர ​வேண்டும் என்ற பல்​வேறு மனிதகுலத்திற்கு ​தே​வையான என்​றென்​றைக்குமான லட்சியங்கள் இருக்க​வே ​செய்தன.

   மார்க்ஸ் கூறுவ​தைப் ​போல “முதலாளித்துவம் எல்லா உறவுக​ளையும் மதிப்பீடுக​ளையும் காசு பண உறவுகளாக மதிப்பீடுகளாக மாற்றிவிட்டன” என்பதற்​கேற்ப இதுவ​ரையான எல்லா சமூக அ​மைப்புகளும் சுரண்டல் சமூக அ​மைப்புக​ளே – ​பெளதீக, கலாச்சார, வரலாற்று ​வேறுபாடுகளுக்​கேற்ப அந்தந்த பகுதிகளில் அ​வை வி​சேஷமான சில குண இயல்புக​ளோடு ​வெளிப்படுகிற​தே தவிர – அ​வை அ​னைத்தும் ​மேற்​சொன்ன மார்க்சின் கூற்றுப்படி எல்லாவற்​றையும் தனது சுரண்டலுக்கு கீழானதாக மாற்றி​யே ​வைத்துள்ளன.

   நம்பிக்​கை, மனித​நேயம் என்ப​வை​யெல்லாம் கூட அந்தந்த சமூக அ​மைப்பின் விதிகளுக்​கேற்ப அதன் உள்ளடக்கத்திலும் வடிவத்திலும் மாறுபட​வே ​செய்கின்றன. புராதண ​பொதுவுட​மை சமூகத்தின் நம்பிக்​கைகள் ​வேறு, ஆண்டான் அடி​மை சமூகத்தின் நம்பிக்​கைகள் ​வேறு, நிலவுட​மை, முதலாளித்துவ சமூகங்களின் நம்பிக்​கைகள் ​வேறு என்ப​தை அ​வை குறித்த விரிவான ஆய்வுகளில் நாம் இனங்காண முடியும் என்​றே நம்புகி​றேன்.

   இந்த சிறுக​தைகள் கட்டி​யெழுப்பும் நம்பிக்​கைகளும், வாழ்க்​கை மதிப்பீடுகளும் மிகத்​தெளிவாக முதலாளித்துவ நம்பிக்​கைக​ளை​யோ அல்லது ஒரு சுண்டலற்ற விஞ்ஞானப்பூர்வமான கனவு சமூகத்தின் நம்பிக்​கைக​ளை​யோ அல்ல மாறாக ப​ழைய சநாதன சமூகத்தின் நம்பிக்​கைக​ளைத்தான் என்​றே என் வாசிப்பும், கல்வியும் அனுபவமும் எனக்கு உணர்த்துகின்றன.

   இது ஒரு தர்க்கமற்றதும், பகுத்தறிவுக்கு ஒவ்வாததுமான ஒரு வித லட்சிய மதிப்பீடுக​ளை முன்​வைக்கிறது. இந்தியப் பின்னணியில் அது தவிர்க்க முடியாமல் சநாதன வாழ்க்​கை மு​றை​யோடு ​நெருங்கிப் ​போவதாக​வே உணர்கி​றேன். அடிக்கட்டுமானத்​தை உறுதிப்படுத்தாத ​மேற்கட்டுமான கனவுகள் அ​னைத்​தையும் நிலவும் சமூக அ​மைப்பு மிக சுலபமாக சுத்திகரித்து உள்வாங்கிக் ​கொண்டுவிடும்.

   இறுதிவ​ரை தன் தவறுக​ளை உணராம​லே​யே ​போய்விடுகிற, சமூக முரண்களுக்கும் எழுத்தாளனின் எதார்த்தமற்ற நம்பிக்​கைகளுக்கும் இ​டையிலான முரண்க​ளை உ​டைத்துக் காட்டாம​லே ​போகும் எழுத்தாளன்-பதிப்பாளன் குறித்த “அறம்” சிறுக​தையும், இன்​றைய எதார்த்தத்​தை எவ்விதத்திலும் ​தொட்டுச் ​செல்லாத தான் மாறினால் சமூகம் மாறும் என்பதான குருட்டு கண்​ணோட்டத்​தை முன் ​வைக்கும் ​கெத்​தேல் சாகிப் சிறுக​தையும், சநாதன சமூகத்தின் குரு-சிஷ்ய பாரம்பரியத்தின் எந்த மதிப்பீடுக​ளையும் மாற்றாமல் ​கேள்விக்குள்ளாக்காமல் அப்படி​யே சுவிகரித்து ​வெளிப்படுத்தும் “மத்துறுதயிர்” சிறுக​தையும் அதன் ​மொழிந​டையும், க​தை நிகழ்த்திக் காட்டப்படும் பாங்கும், சம்பவங்களும் ​மேற்​சொன்னவற்​றை​யே உறுதிப்படுத்துகிறது என்ப​தே என்னு​டைய கருத்து.

   பகுத்தறி​​வை​யே பயங்கரவாதமாக பார்க்கும் ​போக்கும், தர்க்கத்தின் இடத்தில் அழகிய​லை மாற்றீடு ​செய்யும் ​போக்கும், வரலாற்று ​பொருள்முதல்வாதத்​தையும், அடிக்கட்டுமானம்-​மேற்கட்டுமானம் என்னும் ஆய்வுமு​றைக​ளையும் ​பெருங்க​தையாடல் என நிராகரிக்கும் தத்துவப் ​போக்கும் ​மேற்​சொன்ன என்னு​டைய விமர்சனத்​தை ஏற்றுக்​கொள்ள வாய்ப்பில்​லை என்ப​து ​தெளிவானது தான். ஆனால் என்னு​டைய நி​லை​யை ​மேலும் ​மேலும் ​தெளிவாக முன் ​வைக்க உதவினீர்கள் என்ற விதத்தில் தங்களுக்கு நன்றி ​தெரிவிக்கி​றேன்.

 10. கரிக்குளம் said

  “மாறாக வாசகர் கடிதங்க​ளை ​தேர்ந்​தெடுத்து தன் தளத்தில் ​வெளியிடுவதிலும் மிகக் கவனத்​தோடும் ​தெளி​வோடு​மே ​செயல்பட்டுள்ளார். வாசகர்க​ளை தன் க​தைக்குள்ளாக​வே த​லைகவிழ்ந்து மண்டியிட்டவாறு பயணம் ​மேற்​கொள்ளுமாறு பார்த்துக் ​கொள்கிறார். யா​ரேனும் த​லைதூக்கினால் த​லையி​லே​யே அடித்து த​லை தூக்காதவாறு கவனமாக பார்த்துக் ​கொள்கிறார்.”

  ரொம்ப சரி.

  எனக்கும் இந்த அனுபவம் உண்டு.

  ஒரு தடவை நான் பின்னூட்டம் போட்டு ஜெயமோகனிடம் சில கருத்துகளை வைத்தேன். அக்கருத்துகள் அவரின் கருத்துகளை விமர்சனம் பண்ணியிருந்தது.

  உடனே அதற்கு அவர் பதில் எழுதாமல், ஒரு குறிப்பிட்ட சிலர் ஒன்றாகச்சேர்ந்து என்னைத்தாக்கினார்கள். சிலர் என் ஐபி ஐய்க்கண்டுபிடித்து விட்டதாக கொக்கரித்தார்கள். ஒரு தமிழ்டீச்சரும் இதில் உண்டு. இவர் ஜெயமோகனைக் கடவுளாகவே பார்க்கிறார்.

  இப்பின்னூட்டக்காரர்கள் பெர்மனெண்டா இவரின் பதிவில் உட்கார்ந்து கொண்டு இவரைப்பற்றி எவரும் மாறு கருத்து சொல்லாமல் பாதுகாக்கிறார்கள்.

  ஒரு பேட்டைத்தாதாவுக்கு அடியாட்கள் போல.

 11. ராஜன் குறை said

  உங்களுடன் இன்னம் கொஞ்சம் பேச வேண்டும் என்ற ஆசையால், ஒருவித அன்பிலும் எழுதுகிறேன். நீங்கள் நீங்களே விளக்குகிறபடி ஒருவிதமான கறார் மார்க்ஸீய (அதாவது என் புரிதலில் வரலாற்றுவாத) விமர்சனம் வைத்தீர்கள். அதை ஜெயமோகன் முற்றிலும் உதவாது என்று உதாசீனம் செய்தார். பொதுவாக உங்களுடையது போன்ற நிலைபாடுகளில் அக்கறையுடனும், அவற்றின் போதாமையை பற்றி சிந்திக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்ட தனி அனுபவ சுவடுகளுடனும் உரையாடக்கூடிய நான் நீங்கள் எல்லா விழுமியங்களையும் நில உடைமை, சனாதனம் என்று குறுக்குகிறீர்கள் என்று சுட்டிக்காட்டியவுடன் நீங்கள் “பகுத்தறிவின் பயங்கரவாதம்” “பெருங்கதையாடல்”, “தர்க்க நீக்கம்” என்ற “பின் நவீனத்துவம்” என்று தமிழ் சூழலில் அறியப்பட்டுள்ள விநோத வஸ்துவைச் சார்ந்ததாக என் மாறுபாட்டை சுட்டுகிறீர்கள். ஏன் தர்க்கத்தின் எல்லையில் நின்றும், அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானம் சார்ந்தும் அந்த கதைகள் பேசும் சில ஆச்சரியகரமான மானுடச் சலனங்களை நம் அறிதலுக்கு முக்கியமானதாக விவாதிக்க முடியாதா என்ன? எந்த அளவுக்கு உங்கள் குறுக்குவெட்டு கருத்தியல் விமர்சனப் பார்வை சிந்தனையை தூண்ட முடியுமோ, அந்த அளவு பிரதிகளின் தர்க்கத்துடன் பயணம் செய்யும் சிந்தனையும் பயனளிக்குமல்லவா? அதில் எங்கே “தர்க்கத்திற்கு பதில் அழகியல்”, “பகுத்தறிவின் பயங்கரவாதம்” கொள்கையெல்லாம் வந்தது? மார்க்ஸிய நிலைபாட்டிலேயே எத்தனை வாசிப்புகள் சாத்தியம் என்று யோசித்தீர்களா? மத்தறுதயிர் பேசுவது காதலை, சாதி மறுப்புக்காதலை என்று நான் வாசித்தால் என்ன தவறு? அறம் பேசுவது பெண்களின் பொறுப்புணர்வு மற்றும் செயலூக்கத்தை என்று ஏன் கூற முடியாது? பெத்தல் சாகிப் பேசுவது பால்நிலை கடந்த தாய்மையுணர்வை என்று ஏன் கூறமுடியாது? பேராசன் கார்ல் மார்க்ஸ் என்று நூறு ஆண்டுகளாக பட்டி தொட்டிகளிலெல்லாம் முழங்கியதை குரு பக்தியை பிற்போக்காகப் பார்க்கும் நீங்கள் எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்? கடைசியாக ஒரு போனஸ் கேள்வி, கொஞ்சம் விளையாட்டாக: என்னை உங்களுடன் விவாதிக்க தூண்டும் சக்தி, வரலாறா, இறைமையா, தற்செயலா?

  • நன்றி தங்களின் ​தொடர்ச்சியான பின்னூட்டங்களுக்கு.

   என்​னோடு தங்க​ளை ​தொடர்ந்து ​பேச அ​ழைப்பது ஒரு ​வே​ளை என்னு​டைய ​தேட​லை நீங்கள் இனங்கண்டு ​கொண்டதாக இருக்கலாம். மார்க்சியம் தான் ​பேசு​வேன் என்று அடமாக இருந்தாலும் இன்​றைய சூழலில் ஒரு மாறுதலான என்னு​டைய குரலாக இருக்கலாம்.

   எல்லா நம்பிக்​கைகளும் வறண்ட சூழலில் குடும்பமாக இருந்தாலும் சமூகமாக இருந்தாலும் யார் மீது யார் விழுவது என்ற வன்மம் ​பொங்கி வழிந்து​கொண்​டே இருக்கும். இத​னை உணர்ந்து விலக நி​னைக்கும் பாங்காக இருக்கலாம்.

   தங்களு​டைய கட்டு​ரை ஒன்றில் “வாழலா​மேடா கடவு​ளே என்று தா​னே ​சொல்கி​றேன்” என்ற வாசகத்தில் ​வெளிப்படும் ​சோர்வும் ​வேத​னையும் விரக்தியும் ​கையறுநி​லையும் என்​னை முழு​மையாக ஆட்​கொள்ளாவிட்டாலும், நிச்சயமாக ஒரு வித பயம் இருக்க​வே ​செய்கிறது.

   நிற்க!

   க​தை​யை குறித்த உங்கள் முதல் ​நேரடி கருத்​தை இந்த க​டைசி பின்னூட்டத்தில்தான் ​​வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். உங்களு​டைய முந்​தைய சில பின்னூட்டங்களிலிருந்தும், நீங்கள் என்​னை படிக்க பரிந்து​ரைத்த உங்கள் கட்டு​ரை ஒன்​றை படித்தும் நான் புரிந்து ​கொண்டதிலிருந்​தே (முழு​மையாக அல்ல) நான் அவ்வாறு எழுதி​னேன்.

   ​உங்களுக்கான வாசிப்பு அனுபவங்க​ளை நீங்கள் முன்​வைக்கிறீர்கள். நிச்சயமாக இ​வை​​போன்ற வாசிப்பு சாத்தியங்கள் குறித்தும் அ​வை க​தையின் முழு​மையிலிருந்து கிளம்புப​வை அல்ல மாறாக க​தையின் கி​ளைக​ளை பற்றிக் ​கொள்ப​வை என்பதாக என்னு​டைய பதி​லை ஏற்கன​வே ​வேறு சில பின்னூட்டங்களுக்கு பதிலாக எழுதியிருக்கி​றேன்.

   ​பாட மறந்த, பாட மறுத்த பாடல்க​ளை பாடுவதற்கான ​இ​சைஞானத்​தோடு சுருதி பிறழாமல் பாட​வேண்டும் என்ப​தே என் ​நோக்கம்.

   மீண்டும் ஆசிரியர்-மாணவர் என்னும் உறவு காலம் ​தோறும் இருந்து வந்தாலும் அதன் குணம், இயல்பு, விதிகள், அந்தந்த சமூகங்களின் ​தே​வைக்கும் வளர்ச்சி நி​லைக்கும் ஏற்ப மாறித்தான் வருகிறது. ஆனால் இந்தக் க​தை எத்த​கைய ஆசிரியர்-மாணவர் மாதிரியான உற​வை முன்​னெடுக்கிறது என்ப​தே என்னு​டைய ​கேள்வி. நான் ஆசிரியர்-மாணவர் உற​வை மறுக்கவில்​லை. முடியாது என்​றே நி​னைக்கி​றேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: