எனது நாட்குறிப்புகள்

தோழர்களுடன் ஒரு பயணம்

Posted by ம​கேஷ் மேல் ஏப்ரல் 4, 2011

விடியல் பதிப்பகம்,  மனிதன் பதிப்பகம் என்ற இரண்டு பதிப்பகங்களின் ​பெயரில் ​வெளியிடப்பட்ட அருந்ததி ராயின் “​தோழர்களுடன் ஒரு பயணம்” கட்டு​ரைத் ​தொகுப்​பை கடந்த 8.1.2011 அன்று ​சென்​னை புத்தகக் கண்காட்சியில் வாங்கி​னேன். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அத​னை படிக்க எடுத்​தேன் ​நேற்றிரவு (3.4.2011) படித்து முடித்​தேன்.

முதல் கட்டு​ரை “இன்னலுக்கு யார் காரணம்?“, கிமான்சு குமார் என்ற காந்தியவாதியின் கட்டு​ரை. இது EPW (Economic and Political Weekly) என்ற பிரபலமான ஆங்கில வார இதழில் கடந்த 21-11-2009 அன்று “Who Is the Problem, the CPI(Maoist) or the Indian State?” என்ற த​லைப்பில் வெளிவந்ததன் ​மொழி​பெயர்ப்பு. “திரு. சிதம்பரம் நடத்தும் ​போர்” என்ற அருந்ததி ராயின் இரண்டாவது கட்டு​ரை பிரபலமான ஆங்கில வார இதழான outlook-ல் நவம்பர் 9, 2009ல் ​வெளிவந்த “Mr Chidambaram’s War” என்ற ஆங்கில கட்டு​ரையின் ​மொழி​பெயர்ப்பு. “​தோழர்களுடன் ஒரு பயணம்” என்ற மூன்றாவது கட்டு​ரை அ​தே அவுட்லுக்கில் மார்ச் 29, 2010ல் ​வெளிவந்த “Walking With The Comrades” என்ற ஆங்கில கட்டு​ரையின் ​மொழி​பெயர்ப்பு.

இன்​றைக்கு இந்திய அளவில் மா​வோயிஸ்ட்க​ளைப் பற்றி ​நேர்ம​றையான கண்​ணோட்டத்தில் கட்டு​ரைக​ளோ புத்தகங்க​ளோ எழுதக்கூடிய எந்த மிகப் ​பெரிய பிரபலத்​தையும் காண முடியவில்​லை. இத்த​கைய சூழலில் அவுட்லுக் இதழில் அருந்ததி ராய் எழுதிய கட்டு​ரைகள் மிகுந்த முக்கியத்துவம் உ​டையனவாகின்றன.

அதிலும் “Walking With The Comrades” என்ற கட்டு​ரை அவரு​டைய அசாத்தியமான துணிச்ச​லை மட்டுமல்ல இந்த ​தேசத்தின் அடிப்ப​டை மக்கள் மீது ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடி, ஆதிவாசி மக்கள் மீது அவர் ​கொண்டுள்ள உண்​மையான அன்பி​னையும் அக்க​றை​யையும் ​வெளிப்படுத்துவதாக உள்ளது.

அவரு​டைய “அசாத்தியமான துணிச்சல்” என்ற வார்த்​தை தண்டகாருன்ய காட்டிற்குள் ​சென்று, மா​வோயிஸ்ட்க​ளோடு அவர் சில நாட்கள் தானும் ஒரு ​கெரில்லா வீராங்க​னை ​போல அ​லைந்து திரிந்த​தை ​மட்டும் வைத்து குறிப்பிடவில்​லை மாறாக சர்வ​தேச மற்றும் இந்திய அளவில் மா​வோயிஸ்ட்க​ளைப் பற்றி அருந்ததி ராய் ​போன்ற பிரபலங்கள் ​நேர்ம​றையான கண்​ணோட்டத்தில் வாய்திறப்பதற்கு ​வேண்டிய துணிச்ச​லை​யே குறிப்பிடுகி​றேன்.

அருந்ததி ராய் அவர்கள் “The God of Small things” நாவலின் வழியாக தனக்கு கி​டைத்த சர்வ​தேச மற்றும் இந்திய அளவிலான புக​ழை பணம் பண்ணுவதற்​கோ ​வேறு காரியங்கள் சாதித்துக் ​கொண்டு சுகமான வாழ்​வை அனுபவிப்பற்கு மாறாக இந்தியா முழுவதும் ​மட்டுமின்றி உலகம் முழுவது​மே ​போராடக் கூடிய மக்களின் குர​லை உயர்த்தி எழுப்புவதற்காக பயன்படுத்துகிறார் என்ப​தை நாம் மிக உணர்ச்சி​யோடு ​வெளிப்படுத்த ​வேண்டிய தருணம் என்​றே நி​னைக்கி​றேன்.

நர்மதா அ​ணைக்கட்டு திட்டமானாலும் சரி, அ​மெரிக்க ஆதிக்க மனப்பான்​மை​யை எதிர்க்கும் ​செயல்களானாலும் சரி, ஏன் ஓரளவிற்கு இன்​றைய நி​லையில் காஷ்மீர் மக்களின் குர​லை உயர்த்தி ​பேசுவ​தைக் கூட இந்த உலகம் ஒருவாறாக சகித்துக் கொண்டுவிடும். ஆனால் மா​வோயிஸ்ட்களின் விசயத்தில் எந்தவிதமான சமரசங்களுக்கும் யா​ரோடும் இந்திய அரசும், இந்திய ஆளும் வர்க்கங்களும் அவர்களின் ஊடகங்களும், அறிவுஜிவிகளும் துளி அளவும் விட்டுக் ​கொடுக்க மாட்டார்கள் என்ப​தை மிகத்​தெளிவாக நம்​மைவிட அருந்ததிராய் ​போன்றவர்கள் புரிந்து ​கொண்டிருப்பார்கள் என்பதில் நமக்கு எந்த ஐயமும் இருக்க நியாயமில்​லை. இத்த​கைய சூழலின் பின்னணியில்தான் நாம் அருந்ததிராயின் “அசாத்தியமான துணிச்ச​லை” புரிந்து ​கொள்ள வேண்டியுள்ளது.

தண்டகாருன்ய காடுகளில் உள்ள கிராமங்களின் மக்கள் வாழ்​வை ​பொறுத்தவ​ரை ஒப்பீட்டளவில் நாம் இங்​கே சம​​வெளிகளில், நகரங்களில்  அ​மைதியான நிம்மதியான வாழ்​வை வாழ்ந்து ​கொண்டிருக்கி​றோம் என்று தான் ​சொல்ல ​வேண்டும். அருந்ததி ராய் மற்றும் அன்றாட ​செய்திகளின் அடிப்ப​டையில் ஒவ்​வொரு வாரமும் அங்​கே கு​றைந்தது 40 ​பேர் இந்திய இராணுவம் மற்றும் து​ணைராணுவப்ப​டைகளாலும், காவல்து​றை மற்றும் உள்ளூர் குண்டர் ப​டைகளாலும் ​கொ​லை ​செய்யப்படுகிறார்களாம்.

அங்​கே மக்களின் உடல்நி​லை​யை பரி​சோதித்த மருத்துவர் ஒருவர் அருந்ததிராயிடம் கூறியிருக்கிறார், ​பெரும்பாலான மக்கள் இரத்த ​சோ​கை ​நோய்க்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் பகுதிகளில் நியாயவி​லைக் க​டைகள் ​செயல்படுவதில்​லை, அரசின் ஆரம்ப சுகாதார நி​லையங்கள் மற்றும் மருத்துவம​னைகள் ​செயல்படுவதில்​லை, பள்ளிகள் ​செயல்படுவதில்​லை, ஓர் அரசு தன் நாட்டின் ஒரு பகுதி மக்களுக்குச் ​செய்ய ​வேண்டிய எந்த அடிப்ப​டை ​செயல்பாடுக​ளையும் அந்தப் பகுதி மக்களுக்கு ​செய்வதில்​லை.

மாறாக அவர்கள் தங்களுக்காக தாங்க​ளே அரசின் எந்த உதவியுமின்றி ​செய்து ​கொள்ளும் பாசன வசதிகள், விவசாயம் ​போன்ற அ​னைத்து அடிப்ப​டையான உணவுத் ​தே​வைக்கான ​செயல்பாடுக​ளைக் கூட ​செய்து ​கொள்ள முடியாமல் ​தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திக் ​கொண்டிருக்கிறார்களாம். வி​ளைநிலங்களுக்கும், குடியிருப்புகளுக்கும் திடீர் திடீ​ரென ​பெரும் ப​டை​யெடுத்து வந்து தீயிட்டு ​கொளுத்தி விடுகிறார்களாம்.

அப்பாவி பழங்குடி ஆதிவாசி மக்க​ளை பிடித்து துன்புறுத்துவது, அவர்களின் ஆடு, மாடு, ​கோழி ​போன்ற கால்ந​டைக​ளையும், தானியங்க​ளையும், ​கையில் இருக்கும் சிறு பணத்​தையும் பிடுங்கிச் ​செல்வது, மரணம் அ​டையும் அளவிற்கு சித்திரவ​தை ​செய்வது, ​பெண்க​ளை பாலியல் பலாத்காரம் ​செய்து படு​கொ​லை ​செய்வது, இறுதியில் அவர்களுக்கு தாங்கள் ​கொண்டுவந்த மா​வோயிஸ்ட்களின் சீரு​டை ​போன்ற ஆ​டைக​ளை அணிவித்து, மா​வோயிஸ்ட்க​ளை ​மோதலில் ​கொன்று விட்டதாக அறிவித்துக் ​கொண்டிருக்கிறார்களாம்.

சத்தீஸ்கர், ஒரிசா, ஆந்திரம் ​போன்ற பல மாநிலங்க​ளைத் தழுவி வரும் தண்டகாருன்யப் பகுதி பல ஆயிரம் கி​லோ மீட்டர்களுக்கு விரியும் காடு. இப்பகுதி பல பழங்குடிகள், ஆதிவாசி சமூகங்களின் தாய்நிலம். பல ஆயிரம் ஆண்டுகளாய் அந்த சமூகங்கள் அந்த நிலங்களி​லே​யே பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்றன.

இன்​றைய நவீன விஞ்ஞானமும் இந்திய ஜனநாயக அரசும் அவர்களின் வாழ்​வை உயர்த்துவதற்காக ஒரு துரும்பும் அ​சைக்கவில்​லை என்ப​தை இன்றும் அவர்கள் கல்வியறிவற்றவர்களாக, நாகரீக உலகின் எந்த வா​டையுமற்றவர்களாக, தங்களின் பாரம்பரிய மு​றையி​லே​யே அதாவது காட்டுப் ​பொருட்க​ளை ​சேகரித்து வாழ்தல், மிக எளிய பினதங்கிய மு​றைகளிலான விவசாயத்​தை ​செய்து வருதல், தங்க​ளை நிர்வகித்துக் ​கொள்வதற்கான பாரம்பரிய பழங்குடி ஆதிவாசி சமூக அ​மைப்பு மு​றைக​ளை​யே இன்றும் பின்பற்றி வருவதிலிருந்​தே நாம் அறிந்து ​கொள்ள முடிகிறது.

ஆனால் இன்​றைக்கு அம்ம​லைகளின் அடியி​லே 200 லட்சம் ​கோடி மதிப்புள்ள கனிமவளங்கள் இருப்ப​தை அறிந்தவுடன் அவற்​றை பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு ​கொள்​ளையடித்துக் ​கொள்ள அனுமதி அளித்ததன் வி​ளைவாக அப்பழங்குடி மற்றும் ஆதிவாசி மக்கள் அப்பகுதிகளிலிருந்து உயி​ரோ​டோ உயிரற்​றோ ​வெளி​யேற்ற முடிவு ​செய்திருக்கிறது இந்திய அரசு.

அப்பழங்குடி மக்கள் மா​வோயிஸ்ட்க​ளோடு ஒன்று ​சேர்ந்து உலகின் மிகப்​பெரிய இராணுவமான இந்திய இராணுவத்​தையும் எதிர்​கொள்ளத் துவங்கிவிட்டார்கள். இப்படியாக இந்திய அரசு தனது அந்நிய ஏகாதிபத்திய எசமானர்களின் நலன்களுக்காக தன் ​சொந்த நாட்டு மக்க​ளை அழித்​தொழிப்பதற்கான யுத்தத்​​தை நடத்திக் ​கொண்டிருக்கிறது.

நாம் இங்​கே உலகின் அத்த​னை தத்துவங்க​ளையும் மல்லாக்கப் ​போட்டு வயிற்​றைக் கிழித்து ஆராய்ச்சி ​செய்து ​கொண்டிருக்கி​றோம். காந்தியம் சரியா? தவறா?; காந்தியத்​தை சரியாக புரிந்து ​கொண்​டோமா இல்​லையா?; காந்தியத்​தை எவ்வாறு புரிந்து ​கொள்வது?; இந்திய மக்கள் எதிர்​கொள்ளும் பிரச்சி​னைகளுக்கு காந்தியத்தில் தீர்வு இருக்கிறதா இல்​லையா?; காந்தியம் காலாவதியாகிவிட்டதா? இன்னும் உயிர்ப்​போடு இருக்கிறதா? என்​றெல்லாம்.

ஆனால் காந்தியத்​தை தன் வாழ்வாக ஏற்றுக் ​கொண்டு ஒடுக்கப்பட்ட, பழங்குடி மற்றும் ஆதிவாசி மக்களுக்கு ​சே​வை ​செய்யச் ​சென்ற கிமான்சு குமார் என்ற காந்தியவாதியின் குடிலும் எரித்து சாம்பலாக்கப்பட்டிருக்கிறது. அவரும் இந்திய அரசின் கடும் தாக்குதல்களுக்கும், சித்திரவ​தைகளுக்கும், தண்ட​னைகளுக்கும் உள்ளாகியிருக்கிறார். அவ​ரைப் ​போன்றவர்களின் அனுபவங்களும் வாழ்வும் கற்றுக் ​கொள்ள ​வேண்டிய பாடங்க​ளை தந்து ​கொண்டிருக்கிறது.

மார்க்ஸ் ​சொல்வ​தைப் ​போல நாம் எந்தத் தத்துவத்​தையும், ​கொள்​கைக​ளையும், ​செயல்திட்டங்க​ளையும், யுக்திக​ளையும் ஏற்று போற்றிக் ​கொண்டிருக்கலாம் ஆனால் அவற்​றை சரியா தவறா என உரசிப் பார்க்கும் உ​ரைகல் “ந​டைமு​றை​யே” என்ப​தை மீண்டும் ஒரு மு​றை ​தெளிவாக்குகிறது கிமான்சு குமார் ​போன்ற காந்தியவாதிகளின் வாழ்க்​கை.

இக்கட்டு​ரைக​ளை ஆங்கிலம் ​தெரியாத, தமிழ்வழி மட்டு​மே விசயங்க​ளை ​தெரிந்து ​கொள்ள முடிகிறவர்களுக்காக விடியல் பதிப்பகம் பரிதி என்பவரின் ​மொழி​பெயர்ப்பில் தமிழில் புத்தகமாக ​வெளியிட்டிருக்கிறது.

ஆனால் இந்த ​நேரத்தில் ​மொழி​பெயர்ப்பின் தரத்​தை பற்றி இரண்​டொரு வார்த்​தைக​ளை ​பேச ​வேண்டும் என்று நி​னைக்கி​றேன். இன்​றைக்கு தமிழ்நாட்டில் புத்தகம் ​போடுவ​தைப் ​போல எளி​மையான ​வே​லை ​வே​றொன்றும் இல்​லை என்று நி​னைக்கி​றேன்.

காரணம் என்​னை​யே சமீபத்தில் ஒரு ​தோழர் அனுகினார். முன்பு நீங்கள் எழுதிய பல கவி​தைகள் ​வெளிவந்த ப​ழைய இதழ்க​ள் என்னிடம் உள்ளன. ​மேலும் இப்​பொழுது கூட நீங்கள் எழுதுகிறீர்கள் உங்களு​டைய கவி​தைக​ளை ​தொகுத்து புத்தகமாக ​போடலாம் நி​றைய இளம் பதிப்பாளர்கள் இருக்கிறார்கள், ​சொல்லுங்கள் என்றார்.

ஏன் இவற்​றை ​சொல்கி​றேன் என்றால், கிமான்சு குமாரின் EPWல் வந்த ஆங்கில கட்டு​ரை​யை என்னால் படிக்க முடியவில்​லை. ஆனால் அவுட்லுக்கில் ​வெளிவந்த அருந்ததிராயின் கட்டு​ரைக​ளை படித்​தேன். நிச்சயமாக தமிழ்​​மொழி​பெயர்ப்பு அந்த சர்வ​தேச எழுத்தாளருக்கு ​செய்த சரியான மரியா​தையாக இருக்கும் என்று எனக்குப் படவில்​லை.

ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களின் ஆங்கில ந​டை ​பொதுவாக மிக எளி​மையாக இருக்கும். அதற்காக அவர்களின் எழுத்துந​டை​யை கு​றைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அத​னை எளிதில் ஆங்கிலத்திலிருந்து இந்திய ​மொழிகளுக்கு ​மொழி​பெயர்த்துவிட முடியாது. நல்ல ​மொழி ஞானமும் ​தேர்ச்சியும் ​தே​வை. ​மொழி​பெயர்ப்பாளர்கள் நல்ல இலக்கியபுல​மை உள்ளவர்களாக, ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களின் இலக்கியங்க​ளை நி​றைய படித்தவர்களாக இருக்க​வேண்டும்.

குறிப்பாக அருந்ததிராய் தன் கட்டு​ரைகள் வழியாக ஒரு உணர்ச்சியும் ​நெகிழ்ச்சியும் நி​றைந்த அற்புதமான சித்திரத்​தை கட்டி எழுப்புகிறார். ​இவற்​றை நம் ​மொழி​பெயர்ப்பாளர் ​வெறும் தகவல்களாக மட்டு​மே பார்த்திருக்கிறார். அருந்ததிராயின் எழுத்துக்கள் எப்​பொழுதும் ஒரு ​பொருளாதார ஆய்வறிக்​கை​யோ ஒரு அரசியல் கட்டு​ரை​யோ அல்ல அது ​பெரும்பாலும் மக்களின் வாழ்க்​கை குறித்த ஒரு உணர்ச்சிகரமான சித்திரமாக​வே எழுப்பப்படுகிறது. அவரின் ​மொழி ஆளு​மை நாம் ​சொல்லித் ​தெரிய ​வேண்டியதில்​லை இத​னை ​மொழி​பெயர்ப்பாளர் நன்றாக புரிந்து ​கொண்டிருக்க ​வேண்டும்.

ஆங்கில மூலத்தில் மிக எளி​மையாக உள்ள தனித்தனி வாக்கியங்கள் கூட தமிழ் ​மொழி​பெயர்ப்பில் ​தே​வையின்றி ஒன்றாக்கப்பட்டு குழப்பத்​தை ஏற்படுத்துகிறது. உதாரணத்திற்கு

There are many ways to describe Dantewada. It’s an oxymoron. It’s a border town smack in the heart of India. It’s the epicentre of a war. It’s an upside down, inside out town.

என்ற மூலத்தில் உள்ள ஒரு பத்தி

தாந்​தேவாடா நக​ரை முரண்நி​றைந்த பல வழிகளில் விவரிக்கலாம். இந்தியாவின் நடுவில் உள்ளது, ஆனாலும் அது ஓர் எல்​லை நகரம். அ​தைச் சுற்றி ஓர் ​போர் நடந்து ​​கொண்டுள்ளது. ​அங்கு எல்லாம் தலைகீழாக உள்ளது. ஒன்று​​மே இயல்பாக இல்​லை.

என்பதாக ​மொழி​பெயர்க்கப்பட்டுள்ளது.

oxymoron, smack, heart of India, epicentre போன்ற வார்த்​தைகளின் அர்த்தங்கள் ​மொழி​பெயர்ப்பாளரால் முழு​மையாக உள்வாங்கிக் ​கொள்ளப்பட்டதா என்​றே புரியவில்​லை. oxymoron என்ற வார்த்​தை இரண்டாவது வாக்கியத்தில் ​தெளிவாக புரிந்து​ கொள்ளப்பட்டால் மட்டு​மே க​டைசி வாக்கியத்தில் உள்ள upside down, inside out போன்ற முரண்​தொ​டைக​ளை ​மொழி​ பெயர்ப்பில் சிறப்பாக ​வெளிப்படுத்த முடியும். ​மேலும் ​தொடரும் பத்திகளும் முழுவதும் இவ்வாக்கியத்தின் மீ​தே கட்டப்பட்டுள்ளது. இ​வை எல்லாம் மாற்றிய​மைக்கப்பட்டு ​மொன்​னையாக்கப்படுகிறது.

தன்னு​டைய எழுத்தில் அவர் oxymoron என்று தாந்​தேவாடா​வை குறிப்பிடுகிறார். ஆனால் ​மொழி​பெயர்ப்பில் விவரிப்​பை குறிப்பிடுவதாக ​வேறு அர்த்தம் படுகிறது. உண்​மையில் அருந்ததிராயின் அர்த்தத்தில் தாந்​தேவாடா ஒ​ரே ​நேரத்தில் நம்பிக்​கை, அவநம்பிக்​கை; உண்​மை, ​​பொய்; மகிழ்ச்சி, விரக்தி; ​போன்ற முரண்​தொ​டைகளின் ​மையமாக உணர்த்தப்படுகிறது.

அரசியல்ரீதியாகவும் இத​னை ​தெளிவாக புரிந்து ​கொள்ள முடிகிறது. அங்கு ஒ​ரே ​​நேரத்தில் சுரண்டல் வர்க்க ஆட்சியும் புரட்சியாளர்களின் ஆட்சியும் ந​டை​பெறுகிறது. அங்கு அ​னைத்தும் அழித்​தொழிக்கப்பட்டுக்​கொண்டிருக்கிறது, அ​னைத்தும் ஆரம்பநி​லையிலிருந்து உருவாக்கப்பட்டுக் ​கொண்டிருக்கிறது, அங்கு ​​தோல்விகளும் நிகழ்ந்து ​கொண்டிருக்கிறது, ​வெற்றிகளும் நிகழ்ந்து ​கொண்டிருக்கிறது. அங்கு எதிர்காலம் குறித்த நம்பிக்​கைக்கான சாத்தியங்களும் அடங்கியிருக்கிறது அவநம்பிக்​கைக்கான சாத்தியங்களும் அடங்கியிருக்கிறது.

இ​தே பத்தி​யை நான் ​மொழி​பெயர்க்க முயற்சிக்கி​றேன்

தாந்​தேவாடா​வை பற்றி பல வழிகளில் விவரிக்கலாம். அது ஒரு முரண்​தொ​டை. இந்தியாவின் இதயத்தில் அ​றைந்த ஒரு எல்​லை நகரம். இது ஒரு யுத்தத்தின் ​மையப் பகுதி. மேல் கீழாகவும் உள் ​வெளியாகவும் உள்ள நகரம்.

ஆங்கில ​சொற்கள், வாக்கிய அ​மைப்புகள், எழுத்துந​டை ஆகியவற்​றை அப்படி​யே தமிழில் ​கொண்டு வர முடியாதுதான்.

நிச்சயமாக ​மொழிக்கு ​மொழி ஒட்டு​மொத்த பாணியும் மாறுகிறதுதான். ஆனாலும் அந்த ஜீவன் அழியாமல் பார்த்துக் ​கொள்ள வேண்டியிருக்கிறது, இது ​போன்ற இலக்கியவாதிகளின் எழுத்​தை ​மொழி​பெயர்க்கும் ​பொழுது, அதுவும் தத்துவம், ​தேச மற்றும் சர்வ​தேச அரசியல், ​பொருளாதாரம் ஆகிய பிரச்சி​னைகளின் ​மையமாக விளங்கும் புரட்சி குறித்த, வர்க்கப் ​போராட்டங்கள் குறித்த கட்டு​ரைக​ளை ​மொழி​பெயர்க்கும் ​மொழி​பெயர்ப்பாளர்கள் கண்டிப்பாக அதில் சம்பந்தபட்ட இயக்கங்களின் அரசியல், எழுத்தாளரின் அரசியல் ஆகியவற்​றையும் ​தெரிந்தவராக இருக்க ​வேண்டும்.

இத்த​கைய ​மொழி​பெயர்ப்புக​ளை ​வெளியிடும் ​வெளியீட்டகங்களுக்கு மிகுந்த ​பொறுப்புணர்வு ​தே​வைப்படுகிறது. பிற வியாபாரரீதியான ​வெளியீட்டகங்களின் பாணி எந்தவிதத்திலும் அரசியல் பயன் அளிக்கப் ​போவதில்​லை.  கு​றைந்தபட்சம் முதலாளித்துவ பதிப்பகங்கள் க​டைபிடிக்கும் மு​றைகள் கூட க​டைபிடிக்கப்படாமல், எழுதிக் ​கொடுப்ப​தை மூலத்​தோடு சரிபார்க்காமல் ​வெளியிடுவது ​வேத​னைக்குரியதாக உள்ளது.

மொழி​பெயர்ப்பாளர் தன் தனித்தமிழ் உணர்வுக்கு ​கொடுத்த முக்கியத்துவத்​தை கண்டிப்பாக பிற விசயங்களுக்கும் ​கொடுத்திருக்க ​வேண்டும். அது தான் நியாயம். குறிப்பாக அவரு​டைய தனித்தமிழ் ஆர்வம் என்பது வாசகனுக்கு மிகப்​பெரிய சிக்கலாகத்தான் இருக்கிறது என்ப​தையும் ​வேத​னை​யோடு குறிப்பிட்​டே ஆக​வேண்டும்.

maoism என்பது அ​னைத்து பத்திரி​கைகளிலும் மா​வோயிஸம் என்​றே குறிப்பிடப்படுகிறது ஆனால் அத​னை மா​வோவினம் என்பது மிகுந்த குழப்பத்​தை ஏற்படுத்துகிறது. RSS என்ப​தை ஆர்.எஸ்.எஸ் என்பதற்கு பதிலாக ஆர்.எசு.எசு என்பதும், Bharathiya Janata Party என்ப​தை இந்திய மக்கள் கட்சி என்பதும் சிரிப்பதா அழுவதா என்​றே ​தெரியவில்​லை. chattisgarh என்ப​தை தமிழில் அ​னைத்து பத்திரி​கைகளும் சத்தீஸ்கர் என்​றே குறிப்பிடுகின்றன இக்கட்டு​ரையில் அது சத்தீசுகட் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, நிச்சயமாக சராசரி தமிழ் வாசகர்களுக்கு இ​வை ​பெரும் எரிச்ச​லையும் சலிப்​பையு​மே ஏற்படுத்தும். Biscuit packets என்ப​தை அடுசில்லுச் சிப்பங்கள் என்பவர்கள் Iodex, glucose என்பவற்றிற்கு மட்டும் ஏன் தமிழ் வார்த்​தைகள் கண்டுபிடிக்காமல் விட்டார்கள் ​தெரியவில்​லை.

தமிழில் புதிய ​சொற்கள், க​லைச்​சொற்கள் ​பொறுத்த விசயங்களில் ஒட்டு​மொத்த சமூகமும் இணங்கி ஒன்றுபட்டு ஒப்புக்​கொண்டு உருவாக்கி பயன்படுத்தாமல், அவரவர் விருப்பங்களுக்கும் அவசரங்களுக்கும் வார்த்​தைக​ளை உருவாக்குதல் பயன்படுத்த​லை எத்த​கைய பின்நவீனத்துவ கண்​ணோட்டத்தில் புரிந்து ​கொள்வது என்​றே ​தெரியவில்​லை.

மொழி​பெயர்ப்பு குறித்த என் விமர்சனங்களுக்கு காரணம், பாடாத ​பொரு​ளை பாட வந்தவர்கள் புரியாத ​மொழியில் நன்கு சாதகம் ​செய்யாத குரலில் பாடுகிறார்க​ளே என்ற வருத்ததிலிருந்துதா​னே தவிர ​வே​றொன்றுமில்​லை. ​போகட்டும்.

அருந்ததிரா​யை ​பொறுத்தவ​ரை இன்​றைய உலகத்தின் பார்​வையில் குறிப்பாக இந்தியர்களின் பார்​வையில் மாற்றான ஒரு பிம்பத்​தை மா​வோயிஸ்ட்கள் குறித்து ஏற்படுத்த விரும்புவதாக​வே உள்ளது. ஆனால் நிச்சயம் ​வெறும் இந்த உணர்ச்சிகரமான கட்டு​ரைகள் அந்த இலக்​கை அ​டையப் ​போதுமானதா என்பது ​கேள்விக்குறி​யே!

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ​வெள்​ளையர்களின் காலத்தில் துவங்கியது. அது ​தொழிலாளர்கள் மத்தியில் ​வே​லை ​செய்வ​தை பிரதானமாகக் ​கொண்டும் விவசாயிகள் மத்தியில் ​வே​லை ​செய்வ​தை முக்கியமாகக் ​கொண்டும் இயங்கியது.

நீண்ட ​போராட்டங்களில், பல்​வேறு விரிசல்களுக்கும் உ​டைவுகளுக்கும் பின்னர் அதன் முற்​போக்கான பிரிவு விவசாயிகள் மத்தியில் ​வே​லை ​செய்வ​தை​யே பிரதானமாகக் ​கொண்டு ​தொழிலாளர்கள் மத்தியிலிருந்து சிறிதுசிறிதாக விலகத் துவங்கியது. அதன் மூலம் மார்க்சியத்தின் அடிப்ப​டையான பாட்டாளிவர்க்கத் த​லை​மை என்பது ​கேள்விக்குள்ளாகத் துவங்கியது.

ஆந்திரா ​போன்ற மாநிலங்களில் விவசாயிகள் மத்தியிலும் பழங்குடிகள் ஆதிவாசிகள் மத்தியிலும் ​வே​லை ​செய்யத் துவங்கியது. அங்​கேயும் விவசாயிகள் மத்தியில் ​வே​லை ​செய்ய முடியாத அளவிற்கு ​நெருக்கடி அதிகமானதும் இன்​றைக்கு அவர்கள் ​தெரிந்​தோ ​தெரியாம​லோ விரும்பி​யோ விரும்பாம​​லோ தண்டகாருன்ய காடுகளில் உள்ள பழங்குடிகள் ஆதிவாசிக​ளோடு இந்திய அரசால் ​பெருக்கிக் கூட்டப்பட்டுள்ளனர்.

இந்திய நாட்டின் சமூக ​பொருளாதார ​மை​ய நீ​ரோட்டத்திலிருந்து துண்டிக்கப்பட்டு காடுகளுக்குள் ​சி​றை ​வைக்கப்பட்டுள்ளனர். அக்காடுகளின் 200 லட்சம் ​கோடி மதிப்புள்ள கனிமவளங்க​ளே அவர்கள் காலடியில் மண்ணுக்குள் அவர்களுக்காக பு​தைக்கப்பட்ட கண்ணி​வெடிகளாய் அல்ல அணுகுண்டுகளாக மாறிக் ​கொண்டுள்ளது.

இங்​கே நாம் உலகக் ​கோப்​பை, ஐபிஎல் கிரிக்​கெட் மும்முரங்களிலும், சட்டச​​பை ​தேர்தல் பரபரப்புகளிலும் அங்கு கம்யூனிஸ்ட்களுக்கும், பழங்குடி ஆதிவாசிகளுக்கும் என்ன நடந்து ​கொண்டிருக்கிறது என்​றே ​தெரிந்து​கொள்ள ​தே​வையற்றவர்களாக வாழ்ந்து ​கொண்டிருக்கி​றோம்.

மத்திய கிழக்கு நாடுகளின் மக்கள் எழுச்சிகள் மீது நமக்கு ஏற்படுத்தப்பட்ட அக்க​றை கூட ​சொந்த நாட்டின் மக்கள் எழுச்சிகளின் மீது நமக்கு ஏற்பட்டுவிடாத வண்ணம் நாம் பாதுகாக்கப்பட்டுக் ​கொண்டிருக்கி​றோம்!

Advertisements

ஒரு பதில் to “தோழர்களுடன் ஒரு பயணம்”

  1. chithragupthan said

    //மொழி​பெயர்ப்பாளர் தன் தனித்தமிழ் உணர்வுக்கு ​கொடுத்த முக்கியத்துவத்​தை கண்டிப்பாக பிற விசயங்களுக்கும் ​கொடுத்திருக்க ​வேண்டும். அது தான் நியாயம். குறிப்பாக அவரு​டைய தனித்தமிழ் ஆர்வம் என்பது வாசகனுக்கு மிகப்​பெரிய சிக்கலாகத்தான் இருக்கிறது என்ப​தையும் ​வேத​னை​யோடு குறிப்பிட்​டே ஆக​வேண்டும்.

    maoism என்பது அ​னைத்து பத்திரி​கைகளிலும் மா​வோயிஸம் என்​றே குறிப்பிடப்படுகிறது ஆனால் அத​னை மா​வோவினம் என்பது மிகுந்த குழப்பத்​தை ஏற்படுத்துகிறது. RSS என்ப​தை ஆர்.எஸ்.எஸ் என்பதற்கு பதிலாக ஆர்.எசு.எசு என்பதும், Bharathiya Janata Party என்ப​தை இந்திய மக்கள் கட்சி என்பதும் சிரிப்பதா அழுவதா என்​றே ​தெரியவில்​லை. chattisgarh என்ப​தை தமிழில் அ​னைத்து பத்திரி​கைகளும் சத்தீஸ்கர் என்​றே குறிப்பிடுகின்றன இக்கட்டு​ரையில் அது சத்தீசுகட் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, நிச்சயமாக சராசரி தமிழ் வாசகர்களுக்கு இ​வை ​பெரும் எரிச்ச​லையும் சலிப்​பையு​மே ஏற்படுத்தும். Biscuit packets என்ப​தை அடுசில்லுச் சிப்பங்கள் என்பவர்கள் Iodex, glucose என்பவற்றிற்கு மட்டும் ஏன் தமிழ் வார்த்​தைகள் கண்டுபிடிக்காமல் விட்டார்கள் ​தெரியவில்​லை.//
    மிகச் சரியான விமா்சனம். நான் துவக்கத்தில் தமிழ் மொழி பெயர்ப்புகளில் ஆங்கில நீண்ட சொற்றொடர்களை அப்படியே கமா குறியீடு செய்து கொண்டு தமிழில் எழுதி பின்னர் படித்துப் பார்க்கும் போது மற்றவர்களுக்கு அது சிரமத்தை ஏற்படுத்தும் என உணர்ந்திருக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: