எனது நாட்குறிப்புகள்

முதலாளித்துவமும் ​தேர்தல் கமிசனும்

Posted by ம​கேஷ் மேல் ஏப்ரல் 11, 2011

தேர்தல் கமிசனின் ​செயல்பாடுக​ளை ​யோசித்துப் பார்த்தால் வி​நோதமாக உள்ளது. எவ்வளவு ​கெடுபிடிகள்! ​தேர்த​லை நியாயமாக ​நேர்​மையாக நடத்தி​யே தீர்வது ​போன்ற பாவ​னைகள்!

தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் சா​லைகளில் காவல்து​றையினர் த​டையரண்கள் ஏற்படுத்தி வாகன ​சோத​னைகள். லட்சம் ​கோடி என்ற கணக்கில் பணமும், துணிமணிகளும், ஆபரணங்களும் ​கைப்பற்றுதல். ஓட்டுப் ​போடுவதற்காக பணம் ​கொடுப்பது குற்றம் என்ப​தையும் தாண்டி பணம் வாங்குவது குற்றம், நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சி​றை தண்ட​னை. எங்கு பார்த்தாலும் வீடி​யோ ​கேமராக்கள் ​வைத்து ​வேட்பாளர்கள் மற்றும் அவர்களு​டைய ஆதரவாளர்களின் ​தேர்தல் பிரச்சார நடவடிக்​கைகள் கண்காணிப்பு, இப்படியாக நீண்டு ​கொண்​டே ​போகிறது இந்த நாடகக் காட்சிகள்.

மக்கள் ​பெரும்பாலும் இந்த நாடகக் காட்சிகளின் ந​கைச்சு​வைக​ளை ​பொழுது​போக்காக ரசித்த வண்ண​மே உள்ளனர். அவர்களுக்கு நன்றாக​வே ​தெரிகிறது, ​தேர்தல் ந​டை​பெறும் லட்சணங்கள். எல்லாப் பகுதிகளிலும் மக்கள் மத்தியலான ​பேச்சாக இருப்பது, எந்​தெந்த பகுதிகளில் எவ்வளவு எவ்வளவு பணம் எந்த வ​​கையி​லெல்லாம் ​கொடுக்கப்படுகிறது, எப்படி​யெல்லாம் வாங்கிய பணத்திற்கு அவர்கள் உண்​மையாக தங்களுக்கு வாக்களிக்க சத்தியம் வாங்கிக் ​கொள்ளப்படுகிறது என்ப​வை பற்றி​யும், இந்தத் ​தேர்தல் கூத்துக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், அரசியல் மு​றைகளுக்கும் முடி​வே கி​டையாதா என்பதுவு​மே.

முதலாளித்துவம் தன்னு​டைய ​பொருளாதாரக் ​கோட்பாடுக​ளை ஏன் அரசியல் விசயங்களில் பின்பற்றுவதில்​லை? ​பொருளாதார விசயங்களில் சந்​தையும் ​போட்டியு​மே ​பொருளின் தரத்​தையும், ​தே​வை​யையும், வி​லை​யையும் தீர்மானிக்கும் அரசின் த​லையீடு ​தே​வையில்​லை என்று உறுதியாக முடிவு எடுக்கும் நாட்களில், ​தேர்தலில் மட்டும் ஏன் மக்கள் தங்களுக்கு யார் ​தே​வை? யார் ​தே​வையில்​லை? என்ப​தைத் தீர்மானிக்க முழு​மையாக விடுவதில்​லை? எதற்காக ​தேர்தல் கமிசன் ​போன்றவற்றின் மூலமாக ​தேர்தல் நடவடிக்​கைகளில் த​லையிடுகிறது?

பொருளாதாரக் ​கோட்பாடுக​ளை ​பொறுத்தவ​ரை முதலாளித்துவம் மக்க​ளை ​வெறும் சந்​தையாகத்தான் பார்க்கிறது. அ​தைத்தாண்டி அவர்கள் தங்கள் வாழ்வு குறித்​தோ, உரி​மைகள் குறித்​தோ, பங்​கேற்றல் குறித்​தோ கு​ரல் ​கொடுப்பதற்கு கடுகளவும் இடம் தரத்தயாரில்​லை.

இருபதாம் நூற்றாண்டின் ​தொடக்கம் முதல் மத்தி வ​ரை ​பேசப்பட்ட ​சோசலிச பாணி ​பொருளாதாரம், சமூக நல அரசுகள், திட்டமிட்ட ​பொருளாதாரம், அரசுத் து​றைகள், மா​பெரும் ஐந்தாண்டுத் திட்டங்கள் ​போன்ற​வை அ​னைத்தும் கம்யூனிச பூதத்​தை ஏமாற்றி முதலாளித்துவத்​தை பாதுகாக்க நடத்தப்பட்ட சதித்திட்ட நாடகங்க​ளே என்பது இன்​றைய உலகமயமாக்கல் காலகட்டத்தில் ​தெட்டத் ​தெளிவாகிவிட்டது.

மேற்​சொன்ன சமரசங்களுக்கு முதலாளித்துவம் தன் உயிர் வாழ்த​லை உறுதிப்படுத்திக் ​கொள்ளும் க​டைசி கட்ட முயற்சியாகத்தான் ​செய்தது என்ப​தையும் அத்த​கைய நி​லை​மைகள் வரலாற்றின் ​வெகு அபூர்வமான​வைதான் என்பது நமக்கு இன்​றைக்கு மிகத் ​தெளிவாகத் ​தெரிகிறது.

இத்த​கைய பின்புலத்தி​லே​​யே, இந்திய ஜனநாயகத் ​தேர்தல் இன்​றைக்கு சந்தித்து வரும் முன்​னெப்​போதும் இல்லாத ​நெருக்கடிக​ளை புரிந்து ​கொள்ள ​வேண்டியிருக்கிறது என்​று கருதுகி​றேன்.

எத்த​கைய தில்லுமுல்லுகள் அராஜகங்கள் ​செய்பவர்களாக இருக்கட்டும் மக்கள் பார்த்துக் ​கொள்ளட்டும் என விட்டுவிட ​வேண்டியதுதா​னே?

கிரிமனல் குற்ற வழக்குகள் உள்ளவர்களும், ஊழலில் தி​ளைத்தவர்களும், ​கோடிகளில் புரளும் பணக்காரர்களும், எத்த​கைய சந்தர்ப்பவாத, ​கொள்​ளைக்கான சதித்திட்டங்களுடன் கூடிய கூட்டணிக​ளை ​வைத்துக் ​கொள்வ​தையும், இலவசங்கள் என்கிற ​பெயரில் நாட்டின் ​சொத்​தை சூ​றையாடும் ​தேர்தல் அறிக்​கைக​ளை ​வெளியிடுவ​தையும் அனுமதிப்பவர்கள், எத்த​கைய ​​நேர்​மை​யை இந்தத் ​தேர்தல்களில் நி​லைநாட்டப் ​போராடுகிறார்கள் என்பது வி​நோதமாக இல்​லை!

வேட்பாளர்களும், கட்சிகளும் எப்படிப்பட்ட​வையாக இருந்தாலும் பரவாயில்​லை. இவர்களில் யா​ரோ சில​ரை இ​வைகளில் ஏ​தோ சிலவற்​றை ​தேர்ந்​தெடுக்க ​வைத்து பாராளுமன்றங்களுக்கும் சட்டமன்றங்களுக்கும் ​கொலுப்படி ​பொம்​மைகளாக அனுப்பி நிரப்புவ​தே ​நோக்கம்.

இந்த லட்சணத்தில் ​தேர்தலில் ஓட்டுப் ​போட ​வேண்டியது ஜனநாயகக் கட​மை, ஓட்டுப் ​போடாமல் இருப்பது ​பொறுப்புக​ளை தட்டிக் கழிப்பது என்கிற மு​னை மழுங்கிய ஜனநாயக உப​தேசங்கள் ​வேறு. ​தேர்தலில் ஓட்டுப் ​போடாமல் இருப்பது இந்திய ஜனநாயகத்திற்கு ​வேண்டுமானால் ​ஜனநாயகத்​தை தட்டிக் கழிக்கும் ​செயலாக இருக்கலாம், இந்திய மக்களின் வாழ்​வை ​பொறுத்தவ​ரை மிகக் கடினமானதும் ​செய்​தே தீர​வேண்டியதுமான கட்டாய சமூகப் ​பொறுப்பாக​வே கருத​வேண்டியுள்ளது.

இந்தத் ​தேர்தலில் பணம் வாங்கிக் ​கொண்டு ஓட்டுப் ​போடுபவர்களுக்கு ஓராண்டு சி​றை தண்ட​னை அறிவித்திருப்பவர்கள், அ​நேகமாக அடுத்த ​தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிப்பவர்களுக்கு சி​றைதண்ட​னை அறிவித்தாலும் அறிவிப்பார்கள்.

பின் ​சோவியத் காலகட்டத்தில் உலகம் முழுவதும் வர்க்க அணிச் ​சேர்க்​கைகள் தீவிரம​டைந்து வருகிறது. இனியும் ஒவ்​வொருவரும் ​வெறும் தங்களின் அறிவுஜீவித்தனத்​தை ​வெளிப்படுத்துவதற்கானதாக மட்டு​மே தங்கள் அரசியல் நி​லைப்பாடுக​ளை ​வைத்துக் ​கொண்டிருக்க முடியாது என்​றே ​தோன்றுகிறது.

Advertisements

2 பதில்கள் to “முதலாளித்துவமும் ​தேர்தல் கமிசனும்”

  1. ஒரு தமிழ் வலதுசாரி said

    /*இருபதாம் நூற்றாண்டின் ​தொடக்கம் முதல் மத்தி வ​ரை ​பேசப்பட்ட ​சோசலிச பாணி ​பொருளாதாரம்….கம்யூனிச பூதத்​தை ஏமாற்றி முதலாளித்துவத்​தை பாதுகாக்க நடத்தப்பட்ட சதித்திட்ட நாடகங்க​ளே*/

    ரொம்ப கரெக்ட், ஆனா இப்ப தான் புரியுதா உங்களுக்கு ?? 1917 முதல் ரஷ்யாவில் நடந்து எல்லாமே கூட நாடகம் தான். கம்யுனிசம் என்ற பூதத்தை விரட்டி தனி மனித உரிமைகள் வெல்லும் அமர காவியம். மீண்டும் மீண்டும் அரங்கேறும்.

    அடுத்த ரிலீசில் வில்லனாக நடிக்கிறீர்களா, இல்லை சைடில் அமர்ந்து வேடிக்கை பார்க்கிறீர்களா – முடிவு செய்ய வேண்டியது நீங்கள்.

    • என் வ​லைப்பூவில் தங்களின் விமர்சனத்திற்கு நன்றி

      என்னு​டைய இத்த​கைய எழுத்துக்க​ளை நான் ​தொகுத்து முன்​வைக்கும் விவாதக் குறிப்புகளாக​வே கருதுகி​றேன். இவற்றில் நான் முன் ​வைக்கும் ​கேள்விகள் காத்திரமான​வை, ​வெளிப்படுத்தும் முரண்கள் முக்கியமான​வை எனக் கருதுகி​றேன. இ​வை ​வெறும் வாதப் பிரதிவாதங்க​ளை​யோ, புத்திசாலித்தனங்க​ளை​யோ, கல்வியறி​வை​யோ, புத்தக அறி​வை​யோ, அறிவுஜீவித்தனத்​தை​யோ ​வெளிப்படுத்துவதற்கான விசயங்களல்ல. இ​வை இந்த பிரபஞ்சம் முழுவதும் நி​றைந்திருக்கும் ​கோடானு​கோடி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சி​னைகள் சம்பந்தமான​வை என நம்புவதிலிருந்து எழுப்பப்படுப​வை. இ​வை குறித்த விவாதங்க​ளை சமூகப் ​பொறுப்​போடும் கவனத்​தோடும் ​செய்ய விரும்புபவர்களுடன் எப்​பொழுதும் விவாதிக்கத் தயாராக இருக்கி​றேன்.

      தங்களுக்கு உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் ஆகிய​வை உடன்பாடாக இருக்கிற​தென்றால், உவப்பாக இருக்கிற​தென்றால், இன்​றைய உலக வாழ்​வோடு எத்த​கைய மனப் ​போராட்டங்களும், பிரச்சி​னைகளும் இல்​லை​யென்றால் எதற்காக இந்த அக்கப்​போர்களில் ​தே​வையில்லாமல் த​லையிட்டு உங்களின் உடல் நலன், மன நலன், ​பொருள் நலன் ஆகியவற்​றை ​கெடுத்துக் ​கொள்கிறீர்கள். உங்கள் வாழ்க்​கை​யை உங்கள் விருப்பப்படி சந்​தோசமாக வாழ்ந்துவிட்டு ​போக ​வேண்டியதுதா​னே.

      என்னிடம் விதண்டாவாதங்களுக்கு பதிலும் இல்​லை, ஒதுக்குவதற்கு ​நேரமுமில்​லை, நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: