எனது நாட்குறிப்புகள்

இனியும் எங்கள் மனிதாபிமானத்​தை ​சோதிக்க ​வேண்டாம்!

Posted by ம​கேஷ் மேல் மே 21, 2011

போதும்
இனியும் எங்கள் மனிதாபிமானத்​தை
​சோதிக்க ​வேண்டாம்!

நிறுத்திக் ​கொள்ளுங்கள்!

எங்களின்
​வைராக்கியத்​தையும்
​கொள்​கை உறுதி​யையும்
ஒரு துளி கண்ணீர்
க​ரைத்துவிடுகிறது!

​தேச​மே மூழ்கிவிடும்
குற்றங்கள்
​செய்திருந்தாலும்
தள்ளாத வயதில்
அர்த்த ராத்திரியில்
அடித்து இழுத்துச்
செல்லப்பட்ட ​பொழுது
கண்ணீர் விட்​டோம்

அந்திமக் காலத்தில்
மகளின்
த​லைவிதி
வாசிக்கப்படப் ​போவ​தை
​கேட்பதற்காக
காத்திருக்கும்
ஒரு கிழவனின்
தவிப்பு
சகிப்பதற்கில்​லை!

எப்படி
உங்களால்
தர்ம சங்கடமான
சூழல்களிலும்
​பேனா, ​பேப்பர்
​மைக்குக​ளோடு
பரபரப்பாக
​பேட்டி ​கேட்க முடிகிறது!

ஏன்
உங்களால்
ஒரு மனிதன்
தன் க​டைசி
​நேரத்தி​லேனும்
தனி​மை​யை உணர ​வேண்டிய​தையும்
தனி​மையில் உணர ​வேண்டிய​தையும்
தடுத்தாட்​கொள்ள ​​வேண்டியிருக்கிறது!

​​செய்திகளின்
வர்ண​னைகளுக்கி​டை​யே
உங்கள்
முகம் ​தெரிகிறது
இத​​ழோரம் ம​றைக்க நி​னைக்கும்
துளிப் புன்​னகையும்
கண்க​ளோரம் மின்னி ம​றையும்
குரூரமுமாய்!

எங்க​ளைப் பற்றி
எங்க​ளைவிட
உங்களுக்​கே
நன்றாகத் ​தெரிந்திருக்கிறது!

எங்க​ளை
சிரிக்க​வைக்கவும்
அழ​வைக்கவுமான
எல்லா வித்​தைகளிலும்
நீங்கள்
நிபுணத்துவம்
அ​டைந்துவிட்டீர்கள்!

எங்களுக்குப்
புரிகிறது

ஒரு ​வே​ளை
நாங்கள்
நா​ளை
​வெற்றி​பெற்றுவிடலாம்
அரசியல்வாதிக​ளோடான
சமர்களில்!

உங்க​ளோடான சமர்
அத்த​னை எளிதானதல்ல!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: