எனது நாட்குறிப்புகள்

லிபியாவும் ஒரு எகிப்தா?

Posted by ம​கேஷ் மேல் மார்ச் 13, 2011

துணிசியா எகிப்​தைத் ​தொடர்ந்து லிபியாவில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி, முதல் இரு நாடுக​ளைப் ​போல அத்த​னை எளிதில் ஆட்சியாள​ரை கவிழ்க்க முடியாமல் தி​கைத்து ​தொடர்ந்து ​கொண்டிருக்கிறது.

இந்தியர்களான நமக்கு இந்த நாடுகளில் ந​டை​பெறும் மக்கள் எழுச்சிக​ளை குறித்த கண்​ணோட்டங்கள் அ​னைத்தும் ​மேற்கத்திய ஊடகங்களா​லே​யே உருவாக்கப்படுகிறது. இதற்கு மாற்றான கண்​ணோட்டங்கள் உள்ளனவா? என்ற ஐயம் கூட எழாத வ​கையில் நாம் வழிகாட்டப் பட்டுக் ​கொண்டிருக்கி​றோம்.

வெனிசுலாவின் அதிபர் யு​கோ சா​வேஸின் குரல் மம்மர் கடாபிக்கு ஆதரவாக எழும் சத்தம் மிக ​மெல்லியதாக ​வெகு தூரத்திலிருந்து நம் காதுகளுக்கு வருகிறது. இக்குர​லைத் ​தொடர்ந்து பயணித்ததில் மாற்றான ​வே​றொரு கண்​ணோட்டம் Libya, Getting it Right: A Revolutionary Pan-African Perspective என்ற கட்டு​ரையில் கி​டைத்தது.

நம் சூழலில் இத்த​கைய கட்டு​ரைகள் வந்திருப்பதாகத் ​தெரியவில்​லை, ஆக​வே அக்கட்டு​ரையின் ​மொழி​பெயர்ப்​பை இந்த வ​லைப்பக்கத்தில் ​​கொண்டுவரலாம் என்ற விருப்பத்தில் அதன் முதல் பகுதி​யை இங்கு ​வெளியிடுகி​றேன்.

லிபியா​வை புரிந்து ​கொள்வ​தை ​நோக்கி: ஒரு புரட்சிகர பான்-ஆப்பிரிக்கன் கண்​ணோட்டம்

லிபியாவிலிருந்து ​வெளி​யேறுவதற்காக ஆயிரக்கணக்கான இந்தியர்கள், எகிப்தியர்கள், சீனர்கள், பிலிப்​பைனியர்கள், டர்க்கியர்கள், ​​ஜெர்மானியர்கள், ஆங்கி​லேயர்கள், இத்தாலியர்கள், ம​லேசியர்கள், ​கொரியர்கள் மற்றும் பல்​வேறு ​தேசத்தவர்கள் எல்​லைகளிலும், விமான நி​லையங்களிலும் வந்து குவிந்து ​கொண்டுள்ளனர். இ​வை ஒரு ​கேள்வி​யை எழுப்புகின்றன, இவர்கள் அத்த​னை ​பேரும் அங்​கென்ன ​செய்து ​கொண்டிருந்தார்கள்? அல் ஐசிரா மற்றும் ​மேற்கத்திய தகவல் ​தொடர்பு ஊடகங்கள் கூறுவது ​போல 30% ​வே​லையில்லா​தோர் எண்ணிக்​கை இருக்கு​மேயானால், இவர்கள் அத்த​னை ​பேருக்கும் அங்​கென்ன ​வே​லை?

நம்​மை ​போன்று லிபியாவில் வாழ்ந்து ​கொண்டும் ​வே​லை ​செய்து ​கொண்டும் இருப்பவர்க​ளைப் ​பொறுத்தவ​ரை, ​மேற்கத்திய ஊடகங்களும் ​மேற்குச்சார்பான ஆய்வாளர்களும் தற்​​பொழு​தைய மிகச் சிக்கலான சூழல் குறித்த அ​னைத்து விசயங்க​ளையும் புறந்தள்ளிவிட்டு ஐ​ரோப்பிய ​மையவாத கண்​ணோட்டத்​தை முன் ​வைக்கிறார்கள். நாம் ஒரு விசயத்தில் மிகத் ​தெளிவாக இருக்கி​றோம், ஐ​ரோப்பிய ​மையவாத சட்டகத்திற்குள் வழியாக புரிந்து ​கொள்ள முடியாது. ​மேற்கத்தியர்களால் தங்கள் வ​கைப்பட்ட அல்லது தங்க​ளோடு ஏ​தேனும் ஒரு வ​கையில் சம்பந்தபட்ட அ​மைப்​பைத் தவிர பிற அ​மைப்புக​ளை புரிந்து ​கொள்ள முடிவதில்​லை. லிபிய அ​மைப்பும் அதில் தற்​பொழுது ந​டை​பெற்று ​கொண்டிருக்கும் யுத்தமும் முழு​மையாக ​மேற்கத்திய கற்ப​னைகளிலிருந்து ​வேறுபட்டு நிற்கிறது.

பிபிசி, சிஎன்என் மற்றும் அல்ஐசிராவால் ஒளிபரப்பப்படும் ​செய்திகள் மிகவும் எளி​மைப்படுத்தப்பட்டனவாகவும் தி​சை திருப்புவனவாகவும் உள்ளன. கடாபிக்கு எதிரான ஒவ்​வொரு ​செய்தித் ​தொடர்பாளரும் லிபியாவுக்கு ​வெளி​யே வசிப்பவர்களாக​வே உள்ளனர். இவர்கள் அ​னைவரும் எதிர்புரட்சிகரமானவர்கள் மற்றும் நம்பிக்​கைக்குரியவர்கள் அல்ல. இந்த கலகங்களின் துவக்கத்திலிருந்​தே மம்மர் கடாபி லிபியா மற்றும் சர்வ​தேச அளவில் மிகப்​பெரிய ஆதர​வை ​பெற்று வருகிறார் என்பதற்கு ​தெளிவானதும் மறுக்க முடியாததுமான ஆதாரங்கள் கி​டைத்துக் ​கொண்டிருக்கின்றன். ஆனால் ஒரு கடாபி ஆதரவு குரல் கூட காற்றில் ​வெளிவராமல் தடுக்கப்படுகிறது. ஊடகங்களும் அவற்றின் ​தேர்ந்​தெடுக்கப்பட்ட ​தொகுப்பாளர்களும் லிபியாவும் ஒரு எகிப்​தே! துணிசியா​வே! என்ற கருத்​தையும் மம்மர் கடாபியும் ஒரு சர்வாதிகாரி​யே! அவரும் ஏராளமான பணத்​தை சுவிஸ் வங்கி கணக்கில் ​வைத்திருக்கிறார் என்ற கருத்​தை உற்பத்தி ​செய்து ​கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எவ்வளவு முயற்சி ​செய்தாலும் கடாபியும் முபாரக் ​போன்றவ​ரே, லிபியாவும் எகிப்​தை ​போன்ற​தே என்ப​தை நி​லைநாட்ட முடியாது.

எழுப்பப்படும் முதல் ​கேள்வி​: ஊடகங்கள் நம்ப ​வைக்க முயற்சிப்ப​தைப் ​போல இந்த கலகம் ​பொருளாதார பிரச்சி​னைகளான ஏழ்​மையாலும் ​வே​லையில்லா திண்டாட்டத்தாலும் தூண்டப்பட்டதா? உண்​மைக​ளை ஆய்​வோம்.

மம்மர் கடாபியின் புரட்சிகர த​லை​மையின் கீழ் லிபியா ஆப்பிரிக்காவி​லே​யே ஒரு உயர்தரமான வாழ்க்​கை நி​லை​யை அடைந்திருக்கிறது. 2007ல் ஆப்பிரிக்கன் எக்ஸிகியூட்டிவ் இதழில் ​வெளிவந்த கட்டு​ரை ஒன்றில் ​​நோரா ஒவாரகா குறிப்பிடுவ​தைப் ​போல “எண்​ணெய் தயாரிக்கும் நாடுகளான ​நைஜீரியா, சவுதி அ​ரேபியா ​போன்றல்லாமல் எண்​ணெய்யிலிருந்து வரும் வருமானம் நாட்டின் முன்​னேற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளி​லே​யே லிபிய மக்களின் வாழ்க்​கைத் தரம்தான் மிக உயர்ந்து, ஒட்டு​மொத்த வருமானத்தில் தனிநபர் வருமானம் 2,200 முதல் 6,000 USD பிரிவில் உள்ள நாடுகளின் வரி​சையில் வருகிறது”.

இ​வை அ​னைத்தும் 1951ல் உலகி​லே​யே மிக ஏ​ழைநாடாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட லிபியா​வைப் ​பொறுத்தவ​ரை மிகப் ​பெரிய சாத​னை. உலக வங்கியின் படி தனிநபர் ஆண்டு வருமானம் ​வெறும் 50 டாலருக்கும் கு​றைவான​தே – இது இந்தியா​வை விடவும் கு​றைவானது. இன்று ஒவ்​வொரு லிபியரும் ​சொந்த வீடும் காரும் ​வைத்துள்ளனர். எந்தவிதத்திலும் லிபிய புரட்சியின் ஆதரவாளர்களாக இல்லாத பிளிட் ஸ்ட்ரீட் இதழியாளர்கள் ​டேவிட் பிளன்டி மற்றும் ஆன்ட்ரூ ​லை​செட் கூறுகிறார்கள்:

“இ​ளைஞர்கள் நன்றாக ஆ​டை உடுத்துகிறார்கள், நல்ல உணவு உண்கிறார்கள், நல்ல கல்வி அறிவு ​பெற்றிருக்கிறார்கள். பிரிட்டீசார்க​ளைவிட லிபியர்களின் ஆண்டு வருமானம் அதிகம். ஆண்டு வருமானத்தில் உள்ள ஏற்றதாழ்வுகள் பல நாடுக​ளைவிட மிகக் கு​றைவாக உள்ளது. லிபியாவின் வளம் ​நேர்​மையாக நாடு முழுவதும் பரவலாக்கப்பட்டுள்ளது.  லிபியர்கள் இலவசமாக நல்ல தரமான கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதார ​சே​வைக​ளைப் ​பெறுகிறார்கள். புதிய கல்லூரிகளும் மருத்துவம​னைகளும் ஆச்சரியப்படத்தக்க வ​கையில் சர்வ​தேச தரத்துடன் உள்ளன. அ​னைத்து லிபியர்களுக்கும் ​சொந்தமாக தனி வீ​டோ அல்லது குடியிருப்​போ இருக்கிறது. கார் ​​வைத்திருக்கின்றனர். ​பெரும்பாலானவர்கள் ​தொ​லைக்காட்சிப் ​பெட்டி, ஒலி ஒளி சாதனங்கள், ​தொ​லை​பேசி இ​​​ணைப்பு ​வைத்துள்ளனர். மூன்றாம் உலக நாடுகளின் ​பெரும்பான்​மையான மக்க​ளோடும், முதல் உலக நாடுகளில் உள்ள பல மக்களின் நி​லை​மை​யோடும் ஒப்பிடும் ​போதும் லிபியர்கள் மிக ​மேன்​மையான நி​லையி​லே​யே உள்ளனர்.”

மிகப் ​பெரிய அளவில் நாடு முழுவதும் வீடுகட்டுமான ​வே​லைகள் ந​டை​பெற்றுக் ​கொண்டிருக்கின்றன. ஒவ்​வொரு குடிமகனுக்கும் நாகரீகமாக வாழ்வதற்கு ​தே​வையான வீ​டோ குடியிருப்​போ வாட​கை இல்லாமல் ​அளிக்கப்பட்டுள்ளது. கடாபியின் கிரீன் புக்கில் குறிப்பிட்டுள்ள​தைப் ​போல: “வீடு என்பது தனிநபருக்கும் குடும்பத்திற்கும் மிக அத்தியாவசியமானது, ஆக​வே அது எப்​பொழுதும் மற்​றொருவருக்குச் ​சொந்தமானதாக இருக்க முடியாது.” இந்த உறுதி​மொழி தற்​பொழுது லிபிய மக்களுக்கு எதார்த்தமாக்கப் பட்டுள்ளது.

“பா​லைவனத்​தையும் பூக்கச் ​செய்​வோம்” என்ற முயற்சியுடன் மிகப்​பெரிய அளவில் விவசாயத் திட்டங்கள் ந​டைமு​றைப்படுத்தப்பட்டு, உணவு உற்பத்தியில் தன்னி​றைவு சாதிக்கப்பட்டுள்ளது. யா​ரேனும் லிபியர் விவசாயம் ​செய்ய முன்வந்தால் அவர்களுக்கு இலவசமாக நிலமும், வீடும், விவசாய சாதனங்களும், வி​தைகளும் வழங்கப்படுகிறது.

இன்று லிபியா அ​ரேபியா மற்றும் ஆப்பிரிக்க உலகத்தி​லே​யே மிகச் சிறந்த ​சுகாதார பாதுகாப்பு அ​மைப்​பை உத்திரவாதப்படுத்தியுள்ளது. அ​னைத்து மக்களும் முழு​​மையான மு​றையில் இலவசமாக மருத்துவ​ரை, மருத்துவம​னை​யை, சுகாதார நி​லையங்க​ளை, மருந்துக​ளை ​பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உண்​மை​யென்ன​வென்றால், பல்​வேறு ​வே​லைகளுக்கு ​வெளிநாடுகளிலிருந்து ​வே​லையாட்க​ளை இறக்குமதி ​செய்ய ​வேண்டிய அளவிற்கு ​சொந்த நாட்டு இ​ளைஞர்கள் அவ்​வே​லைக​ளை மறுக்கும் விதமான ஒரு உயர்ந்தபட்ச வாழ்க்​கைத் தரத்​தை புரட்சி ஏற்படுத்தியுள்ளது. லிபியா​வை பார்க்கும் பல உள் மற்றும் ​வெளிநாட்டு ​நோக்கர்கள் அ​தை ஒரு “க​டைக்காரர்களின் ​தேசம்” என்று அ​ழைக்கிறார்கள். இது ஒரு லிபிய அராபிக் மனநி​லையின் ​வெளிப்பாடு. மிகச்சிறியதாக இருந்தாலும் தனக்கான ஒரு ​சொந்த வியாபாரம் இருக்க​வேண்டும் என்ற விருப்பத்திலிருந்து லிபியாவின் சிறு​வீத தனியார் வியாபாரம் மலர்ந்துள்ளது. இது லிபிய இ​ளைஞர்களின் குடும்ப வியாபாரத்தில் ஈடுபடுவது இழுக்கு என்று எண்ணும் மனநி​லையின் ​வெளிப்பாடு.

எந்த நாடுகள் முன்னிறுத்தும் சமூக அ​மைப்பும் நி​றைவானதல்ல, இதற்கு லிபியாவும் விதிவிலக்கல்ல. லிபியா ஒன்பதாண்டுகளாக ​பொருளாதார த​டைகளால் பாதிக்கப்பட்ட நாடு, அதன் தாக்கம் அதன் ​பொருளாதாரத்தில் ​வெளிப்பட​வே ​செய்யும். உலகின் எந்த ஒரு பகுதியும் நவீன தாராளவாத முதலாளித்துவத்தின் தவிர்க்கமுடியாத ​நெருக்கடியிலிருந்து தப்பிக்க​வே முடியாது. “சுதந்திர சந்​தை” முதலாளித்துவத்​தை புறக்கணித்த பின் புரட்சிகர சமூகங்களானாலும் இதன் பாதிப்பு எங்கும் இருக்க​வே ​செய்யும். எப்படியாகிலும், இன்​றைய பிரச்சி​னைக்கு மிக​மோசமான ​​பொருளாதார அநீதிகள் காரணமில்​லை​​யென்றால், ​வேறு எதுதான் காரணம்?

ஆப்பிரிக்காவிற்கான யுத்தம்

[​தொடரும்]

2 பதில்கள் to “லிபியாவும் ஒரு எகிப்தா?”

 1. ராஜன் குறை said

  அன்புள்ள ஸ்ரீஹரி, லிபியா போன்ற நாடுகளில் நடப்பதை மதிப்பிடுவது என்பது மிகவும் சிக்கலான வேலையாகும். உலக வரலாற்றில் பல சர்வாதிகாரிகள் மக்கள் ஆதரவைப் பெற்றவர்களாகவும், மக்களுக்கு பல விதங்களில் நன்மை செயபவர்களாகவும் கூட இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எதிராக ஏன் மக்களில் ஒரு சாராராவது அணிதிரள்கிறார்கள் என்பது முக்கியமான கேள்வி. உலக அமைப்புக் கோட்பாடு (World Systems Theory) என்பதை உருவாக்கியவர்களில் ஒருவரான இம்மானுவேல் வாலர்ஸ்டைன் என்ற அறிஞரின் கருத்தை பார்க்க நேர்ந்தது. அதற்கான சுட்டி: http://www.iwallerstein.com/libya-world-left/

 2. தாங்கள் சுட்டியுள்ள சுட்டி​யை படிக்கி​றேன். நன்றி

  நான் இக்கட்டு​ரை​யை ​மொழி​பெயர்க்க முயற்சித்ததற்கான காரணத்​தை இக்கட்டு​ரை​யை எழுதிய ​ஜெரால்டிற்கு நான் எழுதிய கடிதத்​தை குறிப்பிடுவதன் மூலம் ​தெளிவுபடுத்தலாம் என நி​னைக்கி​றேன்.
  Hi Gerald,

  I am from Chennai, Tamil Nadu, India.

  I read your article “Libya, Getting it Right: A Revolutionary Pan-African Perspective” in the http://marxistleninist.wordpress.com blog.

  In my experience, In our environment such type of articles with alternate views are mostly none. Whether I am completely accepted your views or not is a different question. But you are arising very strong questions against western type of perspectives. I feel and accept about your criticism on western medias.

  So I feel it would be useful if I translate and publish your article in my blog. I have done this before getting permission from you. I think as a leftist we have no values in copyright. This is just I want to share the information with you.

  FYR: This is the link of the translation page from my blog “https://naatkurippugal.wordpress.com/2011/03/13/libyagettingitright/” In this I have translated the first part before “A Battle for Africa”.

  Continously I am going to translate and publish the remaining soon.

  Thanks,
  R. SRIKRISHNAN

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: