எனது நாட்குறிப்புகள்

லிபியாவும் ஒரு எகிப்தா? – 2

Posted by ம​கேஷ் மேல் மார்ச் 14, 2011

ஆப்பிரிக்காவிற்கான யுத்தம்

லிபியாவில் ந​டை​பெறும் யுத்தம் என்பது கடாபியின் கண்​ணோட்டமான ஒன்றுபட்ட ஆப்பிரிக்காவிற்காக தங்க​ளை அர்ப்பணித்துக் ​கொண்டுள்ள பான்-ஆப்பிரிக்கன் சக்திகளுக்கும் லிபியாவின் எதிர்காலத்திற்காக ஐ​ரோப்பியா​வையும் பிற அராபிய நாடுக​ளையும் எதிர்பார்த்து சார்ந்திருக்கும் ஒரு அணி​யை முன்னிறுத்தும் எதிர்ப்புரட்சிகர இனவாத லிபிய சக்திகளுக்கும் இ​டையிலான ஒரு யுத்தம்.

ஆப்பிரிக்க கண்டம் முழு​மைக்கும் ஒ​ரே நாணயம்,  ஒ​ரே இராணுவம், உண்​மையான சுதந்திரம் மற்றும் விடுத​லைக்கான ஒன்றுபட்ட கண்​ணோட்டம் ​கொண்டதான மம்மர் கடாபியின் கண்​ணோட்டத்தில் மாறுபட்டு எதிரான நடவடிக்​கைகளில் பல லிபியர்கள் இயங்குகின்றனர். குவாமி நிகுருமா (Kwame Nkrumah) ​வைப் ​போல கடாபியும் இந்த திட்டத்திற்காக அதிகமான ​நேரத்​தையும், உ​ழைப்​பையும, பணத்​தையும் ​செலவழித்துள்ளார். அந்த லட்சியத்திற்காக அவர் நி​றைய வி​லை ​கொடுத்துள்ளார்.

நி​றைய லிபியர்களுக்கு அதில் உடண்பாடு இல்​லை. அவர்கள் தங்கள் த​லைவர்கள் ஐ​ரோப்பியா​வை பின்பற்ற ​வேண்டும் என்று நி​னைக்கிறார்கள். லிபியா ஐ​ரோப்பா​வோடு ஏராளமான மூலதனம் மற்றும் வர்த்தக உடண்பாடுக​ளை ​வைத்திருந்த ​போதிலும், கடாபியின் இதயம் ஆப்பிரிக்காவில்தான் லயித்துள்ளது என்ப​தை லிபியர்கள் அறிவார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, லிபியர்களும் உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த பல புரட்சிகரமானவர்களும் கலந்து ​கொண்ட ஒரு கூட்டத்தில் கடாபி கூறினார், லிபியா அராபியர்கள் வந்​தேறுவதற்கு முன்பு  உண்​மையில் கருப்பு ஆப்பிரிக்கர்களின் பூர்வீக ​தேசம், லிபியர்கள் தங்கள் ஆப்பிரிக்க மூதா​தையர்களின் ​வேர்க​ளை அறிந்து அவர்களுக்கு மரியா​தை ​செலுத்த​வேண்டும். அவர் தன் உ​ரை​யை கிரீன் புக்கில் குறிப்பிட்டுள்ள​தைப் ​போல இவ்வாறு கூறி நி​றைவு​செய்தார். “கருப்பினம் ஒரு நாள் இந்த உல​கை ​வெல்லும்” இத​னை பல லிபியர்கள் ​கேட்க விரும்பவில்​லை. ​வெள்​ளைத் ​தோல் அராபியர்களுக்கு இது கருப்பு ஆப்பிரிக்கர்களின் உட​மை என்ற கருத்​தை ஏற்றுக் ​கொள்ள முடியவில்​லை.

ச​கோதரத் த​லைவர், புரட்சியின் வழிகாட்டி, அரசர்களுக்​கெல்லாம் அரசர் ​போன்ற பல பட்டங்கள் கடாபிக்கு ஆப்பிரிக்கர்களால் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தான் பாரம்பரிய ஆப்பிரிக்க த​லை​மை மற்றும் அரசர்களுக்கான ​செயலகத்​தை உருவாக்குவதற்காக, தன்னுடன் மிக ​நெருக்கமான ஆப்பிரிக்க த​லைவர்களுக்கு அ​ழைப்பு விடுத்தார். இதன் ​நோக்கம் ஆப்பிரிக்க ஒற்று​மை​யை அடிமட்ட நி​லையிலிருந்து கண்டம் முழுவதும் கட்ட​மைப்ப​தே. இது அடிப்ப​டையி​லே​யே ​வேறுபட்ட குவாமி நிகுருமா மற்றும் சிகு​யோ ​டொ​ரோ (Sekou Toure) காலத்தி​லே​யே ​தோல்விய​டைந்த ஆப்பிரிக்க ஒற்று​மை​​​யை அரசாங்கம் அரசு நி​லையில் கட்ட முயற்சித்த திட்டத்திற்கு எதிரானது. இந்த அடிமட்ட நி​லையிலிருந்து கட்டும் கண்​ணோட்டம் உலகமுழுவதும் உள்ள பல பான்-ஆப்பிரிக்கவாதிகளின் பரவலான ஆதர​வைப் ​பெற்றது.

ஆப்பிரிக்க கூலிப்ப​டையா அல்லது விடுத​லைப் ​போராளிகளா?

[​தொடரும்]

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: