எனது நாட்குறிப்புகள்

லிபியாவும் ஒரு எகிப்தா? – 3

Posted by ம​கேஷ் மேல் மார்ச் 14, 2011

ஆப்பிரிக்க கூலிப்ப​டையா அல்லது விடுத​லைப் ​போராளிகளா?

கடந்த வாரம், மீடியாக்களும் சில லிபியன் குடிமக்களும் ​தேரந்​தெடுத்து “ஆப்பிரிக்க கூலிப்ப​டையினர்” என்ற பதத்​தை மீண்டும் மீண்டும் பல மு​றை குறிப்பிட்டார்கள். ஒரு ​தொகுப்பாளர் குறிப்பிட்ட​தைப் ​போல, அவர்கள் “விஷ​மேற்றிய ​வெறுப்புடன் ஆப்பிரிக்கன் என்ற வார்த்​தை​யை துப்பினார்கள்”.

கடாபி ஆதரவு சக்திக​ளை புறக்கணிக்கும் ஒ​ரே ​நோக்கத்​தோடு அது குறித்து எந்த ஆய்​வோ புரிந்து ​கொள்ள​வோ ஆன முயற்சியின்றி ஊடகங்கள் இராணுவ உ​டையில் கடாபி ஆதரவு லிபிய சக்திகளுடன் இ​ணைந்து ​போராடிக் ​கொண்டிருந்த பல ஆப்பிரிக்கர்க​ளை கூலிப்ப​டையினர் என ஊகித்துக் ​கொண்டது. எப்படி இருந்தாலும், சில டாலர்களுக்காக கூலிப்ப​டையினராக ஜமாகிரியா​வையும் மம்மர் கடாபி​யை பாதுகாக்கிறார்கள் என்ற கூற்றின் அடிப்ப​டை முழுவதும் மிகப் ​பொதுவான கருப்பு ஆப்பிரிக்கர்கள் பற்றிய இனவாத மற்றும் அவமதிப்பு கண்​ணோட்டங்களிலிருந்​தே ஊகிக்கப்படுகிறது.

எதார்த்தத்தில் உண்​மை​யென்ன​வென்றால் உலகம் முழுவதும் ந​டை​பெற்றுக் ​கொண்டிருக்கும் ஆப்பிரிக்காவின் எழுச்சிக்கான ​போராட்டத்திற்கு மம்மர் கடாபியின் மதிப்பிடற்கரிய பங்களிப்புகளுக்காக​வே ஆப்பிரிக்காவிலும் ஆப்பிரிக்கர்கள் வாழும் இடங்களி​லெல்லாம் உள்ள பல மக்களாலும் அவர் ஆதரிக்கவும் மதிக்கப்படவும் ​செய்கிறார்.

கடந்த இருபது ஆண்டுகளாக, ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் கல்வி, ​வே​லை மற்றும் இராணுவ பயிற்சி அளிக்கப்பட்டுள்ளனர் – பலர் விடுத​லை இயக்கங்களிலிருந்து வந்துள்ளனர். இவற்றின் வி​ளைவாக ஆப்பிரிக்கா மற்றும் உலகம் முழுவதும் லிபிய ஆதரவு விடுத​லை இயக்கங்கள் மற்றும் சர்வ​தேச ப​டையணிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த ப​டையணிகள் தங்க​ளை லிபிய புரட்சியின் ஒரு பகுதியாக பார்க்கிறார்கள், எல்​லைக்குள்ளிலிருந்து ​வெளியிலிருந்தும் புரட்சிக்கு எதிரான தாக்குதல்க​ளை தடுத்து நிறுத்த ​வேண்டிய​தை தங்கள் கட​மையாக உணர்கின்றனர்.

இந்த ​போராடும் ஆப்பிரிக்கர்கள் ​தே​வைப்பட்டால் தங்கள் உயி​ரையும் ​கொடுத்து கடாபி​யையும் லிபியப் புரட்சி​யையும் பாதுகாக்க் நி​னைக்கிறார்கள். இது ஸ்​பெயினின் பாசிச பிராங்​கோ சக்திகளுக்கு எதிராக புரட்சிகர சக்திகளுக்கு து​ணையாக வந்த சர்வ​தேச ப​டையணிக​ளை ​போனறதில்​லையா.

மெலியான் அரசியல் ஆய்வாளர், ஆடம் தியாம், குறிப்பிடுவ​தைப் ​போல “லிபிய புரட்சியால் நிர்மானிக்கப்பட்ட இஸ்லாமிக் ​லெஜனில் பதிவு ​செய்து ​கொண்ட ஆயிரக்கணக்கான ​டெளரக்ஸ் (Tuaregs) லிபியாவில் தான் தங்கியுள்ளனர், அவர்கள் லிபிய பாதுகாப்பு ப​டையில் தங்க​ளை பதிவு ​செய்து​கொண்டுள்ளனர்.

ஆப்பிரிக்காவிலிருந்து குடி​யேறியவர்கள் மீதான தாக்குதல்

[​தொடரும்]

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: