எனது நாட்குறிப்புகள்

Archive for ஜூலை, 2011

எப்படிக் கற்பிப்பது? எது ஜனநாயகம்?

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 14, 2011

“மீ​னைக் ​கொடுப்ப​தை விடு

மீன் பிடிக்கக் கற்றுக் ​கொடு”

மீனின் சு​வை உணர்ந்தவன்

மறுநாள் வருவான்

எப்படி மீன் பிடிப்ப​​தெனக் ​கேட்டு!

வரும் வ​ரை . . .

Posted in கவிதைகள் | Leave a Comment »

சாத்தானின் கனவு

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 13, 2011

கடவுளர் மீதும்

கதாநாயகர்கள் மீதும்

எனக்கு நம்பிக்​கையில்​லை

என்பது உன் வாதம்!

இன்​னொன்​றையும் ​சேர்த்துக் ​கொள்

“விருப்பமுமில்​லை!”

கடவுளர்களும் கதாநாயகர்களும் இல்லாத

​பேருலகம் குறித்த

தீராத கனவுக​ளோடு

​பேயாக அ​லையும்

சாத்தான்களில் ஒருவன் நான்!

Posted in கவிதைகள் | 2 Comments »

இப்படியாகத் ​தொ​லைகிறது வாழ்க்​கை . . .

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 12, 2011

பொய்தான் ​சொல்கி​றேன் நா​னென்று அவனுக்கும்

நம்பவில்​லை அவ​னென்று எனக்கும்

​தெரிந்துதான் இருக்கிறது

உண்​மை​யைத்தான் ​கேள்விப்பட்டதாக அவனும்

அவன் நம்பித்தான் விட்டதாக நானும்

எங்க​ளை நாங்க​ளே ஏமாற்றிக் ​கொள்வ​தைத் தவிர

உறவுக​ளைத் ​தொடர

​வேறு என்னதான் வழியிருக்கிறது எங்கள் முன்னால்

Posted in கவிதைகள் | Leave a Comment »

ஒரு மையப்புள்ளி

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 10, 2011

அந்த மாதிரியான முடிவுக​ளை
எல்​லோராலும் எடுத்துவிட முடியாது!

வரலாற்றின் அபூர்வமான நிகழ்வுகள்!
அது ​போன்ற ​வேறு நிகழ்வுகள் குறித்து
​வே​றெந்த வரலாற்றுக் குறிப்புகளும்
நம்மி​டை​யே இருப்பதாகத் ​தெரியவில்​லை!

இர​வோடு இரவாக
ம​னைவி​யையும், குழந்​தைக​ளையும்
அரண்ம​னை​யையும், அதிகாரத்​தையும்
தாண்டிச் ​செல்வ​தென்பது
எப்படிச் சாத்தியமாகும்?

எனக்​கென்ன​வோ
​கெளதம புத்தனுக்கும்
எர்னஸ்​டோ ​சே கு​வேராவுக்கும்
ஏ​தோ ​தொடர்பிருப்பதாக​வே ​தோன்றுகிறது!

Posted in கவிதைகள் | 2 Comments »