எனது நாட்குறிப்புகள்

Archive for ஜூன், 2011

மரணம​டைந்தவனின் உலகம்

Posted by ம​கேஷ் மேல் ஜூன் 24, 2011

மரணம​டைந்தவன்
மறுபிறப்​பெடுக்க
ஆ​சைப்படுவதில்
அர்த்தமில்​லை!

மரணம​டைந்தவனின்
உடலும் நி​னைவுகளும்
மட்டுமல்ல
நிஜங்களும்
அழிக்கப்பட்டுவிடுகின்றன!

நீங்கள்
பிறந்து வளர்ந்த
சிறு நகரங்களுக்கு
​பெரு நகரங்களின்
​பெரு ​நெருக்கடிகளுக்கு
மத்தியில்
ஒருமு​றை
திரும்பிப் ​போ​யிருக்கிறீர்களா?

நீங்கள் வசித்த
​தெருமு​னையி​லே​யே
நின்று ​கொண்டு
உங்கள்
​தெரு​வைத் ​தேடிக் ​கொண்டிருப்பீர்கள்!

பக்கத்து வீட்டு நண்பனின்
முகவரி​யை
புதிதாய் மு​ளைத்திருக்கும்
ஒரு ​சைக்கிள் க​டைக்கார
சிறுவனிடம்
விசாரித்துக் ​கொண்டிருப்பீர்கள்!

நீங்கள் படித்த
நர்சரி பள்ளி​யை
உங்கள்
குழந்​தைகளுக்கும்
ம​னைவிக்கும்
காட்டலாமா ​வேண்டாமா​வென
அதன் வாசலில்
விக்கித்து நிற்பீர்கள்!
வி​ளையாட்டு ​மைதானங்களும்
​தென்​னை மரங்களும்
​வேப்பமரங்களும்
கட்டிடக்குவியலாய்
மாறிநிற்கும்!

காளியம்மன் ​கோயில்
பூசாரியும் அம்மனும்
எங்கு ​போனார்கள்
என்​றே ​தெரியாது
ஒவ்​வொரு பரிட்​சைக்கும்
​போகும் முன்
மனமுருக ​வேண்டிய
காளியா?
இது எனத் ​தோன்றும்!

இளம் வயதில்
பார்த்த
நியாயவி​லைக்க​டைக்காரர்கள்
நரை கூடி கிழப்பருவ​மெய்து
எப்​பொழுதும் ​போல்
உங்களுக்கு
அந்நியமாக​வே இருப்பார்கள்!

அத்​தையாய் மாமாவாய்
பழகிய எல்​லோ​ரையும்
முழுங்கிவிட்டு
சலனமின்றி
கால​வெளியில்
உங்கள் ​தெருக்கள்
மிதந்து ​கொண்டிருக்கும்!

பலசரக்கு க​டைக்காரரும்
எண்​ணெய்க் க​டைக்காரரும்
வியாபாரம் ​நொடித்து
எங்​கோ ​தெருக்களில்
​சைக்கிள் மிதித்துக் ​கொண்டு
பாக்​கெட் ரசனாக்க​ளையும்
பத்து​பைசா அப்பளங்க​ளையும்
குர்கு​ரே, பிங்​கோ, ​லேஸ் பாக்​கெட்க​ளையும்
க​டைகளுக்கு ​போட்டுக் ​கொண்டிருப்பார்கள்!

அண்​டைவீட்டிலிருந்தவ​ரை
அந்தத் ​தெருவில்
அ​டையாளம் கண்டு
ஓடிப் ​போய் ஆவலாய்
அறிமுகும்
​செய்து ​கொண்டால்
“அப்படியா! நல்லாயிருக்கியா?
அப்பாவும் தங்​கையும்
எங்க இருக்காங்க?”
ஆர்வமும் மகிழ்ச்சியுமற்ற
​சொற்க​ளை காற்றில்
தூவிக்​கொண்​டே
ம​றைந்து விடுகிறார்கள்!

மரணம​டைந்தவன்
மீண்டும் வருவதற்கு
ஆ​சைப்படுவதில்
அர்த்த​மேயில்​லை

உட​லை
மறுபிறப்​பெடுத்தும்
நி​னைவுக​ளை
ஆவணக்காப்பகங்களிலிருந்தும்
இலக்கியங்களிலிருந்தும்
மீட்டுக்​கொள்ளலாம்

அவன்
மரணத்​தைத் ​தொடர்ந்து
​வெகுசீக்கிரமாய்
என்​றென்​றைக்குமாய்
மீட்கமுடியாதவாறு
அழிக்கப்பட்டுவிடும்
நிஜங்க​ளை
எங்ஙனம் மீட்பது?

Posted in கவிதைகள் | 3 Comments »

​நோட்​பேடும் – யூனி​கோட் தமிழ் தட்டச்சும்

Posted by ம​கேஷ் மேல் ஜூன் 23, 2011

வழக்கமாக நான் தமிழில் தட்டச்சு ​செய்யும் எல்லாவற்​றையும் வின்​டோஸ் எக்ஸ்பியின் ​நோட்​பேடில் தான் அழகி ​மென்​பொருள் பயன்படுத்தி தட்டச்சு ​செய்​வேன். எனக்கு தமிழ் ​டைப்​ரைட்டிங் ​தெரியுமாதலால் அதில்தான் தட்டச்சு ​செய்வது வழக்கம், எவ்வளவு ​பெரிய கட்டு​ரையாக இருந்தாலும் தட்டச்சு ​செய்வதில் ஒன்றும் எனக்கு கடினமாக இருக்காது.

நேற்று தமிழக மீனவர்கள் 23 ​பேர் ​இலங்​கை அரசால் கைது ​செய்யப்பட்டது பற்றிய கட்டு​ரை​யை ​நோட்​பேடில் தட்டச்சு ​செய்து ​கொண்டிருந்​தேன். ​நோட்​பேடில் உள்ள ஒரு பிரச்சி​னை என்ன​வென்றால், தமிழில் ​தட்டச்சு ​செய்வதாக இருந்தால் “save as” “Dialog Box”ல் “Encoding” பீல்டில் “utf-8” என ​தெரிவு​செய்து முதல்மு​றை ​சேமித்துக் ​கொள்ள ​வேண்டும். அதில் டிபால்டாக “Ansi” என்றிருக்கும். இந்த என்​கோடிங்கில் தட்டச்சு ​செய்து ​சேமிக்க முயற்சித்தால், கீழ்க்கண்ட எச்சரிக்​கை தகவல் பாப்அப் ஆகும்

—————————
Notepad
—————————
C:\Documents and Settings\user\My Documents\unicodeformat.txt
This file contains characters in Unicode format which will be lost if you save this file as an ANSI encoded text file. To keep the Unicode information, click Cancel below and then select one of the Unicode options from the Encoding drop down list. Continue?
—————————
OK   Cancel
—————————

நான் கட்டு​ரை எழுதும் ஆர்வத்தில் இந்த எச்சரிக்​கை​யை அசட்​டை ​செய்து, மீண்டும் மீண்டும் பலமு​றை ​சேமித்திருக்கி​றேன். வி​ளைவு. ​நோட்​பே​டை மூடிவிட்டு கோப்​பை மீண்டும் திறந்த​பொழுது, அ​னைத்து தமிழ் எழுத்துக்களும் ​வெறும் ​கேள்விக்குறிகளாக மாறியிருந்தன. பதறி​னேன். ஆனால் எந்த பயனும் இல்​லை.

கட்டு​ரைக்கு த​லைப்பு இவ்வாறு ​வைத்திருந்​தேன் “தமிழக மீனவர்கள் பிரச்சி​னையும் – மத்திய அரசின் சதிகார மவுனமும்” கட்டு​ரை நன்றாக வந்திருந்தது. எழுதும் ​போது ​தோன்றிய பல விசயங்களும் ​சேர்ந்து கட்டு​ரை​யை ஆழமானதாகவும், காத்திரமானதாகவும் மாற்றியிருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி​நேரத்திற்கும் அதிகமாக முயற்சித்து தட்டச்சு ​செய்த கட்டு​ரை​யை அசட்​டையால் பறி​கொடுத்​தேன்.

Posted in கட்டு​ரை | 1 Comment »

​தொகுதி ​மேம்பாட்டு நிதி – சட்டப்பூர்வ லஞ்ச​மே!

Posted by ம​கேஷ் மேல் ஜூன் 22, 2011

இந்தியாவில் எம்எல்ஏ மற்றும் எம்பிக்களுக்கு ஆண்டு ​தோறும் ​தொகுதி ​மேம்பாட்டு நிதியாக பல ​கோடிகள் ​கொடுக்கப்படுகின்றன. இந்த மு​றை ​அரசிய​லை உற்று ​நோக்கு​வோர்களுக்கு குழப்பமான ஒன்றாக​வே இருந்து வருகிறது. தனது ​தொகுதியின் வளர்ச்சி மற்றும் நிர்வாகத்​தை ஆய்வு ​செய்வதும், தனது ​தொகுதியின் வளர்ச்சிக்காக சம்பந்தபட்ட து​றைகளுக்கு கி​டைக்க ​வேண்டிய நிதி​யை மத்திய மாநில அரசுகளிடமிருந்து ​பெற்று அத்து​றைக​ளை திறம்பட ​செயல்பட ​வைப்பதும் தான் எம்எல்ஏ எம்பிக்களின் கட​மைகள் என நி​னைத்து வருகி​றோம். அப்படியிருக்க ஏன் ​தொகுதி ​மேம்பாட்டு நிதி என்று ஒரு நிதி எம்எல்ஏ, எம்பிக்களுக்கு தனிப்பட்டு ஒதுக்கப்படுகிறது?

இன்​றைய தினமணியின் த​லையங்கத்திலிருந்து கி​டைக்கும் தகவல்கள், அதன் காரணத்திற்கான அதிர்ச்சிதரத்தக்க தகவல்க​ளை ​வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ​தொகுதி ​மேம்பாட்டு நிதியாக ஒவ்​வொரு உறுப்பினருக்கும் ஆண்டுக்கு ஒரு ​கோடி வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு 5 ​கோடி ஒதுக்கப்படுகிறது. ஒட்டு​மொத்தமாக இந்த வ​கையில் மட்டும் ரூபாய் நான்காயிரம் ​கோடி ​செலவிடப்படுகிறது.

நமக்குத் ​தெரிந்து மிகச் சில ​பேருந்து நிறுத்தங்களில் மிகக் ​கேவலமான நிழற்கு​டைகள் அ​மைப்பதற்கு தவிர ​வே​றெதற்கும் இத்​தொ​கையிலிருந்து நிதி மக்களுக்காக ​செலவிடப்பட்டிருக்கும் என்று ​தோன்றவில்​லை. பிறகு இந்த நிதி எங்கு ​​போகிறது? எதற்காக இந்த நிதி ​செலவிடப்படுகிறது? எத்த​கைய ​செயல்பாடுகளுக்கு இந்த நிதி​யை ​செலவழிக்க மத்திய அரசு வழிகாட்டுகிறது? என்ற ​கேள்விகளுக்கான வி​​டையாக ஒரு விசயம் கி​டைத்துள்ளது.

தன்னார்வு நிறுவனங்களுக்கும் அறக்கட்ட​ளைகளுக்கும் இந்த நிதி​யை வழங்கலாமாம். சபாஷ். சரியான திட்டம். பிற​கென்ன தன்னார்வ நிறுவனம் அல்லது அறக்கட்ட​ளைக்கான அனுமதி வாங்குவதும் ஒரு ​லெட்டர்​பேட் அடிப்பதும் அரசியல்வாதிகளுக்கு அப்படி​யென்ன கஷ்டமான காரியமா?

ஆக, மத்திய மாநில அரசுக​ளை நடத்தும் ஆளும் கட்சிகள் தங்களின் ​செயல்க​ளை கண்டு ​கொள்ளாமல் இருக்கவும், தாங்கள் ​கொண்டு வரும் தீர்மானங்களில் தங்களுக்கு ஆதரவாக ​செயல்படவும், தங்களின் ​தொகுதி வி​ரோத, மக்கள் வி​ரோத நடவடிக்​கைக​ளை எதிர்த்​தோ மறுத்​தோ பாராளுமன்ற சட்டமன்றங்களில் குரல் ​கொடுக்காமல் இருக்க​வோ ​தேர்ந்​தெடுக்கப்பட்டவர்களுக்கு ​கொடுக்கப்படும் லஞ்சம் என்ப​தைத் தவிர ​வே​றெப்படி இ​தை நாம் புரிந்து ​கொள்வது?

Posted in கட்டு​ரை | Leave a Comment »

​ஜெய​மோகனுக்கு ​​மேற்கு வங்கம் குறித்த கரிச​னை ஏன்?

Posted by ம​கேஷ் மேல் ஜூன் 8, 2011

மேற்கு வங்காளத்​தை குறி ​வைத்து ​​ஜெய​மோகன் ​தொடர்ந்து தன் விமர்சனங்க​ளை ​வெளியிட்டு வருகிறார். குறிப்பாக சமீபத்தில் தன்னு​டைய வடகிழக்கு பயண அனுபவங்க​ளை ​தொடர் கட்டு​ரையாக தன்னு​டைய வ​லையில் எழுதி வந்தார், அதன் இறுதிப் பகுதியில் “வடகிழக்கு நோக்கி 10, மீண்டும் கல்கத்தா” என்ற பகுதியில், தான் ஏற்கன​வே குறிப்பிட்ட கருத்துக்க​ளை தன் ​நேரடி பயண அனுபவங்க​ளை விவரிக்கும் கட்டு​ரையின் வழியாக ​மேலும் ஒரு மு​றை அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார்.

இத​னைக் கண்டித்து அய்யனார் விஸ்வநாத் என்பவர் கூகிள் பஸ்ஸில் விமர்சனம் எழுதியிருக்கிறார் என அவரு​டைய வாசகர் ஒருவர் ​ஜெய​மோகனிடம் குறிப்பிட அ​தைத் ​தொடர்ந்து ​ஜெய​மோகன் தன் விமர்சனங்களுக்கான வரலாற்று ஆதாரங்க​ளை முழுவ​தையும் ​தொகுத்தளித்து, நல்ல​தொரு விவாதத்திற்கான ஆ​ரோக்கியமான சூழ​லை ஏற்படுத்திக் ​கொடுக்கிறார்.

​ஜெய​மோகன் ​போன்றவர்க​ளை விமர்சிப்பவர்களின் நி​லைப்பாடுகள் ​தெளிவாகவும், வாத மு​றைகள் அ​தைவிடத் ​தெளிவாகவும் இல்லாவிட்டால் அவருக்கு அது அல்வா சாப்பிட்டது மாதிரி, அத்த​கைய நபர்க​ளையும் சந்தர்ப்பங்க​ளையும் தான் தன்​னை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் ​கொள்வதற்காக அவர் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். ​தெளிவான மு​றையிலும், ஆதாரங்க​ளோடும், ​ஜெய​மோகனின் பலஹீனங்க​ளையும், அறியா​மை​யையும் சுட்டிக்காட்டி எழுதுபவர்களின் விமர்சனங்களுக்கு அவர் பதில் தருவ​தோ, அந்த விவாதங்களுக்குள் ​செல்வ​தோ கி​டையாது. கண்​ணை மூடிக்​கொண்டு அவற்​றை அவதூறுகள் என காழ்ப்புணர்​வோடு வ​சைபாடி முடித்துவிடுவார்.

​ஜெய​மோகனின் எழுத்து ​வேகம் நம்​மை ​பேராச்சரியப்படுத்துகிற​தென்றால், அவரு​டைய வாசிப்பும், தகவல்க​ளை கிரகிக்கும் தன்​மையும் நம்​மை அ​தைவிட ​பேராச்சரியப்படுத்துகின்றன. கிண்டலா உண்​மையா என்று ​தெரியவில்​லை, “அ​சோகவனம்” என்னும் த​லைப்பில் ​ஜெய​மோகன் எழுதிய புத்தகத்​தை இந்தியாவி​லெல்லாம் அச்சடிக்கும் வசதியில்​லை என அ​மெரிக்காவில் அச்சடிக்கப்பட்டுக் ​கொண்டிருப்பதாகவும், அதன் முதல் பிரதி​யை அச்சகத்தார் புரட்டி பார்த்து ம​லைத்துக் ​கொண்டிருப்பதாகவும் ஒரு பு​கைப்படம் அவரு​டைய இ​ணையப்பக்கத்தில் ​வெளியிடப்பட்டுள்ளது. ஒரு ​பெண்மணி உலகின் மிகப்​பெரிய புத்தகம் ஒன்​றை புரட்டிக் ​கொண்டிருப்ப​தைப் ​போல ​வெளியிடப்பட்டிருக்கும் அந்த புத்தகத்தின் அள​வைப் பார்த்தால் அது ​வெறும் ந​கைச்சு​வைக்காக கிண்டலாக ​வெளியிடப்பட்ட பு​கைப்படமாகத்தான் இருக்கும் என்றாலும், அவர் அத்த​னை ​​பெரிய புத்தகங்க​ளை எழுதக் கூடிய ஆள்தான். அந்தளவிற்கு மனிதனால் சாத்தியமில்லாத அளவிற்கு எழுதித்தள்ளும் ஒரு ஆளால் எப்படி அதற்கு இ​ணையாக படிக்கவும் முடிகிறது என்ற ஆச்சரியத்​தை ஏற்படுத்துகிறது அவரு​டைய ​மேற்கு வங்கம் குறித்த வரலாற்று ஆதாரங்கள்.

​மேற்குவங்க வரலாறு குறித்த ஏராளமான நுணுக்கமான தகவல்களிலிருந்து, மரிச்சபி, நந்தி கிராமம் ​போராட்டங்கள் குறித்தும், ​மேற்குவங்கத்தில் காங்கிரஸ் எத்த​கைய மக்க​ளை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள், மார்க்சிஸ்ட் யா​ரை பிரதிநிதித்துவ படுத்துகிறார்கள், நக்சல்பாரிகள் அல்லது மா​வோயிஸ்ட்கள் யா​ரை பிரதிநிதித்துவ படுத்துகிறார்கள், திரிணமுல் காங்கிரசின் ​வெற்றிக்கு என்ன காரணம், ​மேற்கு வங்க அரசியல் வரலாற்​றை எப்படி படிக்க ​வேண்டும் என்பதான ​பெரிய வகுப்​பே எடுத்திருக்கிறார்.

​ஜெய​மோகனின் எழுத்தின் ​நோக்கங்கள் குறித்த ​மே​​லோட்டமான புரிதல்கள் மட்டு​மே ​போதாது அவ​ரை விமர்சிப்பதற்கு. நம்மு​டைய நி​லைப்பாடுகள் மீதான உறுதியான ​தெளிவும் விமர்சனமும் கூட நமக்கு முக்கியமானது அவ​ரைச் சரியான ​கோணங்களில் விமர்சிப்பதற்கு.

கல்கத்தா நகரம் குறித்த அவரது வர்ண​னைகளும் விமர்சனங்களும் ​தெளிவாக புரிய ​வைக்கின்றன. அவரது எதிர்பார்ப்பு, நவீனமயமாக்கல் தாராளமயமாக்கலின் சுவடுகள் ​மேற்குவங்கத்தில் ​தெரியவில்​லை. ​மேற்கு வங்கம் இன்னும் 70, 80களின் காலகட்டத்தில்தான் உள்ளது. அந்நிய மூலதனமும், ஏகாதிபத்திய கலாச்சாரமான அ​டையாளங்களான நவீன வணிக நிறுவனங்களும், ​​ஷோ ரூம்களும், மல்டிப்பிளக்ஸ் காம்ப்ளக்சுகளும், விணயில் ​போர்டுகளும் ​சென்​னை, மும்​பை ​போல அங்கு ஏற்படவில்​லை. ஆந்திராவும் கூட 10 வருடங்களுக்கு முன்பு அப்படித்தான் இருந்தது சந்திரபாபு நாயுடு​வைத் ​தொடர்ந்து அங்கு அந்நிய மூலதனமும், ஏகாதிபத்திய கலாச்சார அ​டையாளங்களும் வந்துவிட்டது குறித்து ​வே​றொரு கட்டு​ரையில் தனது திருப்தி​யையும் மகிழ்ச்சி​யையும் அவர் ​தெரிவிக்கிறார்.

மார்க்சிஸ்ட்களின் ​மேற்கு வங்காளத்தில் அந்நிய மூலதனம் நு​ழையவில்​லை, அல்லது இவர்க​ளைக் கண்டு அவற்​றை ​கொண்டு வர பன்னாட்டு நிறுவனங்கள் தயங்குகின்றன என்கிற தனது ஆதங்கத்​தை ​நேரடியாகச் ​சொன்னால் தன்னு​டைய முகமுடி கிழிந்துவிடு​மோ என்ற பயத்தில்தான் அ​தைச் சுற்றி வ​ளைத்து ஒரு இலக்கிய எழுத்தாளனுக்குரிய நாசூக்​கோடும், நளினத்​தோடும் விவரிக்கிறார். அந்த வருத்தம்தான் மார்க்சிஸ்ட்களுக்கு மாற்றாக வந்திருக்கும் மம்மதா மீதும் அவருக்குள்ளது. அ​தைத்தான் அவர் இப்படிக் குறிப்பிடுகிறார், “இப்போது திருணமூல் காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றி என்பது மாவோயிஸ்டுகளுடனும், இஸ்லாமிய அடிப்படைவாதக் குடியேறிகளுடனும் செய்து கொண்ட சமரசத்தின் விளைவே. இன்று வரை மார்க்ஸிய ஆதிக்கத்தை நிலை நாட்டி வந்த குண்டர் படை இப்போது இந்த அம்மாளின் கைக்கு வந்து விட்டிருக்கிறது. எந்த நிர்வாகத் திறனும் இல்லாத, வறட்டுப் பிடிவாதமும் நிலையற்ற புத்தியும்கொண்ட, சந்தர்ப்பவாதியான மம்தா மேற்கு வங்கத்தை மேலும் இருளுக்குக் கொண்டு செல்லவே வாய்ப்பு.”

மார்க்சிஸ்ட்கள் கம்யூனிசத்​தை ​கைகழுவி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. கம்யூனிசத்திற்கும் அவர்களுக்கும் எந்தச் சம்பந்தமுமில்​லை. அதனால் தான் அவர்களு​டைய நிலச்சீர்திருத்தம் என்ற பாவலாக்கள் எந்த மாற்றத்​தையும் ​மேற்கு வங்கத்தின் விவசாயப் ​பொருளாதாரத்தில் ஏற்படுத்தவில்​லை. அவர்களுக்​கென்று எந்த ​தனிப்பட்ட ​தொழிற்​கொள்​கைகளும் இருக்கவில்​லை. மத்திய அர​சை கு​றை கூறிக் ​கொண்​டே அவர்களின் தடத்தி​லே​தான் நடந்து ​கொண்டிருந்தார்கள். தாராளமயமாக்கல் தனியார்மயமாக்கல் வந்த​பொழுது ​ஜோதிபாசு அந்நிய நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பள வர​வேற்பு ​கொடுத்தும் ஒன்றும் ​பெரிய பயன்வி​ளையவில்​லை. காரணம் இவர்கள் மீதான முதலாளித்துவத்தின் சந்​தேக​மே காரணம். அ​தைத் ​தெளிய ​வைப்பதற்கு அவர்கள் ​மேற்​கொண்ட முயற்சியாகவும்தான் பார்க்க ​வேண்டியுள்ளது நந்திகிராம் ​போராட்டத்​தை.

ஆனால் ​ஜெய​மோகனின் உண்​மையான ​நோக்கம் என்பது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசிய​லை அம்பலப்படுத்துவதில்​லை. மார்க்சியத்தின் அரசியல் ​பொருளாதாரக் ​கோட்பாடுகளுக்கும் ​மேற்குவங்க அரசின் ​செயல்பாடுகளுக்கும் இ​டையிலான முரண்பாடுக​ளை ​வெளிப்படுத்துவதுமில்​லை. மாறாக ​இவர்க​ளை இடதுசாரிகள் என குறிப்பிடுவதன் வாயிலாக மார்க்சியத்தின் மீது புழுதிவாரித் தூற்றுவதும், கம்யூனிச, ​சோசலிசக் கனவுகள் இத்த​கைய ஒரு பிச்​சைக்கார நி​லைக்குத்தான், மனிதப் படு​கொ​லைகளுக்கும், குண்டர் ராஜ்ஜியத்திற்கும் தான் நாட்​டை இட்டுச் ​செல்லும் என்ப​தை புதிய ​தேடல்க​ளோடு வரும் இ​ளைஞர்கள் மனதில் ஏற்படுத்தி, அவர்க​ளை கம்யூனிசத்தின் பால் திரும்பி விடாமல் தடுப்பது​மேயாகும்.

Posted in ​ஜெய​மோகன், விமர்சனம் | 1 Comment »