எனது நாட்குறிப்புகள்

​நான் எங்கிருக்கி​றேன்

Posted by ம​கேஷ் மேல் மார்ச் 8, 2011

தோழ​ரே! நலமா?

என்​னைப் பற்றி
கேட்டிருந்தீர்கள்

எப்படிச் ​சொல்லலாம்
என ​யோசித்த ​வே​ளையில்
அப்படி​யே ​சொல்லிவிடுவதில்
என்ன தவ​றிருக்க முடியும்!

வீட்டில் பார்த்துக் ​கொடுத்த
பெண்​ணை
அவர்கள் விருப்பப்படி​யே
திருமணம் ​செய்து ​​கொண்​டேன்.

அந்த கணத்தில்
என் வாழ்வின் சாட்சியாய்
இருந்த
ஒரு ​தோழ​ரின்
வழி​யே
எல்லா விபரங்களும்
உங்களுக்கு
வந்து ​சேர்ந்திருக்கும்
என்​றே நம்புகி​றேன்.

எனக்கு இப்​பொழுது
இரண்டு குழந்​தைகள்.
நான் ​மென்​பொருள்
தொழில்நுட்ப உதவிப் பிரிவில்
இளநி​லை ​மேலாளர்.

அ​டைய முடியாது ​போன
லட்சியங்க​ளை நி​னைத்து
கணந்​தோறும்
கண்ணீ​ரோடு வாழ்க்​கை
வி​ரைந்து ​கொண்டிருக்கிறது.

ஆற்றாது அழுத கண்ணீர்
வற்றும் ​​வே​ளைகளில்
மூச்சு வாங்கிக் ​கொள்வதற்காக
நெஞ்சு விரியும் ​தருணங்களில்
இன்னும் விடாது
புத்தகங்கள் படித்துக் ​கொண்டிருக்கி​றேன்.

சி​றைச் சுவர்களில்
கரிக்கட்​டையால்
எழுதப் பட்ட
கவி​தைக​ளைப் ​போல
கேட்பதற்கு காதுக​ளோ
படிப்பதற்கு கண்க​ளோ
பேசுவதற்கு இதய​மோ
இருக்கும் என்ற
நிச்சயமில்லாத
இந்த இ​ணையச் சுவர்களில்
இப்​பொழுதும்
எழுதிக் ​கொண்​டே இருக்கி​றேன்.

ஒ​ரே ஆறுதல்
நேற்று
என் வார்த்​தைகளால்
நீங்கள் ​சொல்வ​தை
எழுதிக்​கொண்டிருந்த
என் ​கைகள்
இன்று
என் வார்த்​தைகளால்
நான் ​சொல்வ​தை
எழுதிக் ​கொண்டிருக்கின்றன.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: