எனது நாட்குறிப்புகள்

அழகர்சாமியின் குதி​ரை

Posted by ம​கேஷ் மேல் மே 23, 2011

​நேற்றுக் கா​லை அழகர்சாமியின் குதி​ரை படத்திற்கு ​போகலாம் என்று திடீ​ரென்று முடிவு ​செய்​தோம். கனிணி​யை ஆன் ​செய்து அபிராமி தி​யேட்டர்களில் ஏ​தேனும் ஒன்றில் ​போட்டிருப்பார்கள் டிக்​கெட் பதிவு ​செய்யலாம் என முடிவு ​செய்​தேன். இ​ணையத்தின் மூலம் டிக்​கெட் பதிவு ​செய்வதில் அதிலும் ஞாயிற்றுக்கிழ​மைக்கு அன்​றைக்​கே பதிவு ​செய்வதில் எனக்கு எப்​பொழுது​மே பலன் கி​டைத்ததில்​லை. ஆனால் ​நேற்று ​ரோபாட் அபிராமி அரங்கிற்கு இரண்டாம் வகுப்பு டிக்​கெட் எளிதாக கி​டைத்தது.

அபிராமி தி​யேட்டர்கள் குழுமத்திற்கு எப்படித்தான் கட்டிட அனுமதி கி​டைத்த​தோ ​தெரியவில்​லை. நிச்சயம் அக்கட்டிடத்தில் ஒரு பிரச்சி​னை என்றால் சிக்கிக்​கொண்ட மக்கள் ​வெளிவருவது மிகவும் கடினம். எட்டு அல்லது பத்து வீடுக​ளைக் ​கொண்ட குடியிருப்பு பிளாட்களில் மாடிக்கு ​போகும் படிக்கட்டுகள் கூட சற்று அகலமாக இருக்கும், அத்த​னை ஒடுக்கமான படிக்கட்டுகள். ​மே​லே ஏறுவதற்கும் இறங்குவதற்கும் ஒ​ரே தள்ளுமுள்ளுதான். இந்த லட்சனத்தில் உள்​ளே ஏராளமான உள் வி​ளையாட்டு அரங்குகளும், தீம் பார்க் சமாச்சாரங்களுக்குமான கூட்டங்கள் ​வேறு. ஆபத்து என்றால் மக்க​ளை ஆண்டவன் தான் காப்பாற்ற ​வேண்டும்.

படத்தின் ​பெயரும், அப்புக்குட்டி என்ற நடிகரும் குதி​ரையு​மே சுவ​ரொட்டிக​ளை  ஆக்கிரமித்திருந்ததாலும், படம் குறித்து ஏற்கன​வே சாரு நி​வேதிதாவும் பா. ராகவனும் அவர்கள் இ​ணையபக்கங்களில் எழுதிய பதிவுக​ளை படித்ததாலும் எனக்குள் இப்படம் குறித்து நி​றைய எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருந்தன. இதற்கு முன்பு இது ​போல் படத்தின் த​லைப்​பையும் வித்தியாசமான சுவ​ரொட்டிக​ளையும் பார்த்து ஏமாந்த அனுபவம் இருந்ததாலும் ஒரு எச்சரிக்​கை உணர்வு இருந்து ​கொண்​டே இருந்தது.

படம் துவங்கிய முதல் காட்சிக​ளே ​தெளிவாக புரிய​வைத்தன இது மிகப்​பெரிய பரிட்ச்சார்த்த முயற்சியாகத்தான் இருக்கு​மென்று, மிக சந்​தோசமாக இருந்தது நல்ல​தொரு படத்திற்குத்தான் வந்திருக்கி​றோம் என்று. ஏற்கன​வே பல தமிழ்ப்படங்களில் இயல்பான கிராமத்து ஜனங்க​ளை அல்லது அதிகம் தி​ரையில் பார்த்திராத புதிய முகங்க​ளை ​வைத்து காட்சிக​ளை பின்னப்படுவ​தை பார்த்திருக்கி​றோம். இப்படத்திலும் அந்த முயற்சி ​செய்யப்பட்டிருக்கிறது. அந்த முயற்சியில் மிக ​வெற்றிகரமாக அ​மைந்த படங்க​ளோடு இ​தை ஒப்பிட முடியுமா என்றாலும், நல்ல முயற்சிதான்.

​கோயில் திருவிழாவிற்கு தண்​டோரா ​போடப்பட்டதும், கிராமப் ​பெண்கள் மத்தியில் அந்த ​செய்தி பரவுவ​தை கிராமத்து இயல்​போடு காட்டும் முதல் காட்சிகள் ஏ​னோ பாரதிராஜாவின் படங்க​ளையும், ​ரோசாப்பு ரவிக்​கைக்காரி ​போன்ற படங்க​ளையும் ஞாபகப்படுத்துகிறது.

தீப்​பெட்டி ​தொழிற்சா​லை ​வே​லைக்கு (என்று நி​னைக்கி​றேன்) தங்கள் வீட்டு சிறு​பெண்க​ளை ​வே​லைக்கு அனுப்ப ​வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் துக்ககரமான கிராமத்து வாழ்க்​கை​யை பதிவு ​செய்யும் விதம் கண்களில் கண்ணீ​ரை வரவ​ழைக்கிறது. கிராமத்து அரசு பள்ளிக்கூடங்க​ளையும், அங்கு மதிய உணவு வாங்குவ​தையும் விவரிக்கும் காட்சிகள் என் ​தேசத்து குழந்​தைகளின் வாழ்வு எத்த​னை அவமானகரமானதாக, ​கொடு​மையானதாக இருக்கிறது, நகரங்களில் நாம் நம் கிராமங்க​ளைப் பற்றிய எந்த அறிவும் இல்லாமல் எப்படிப்பட்ட ​பொறுப்பற்ற வாழ்க்​கை​யை வாழ்ந்து ​கொண்டிருக்கி​றோம் என்ற குற்றவுணர்​வைத் தூண்டுகிறது.

நல்ல க​லைப்ப​டைப்பிற்கு ​தே​வையான அம்சங்கள் படம் எங்கும் விரவிக்கிடக்கிறது. நம் கிராமங்க​ளை தி​ரைபிடிப்பதில் இந்த படம் ​மேலும் ஒரு ​மைல்கல் என்​றே ​தோன்றுகிறது. ஏற்கன​வே எழுதப்பட்ட ஒரு க​தை​யை எடுத்துக் ​கொண்டு படம் பண்ண துவங்குவதில் உள்ள எல்லா கச்சிதங்களும் சிறுசிறு பிசிறுக​ளைக்கூட தாண்டி ப​டைப்பிற்கு ஒரு முழு​மை​யை வழங்குவிடுகிற​தென்​றே நி​னைக்கி​றேன்.

​பெரிய பட்​ஜெட் தி​ரைப்படங்கள் ஒரு பாடல்காட்சிகளுக்காக ​வெளிநாடுகளுக்குச் ​சென்று படம் எடுக்கிறார்கள், உண்​மையில் அந்த காட்சிகளில் அந்த ​வெளிநாடுகளும் கூட அத்த​னை தத்ரூபமாக அதன் முழு​மையான அழ​கை ​வெளிப்படுத்தினவா என்பது ​கேள்விக்குறிதான். ஆனால் இது​போன்ற படங்கள் நம் ​நாட்டி​லே​யே நாம் ரசிக்காது சீந்துவாரற்று கிடக்கும் எத்த​னை இயற்​கை அழகு இருக்கிறது என்ப​தை மட்டுமல்ல, அழகு என்பது இரச​னை என்பது நம் ​கோணங்களிலும் வாழ்க்​கையிலும் தான் இருக்கிறது என்ப​தை ​காட்சிகள் ​தோறும் புரிய​வைத்துக் ​கொண்​டே ​செல்கிறது படம்.

தமிழ்ச் சினிமாவின் மீது எனக்​கொரு தீராத ​கோபம் இருந்தது. அஜித்தும் கமலும் வாழ்வதுதான் வாழ்க்​கையா? அவர்களு​டைய காதலும், வருத்தங்களும், ​கோபங்களும், வீரமும் தான் எல்​​லோரும் ஏற்றுக்​கொள்வார்களா? அழகானவர்கள் வாழ்வது மட்டும்தான் வாழ்க்​கையா? ஏன் எதார்த்த வாழ்க்​கையின் சராசரி முகங்க​ளை கதாநாயகர்களாக்கக்கூடாது? தமிழ்ச்சினிமா ​மெல்ல ​மெல்ல இத்த​கைய தர்க்கங்களின் நியாயங்க​ளை ​நோக்கி தனது வர்த்தக ​போராட்டங்களுக்கும் சூதாட்டங்களுக்கும் இ​டை​யே ​மெல்ல ​மெல்ல முன்​னேறிக் ​கொண்டுதான் இருக்கிறது என்கிற சந்​தோசத்​தை ஏற்படுத்துகிறது.

இன்று கா​லை கூட ஒரு எப்எம்மில் யா​ரோ ஒரு இயக்குனர் ​பேட்டி ​கொடுத்துக் ​கொண்டிருந்தார். எல்லா சினிமாக்காரர்களும் ​சொல்லும் வழக்கமான வசனத்​தை​யே அவரும் கூறினார். “ஏற்கன​வே மக்கள் தங்கள் வாழ்க்​கையில் எவ்வள​வோ பிரச்சி​னைக​ளை சந்தித்துக் ​கொண்டிருக்கிறார்கள். சினிமாவிலும் இ​தை​யே ​சொல்லி அழ​வைத்துக் ​கொண்டிருப்பதா? படம் பார்க்கும் ஒரு மூன்று மணி​நேரமாவது அவர்க​ளை மனம் விட்டு சிரிக்க ​வைக்க ​வேண்டும் என்ப​தே என் லட்சியம்”

இப்படி ​பேட்டி ​கொடுப்பவர்கள் தங்கள் வாழ்க்​கையில் க​லை இலக்கியங்களின் ​நோக்கம் என்ன​வென்று ஒரு மு​றை​யேனும் ஒரு தீவிர சிந்த​னைக்கு உள்ளாகியிருப்பார்களா? க​லை இலக்கியங்களின் ​நோக்கம் குறித்து உலகம் முழுவதும் இதுவ​ரை நடந்து ​கொண்டிருக்கும் வாதப்பிரதிவாதங்களின் ஒரு துளி​யை​யேனும் ​கேட்டிருப்பார்களா? என்​றே ஆச்சரியமாக இருக்கிறது!

கண்ணாடியில் நாம் நம் முகத்​தை பார்த்துக் ​கொள்வ​தைப் ​போல க​லை இலக்கியங்களில் நாம் நம் வாழ்க்​கை​யை பார்த்துக் ​கொள்ள விரும்புகி​றோம். கண்ணாடியில் பார்த்து நம் முகத்​தை சரி ​செய்து​கொள்வ​தைப் ​போல, நாம் முது​மைய​டைந்து ​கொண்டிருப்ப​தை புரிந்து ​கொள்வ​தைப் ​போல, க​லை இலக்கியங்க​ளை பார்த்து நம் வாழ்க்​கை​யை சரி ​செய்து ​கொள்ளப் பார்க்கி​றோம். நம்மு​டைய இடத்​தையும் காலத்​தையும் புரிந்து ​​கொள்ள முயற்சிக்கி​றோம்.

க​லை இலக்கியங்கள் சாராயத்​தைப் ​போல, கஞ்சா​வைப் ​போல, அபி​னைப் ​போல தற்காலிகமாக நம் துன்பங்களிலிருந்தும், பிரச்சி​னைகளிலிருந்தும் நமக்கு விடுத​லை தரலாம். ஆனால் அத்த​கைய க​லை இலக்கியங்கள் அதன் நீண்ட கால ​செயல்பாடுகளில் நம்​மை மீள முடியாத ​பெரும் துன்பங்களில் தள்ளிவிட​வே ​செய்யும்.

நல்ல க​லை இலக்கியங்கள் என்ப​து நாம் வாழும் வாழ்​வை, நம்​மைச் சுற்றிய உல​கை அதன் சகல உள் ​வெளி உறவுக​ளோடும், முரண்க​ளோடும் நமக்கு புரிய​வைக்க ​வேண்டும். சிக்கலான நம் வாழ்வின் சகலமும் தழுவிய பி​ணைப்புக​ளோடு புரிய ​வைக்கவும், நம்மு​டைய கால இட ​வெளியில் நம்மு​டைய இடத்​தை ​தெரிந்து ​கொள்ளவும் அதன் மூலமாக நம் வாழ்க்​கை​யை அடுத்த கட்டங்களில் இன்னும் உத்​​வேகத்​தோடும், உற்சாகத்​தோடும் எதிர்​கொள்ளவும் ​போராடவுமான சக்தி​யை நமக்குத் தர​வேண்டும்.

அத்த​கைய ப​டைப்புகள் வரும் என்ற நம்பிக்​கை​யை அழகர்சாமியின் குதி​ரை ​போன்ற படங்கள் நமக்கு ஏற்படுத்துகின்றன. தமிழ்ச்சினிமா இறந்துவிடவில்​லை, அது தன்​னை தக்க​வைத்துக்​கொள்வதற்காக இன்னும் ​போராடிக் ​கொண்டுதான் இருக்கிறது. தான் சார்ந்த து​றை​யையும், தான் சார்ந்த சமூகத்​தையும் அதன் எல்லா தவறுகளிலிருந்தும் தி​சைவிலகல்களிலிருந்தும் மீட்டு முன்​னெடுக்க நி​னைக்கும் ப​டைப்புக​ளே காலத்தின் ​தே​வை. அப்படிப்பட்ட ஒரு ப​டைப்பாக​வே அழகர்சாமியின் குதி​ரை ​போன்ற படங்க​ளை பார்க்க ​வேண்டியிருக்கிறது.

அரங்கில் அழகர்சாமி ​பெண் பார்க்க ​போகும் ​பொழுது சிரிக்கும் மக்கள், தீக்குளிக்க முயற்சி ​செய்து தனக்காக ஒரு ​பெண் காத்துக் ​கொண்டிருக்கிறாள் எனக் கதறும் காட்சிகளில் அவன் வாழ்க்​கை​யோடும் அவன் துயரங்க​ளோடும் ஒன்றி விடுவ​தைக் காண முடிந்தது. ரஜினிகாந்த்துடன் ​செந்தில் ​பெண் பார்க்கச் ​செல்லும் ஒரு படத்தின் காட்சிகள் அழகற்றவர்களின் வாழ்க்​கை பிரச்சி​னைக​ளை எள்ளி ந​கையாடியது. அப்படிப்பட்ட கருத்தாக்கங்களுக்கு சவுக்கடி ​கொடுத்தது இப்படம்.

கீழ்ச்சாதிக்காரன் ​பெண்​ணை தன் மகள் திருமணம் ​செய்து ​கொண்டுவிட்டாள் என்று ​தெரிந்ததும், இனி இந்த ஊரில் ம​ழை​யே ​பெய்யாது என்று சபிக்கும் பிரசி​டென்டின் முகத்தில் இயற்​கை ம​ழை​யை ​கொட்டித்தீர்க்கிறது வன்மத்துடன். தன் உள் முரண்க​ளை​யெல்லாம் க​லைந்துவிட்டு வரப்​போகும் நா​ளைய மனிதசமூகத்​தோடு இயற்​கை இரண்டறக் கலந்து அவனது நா​ளைய வாழ்​வை எல்​லையற்றதாகச் ​செழிக்கச் ​செய்யவிருக்கிறது.

சினிமாவும் மனித வாழ்க்​கையும் கடந்து ​செல்ல ​வேண்டியிருக்கிற தூரங்கள் மிக அதிகம். நீண்ட பயணத்தில் இ​ளைப்பாறல்களும், மகிழ்ச்சியும், உற்சாகமும், உத்​வேகமும் அவசியப்படுகிறது. சின்னச்சின்ன ​வெற்றிகள்கூட மிகப்​பெரிய ​போராட்டங்களுக்கான உற்சாகத்​தையும் உத்​வேகத்​தையும் அளிக்கிறது.

ஒரு பதில் to “அழகர்சாமியின் குதி​ரை”

  1. மீனாட்சி நாச்சியார் said

    This is the best critics to a class movie. Well done.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: