எனது நாட்குறிப்புகள்

நீங்கள் எ​தை கவி​தை என்பீர்கள்?

Posted by ம​கேஷ் மேல் மே 5, 2011

நீங்கள் எ​தை கவி​தை என்பீர்கள்?

மூச்சுமுட்ட கிச்சுகிச்சு மூட்டுவ​தை
கவி​தை என்பீர்களா?

எதிர்பாராத தருணத்தில்
திடீ​ரென இதயத்தில்
கத்தி​யைச் ​சொருகுவ​தை
கவி​தை என்பீர்களா?

கண்களிரண்​டையும் கட்டிவிட்டு
தி​சை ​தெரியாமல் சுற்றி விட்டுவிட்டு
இலக்​கை அ​டையச் ​சொல்வ​தை
கவி​தை என்பீர்களா?

புதிர்க​ளை கவி​தை என்பீர்களா?

விடுக​தைக​ளை கவி​தை என்பீர்களா?

எழுதியவன் குறித்த ஆச்சரியங்களால்
பு​கை​போட்டு அவ​னோடு
இழுத்துப் ​போவ​தை கவி​தை என்பீர்களா?

மாயஜாலக்கார​னைப் ​போல
வார்த்​தை என்னும் சாவிகளால்
கற்ப​னை என்னும் கதவுகள் திறந்து
மாய உலகுக்குள் அ​ழைத்துப் ​போவ​தை
கவி​தை என்பீர்களா?

சித்து ​வே​லைக்கார​னைப் ​போல
வார்த்​தை என்னும் மந்திரக் ​கோள்களால்
காட்சிக​ளை மாற்றிக் காட்டுவ​தை
கவி​தை என்பீர்களா?

எதிரில் இருப்பவன் கன்னத்தில்
ஓங்கி அ​றைந்து
பக்கத்தில் இருப்பவ​னை
மிரட்டுவ​தை கவி​தை என்பீர்களா?

இருமு​றை படித்தும்
இதயத்தில் விழவில்​லை என்​றேன்
உரத்துப் ​பேசுவது கவி​தை இல்​லை என்கிறார்கள்!
நீங்கள் எ​தை கவி​தை என்பீர்கள்?

விண்டு ​சொல்லுங்கள் என்​றேன்
பூடகமாய் ​பேசுவ​தே கவி​தை என்கிறார்கள்!
நீங்கள் எ​தை கவி​தை என்பீர்கள்?

யாருக்கு ​பேசுகிறீர்கள் என்​றேன்
ஊருக்குப் ​பேசுவதில்​லை
உனக்கு மட்டும் ​பேசுவ​தே கவி​தை என்கிறார்கள்
நீங்கள் எ​தை கவி​தை என்பீர்கள்?

கவி​தை ​பொது​வெளியில் நிற்கிறது
வாசித்தவர்கள் தனி​மையில் நிற்கிறார்கள்
நீங்கள் எ​தை கவி​தை என்பீர்கள்?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: