எனது நாட்குறிப்புகள்

Archive for மார்ச், 2011

தாடி

Posted by ம​கேஷ் மேல் மார்ச் 27, 2011

அங்​கொன்றும்
இங்​கொன்றுமாய்
வளரத் துவங்கியது
பதின்பருவத்தின்
ஒரு ​பெருங்கனவு

முழு​மைய​டைவதற்கு
முன்​பே
ந​ரைக்கத் துவங்கிவிட்டது!

Posted in கவிதைகள் | Leave a Comment »

லிபியாவிற்கான யுத்தத்​தை எப்படி புரிந்து ​கொள்வது?

Posted by ம​கேஷ் மேல் மார்ச் 27, 2011

வினவில் ​வெளிவந்துள்ள கட்டு​ரை “லிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!!” பல்​வேறு ​கோணங்களிலும் சரியான நி​லை ​கொண்டதாக​வே படுகிறது. கட்டு​ரை​யை படித்த ​பொழுது ஏற்பட்ட பல கருத்துக்க​ளை பகிர்ந்து ​கொள்ளலாம் என்ற ஆவலில் எழுதுகி​றேன். நிகழ் கால உல​கை ஒட்டு​மொத்தமாக புரிந்து​கொள்ள ​வேண்டியதன் ஒரு பகுதியாக​வே லிபியா​விற்கான யுத்தத்​தையும் பார்க்க ​வேண்டியுள்ளதாகக் கருதுகி​றேன்.

அ​மெரிக்கா, ​சோவியத் யூனியன் என்ற இரு வல்லரசுகளால் வழிநடத்தப்பட்ட இந்த உலகத்தின் அரசியல் வ​ரைப​டைத்​தை முழு​மையாக மாற்றி எழுதிக் ​கொண்டிருக்கும் ஒரு வரலாற்றுச் சூழலில் நாம் வாழ்ந்து ​கொண்டிருக்கி​றோம். அதன் ​வெளிப்பா​டே உலகம் முழுவதும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் ​மேலாக நிலவிவந்த பல்​வேறு அரசுகளும், ​தேசிய இன மற்றும் புரட்சிகர இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் இன்​றைக்கு மிகப்​பெரும் மாற்றங்களுக்கும் வீழ்ச்சிகளுக்கும் மிகப்​பெரிய அளவில் மிக அதிக ​வேகத்தில் உள்ளாகிக் ​கொண்டுள்ளன.

இன்​னொருபுறத்தில் உலகம் முழுவதும் உ​ழைக்கும் மக்களும், நடுத்தர மக்களும் வரலாற்றில் முன்​னெப்​போதும் இல்லாத அளவிற்கு மிகக் கடினமான காலகட்டத்தில் வாழ்ந்து ​கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ​பொறி விழுந்தவுடன் பற்றிக் ​கொள்ளும் வ​கையில் எரிவதற்கு சாதகமான காய்ந்த காடுகளாக உள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்களின் தன்​னெழுச்சி இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.

தன்​னெழுச்சியான ​போராட்டங்களுக்கு உள்ள எல்லா பலஹீனங்களும் இப்​போராட்டங்களுக்கு உள்ளன. அ​வை தவிர்க்கமுடியாமல் சுலபமாக உலக வல்லாதிக்க சக்திகளின் நலன்களுக்கு சாதகமாக ம​டைமாற்றப்படுகின்றன.

மற்​றொருபுறம், கடந்த வருடங்களில் ஏற்பட்ட மிகப்​பெரிய ​பொருளாதார ​நெருக்கடிகளிலிருந்து ​வெளிவருவதற்கான சகல வழிக​ளையும் அ​மெரிக்காவும், ​மேற்கத்திய நாடுகளும் ஆய்வு ​செய்து​கொண்டிருந்தன, அதற்கான மாற்றுத் திட்டங்க​ளை ஏற்பாடு ​செய்து ​கொண்டிருந்தன என்கிற விசயங்க​ளையும் நாம் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சி​னைக​ளோடு இ​ணைத்து பார்க்க ​வேண்டியுள்ளது.

கடாபியின் லிபியா க​டைசி வ​ரை ரஷ்யா​வையும் சீனா​வையும் நம்பிக் ​கொண்டிருந்த​தையும் அதற்கு ​நேர்மாறாக அ​வை தற்​பொழு​தைய உலக வல்லாதிக்க சக்திகளிடம் கடாபியின் லிபியா​வை அநாதரவாக ​கைவிட்டுவிட்டதற்கான பின்னணியில் ஏன் நாம் இலங்​கையின் க​டைசி கட்ட இன விடுத​லைப் ​போராட்டத்தின் நாட்க​ளோடு ​தொடர்புபடுத்தி பார்க்க முடியாது என்கிற கண்​ணோட்டத்​தையும் முன்​வைக்க விரும்புகி​றேன். சீனா, இந்தியா ​போன்ற நாடுகளுக்கு இலங்​கை விசயத்தில் அ​மெரிக்கா த​லை​மையிலான ஐநா விட்டுக் ​கொடுப்ப​தைப் ​போல, மத்திய கிழக்கு நாடுகளின் விசயத்தில் மற்றவர்களுக்கு விட்டுக் ​கொடுக்க ​வேண்டிய நி​லை​மைகள் சீனா ​போன்ற நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

கடந்த காலங்களில் பலமு​றை உலக அரசியல் வ​ரைபடம் சுரண்டல் வர்க்கங்களின் ​தே​வைகளுக்காக ஈவுஇரக்கமின்றி மனிதகுலத்தின் ​பெருங்குருதியால் மாற்றி வ​ரையப்பட்டிருக்கிறது. இ​ன்​றைக்கும் அதில் ஒரு பகுதியாக​வே இத​னை பார்க்க ​வேண்டியுள்ளது என நி​னைக்கி​றேன்.

Posted in கட்டு​ரை | Leave a Comment »

​ஜெய​மோகனின் மூன்று சிறுக​தைகள் குறித்த விமர்சனங்கள்

Posted by ம​கேஷ் மேல் மார்ச் 25, 2011

நண்பர் ஒருவரின் ​வேண்டு​கோளுக்காக ​ஜெய​மோகனின் மூன்று க​தைகள் குறித்து எழுதிய விமர்சனங்களின் சுட்டிக​ளை கீ​ழே ​தொகுத்துக் ​கொடுக்கி​றேன்.

ஜெய​மோகனின் க​தைகளுக்கான சுட்டிகள் கீ​ழே:

அறம்

சோற்றுக்கணக்கு

மத்துறு தயிர்

என் விமர்சனங்களுக்கான சுட்டிகள் கீ​ழே:

ஜெய​மோகனின் அறம்

க​தையும் – க​தை ஆசிரியனும்

அறம், ​சோற்றுக்கணக்கு, மத்துறுதயிர் – ​போதிப்பது சனாதன தர்மத்​தை​யே!

ஜெய​மோகனின் விமர்சனம்

ஜெய​ மோகனின் பதில்

Posted in ​ஜெய​மோகன், விமர்சனம் | Leave a Comment »

ஏறக்கு​றைய ​சொர்க்கம்

Posted by ம​கேஷ் மேல் மார்ச் 25, 2011

கேவல​மே

கெளரவமாய்

ஒரு வாழ்க்​கை

Posted in கவிதைகள் | Leave a Comment »