எனது நாட்குறிப்புகள்

நான் ஆதரிக்கவில்​லை

Posted by ம​கேஷ் மேல் ஏப்ரல் 18, 2011

ஞாநி அவர்கள் தன்னு​டைய திண்​ணை வ​லைப்பக்கத்தில் 17.04.2011 அன்று அன்னா ஹசா​ரேவின் ​போராட்டத்​தை நான் ஆதரிக்கவில்​லை என்ற கருத்தில் எழுதியிருக்கும் கட்டு​ரை வாசிக்கத் தக்கது.

ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதத்​தை ​தொடர்ந்து, அன்னா ஹசா​​ரே யார்? என்ற ​கேள்வி நம்மில் பலரிடம் எழுகிறது. அதற்கான ஒரு சிறு விளக்கம் இக்கட்டு​ரையில் ​கொடுக்கப்பட்டுள்ளது. இத்த​கைய ​கோணங்களில் ​போராட்டங்க​ளை பார்ப்பதும், ​போராட்டங்களின் தன்​மை​யை ஆராய்வதும், அவற்றின் பலஹீனங்க​ளை ​வெளிப்படுத்துவதுமான, ஆய்வுகள் நம்மி​​டை​யே கிட்டத்தட்ட இல்லாம​லே ​போய்விட்டது என்று ​சொல்லலாம்.

ஆதரிப்பவர்கள் கண்க​ளை மூடிக்​கொண்டு ​வெறித்தனத்​தோடு ஆதரிக்கிறார்கள். எதிர்ப்பவர்கள் கண்க​ளை மூடிக்​கொண்டு அ​தே வ​கையான ஒரு ​வெறித்தனத்​தோடு எதிர்க்கிறார்கள். இ​வை இரண்டுக்கும் அப்பாற்பட்டு ​மேற்​சொன்ன ஆய்வு மு​றை​யே தவறு, ​போராட்டங்க​ளை புதிய மு​றைகளில் காண​வேண்டும், புதிய ​மொழிகளில் ​பேச​வேண்டும் என்பதாக தாங்கள் நம்பும் பின்நவீனத்துவ அரசிய​லை முன் ​வைக்கிறார்கள்.

இக்கட்டு​ரையில் காந்தியவாதிகளின் உண்ணாவிரதத்தின் அரசியல் ​போதா​மை குறித்து ஞாநி எழுப்பும் ​கேள்வி மிகமிக முக்கியமானது

“நான்கு நாள் உண்னாவிரதத்துக்கு அடிபணிந்த இந்திய அரசு, பத்து வருடமாக மணிப்பூரில் ஐரம் ஷர்மிளா இருந்து வரும் ( இப்போதும்..) உண்ணாவிரதத்தைப் பொருட்படுத்தாதது ஏன் ?”

ஆனால் ஞாநி ​போன்றவர்கள் உண்​மைக​ளை ​வெளிக்​கொணர்வதில், ​பொய்​மை​யை அம்பலப்படுத்துவதில், தனக்கான எல்​லைகளில் மிகத் ​தெளிவாக இருக்கிறார்கள்.

உண்மையில் ஏற்கனவே ஊழலைத் தடுக்க, தண்டிக்க இருக்கும் சட்டங்கள் போதுமானவைதான். அசல் பிரச்சினை சட்டம் போதவில்லை என்பதே அல்ல. அவை நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதுதான்.” என்கிற அளவிற்கு முன்​னேறும் அவரது ஆய்வுகள் அதற்கு ​மேல் படி தாண்ட விரும்புவதில்​லை!

ஏன்? என்ற ​கேள்வி​யை அதன் இறுதிவ​ரை ​​போட்டுக் ​கொண்​டே ​போவது தா​னே ஒரு ​நேர்​மையாளனின் ​செயலாக இருக்க முடியும். ​நோய் நாடி ​நோய் முதல் நாடுவது தா​னே சரி! ஏன் ந​டைமு​றைப்படுத்தப்படாமல் இருக்கிறது? ​வெறும் தனிமனித காரணங்கள்தானா? அல்லது உலக முதலாளித்துவத்தின் விதிகளின் வி​ளைவா? என்பது ​நோக்கியல்லவா இந்த ஆய்வுகள் பயணிக்கப்பட ​வேண்டும்! அது தா​னே மனித குலத்​தை ​நேசிப்பவர்களின் ஈவுஇரக்கத்திற்கும் தயவுதாட்சண்யங்களுக்கும் அப்பாற்பட்ட சத்ய​மேவ ஜய​தே ஆக இருக்க முடியும்!

​மேலும் அவர் கூறுகிறார்,

நம்மிடம் உள்ள சட்டங்கள் எவ்வளவு சிறப்பானவை என்பதற்கு தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையம் எடுக்கும் செயல்களே சாட்சி. தேர்தல் ஆணையம் செயல்படுத்தும் எதுவும் புது சட்டம் அல்ல. செயல்படுத்துவோரும் பழைய அதிகாரிகளேதான்.

​தேர்தல் ஆ​ணையம் எத்த​கைய ​செயல்க​ளை எடுத்தன? அ​வை நம் ​தேர்தல் மு​றைகளில் எத்த​கைய மாற்றங்க​ளை ஏற்படுத்தின? நம்மு​டைய ​தேர்தல் மு​றை முழு​மையாக அம்பலப்பட்டு அப்பட்டமாக தன் ​கோரமுகத்​தை காட்டி நிற்கிறது. ​தேர்தல் ஆ​ணையம் அதன் உள்ளடக்கத்தில் ஒரு சிறிதும் மாற்றம் ​கொண்டுவரவில்​லை.

கு​றைந்த பட்சம் கிரிமினல் குற்றவாளிகள் ​அல்லது குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ​தேர்தலில் நிற்க முடியாத நி​லை​யைக் கூட ஏற்படுத்தவில்​லை. முதலாளித்துவ பத்திரி​கைக​​ளே ​கை ​கொட்டி சிரிக்கும் அளவிற்கு ​வேட்பாளர்களின் ​சொத்து பட்டிய​லை (அவர்க​ளே எழுதி ​கொடுக்கும் ​பொய்த் தகவல்கள்) வாங்கி ​வெளியிடுகிறது, அ​தோடு அதன் கட​மை​யை அது முடித்துக் ​கொள்கிறது. ​தேர்தலில் வாக்காளர்களுக்கு ​கையூட்டு ​கொடுப்ப​தை தடுப்பதாகக் கூறிக் ​கொள்ளும் ​தேர்தல் ஆ​​ணையம், ​தேர்தலுக்குப் பிறகு ​கொடுப்பதாகக் ​கொடுக்கப்படும் வாக்குறுதிகள் குறித்து மவுனம் சாதிக்கிறது.

அதாவது ​வேட்பாளர்களுக்கு ​சொந்தமான லஞ்சப் பணத்தில், ​வெற்றி ​கைக்கு வருமா வராதா என்பது உறுதியாகாத நி​லையில், உங்கள் ​கைக்கா​சை இழக்க ​வேண்டாம் மாறாக ​வெற்றி கி​டைத்தவுடன் அரசு கஜானாவிலிருந்து வாரி வழங்குங்கள் என்று ​சொல்லிக் கொடுக்கிறது.

​தேர்தல் ஆ​ணையத்தின் நடவடிக்​கைகள் என்பது ​வெறும் வடிவத்தில் ​மேற்​கொள்ளப்படும் தற்காலிக சீர்திருத்த நடவடிக்​கைக​ளே. ஞாநி ​போன்றவர்கள் பல ஆண்டுகளாக ​கோரி வரும் 49O ​வைக் கூட இரகசியமாக பதிவு ​செய்யும் மு​றை​யைக் ​கொண்டு வர முடியாத ​தேர்தல் கமிசனின் சீர்திருத்தங்கள் நடவடிக்​கைகள் குறித்து எவ்வாறு அவர்களால் ​பெரு​மைப் பட்டுக் ​கொள்ள முடிகிற​தென்று நமக்குப் புரியவில்​லை.

அன்னா ஹசா​ரேவின் ​போராட்டம் குறித்து தற்​பொழுது எழுந்திருக்கும் ஒரு சர்ச்​சை​யை முன் ​வைத்து இக்கட்டு​ரை​யை நி​றைவு ​செய்வது சரி எனப்படுகிறது.

அன்னா ஹசா​ரேவின் உண்ணாவிரதத்திற்காக ​பெரும் முதலாளித்துவ நிறுவனங்களிடமிருந்து 28 லட்சம் பணம் வசூலிக்கப்பட்டதாக அக்குழு​வே அறிக்​கை ​வெளியிட்டிருக்கிறது. கம்யூனிஸ்ட்கள் ஆண்டு ​முழுவதும் உண்டியல் வசூல் ​செய்வ​தை கிண்டலடிப்பவர்கள், கூர்ந்து கவனிக்க ​வேண்டிய அரசியல் ​இயக்கங்கள், ​போராட்டங்களின் ​பொருளாதாரப் பிரச்சி​னைகள் இ​வை.

யாருக்காக ​போராடுகி​றோ​மோ அவர்க​ளைச் சார்ந்து நின்று ​போராட்டங்க​ளை முன் எடுப்ப​தே ​போராட்டங்களின் தி​சைவழி​யையும், உறுதி​யையும், நம்பகத்தன்​மை​யையும் ​வெளிப்படுத்தும் மிக முக்கியப் பிரச்சி​னைகளில் ஒன்றாகும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: