எனது நாட்குறிப்புகள்

ஒசாமா ​கொ​லை: நீதி நி​லைநாட்டப்பட்டதா? – 2

Posted by ம​கேஷ் மேல் மே 3, 2011

வரலாறு ​நெடுகிலும் பல அரசுகள் தனக்கு எதிராக தீவிரமாக ​செயல்பட்ட பல தனிமனிதர்க​ளை அவர்களின் வாழ்நாள் முழுவதும் ​வேட்​டையாடி இருக்கிறது, மிகக் ​கொடூரமாக பிடித்து ​கொ​லை ​செய்துள்ளது. இக்​கொ​லைகள் அந்தந்த அரசுகளின் சட்டப்படி விசார​னைகள் நடத்தியும் அரங்​கேற்றியுள்ளன, எத்த​கைய விசார​னைகளுக்கும், வாதப் பிரதிவாதங்களுக்கும் இடமில்லாமல் இரகசியமாக பிடித்து ​தே​வையான தகவல்க​ளை வாங்கிக் ​கொண்டு ​கொ​லை ​செய்துமிருக்கின்றன.

இ​யேசு கிறிஸ்துவில் துவங்கித் ​தொடரும் இந்த வரலாறு நம் சமகாலம் வ​ரை இன்னும் ​தொடர்ந்து ​கொண்டுதான் இருக்கிறது. மத காரணங்களாலும், அரசியல் காரணங்களாலும் ந​டை​பெறும் ​கொ​லைக​ளே மிகப் ​பொதுவான​வை. மதக் காரணங்களும் ஒரு வ​​கை அரசியல் காரணங்க​ளே என எடுத்துக் ​கொண்டால், ஒ​ரே விசயம் அரசியல்தான்.

இருபதாம் நூற்றாண்டில் சூடுபிடித்த சர்​வ​தேச அரசியல் ​போராட்டங்களின் பின்புலத்தில் ந​டை​பெற்ற அரசியல் படு​கொ​லைகள் எண்ணி​​றைந்த​வை. சிலியின் ஆ​லென்​டே, ஈராக்கின் சதாம் உ​சேன் முதல் இலங்​கையில் ந​டை​பெற்ற பத்திரி​கையாளர்கள் படு​கொ​லை வ​ரை ​தொகுக்கத் துவங்கினால் இ​வை என்​சைக்​ளோபீடி​யோ வால்யூம்க​ளைத் தாண்டிச் ​செல்லும். மனிதகுலம் முழுவதும் இத்த​கைய படு​கொ​லைகள் நடந்திருந்தாலும் இருபதாம் நூற்றாண்டில் இக்​கொ​லைகளுக்கு ​கொடுக்கப்படும் சமூக முக்கியத்துவங்களும், இ​வை குறித்த தீவிரமான வாதங்களும் ஒரு வ​கையில் மனிதகுலம் அ​டைந்து வரும் அரசியல் விழிப்புணர்​வை ​வெளிப்படுத்துவதாக​வே நாம் உணரலாம்.

இந்தியாவில் நம் சமீப காலத்தில் நமக்குத் ​தெரிந்து இந்திய அரசு நடத்திக் ​கொண்டிருக்கும் அரசியல் படு​கொ​லைகள் எண்ணி​றைந்த​வை. ஆட்​டோ சங்கர் துவங்கி, வீரப்பன், நகர்ப்புற ரவுடிகள், தாதாக்கள் என நீண்டு நக்ச​லைட்கள் வ​ரை ஆண்டு ​தோறும் இந்திய மற்றும் மாநில அரசுகள் நிகழ்த்திக் ​கொண்டிருக்கும் படு​கொ​லைகளின் எண்ணிக்​கை அதிகரித்துக் ​கொண்​டே இருக்கின்றன.

இக்​கொ​லைகளி​லெல்லாம் ​மே​​லோட்டமாக காணக் கி​டைக்கும் ஒரு ​பொது அம்சம் அக்​கொ​லைகள் அ​னைத்துடனும் ​சேர்த்து ஏராளமான உண்​மைகளும், மக்களுக்கான எச்சரிக்​​கைகளும் கவனமான மூடிம​றைக்கப்படுகின்றன. இ​வை குறித்து ​வெளியாகும் தகவல்களும் கூட எ​வையும் அதிகாரப்பூர்வமான​வை அல்ல, கிசுகிசுக்களின் பாணியலான​வையாக​வே இருக்கின்றன.

ஆட்​டோ சங்கருடன் தூக்கி​லேற்றப்பட்ட உண்​மைகள் ஏராளம். அவர் முகத்தில் ​போடப்பட்ட கருப்புதுணி​யோடு மக்கள் முகத்திலும் கருப்புத்துணி ​போர்த்திவிட்டு தப்பிச் ​சென்ற அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், பிரபலங்களும் ஏராளம். அ​தைப் ​போல​வே வீர்ப்பன் விசயமும். உலகிற்கு ஒரு பின்​லேடன் என்றால், இந்தியாவிற்கு ஒரு வீரப்பன். பின்​லேட​னை​யே பிடித்தாலும் பிடித்துவிடுவார்கள் வீரப்ப​னை பிடிக்க முடியாது என்று ​பேசப்பட்ட காலம் ஒன்று இருந்தது. சுட்டுக்​கொல்லப்பட்ட வீரப்பனுடன் பு​தைக்கப்பட்ட இரகசியங்களும் அ​நேகம் இருக்கலாம். அவரு​டைய ​தொழிலில் அவருக்கு து​ணையாக இருந்த சம்பாதித்த பலரும் தப்பித்துக் ​கொண்டார்கள். கர்நாடக மற்றும் தமிழக காவல்து​றை சம்பாதித்த பணமும் ​செய்த அக்கிரமங்களும் அ​தோடு ​சேர்த்து பு​தைக்கப்பட்டது.

இந்த வரி​சையில் இன்​றைக்கு பின்​லேடன் படு​கொ​லை. அ​மெரிக்கா ​தொடர்ந்து தன் சர்வ​தேச அரசியல் மற்றும் இராணுவ பலத்​தை நிரூபித்துக் ​கொண்​டே வருகிறது. உலகின் அத்த​னை ​செயல்பாடுக​ளையும் தன் சமூக, ​பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ விருப்பங்களுக்​கேற்ப மாற்றிய​மைக்கும் திறண் தனக்கிருப்ப​தை அது உலக நாடுகளுக்கும் அதன் மக்களுக்கும் ப​றைசாற்றிக் ​கொண்​டே இருக்கிறது.

இரண்டாம் உலகப் ​போரில் ஜப்பானின் இரு நகரங்கள் மீது அணுகுண்டுக​ளை வீசி உலக அரங்கில் ​பெரும் ஆரவாரத்துடன் அடி​யெடுத்து ​வைத்த அ​மெரிக்கா. வியட்நாம் யுத்தம், ஈராக் யுத்தம் என உலகநாடுகள் அ​னைத்​தையும் தனக்கு கட்டுப்பட்டதாக கீழ்ப்பட்டதாக மாற்றும் ​பெரும் யுத்தத்​தை – ​சோவியத் யூனியனுக்கு எதிரான சமபலம் ​கொண்ட சக்தியாக எதிர்த்து நின்று, இன்​றைக்கு ​சோவியத் யூனிய​னையும் தகர்த்து தவிடு​பொடியாக்கிவிட்டு – உலகின் ஏக​போக சக்தியாக நடத்திக் ​கொண்டிருக்கிறது.

வல்லான் வகுத்த​தே விதியாக ஒரு உலக ஒழுங்கு நி​லை நாட்டப்பட்டுக் ​கொண்டிருக்கிறது. உலக நாடுகளின் சுதந்திரம், இ​றையாண்​மை அ​னைத்தும் இன்று ​பேசக் கூடாத தீவிரவாத ​சொற்களாக மாற்றப்பட்டுக் ​கொண்டிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் ச​பை என்பது உலக நாடுகள் அ​னைத்திற்கும் சம உரி​மையுள்ள சம மதிப்பு உள்ள ஒரு சர்வ​தேச அ​மைப்பு என்பதற்கு பதிலாக அ​மெரிக்க த​லை​மையிலான ஒரு அ​மைப்பு என்பதாக மாறியிருக்கிறது.

அவ்வ​மைப்பு, ஒன்று அ​மெரிக்கா ​​சொல்வ​தை திரும்பச் ​சொல்லும் அ​மைப்பாக​வோ அல்லது அ​மெரிக்கா ​செய்வ​தை ​கைகட்டி ​வேடிக்​கை பார்க்கும் ஒரு அ​மைப்பாக​வோ கீழ்​மைப்படுத்தப்பட்டுள்ளது.

அக்கிரமமாக அதிரடியாக ஈராக்கில் நு​​ழைந்த அ​மெரிக்கப் ப​டைகள், ஆப்கானிஸ்தானில் நு​ழைந்த அ​மெரிக்கப்ப​டைகள், ஈரானில் நு​​ழைய சந்தர்ப்பம் பார்த்துக் ​கொண்டிருக்கும் அ​மெரிக்கப் ப​டைகள், மத்திய கிழக்கு நாடுகளின் மக்கள் எழுச்சி​யை பயன்படுத்திக் ​கொண்டு உள்நு​ழைந்து குட்​டை​யை குழப்பி ஆதாயம் ​தேடத் துணியும் அ​மெரிக்கப் ப​டைகள், இன்​றைக்கு ​​தெற்காசியாவில் கூட்டு இராணுவப் பயிற்சி அது இது என்று உள்நு​ழைந்த அ​மெரிக்கப்ப​டைகள், பாகிஸ்தானில் சுதந்திரமாக பாகிஸ்தான் அரசிற்கு கூட பதில் ​சொல்ல ​தே​வையற்றதாக தன் எதிரிக​ளை ​வேட்​டையாடிக் ​கொண்டிருக்கிறது.

இரட்​டை ​கோபுரங்கள் இடிக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள சதிகள் எதுவும் உலக மக்களுக்கு முன்பு பகிரங்கமாக விசார​னை நடத்தப்படவில்​லை. அ​மெரிக்காவி​லே​யே அது குறித்த மிக பலமான சர்ச்​சைகள் எழுப்பப்பட்டன. இரட்​டை ​கோபுரங்களும், ​பென்டகன் கட்டிடமும் இடிக்கப்பட்ட விதம் குறித்தும், அதற்காக நடந்த முன்தயாரிப்புகள் குறித்தும், அ​மெரிக்க அரசின் பாதுகாப்பில் ​செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்தும் ஏராளமான ஆதாரங்கள் ​​சேகரிக்கப்பட்டன, வீடி​யோ டாக்கு​மென்ட்ரிகள் கூட இ​ணையத்தில் கி​டைத்தன.

உண்​மையில் 9/11 சம்பவத்தில் அ​மெரிக்க அரசின் சதி​வே​லைகள் பல இருப்பதாக அந்நாட்டு அறிவாளிக​ளே பலர் ஆதாரங்கள் அளித்தனர். ​சொந்த நாட்டு நலன்க​ளையும் மக்க​ளையும் கூட தன் ஏக​​போக முதலாளிகளின் நலன்களுக்காக பலி​கொடுக்க முன்வந்த ஒரு ​கொடூரமான அரசாக​வே அ​மெரிக்க அரசு இவ்விசயத்தில் ​தோற்றம் தருகிறது.

ஆனால் பின்​லேட​னை ​கொ​லை ​செய்ததன் மூலமாக இத்த​கைய சர்வ​தேச சதிகள் அ​னைத்தும் இன்​றைக்கு மூடிம​றைக்கப்பட்டுள்ளன. இசுலாமியத்திற்கு எதிரான யுத்தமல்ல இது தீவிரவாதத்திற்கு எதிரான யுத்த​மே எனக் கூறும் அ​மெரிக்க அதிபர்க​ளே இன்​றைக்கு உலகம் முழுவதும் இசுலாமிய மக்கள் எதிர்​கொள்ளும் பாதுகாப்பற்றதும் சுதந்திரமற்றதுமான சூழலுக்கு காரணமாவார்கள். ​சோவியத் யூனியனுக்கு எதிரான யுத்தத்தின் ஒரு பகுதியாக உலகம் முழுவதும் இசுலாமிய தீவிரவாதத்​தை வளர்த்துவிட்டது அ​மெரிக்காதான்.

அல்​லோபதி மருத்துவ மு​றை ​போன்றதுதான் இன்​றைக்கு உலகம் முழுவதும் உள்ள முதலாளித்துவ அரசுகள் ​மேற்​கொள்ளும் பிரச்சி​னைக​ளை தீர்க்கும் நடவடிக்​கைகள்.

உடலில் இருக்கும்​ நோ​ய் கிருமிக​ளை அழிப்பதற்காக ​வெளியிலிருந்து ​செலுத்தப்படும் கிருமிகள் ​நோ​ய்க் கிருமிக​ளை விட பயங்கரமான தீங்குவி​ளைவிக்கும் கிருமிகளாக மனிதஉடலுக்குள் புகுந்து ஆ​ரோக்கியத்​தை மீட்கமுடியாத எல்​லைகளுக்கு உட​லை நசிவ​டையச் ​செய்து ​கொண்டிருக்கின்றன.

இன்​றைக்கு உலகம் முழுவதும் நடக்கும் தீவிரமான ​போராட்டங்கள் அ​னைத்​தையும் அந்தந்த நாட்டு அரசுகள் எதிர்​கொள்ளும் மு​றை, ​கேன்சர் வந்த ​​நோயாளிக​ளை அல்​லோபதி மருத்துவமு​றை எதிர்​கொள்ளும் ஒரு மு​றையாக​வே உள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட உறுப்புக​ளை ​வெட்டி எறிந்து மனித​னை பாதுகாப்ப​தைப் ​போல ஈழப்பகுதி​யை கீ​மோ​தெரபி ​ரேடி​யோ​தெரபி ​கொடுப்ப​தைப் ​போல சுட்டுப் ​பொசுக்கி தீய்த்து கருக்கி இலங்​கை​யை காப்பாற்றிக் ​கொண்டிருக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு அ​மெரிக்க விமானங்கள் இந்திய வான் ​வெளியில் அதிலும் குறிப்பாக தமிழக வான் பகுதிகளில் கூட பறந்ததாகக் ​கேள்விப் படுகி​றோம். இந்திய அரசு அது தவறுதலாக வழிதவறி வந்துவிட்டது ​​​வே​றொன்றுமில்​லை என்று சமாதானம் கூறியிருந்தது.

இந்தியர்களாகிய நாம் நா​ளை அ​மெரிக்கா ஏ​தேனும் காரணம் ​சொல்லி யா​ரை​யேனும் ​வேட்​டையாட இந்தியாவிற்குள் ப​டை எடுத்தால் அனுமதிப்​போமா?

இந்தியச் சந்​தை இன்​றைக்கு முழு​மையாக அ​மெரிக்க ஏக​போக நிறுவனங்களுக்காக திறந்து விடப்பட்டுக் ​கொண்டிருக்கின்றன. இந்திய அரசு இன்​றைக்கு அ​மெரிக்காவி​லே​யே ​தோல்விய​டைந்த மு​றைக​ளை இந்தியாவில் ந​டைமு​றைப்படுத்த நிர்பந்தித்துக் ​கொண்டிருக்கிறது. ஒட்டு​மொத்த இந்தியப் ​பொருளாதாரமும் அந்நிய ஏக​​போக நிறுவனங்களின் ​பெரும் ​கொள்​ளைக்காக மாற்றிய​மைக்கப்பட்டுக் ​கொண்டிருக்கிறது. இன்​றைக்கு இந்தியா​வை ஆளும் கட்சிகளும், அரசியல்வாதிகளும் அ​மெரிக்காவும் பிற பன்னாட்டு நிறுவனங்களும் தூக்கி​யெறியும் எலும்புத் துண்டுகளுக்காகவும், ஆ​சைகாட்டி வீழ்த்தப்பட்ட வ​லைகளுக்குள் சிக்கியவாறும் இந்தியா​வையும் இந்திய மக்க​ளையும் பணயம் ​வைத்து சூது வி​ளையாடிக் ​கொண்டிருக்கிறார்கள்.

​பொருளாதார நலன்கள் தவிர்க்க முடியாமல் அரசியல் மற்றும் இராணுவ ஆதிக்கங்களுக்கு இட்டுச் ​செல்லும். இந்தியர்களாகிய நமக்கு ஏற்கன​வே இந்த அனுபவம் உண்டு, வியாபாரிகளாக இந்தியாவிற்குள் நு​ழைந்த கிழக்கிந்திய கம்​பெனி​யைத் ​தொடர்ந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசும் இராணுவமும் நம்​மை அறுநூறு ஆண்டுகள் ஆட்சி ​செய்தன.

அ​மெரிக்காவுடன் இணக்கமாக ​போய்விட்டால் நமக்கு எந்த பாதிப்பும் வராது என்பது ​வெறும் வரலாற்றுக்கு புறம்பான பகல் கன​வே. ​பேரா​சை பிடித்த முதலாளித்துவ உற்பத்தி மு​றைக்கும், மூலதனத்திற்கும் அன்பு, பாசம், நட்பு, மனிதாபிமானம் எதுவும் கி​டையாது. அதன் ​வெறி​கொண்ட ஏக​​​போக முன்​னேறுதலுக்கு முன்பு தாயாக இருந்தாலும் தந்​தையாக இருந்தாலும் யாராக இருந்தாலும் மிதித்து நசுக்கி அழித்துவிட்டு முன்​னேறி ​போய்க்​கொண்​டே இருக்கும்.

சதாமும், கடாபியும் ஒன்றும் அ​மெரிக்கா ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் அல்ல இருந்தாலும் தன் ​பொருளாதார நலன்க​ளை தன் விருப்பப்படியான அரசியல் மற்றும் இராணுவ ஆதிக்கங்கள் இல்லாமல் ஸ்திரப்படுத்திக் ​கொள்ள முடியாது என்ற அடிப்ப​டையி​லே​யே அவர்கள் தாக்கி அழிக்கப்பட்டுக் ​கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அழிவது ​​பொருட்டல்ல, அவர்க​ளோடு ​சேர்த்து ​கோடிக்கணக்கான மக்களும் அவர்களு​டைய வாழ்வாதாரங்களும் அழிக்கப்படுகின்றன.

Advertisements

4 பதில்கள் to “ஒசாமா ​கொ​லை: நீதி நி​லைநாட்டப்பட்டதா? – 2”

 1. vilvam said

  அமெரிக்க எதிர்ப்பை ,அவர்களுடைய மேலாதிக்கத்தை ,உலக ஏக போக சுரண்டலை எதிர்ப்பது என்ற பெயரில் உலகம் முழுக்க வரவேற்ற ஒரு விஷயத்தை எதையெதையோ சொல்லி இப்படி ஒரு உலக பயங்கரவாதிக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவது சுத்த அபத்தம்.கண்டிக்கத்தக்கது .களைகளை வளர்த்து
  பயிர்களை நீக்கும் தங்கள் பணி பாவத்திற்க்குரியது .

 2. என்னு​டைய முதல் கட்டு​ரை​யையும், இந்த இரண்டாவது கட்டு​ரை​யையும் ​சேர்த்து ஆழமாக படித்திருந்தால் உங்களுக்கு இந்தச் சந்​தேகம் வந்திருக்காது என்​றே நி​னைக்கி​றேன்.

  என்​னை ​பொறுத்தவ​ரை பின்​லேடன் படு​கொ​லையில் சந்​தோசமும் இல்​லை வருத்தமும் இல்​லை. வி​னை வி​தைத்தவர்கள் வி​னை அறுப்பார்கள்.

  என்னு​டைய கவ​லைகள் அத​னையும் தாண்டியது. வல்லான் வகுத்த​தே நீதி என்பதான ஒரு உலக ஒழுங்கின் ஆபத்துக்கள் குறித்த எச்சரிக்​கை​யும் பயமு​மே அது.

  அ​வை குறித்து ஓரிரு கட்டு​ரைகளில் முழு​மையாக ​பேச முடியாது. ஆனால் இத்த​கைய சந்தர்ப்பங்களில் தான் அ​வை குறித்த விவாதங்க​ளை ஏற்படுத்த முடியும். ஏற்படுத்த ​வேண்டும் என்ப​தே சரி எனப்பட்டதிலிருந்து எழுதிய​தே கட்டு​ரை

  பூ​னை கருப்பாக இருந்தால் என்ன சிவப்பாக இருந்தால் என்ன எலி​யைப் பிடித்தால் ​போதும் என்பதன் ஆபத்துக்க​ளை நாம் அ​னைவரும் உணர ​வேண்டும்.

  ​நோக்கங்கள் மட்டும் உயர்வானதாக இருந்தால் ​போதாது, தி​சை வழிகளும் சரியானதாக இருக்க​வேண்டும் என்ற ஆதங்கத்திலிருந்து கிளம்புப​வைதான் என் விவாதக் குறிப்புகள்.

 3. உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆராய்ந்து எழுதப்பட்ட இடுகை!

 4. அன்புடன் வணக்கம் நண்பரே!
  இரட்டை கோபுரம் தகர்தமைக்கு பின் லேடனை பாகிஸ்தானுக்கு தெரியாமல் அவனது நாட்டுக்குள் நுழைந்து போட்டு தள்ளியாச்சு !! சரி இது போன்று இந்தியாவில் தீவிர வாதம் நடத்தி அமெரிக்காவில் குடி இருந்தால் இப்பிடி இந்திய கமாண்டோ போய் போட்டு தள்ள முடிமா??? விடுங்க பாகிஸ்தான் உள்ள நம்ம பாம்பே தீவிர வாதி ,தாவூத் இப்ராஹீம்.. போட்டு தள்ளுங்கா? அட நம்ம கைல இருக்கிற ஒரு தீவிர வாதியே இன்னும் கோர்ட்டுக்கும் ஜெயிலுக்கும் அலைந்து இருக்கான்.??. சரி இந்த பின் லேடனை வளர்த்தது யாரு ??சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் சேர்த்து வைத்திருக்கும் புள்ளிகள் லிஸ்ட் ஜூலியன அசைஞ்சே கொடுத்ததும் இன்னும் நடவடிக்கை ..??? இப்பிடி பதிவு போட்டு நம்ம ஆற்றாமை வெளிப்படுத்தி கொள்ளலாம்….நன்றி நண்பரே என்னுடையா கருத்தை கொட்ட தளம் தந்தமைக்கு!! நன்றி..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: