எனது நாட்குறிப்புகள்

ஊழ​லையும் கருப்புப் பணத்​தையும் எப்படி ஒழிப்பது?

Posted by ம​கேஷ் மேல் ஜூன் 2, 2011

ஊழலுக்கு எதிரான அன்னா ஹசா​ரேவின் உண்ணாவிரதப் ​போராட்டம் ஊழ​லை விசாரிப்பதற்கும் தண்ட​னை வழங்குவதற்குமான உறுதியான நிர்வாக அ​மைப்புகள் ​கோரி நடத்தப்பட்டது. கருப்புப் பணத்​தை ​​கைப்பற்றுவதற்கும் கருப்புப் பணம் ​வைத்திருந்தவர்கள் மீது குற்ற நடவடிக்​கைக​ளை எடுக்கக் ​கோரியும் ​யோகா குரு துறவி பாபா ராம்​தேவினால் சாகும்வ​ரை உண்ணாவிரதம் ஜூன் 4ம் ​தேதி ​தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்​பொழு​தைய இந்திய அரசியல் அ​ஜென்டாவில் ஊழல் மற்றும் கருப்புப் பணத்திற்கு எதிரான ​போராட்டம் முக்கிய விசயமாக ​சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ​போராட்டங்க​ளை நடத்துபவர்கள் ஆளும் வர்க்கங்களுக்கு மிக ​வேண்டியப் பட்டவர்களாக இருந்தாலும், இவர்கள் மீ​தே பல்​வேறு சந்​தேகங்களும், குற்றச்சாட்டுகளும் இருந்தாலும். அவர்களின் கூட்டாளிகள் மீது ஏகப்பட்ட சந்​தேகங்களும் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டாலும், இப்​போராட்டங்கள் தவிர்க்க முடியாமல் இன்​றைய ஆளும் வர்க்கங்களுக்கு ஏ​தோ காரணங்களால் ​நெருக்கடி ​கொடுப்ப​வையாகத்தான் இருக்கின்றன.

அவர்களு​டைய ​போராட்டங்க​ளை கண்டு மத்திய மாநில அரசுகள் பயப்படத்தான் ​செய்கின்றன என்பது அவற்றின் ​எதிர்வி​னைகளின் மூலம் ​தெளிவாகத் ​தெரிகிறது. அன்னா ஹசா​ரேவின் உண்ணாவிரதத்தின் ​போது மத்திய அரசும் மந்திரிகளும் அவ​ரை ​தொடர்பு ​கொள்ளவும் சமாதானப்படுத்தவும், சாத்தியமான வ​ரை வாக்குறுதி ​கொடுத்து ​போராட்டத்​தை ​கைவிடக் ​கோரியும் பகீரத முயற்சிகள் ​செய்தனர். எதுவும் சாத்தியமில்லாத ​பொழுது அவரது பலஹீனங்க​ளையும், ப​ழைய வரலா​றையும், அவரது கூட்டாளிகளின் ​யோக்கிய​தைக​ளையும் மத்திய மந்திரிக​ளே கிண்டலாகவும் நக்கலாகவும் கிளப்பிவிட்டனர்.

இப்​பொழுது யோகா குரு துறவி பாபா ராம்​தேவின் ​போராட்ட அறிவிப்​பைத் ​தொடர்ந்தும் அ​தே ​போன்ற காட்சிகள் அரங்​கேறி ​கொண்டிருக்கின்றன. மத்திய பிர​தேசம் உஜ்ஜயினிலிருந்து ​டெல்லி விமானம் நி​லையம் வந்த ராம்​தே​வை மத்திய மந்திரிகள் விமானம் நி​லையம் ​சென்று சந்தித்து ​போராட்டத்​தை ​கைவிடுமாறு ​கெஞ்சிக் ​கொண்டிருக்கிறார்கள். மற்​றொருபுறம் அவரது ​யோக்கிய​தை குறித்து மத்திய மந்திரி பத்திரி​கையாளர்களிடம் நக்கலடித்துக் ​கொண்டிருக்கிறார். “அவரது ​யோகா கூட்டங்களில் முன் வரி​சையில் அமர்ந்து ​யோகா கற்றுக் ​கொள்ள விரும்புபவர்கள் 25 ஆயிரம் ரூபாய் பணம் கட்ட ​வேண்டும் க​டைசி வரி​சைகளில் அமர்பவர்கள் 2 ஆயிரம் ரூபாய் பணம் கட்ட ​வேண்டும். முற்றும் துறந்த துறவிகள் இப்படியா ​செய்வார்கள்? இத்த​கைய ​செயல்கள் ​செய்பவர்க​ளை துறவிகள் என்று ​சொல்ல முடியாது வியாபாரிகள் என்று தான் ​சொல்ல ​வேண்டும்!”.

இத்த​னை காலம் இந்த மந்திரிகளுக்கு கார்ப​ரேட் சாமியார்களின் நடவடிக்​கைகள் மீதான இப்படிப்பட்ட விமர்சனங்கள் எழாமல் ​போனதற்கு என்ன காரணம் இருக்கும்? ஒரு ​வே​ளை அரசிற்கு எதிராக ​செயல்படுவதால், நா​ளை இத்த​கைய சாமியார்களின் ஆசிரமங்கள் ​சோத​னைகளுக்கும் வருமான வரி ​ரெய்டுகளுக்கும் உள்ளாகக்கூட ஆகலாம், யார் கண்டது?

எது எப்படி​யோ? இந்த ​போராட்டங்கள் அதன் அடிப்ப​டையி​லே​யே மிக பலஹீனமானதாக இருந்த ​போதிலும், இன்​றைக்கு மத்திய அரசு இத்த​கைய ​போராட்டங்க​ளை கண்டு நடுங்குகிறது என்பது ​தெளிவாகத் ​தெரிகிறது. மத்திய மாநில அரசுகளின் பயத்திற்கு அடிப்ப​டை இவர்கள் அல்ல என்ப​தை நாம் ​தெளிவாகப் புரிந்து ​கொள்வதற்கு நமக்கு கு​றைந்த அளவி​லேனும் சர்வ​தேச மற்றும் ​தேச நி​லை​மைகள் குறித்து ஞானம் ​தே​வைப்படுகிறது.

ஒரு ​தெரு​வோர க​டைநடத்தும் இ​ளைஞனுக்கு உள்ளுர் காவல்து​றையால் இ​ழைக்கப்பட்ட அநீதி அந்த நாட்​டை பல பத்தாண்டுகளாக ஆட்சிபுரிந்து ​கொண்டிருந்த சர்வாதிகாரி தூக்கி​யெறியப்படுவதில் ​போய் முடிந்தது. அத​னைத் ​தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் மிகச் சாதாரணமாக சட்டத்திற்கு உட்பட்டதாகவும் அ​டையாள அணிவகுப்புகள் ​போலவும் ​தொடங்கிய சிறு ​போராட்டங்கள் ஆட்சியாளர்க​ளை​யே தூக்கி​யெறியும் நம் காலத்தின் மிகப் ​பெரும் புரட்சிகளாக மாறியது.

மற்​றொருபுறம், உள்நாட்டில் இந்தியா​வில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரலாறு காணாத ஊழல், அராஜகம், வி​லைவாசி உயர்வு ஆகிய​வையும், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் என்ற ​பெயரில் நாட்டின் இயற்​கை வளங்களும், ​செல்வங்களும், உ​ழைப்பும், மக்களின் அடிப்ப​டை வாழ்வாதாரங்களும் அந்நிய ஏக​போக நிறுவனங்களாலும் உள்நாட்டு ​பெரு முதலாளிகளாலும் சூ​றையாடி ​கொள்​ளையடிக்கப்படுகின்றன. இவற்றின் வி​ளைவாக ஏற்பட்டிருக்கும் மக்களின் கடு​மையான அதிருப்தியும் விசுவரூபம் எடுத்துக் ​கொண்டிருக்கிறது.

ஆக​வே மத்திய அரசு, ஏ​தடா இந்த சிறுபிள்​ளைத்தனமான உண்ணாவிரத வி​ளையாட்டுக்கள் ​பெரும் ​​நெருக்கடிகளுக்குள் ​கொண்டு ​போய் தள்ளிவிடு​மோ என்று அச்சம​டைந்துள்ளன. இந்திய மக்கள் முழுவதும் விழித்துக் ​கொண்டு எழுந்து ஆட்சியாளர்களுக்கு எதிராக ​போராடுவதற்கான முன்தயாரிப்புகளாக இ​வை ஆகிவிடு​மோ என்ற பயம் அவர்களது பதட்டம் நி​றைந்து எதிர்வி​னைகளிலும் சமாளிப்புகளிலும் ​தெளிவாகத் ​தெரிகிறது.

செய்தி மீடியாக்களும் முழு​மனதுடன் இப்​போராட்டங்க​ளை ஆதரிக்கவில்​லை. ஒரு சமயம் ஆதரிப்ப​தைப் ​போல ​பேசினாலும், இந்த ​போராட்டங்கள் குறித்தும் ​போராட்டத்​தை முன்னின்று துவங்குபவர்கள் குறித்தும் ​தொடர்ச்சியாக ​பெருத்த சந்​தேகங்க​ளை கிளப்பிவிட்டுக் ​கொண்டுதான் இருக்கிறார்கள். இவற்றிற்கான காரணங்க​ளை ​செய்தி மீடியாக்கள் யாரின் கட்டுப்பாடுகளில் இருக்கிறது என்ற ​கேள்விக்கான வி​டைகளில் தான் கண்டு ​கொள்ள முடியும் என்​றே ​தெரிகிறது.

இப்​பொழுது துவங்கியிருக்கும் இப்​போராட்டங்கள் இன்​றைய இந்திய சமூக ​பொருளாதார அரசியல் அ​மைப்பில் ​பெரியதாக மாற்றம் எதுவும் ​செய்யாம​லே​யே புதியதாக ​மேலும் சில சிறப்பு நிர்வாக மற்றும் நீதி அ​மைப்புக​ளை உருவாக்குவதன் மூலமாக, கடும் நடவடிக்​கைகள் எடுப்பதன் மூலமாக கு​றைந்தபட்சம் கட்டுக்குள் ​கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்​கைகளிலிருந்து முன்​னெடுக்கப்படுகிறது. நாம் இன்​றைக்கு வாழ்ந்து ​கொண்டிருக்கும் இந்த அரசியல் அ​மைப்பு, சமூக மு​றைக்குள்​ளே​யே ஊழல் மற்றும் கருப்புப் பணத்​தை முழு​மையாக ஒழித்துவிடமுடியமா?

ஊழல் என்பதும் கருப்புப் பணம் என்பதும் ​நோயா? அல்லது ​நோய்க்கான அறிகுறிகளா? என்ப​தை ​தெளிவாக புரிந்து ​கொள்வதில்தான் அடங்கியிருக்கிறது என்று நி​னைக்கி​றேன். இவற்​றை ​நோய் என்று கருது​வோ​மேயானால் இத​னைத் தீர்ப்பதன் வாயிலாக நமது சமூகத்​தை காக்க முடியும். இத​னை ​நோய்க்கான அறிகுறி என புரிந்து ​கொள்​வே​மேயானால், இந்த அறிகுறிகளுக்கான ​நோ​யையும், அந்த ​நோ​யைத் தீர்ப்பதற்கான வழிக​ளையும் கண்ட​டைய ​வேண்டும்.

ஊழ​லையும் கருப்புப் பணத்​தையும் பிரச்சி​னையாக எதிர்​கொள்ளும் பலரிடமும் காணப்படும் ​பொதுவான ​போக்கு, இவற்​றை நம் சமூகத்​தை பிடித்த ​நோயாகக் காணும் ​போக்​கைத்தான் பார்க்க முடிகிறது. அதாவது நாம் நி​னைத்துக் ​கொண்டிருக்கி​றோம் நமது அரசியல் அ​மைப்பு, ​பொருளாதார ​செயல்பாடுகள், நீதி, நிர்வாக, ஜனநாயகக் ​கோட்பாடுகள் நிறுவனங்கள் அ​னைத்தும் சரியான​வைதான், அவற்​றை ந​டைமு​றைப்படுத்துபவர்கள் தான் சரியில்​லை. அ​யோக்கியர்களும் ​கொள்​ளையர்களும்தான் அத்​த​கைய பதவிகளுக்கு வருகிறார்கள் அது தான் எல்லா பிரச்சி​னைகளுக்கும் காரணம் என்று கருதுகி​றோம். அதன் வி​ளைவுதான் நாம் கதாநாயகர்களின் வரு​கைக்காக காத்துக் ​கொண்டிருக்கும் ஒரு மனப்​போக்குக்கு பழகக் காரணமாகிவிட்டது.

நம் நாட்டின் வரலா​றையாவது ஓரளவு கூர்ந்து கவனித்திருந்தாலும், கு​றைந்தபட்சம் நம் சமகால வரலா​றையாவது கூர்ந்து கவனித்தால் நமக்கு ​​மே​லே கண்ட நம் புரிதல்களில் உள்ள சிக்கல்கள் புரியத்துவங்கும். ஊழல் நம் நாட்டில் குறிப்பாக சுதந்திரம் ​பெற்ற காலம் முத​லே இருந்து வந்திருந்தாலும் சமீப நாட்களாகத்தான் அ​வை இத்த​கைய அபாய எல்​லைக​ளையும், தீவிரத்​தையும் அளவுரீதியாகவும் பண்புரீதியாகவும் எட்டியுள்ளது. காரண​மென்ன?

​தொன்னூறுகளில் இந்தியாவில் தனியார்மயமாக்கல் உலகமயமாக்கல் என்ற ​கோட்பாடுகள் ந​டைமு​றைப்படுத்தப்பட்டது. இவற்றின் வி​ளை​வென்ன? அந்நிய முதலீடுகளுக்கான த​டைகள் நீக்கப்பட்டன, நீண்ட ஐம்பது ஆண்டுகளில் இந்திய மக்களின் உ​ழைப்பால் உருவாக்கி வளர்க்கப்பட்ட பல ஆயிரம் ​கோடி ரூபாய் மதிப்புள்ள ​பெரும் அரசுத்து​றை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படத் துவங்கின, அரசின் சமூகப் ​பொறுப்புகள் அ​னைத்தும் ​கைகழுவப்பட்டன, மருத்துவம், சுகாதாரம், கல்வி என அ​னைத்து து​றைக​ளையும் அரசு படிப்படியாக தனது கட்டுப்பாட்டிலிருந்தும் பராமரிப்பிலிருந்தும் விலக்கிக் ​கொள்ளத் துவங்கியது. தனியார் அத்து​றைகளில் ​செயல்பட முழு​மையாக அனுமதித்தது. இந்தியாவில் ​நேரடியாக ​தொழில் துவங்க அந்நிய பன்னாட்டு கம்​பெனிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டன.

முழு​மையாக இந்தியாவிற்குள் இருக்கும் ​பெரும் முதலாளிகளுக்கும், பிணந்திண்ணிக் கழுகுக​ளைப் ​போலவும் ஓநாய்க​ளைப் ​போலவும் இந்தியாவின் கதவுக​ளை எப்​பொழுது திறப்பார்கள் உள்​ளே புகுந்து ​வேட்​டையாடிக் ​கொழுக்கலாம் எனக் காத்திருந்த பன்னாட்டுக் கம்​பெனிகளுக்குமான அ​னைத்துக் கட்டுப்பாடுகளும் படிப்படியாக நீக்கப்படத் துவங்கியதும், காட்டா​றென உள்​ளே வந்தனர், இங்கிருந்த அரசுத்து​றை முழுவதும் லஞ்சமும் ஊழலும் முன்​னெப்​போதும் இல்லாத அளவிற்கு த​லைவிரித்தாடத் துவங்கியது, அரசியல்வாதிகளுக்கு அவர்க​ளே எதிர்பாராத அளவிற்கு ஊழல் ​செய்வதற்கான பல வாசல்களும் திறந்தன. கிட்டத்தட்ட இந்திய அரசியல்வாதிகள் திக்குமுக்காடிப் ​போயினர் என்​றே ​சொல்லலாம். அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் எம்ஜிஆரின் அண்ணன் சக்கரபாணி ​கொள்​ளையர்களின் கு​கைக்குள் அ​டைந்த அதிர்ச்சி, ஆனந்தம், மகிழ்ச்சி​யை ​வெளிப்படுத்தும் ஒரு நி​லைக்கு ஆளானார்கள்.

இந்தியாவின், இந்திய மக்களின் வளங்க​ளையும் ​சொத்துக்க​ளையும் அந்நிய பன்னாட்டு நிறுவனங்களும் இந்திய ​பெரு முதலாளிகளும் ​கொள்​ளையடிப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியின் பிரதிபலன்தான் வரலாறு காணாத லஞ்சம், ஊழல், கருப்புப்பண ​மோசடிகளுக்கான அடிப்ப​டை.

தனியுட​மை சமூக மு​றையிலிருந்தும், முதலாளித்துவ உற்பத்தி மு​றையிலிருந்து பிரிக்க முடியாதது லஞ்சம், ஊழல், ​வே​லையில்லா திண்டாட்டம், இயற்​கை ​வளங்கள் சீரழிக்கப்படுதல், மி​கை உற்பத்தியும் வாங்கும் சக்தி அற்றுப் ​போகும் மக்கள் திரள் வளர்ச்சி அ​டைதல், வறு​மை, வி​லைவாசி உயர்வு, குற்ற நடவடிக்​கைகள் அதிகரித்தல், கலாச்சார சீர்​கேடுகள் ​போன்ற அ​னைத்தும்.

​சோசலிச சித்தாந்த​மே இதற்கான முழு​மையான முரணில்லாத உறுதியான மாற்று. ​சோசலிசத்துக்கான ​போராட்டத்​தை முன்​னெடுத்த​லே, அத்த​கைய கண்​ணோட்டத்துடன் இப்பிரச்சி​னைக​ளை விவாதிப்ப​தே சரியான அணுகுமு​றை.

இ​தைப் புரிந்து​கொண்டுதான் பலரும் ​சோசலிசத்​தை ஏற்றுக் ​கொள்வ​தைவிட லஞ்சம், ஊழல், கருப்புப் பணத்​தை​யே சகித்துக் ​கொண்டுவிடலாம் என்கிற முடிவுக​ளோடு எழுதியும் ​பேசியும் வருகிறார்கள்.

சரி​யோ, தவ​றோ, ​தெரிந்​தோ ​தெரியாம​லோ அன்னா ஹசா​ரே, பாபா ராம்​தேவ் ​போன்றவர்கள் முன்​னெடுக்கும் இப்பிரச்சி​னைகள் தவிர்க்க முடியாமல் இந்திய மக்க​ளை குறிப்பாக உ​ழைக்கும் மக்கள் மற்றும் இ​ளைஞர்க​ளை இத்​த​கைய ​கோணங்களில் இப்பிரச்சி​னைக​ளை பார்க்க இட்டுச் ​செல்லும் என்பதுதான் வரலாறு.

புரட்சி என்பதும் சமூக மாற்றம் என்பதும் பரி​சோத​னைக்கூட ​செயல்பாடுகள் அல்ல. ரத்தமும் ச​தையுமான உயி​ரோட்டமான வாழ்க்​கைப் ​போராட்டங்கள் அ​வை பரிசுத்தமானதாக ​தோன்றி பரிசுத்தமான வழிகளில் இயங்கி பரிசுத்தமான முடிவுக​ளை ​நோக்கி ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் ​செல்வதில்​லை.

​நெருப்​பை படமாக வ​ரையச் ​சொல்லி பார்ப்பதற்கும் ​நெருப்​பை அதன் இயல்பில் இயற்​கையாக ​நேரில் பார்ப்பதற்குமான வித்தியாசம் ​சோசலிசத்​தை படிப்பதற்கும் ந​டைமு​றையில் பார்ப்பதற்குமான வித்தியாசம். ​நெருப்​பை பற்றிய படத்தில் ​நெருப்பு ஒரு ​கோபுரத்​தை ​போல வ​ரையப்பட்டிருக்கும் சிவப்பும் மஞ்சளும் கலந்து வண்ணம் தீட்டப்பட்டிருக்கும் ​நேரில் ​நெருப்பு படத்தில் பார்ப்பது​போல் இருப்பதில்​லை. அது எரிவதற்கு ​தே​வையான மூலப்​பொரு​ளை கரித்து சாம்பலாக்கி எரியும். ​நெருப்பிலிருந்து ஒளி மட்டும் வருவதில்​லை. ​வெப்பமும் வரும். ​நெருப்பு எரிந்து ​கொண்டிருக்கும் இடத்தில் காற்​றெங்கும் சாம்பலும் பு​கையும் படர்ந்திருக்கும், கண்களுக்கு காட்சிகள் ​தெளிவாகத் ​தெரிவதில்​லை. எரியும் ​நெருப்பிலிருந்து எரியக் ​கொடுக்க ​வேண்டிய ​பொருட்க​ளையும் பாதுகாக்க ​வேண்டிய ​பொருட்க​ளையும் பாதுகாப்பதற்கு தனித்திற​மையும் ​தெளிவும உறுதியும் ​தே​வை. ​நெருப்பு ஒன்றும் அத்த​னை சி​நேகமானதல்ல. ​நெருப்​போடு உறவாடவும் ​நெருப்​போடு வாழவும் கற்றுக் ​கொள்வ​தே சரியானது. ஏ​னெனில் ​நெருப்பின்றி வாழமுடியாது.

சமூகம் மாறிக்​கொண்​டே இருக்கிறது. சமூகம் முன்​னோக்கி வளர்ச்சி அ​டைந்து ​கொண்​டே இருக்கிறது. மனித சமூகம் தவிர்க்கமுடியாமல் ஒரு லட்சிய சமூகத்திற்கு ​தே​வையான எல்லா ​பொருட்க​ளையும் ​சேகரித்துக் ​கொண்டும், ப​டைத்துக் ​கொண்டும் இருக்கிறது. லட்சிய சமூகத்தில் வாழ்வதற்கு ​தே​வையான எல்லா குணங்க​ளையும், நடவடிக்​கைக​ளையும் மனித சமூகம் தன்னகத்​தே ​தொடர்ந்து வளர்த்துக் ​கொண்டு வருகிறது. வரலா​றையும், ​போராட்டங்க​ளையும் உற்று ​நோக்கி அதன் சாரத்​தை புரிந்து ​கொள்ளத்தான் மார்க்சியம் பயிற்சி அளிக்கிறது.

விடுத​லைப்ப​டைகளுக்கு முதல் இராணுவ பயிற்சியாளர்கள் எப்​பொழுதும் ஆளும் வர்க்க இராணுவத்திலிருந்துதான் வருகிறார்கள். இந்திய வரலாற்றில் மீண்டும் ஒரு மு​றை ஆளும் வர்க்கங்க​ளோடான ஒரு தீர்மானகரமான ​போராட்டத்திற்கு உ​ழைக்கும் மக்க​ளை தயார்படுத்துவதற்கான ​போர்ப் பயிற்சிகள் துவங்கிவிட்டன.

3 பதில்கள் to “ஊழ​லையும் கருப்புப் பணத்​தையும் எப்படி ஒழிப்பது?”

  1. உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.

    Share

  2. chithragupthan said

    இன்னுமா லோக்பால் என்ற பெயரில் கூத்தடிக்கிறார்கள் என்பது புரியவில்லை. பிரதமர், நீதியரசர்கள், மந்திரிபிரதானிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை லோக்பால் மசோதாவிற்குள் கொண்டுவரக்கூடாது என்ற கருத்து தோன்றி 2 நாட்களாக வேட்டி மட்டும் கிழிபடவில்லை. தற்போது மாநில முதல்வர்களெல்லாம் இதில் கருத்து சொல்ல வேண்டுமாம்? ஆக லோக்பால் வந்த(தால்)பிறகும் தாசில்தார், மோட்டார் வாகன ஆய்வாளர், வி ஏ ஓ போன்ற லஞ்சம் வாங்குபவர்களை மட்டும் அந்த சட்டம் தண்டிக்கும் போலும் – காதுல பூ

  3. பலரும் ​சோசலிசத்​தை ஏற்றுக் ​கொள்வ​தைவிட லஞ்சம், ஊழல், கருப்புப் பணத்​தை​யே சகித்துக் ​கொண்டுவிடலாம் என்கிற முடிவுக​ளோடுதான் இருக்கிறார்கள்.சிலருக்கு எதுவும்
    புரிவதில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: