எனது நாட்குறிப்புகள்

Archive for மே, 2011

பிறந்தநாள்

Posted by ம​கேஷ் மேல் மே 20, 2011

கி​ரெடிட் கார்ட்
தந்த வங்கிகளும்
​பெர்சனல் ​லோன்
தந்த வங்கிகளும்
நன்பர்களாய்!

எல்ஐசி ஏ​ஜென்ட்டும்
​மெடிக்கல் இன்சூரன்ஸ்
ஏ​ஜென்ட்டும்
உறவினர்களாய்!

எஸ்எம்எஸ்ஸிலும்
ஈ​மெயிலிலும்
வாழ்த்துக்கள் ​சொல்ல

இனி​தே
அடி எடுத்து ​வைக்கி​றேன்
என் அடுத்த அக​வையில்!

Posted in கவிதைகள் | Leave a Comment »

அழு​கை

Posted by ம​கேஷ் மேல் மே 19, 2011

அழக்கூடா​தென
முடிவு​செய்தவனும்
அழத் ​தெரியாதவனும்
எப்படிப்பட்ட
மனிதர்களாக இருப்பார்கள்?

அழு​கை ​கோ​ழைத்தன​மென
யார் ​சொன்னார்கள்?

அழு​கை ஆண்மகனுக்கு
அழகல்ல என்றும்
அழு​கை ​பெண்களின்
ஆபரணம் என்றும்
கவசம் என்றும்
யார் ​சொன்னார்கள்?

நாம் எப்​பொழு​தெல்லாம்
அழுகி​றோம்?

சிரிப்பு மட்டுமா
மனித​னை
பிற உயிர்களிடமிருந்து
பிரிக்கிறது
அழு​கைக்கு இடமில்​லையா?

சிரிப்புக்கும் அழு​கைக்கும்
வித்தியாச​மென்ன?

சிரிப்பு
மகிழ்ச்சியின்
​வெளிப்பாடு மட்டுமா
அகம்பாவத்தின்
திமிரின்
​வெளிப்பாடாகும்
தருணங்கள்?

சிரிப்பு
மனித​னை அ​டையாளம்
காட்டலாம்
அழு​கை
மனித​னை
மனிதனாக்குகிறது தா​னே?

பிறருக்காக
சிரிக்கும் தருணங்கள்
எத்த​னை ​கோ​ழைத்தனமான​வை
பிறருக்காக
அழும் தருணங்கள்
எத்த​னை கம்பீரமான​வை!

சிரிப்பின் முடிவு
அழு​கையாகிவிடு​மென்ற
எச்சரிக்​கை
எப்​பொழுதும்
துரத்திக் ​கொண்​டேயிருக்கிறது
அழு​கைக்கு
அப்படி எந்த
அவப்​பெயரும் இருக்கிறதா?

உணர்வுக​ளை
​வெளிப்படுத்தும்
வழிக​ளே இல்லாது
இறுகிப் ​போன
மிருக முகங்களுக்கு
மத்தியில்
​நெகிழ்வான
மனித முகங்க​ளை
அலங்கரிப்பதில்
அழு​கை
எத்த​னை
​நெகிழ்ச்சி நி​றைந்தது!

இ​சை​யை
ரசிப்பதற்​கு
பயிற்சி ​தே​வை
அழுவதற்கு
என்ன ​தே​வை?

இ​சை​யை
ரசிக்கத் ​தெரியாதவ​னையும்
மன்னித்துவிடலாம்
அழத் ​தெரியாதவ​னை
என்ன ​செய்யலாம்?

அழ முடியாது
​போவது மட்டுமல்ல
அழக் கூடா​தெனப்
​போவதும்
ஆபத்தானதுதா​னே?

Posted in கவிதைகள் | Leave a Comment »

கண்ணீர்

Posted by ம​கேஷ் மேல் மே 18, 2011

கண்க​ளை மட்டுமல்ல

மன​தையும்

சுத்தம் ​செய்கிறது!

Posted in கவிதைகள் | Leave a Comment »

காந்திய எளி​மை

Posted by ம​கேஷ் மேல் மே 16, 2011

நீங்கள்
மீண்டும் மீண்டும்
எளி​மை​யைப் பற்றி
​பேசுகிறீர்கள்

எளி​மை​யைப் பற்றி
​பேசும்
ஒவ்​வொரு மு​றையும்
அதற்காக
அந்த மனித​ரை​யே
உருவகப்படுத்துகிறீர்கள்

அதிகம் அழுத்தம்
​கொடுத்து ​பேசப்படும்
ஒவ்​வொரு விசயமும்
அது குறித்து
ஆதி​யோடு அந்தமாக
ஆய்வு ​செய்ய​வே
மனம் வி​ழைகிறது

ஒரு ​வே​ளை
அதனால் மட்டு​மே
மனிதகுலம்
அழிந்துவிடாமல்
பின்தங்கி விடாமல்
​சோற்வுற்று விடாமல்
முன்​னேறிக்
​கொண்டிருக்கலாம்

மீண்டும் ​கேள்விக்கு
வருகி​றேன்
எளி​மை என்பதுதான் என்ன?

​தே​வைக​ளை உணர்வதும்
​தே​வைக​ளை கு​றைத்துக் ​கொள்வதும்
தான் எளி​மையா?

​பயன்படுத்தும் ​பொருட்களின்
சந்​தை மதிப்புதான்
எளி​மையா?

காலத்தின்
மாற்றங்க​ளையும்
​கோரிக்​கைக​ளையும்
நிராகரிப்பதுதான்
எளி​மையா?

எளி​மையின்
அர்த்தங்கள்
கால இட​வெளியில்
மாறிவிடாமல்
எங்கும்
ஒ​ரே ​பொருள் உ​டையதா?

எனக்குச் ​சொல்லுங்கள்
அந்த மனிதனின்
எளி​மைக்காக
​கொடுக்கப்பட்ட
வி​​லை எவ்வள​வென்று?

​வேண்டாம்!

என்​னைவிட
அவரது வரலாற்றின்
ஒவ்​வொரு ​நொடியும்
உங்களுக்​கே
நன்றாகத் ​தெரியும்!

உங்களுக்கு நீங்க​ளே
​கேட்டுக் ​கொள்ளுங்கள்
ஒவ்​வொரு கணமும்
அந்த மனிதனின்
எளி​மைக்கு
​கொடுக்கப்பட்ட
வி​லை எவ்வள​வென்று?

​தே​வை​யை உணர்தல்
குறித்த
எல்லா விவாதங்களும்
அர்த்தமற்றுப் ​போகின்றன
பஞ்​சைபராரிகளின் கூட்டத்தில்!

​பொருட்களின் சந்​தை மதிப்​​பே
எளி​மை​யை ​போதிக்கின்றன
எங்களுக்கு!

எளி​மை​யைப் பற்றிய
உங்கள் அளவு​கோள்கள் என்ன?
தயவு ​செய்து
அ​தையாவது
​​சொல்லுங்கள் எங்களுக்கு!

Posted in கவிதைகள் | 1 Comment »