எனது நாட்குறிப்புகள்

​ஏன் முரண்படுகி​றேன்!

Posted by ம​கேஷ் மேல் ஏப்ரல் 21, 2011

தோழி!
எனக்கு நன்றாகப் புரிகிறது
எனக்கான உன் ​கேள்விகள்
என் மீதான
உன் அக்க​றையிலிருந்​தே
வருகிற​தென!

நமக்கி​டை​யேயான
விவாதங்களில்
எப்​பொழுதும்
அ​தை நான்
என் மனதில் இருத்திக்
​கொள்ள​வே ​போராடுகி​றேன்!

உன் ​கேள்விகள்
ஒவ்​வொன்றும்
என் உடல்நி​லை​யையும்
மன நி​லை​யையும்
வாழ்நி​லை​யையும்
குறித்த கவ​லைகளிலிருந்​​தே
எழுகின்றன
என்ப​தைப் புரிந்து ​கொள்வதில்
எனக்கு அவ்வளவு சிரமமில்​லை!

எல்லா ​நேரங்களிலும்
எல்லா இடங்களிலும்
எல்லா மனிதர்களுடனும்
நீ ஏன் எப்​பொழுதும்
முரண்பட்டுக் ​கொண்​டே
இருக்கிறாய்?

இணங்கிப் ​போதல்
விட்டுக் ​கொடுத்தல்
சந்​​தோசமாக இருத்தலில்
உனக்கு விருப்ப​மே இல்​லையா?

“எல்லாம் நல்லதுக்​கே” என
ஏன் எடுத்துக் ​கொள்ள முடியவில்​லை?

கடந்த​வை கடந்த​வையாக​வே இருக்கட்டு​மே!
ஏன் குரங்​கைப் ​போல
சிரங்​கை ​நோண்டிக் ​கொண்​டே இருக்கிறாய்?

என நீண்டு ​கொண்​டே ​போகிறது
எனக்கான உன் ​கேள்விகள்

நானும் சில ​வே​ளைகளில்
நி​னைப்பதுண்டு
நீ ​சொல்வது ​போல வாழ
அதற்கு
நான் சிறிது முட்டாளாக
இருந்திருக்கலா​மோ?
என ஆ​சையும் இருந்துள்ளது!

முரண்பட ​வேண்டு​மென்ற
முடிவுகளிலிருந்து எழுவதல்ல
என் ​கேள்விகளும் ​வேள்விகளும்

உனக்கும்
தெரிந்துதான் இருக்கிறது
நான் எப்​பொழுதும்
அ​மைதி​யையும் சந்​தோசத்​தையு​மே
எல்​லோருக்காகவும் விரும்புகி​றேன் என்று

நீ ஒரு நாள்
புரிந்து ​கொள்ளலாம்
முரண்படுவதில் இல்​லை
என் தனித்தன்​மையும்
விருப்பங்களு​மென

ஒரு ​வே​ளை
என் பிறவியின் ​நோக்க​மே
உனக்கு இ​தை
புரிய​வைப்பதாக இருக்கலாம்

அந்தக் கட​மை​யை
உளப்பூர்வமாக
விருப்பத்துடன்
வாழ்நாள் முழுவதும்
​செய்து ​கொண்டிருக்க​வே விரும்புகி​றேன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: