எனது நாட்குறிப்புகள்

மரணம​டைந்தவனின் உலகம்

Posted by ம​கேஷ் மேல் ஜூன் 24, 2011

மரணம​டைந்தவன்
மறுபிறப்​பெடுக்க
ஆ​சைப்படுவதில்
அர்த்தமில்​லை!

மரணம​டைந்தவனின்
உடலும் நி​னைவுகளும்
மட்டுமல்ல
நிஜங்களும்
அழிக்கப்பட்டுவிடுகின்றன!

நீங்கள்
பிறந்து வளர்ந்த
சிறு நகரங்களுக்கு
​பெரு நகரங்களின்
​பெரு ​நெருக்கடிகளுக்கு
மத்தியில்
ஒருமு​றை
திரும்பிப் ​போ​யிருக்கிறீர்களா?

நீங்கள் வசித்த
​தெருமு​னையி​லே​யே
நின்று ​கொண்டு
உங்கள்
​தெரு​வைத் ​தேடிக் ​கொண்டிருப்பீர்கள்!

பக்கத்து வீட்டு நண்பனின்
முகவரி​யை
புதிதாய் மு​ளைத்திருக்கும்
ஒரு ​சைக்கிள் க​டைக்கார
சிறுவனிடம்
விசாரித்துக் ​கொண்டிருப்பீர்கள்!

நீங்கள் படித்த
நர்சரி பள்ளி​யை
உங்கள்
குழந்​தைகளுக்கும்
ம​னைவிக்கும்
காட்டலாமா ​வேண்டாமா​வென
அதன் வாசலில்
விக்கித்து நிற்பீர்கள்!
வி​ளையாட்டு ​மைதானங்களும்
​தென்​னை மரங்களும்
​வேப்பமரங்களும்
கட்டிடக்குவியலாய்
மாறிநிற்கும்!

காளியம்மன் ​கோயில்
பூசாரியும் அம்மனும்
எங்கு ​போனார்கள்
என்​றே ​தெரியாது
ஒவ்​வொரு பரிட்​சைக்கும்
​போகும் முன்
மனமுருக ​வேண்டிய
காளியா?
இது எனத் ​தோன்றும்!

இளம் வயதில்
பார்த்த
நியாயவி​லைக்க​டைக்காரர்கள்
நரை கூடி கிழப்பருவ​மெய்து
எப்​பொழுதும் ​போல்
உங்களுக்கு
அந்நியமாக​வே இருப்பார்கள்!

அத்​தையாய் மாமாவாய்
பழகிய எல்​லோ​ரையும்
முழுங்கிவிட்டு
சலனமின்றி
கால​வெளியில்
உங்கள் ​தெருக்கள்
மிதந்து ​கொண்டிருக்கும்!

பலசரக்கு க​டைக்காரரும்
எண்​ணெய்க் க​டைக்காரரும்
வியாபாரம் ​நொடித்து
எங்​கோ ​தெருக்களில்
​சைக்கிள் மிதித்துக் ​கொண்டு
பாக்​கெட் ரசனாக்க​ளையும்
பத்து​பைசா அப்பளங்க​ளையும்
குர்கு​ரே, பிங்​கோ, ​லேஸ் பாக்​கெட்க​ளையும்
க​டைகளுக்கு ​போட்டுக் ​கொண்டிருப்பார்கள்!

அண்​டைவீட்டிலிருந்தவ​ரை
அந்தத் ​தெருவில்
அ​டையாளம் கண்டு
ஓடிப் ​போய் ஆவலாய்
அறிமுகும்
​செய்து ​கொண்டால்
“அப்படியா! நல்லாயிருக்கியா?
அப்பாவும் தங்​கையும்
எங்க இருக்காங்க?”
ஆர்வமும் மகிழ்ச்சியுமற்ற
​சொற்க​ளை காற்றில்
தூவிக்​கொண்​டே
ம​றைந்து விடுகிறார்கள்!

மரணம​டைந்தவன்
மீண்டும் வருவதற்கு
ஆ​சைப்படுவதில்
அர்த்த​மேயில்​லை

உட​லை
மறுபிறப்​பெடுத்தும்
நி​னைவுக​ளை
ஆவணக்காப்பகங்களிலிருந்தும்
இலக்கியங்களிலிருந்தும்
மீட்டுக்​கொள்ளலாம்

அவன்
மரணத்​தைத் ​தொடர்ந்து
​வெகுசீக்கிரமாய்
என்​றென்​றைக்குமாய்
மீட்கமுடியாதவாறு
அழிக்கப்பட்டுவிடும்
நிஜங்க​ளை
எங்ஙனம் மீட்பது?

3 பதில்கள் to “மரணம​டைந்தவனின் உலகம்”

 1. ஆம்… வாழும்பொழுதே மரணத்துவிடுகிறோம்.

  தொலைத்தைவைகளை எங்கு தேடுவது

  குமிழ்களாய்.. அலைஅலையாய்.. பேரிச்சலாய்.

  .நினைவுகள் பிராண்டிக்கொண்டுகிற்து…?

 2. என் சிறு வாழ்க்​கையின் வழியாக – எனக்குச் ​சொல்லப்பட்டுக்​கொண்டிருக்கும் தத்துவங்களின் ஊடாக – எனக்கான தத்துவங்க​ளை ​சேகரித்துக் ​கொள்ள முயற்சிக்கி​றேன்.

  என் வாழ்வனுபவங்கள், அதன் தத்துவ முடிச்சுக​ளை கண்டு​கொண்டதாக உணரும் தருணங்களில் எனக்கான இலக்கிய வடிவங்களில் ​பேரார்வத்​தோடு அ​வை ​வெளிப்பட மு​னைகிறது.

  என்னு​டைய ​மொழி மற்றும் இலக்கிய பரிச்சயமும், ஆற்றலும், எப்​பொழுதும் என் அனுபவங்க​ளை ​வெளிப்படுத்துவதில் முழு​மையான பயனளிப்பதாக இல்​லை என்கிற வருத்தத்துட​னே என் ப​டைப்புகள் ​வெளிப்படுகின்றன.

  உங்க​ளைப்​போன்றவர்களின் அனுபவங்க​ளை – என் ப​டைப்புகளின் வழியாக உங்களுக்குள் – மீட்ட முடிகிறது என்பது ​போன்ற உங்களின் பின்னூட்டங்கள் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

 3. cheema said

  ethanai murai padithalum ovvoru muraiyum manathirkul inam puriyatha oru vali …..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: