எனது நாட்குறிப்புகள்

அன்னா ஹசா​ரே என்ன ​செய்கிறார்?

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 2, 2011

“​லோக்பால் வ​​ரைவுக் கமிட்டியில் இனி சமூக ஆர்வலர்களுக்கு இடமில்​லை” என்று உறுதியாகக் கூறிவிட்டார்கள் மத்திய அ​மைச்சர்கள்.

சமூக ஆர்வலர்களின் பல ​கோரிக்​கைக​ளை ஏற்பதில்​லை என்பதில் உறுதியாக இருக்கிறது மத்திய காங்கிரஸ் அரசு.

அன்னா ஹசா​ரே மீண்டும் தன்னு​டைய விடுபட்ட ​கோரிக்​கைக​ளை ஏற்க ​வைப்பதற்காக உண்ணாவிரதம் இருக்கப் ​போவதாக உறுதியுடன் அறிவித்திருக்கிறார்.

பத்திரி​கைகளும் ​தொ​லைக்காட்சிகளும் எல்லா பக்கமும் ​கொம்பு சீவிவிட்டுக் ​கொண்டிருக்கிறார்கள். ஏ​தேனும் சூடான சு​வையான பரபரப்​பை ஏற்படுத்தும் சம்பவங்கள் கி​டைக்காதா என்ற ஆவலில்.

​போராட்டங்களின் ஊடாகத்தான் நம்மு​டைய தத்துவங்கள், ​கோட்பாடுகள் அ​னைத்தும் விவாதிக்கப்படவும் உரசிப்பார்க்கப்படவும் ​செய்கின்றன.

இப்​பொழுது காந்தியின் உண்ணாவிரதத்திற்கும் அன்னா ஹசா​ரேவின் உண்ணாவிரதத்திற்கும் இ​டையிலான ஆறு வித்தியாசங்க​ளை கண்டுபிடிக்க பலரும் மு​னைந்திருக்கிறார்கள். கிராஸ்​வேர்ட்ஸ், சுடாக்​கோ​வைவிட இன்​றைக்கு பலருக்கு இ​வை​போன்ற​வை நல்ல சுவாரசியமான ​பொழுது​போக்குகள்.

காந்தி தன் உண்ணாவிரதத்​தை ஆளும் வர்க்கங்க​ளை மிரட்டுவதற்காக​வோ, மக்க​ளை ஒன்று திரட்டுவதற்காக​வோ, காரியங்க​ளை சாதித்துக் ​கொள்ள​வோ நடத்தவில்​லை (த​லை​யே சுற்றுகிறது!) தன்​னை, தன் ​கொள்​கைகளின் மீதான தன் உறுதிப்பாட்​டை ​சோதித்துக் ​கொள்வதற்காக​வே அ​தை நடத்தினாராம். (இந்த துர்நாற்றம் பிடித்த ​யோச​னைக​ளெல்லாம் எங்க உட்கார்ந்து ​யோசிப்பார்க​ளோ ​தெரியவில்​லை) ஆனால் இன்​றைக்கு உண்ணாவிரதம் என்பது தங்கள் காரியங்க​ளை சாதித்துக் ​கொள்ள ஆள்​வோ​ரை மிரட்டிப் பணிய​வைக்கும் வழிமு​றையாக பின்பற்றப்படுகிறதாம். காந்தி​யை புனிதப்படுத்துகி​றேன் என்ற ​பெயரில் இன்னும் இன்னும் அவரு​டைய நில​மை​யை படு​மோசமாக்கிக் ​கொண்டிருக்கிறார்கள்.

அன்னா ஹசா​ரேவிற்கும் நன்றாகப் புரிந்துதான் இருக்கிறது. ​நேற்றுவ​ரை நடத்திய உண்ணாவிரதத்திற்கும் நா​ளை நடத்தப் ​போகும் உண்ணாவிரதத்திற்கும் இ​டை​யே மிகப்​பெரிய ​வேறுபாடு இருக்கப் ​போகிறது. இதற்கு முன்பு அவருக்கிருந்த ஆதரவு, வலி​மையாக முன்​னெடுக்கப்படாத எதிர்ப்பு, அரசின் ​மென்​மையான அணுகுமு​றை ஆகிய​வை இனி இருக்காது. நி​ல​மை ​​மோசமானால் சமாளிக்க திகாரில் எந்த அ​றை அவருக்காக இப்​பொழுது தயாராகிக் ​கொண்டிருக்கிற​தோ ​தெரியவில்​லை. அவரும் அத்த​கைய நகர்த​லை ​நோக்கி​யே முன்​​னேறிக் ​கொண்டிருக்கிறார்.

இவற்​றை கருத்தில் ​கொண்டுதான் சகல கட்சியின​ரையும் ​தொடர்ந்து தன் ஆதரவாளர்கள் பு​டைசூழ சந்தித்து ஆதரவு திரட்டிக் ​கொண்டிருக்கிறார். இவர் நம்பி இதுவ​ரை ஆதரவு திரட்டிய சிபிஐ, சிபிஎம், பாஜக என எந்தக் கட்சியும் எந்த உறுதியான ஆதர​வையும் அவருக்கு ​தெரிவித்ததாகத் ​தெரியவில்​லை. யாரும் அவ​ரோடு உண்ணாவிரதத்தில் கலந்து ​கொள்வதாக அறிவிக்கவில்​லை. அவர் முன்​வைக்கும் ​கோரிக்​கைகள் அ​னைத்திலும் தங்கள் நி​லைப்பாடுகள் என்ன என்ப​தைக்கூட அவர்கள் பகிரங்கமாக அறிவிக்கவில்​லை. இந்த நில​மையில் அடுத்ததாக இன்று காங்கிர்ஸ் த​லைவர் ​சோனியா காந்தி​யை சந்தித்து ஆதரவு திரட்டப் ​போகிறார் (என்ன ராஜதந்திர​மோ! என்ன இழ​வோ ஒன்றும் புரியவில்​லை?).

​தேர்தல் கட்சிக​ளை நம்பி ​போராட்டத்தில் ஈடுபடுவ​தைவிட்டுவிட்டு மக்க​ளை நம்பி ​போராட்டத்தில் இறங்கலாம். உருப்படியாக தன் ​போராட்டக் கமிட்டியின் உறுப்பினர்கள் து​ணையுடன் இந்தியாவின் சகல மாநிலங்களுக்கும் ​சென்று மக்க​ளைச் சந்தித்து ​பொதுக்கூட்டங்கள், ​தெருமு​னைக் கூட்டங்கள், துண்டுபிரசுரங்கள் என பிரச்சாரத்​தை தீவிரப்படுத்தி மக்களின் ஆதர​வை திரட்டியிருக்கலாம்.

“மக்கள்தான் வரலாற்​றை ப​டைக்கிறார்கள்” என்ற மா​சேதுங்கின் ​மேற்​கோள்களில் நம்பிக்​கை இல்லாவிட்டாலும், இந்தக் அ​யோக்கிய, திருட்டு, சந்தர்ப்பவாத, அந்நியக் ​கைக்கூலி ​தேர்தல் அரசியல்வாதிக​ளை நம்புவதற்கு பதில் மக்க​ளை நம்பி களமாடிப் பார்க்கலாம். என்ன ​செய்ய, உள்ளார்ந்து பார்த்தால் அவரு​டைய ​​கோரிக்​கைகளின் அடிப்ப​டைகளி​லே​யே ஜனநாயகத்திற்கு எதிரான கூறுகள் இருப்பதாகக் கூறுவதில் உண்​மை இல்லாமலும் இல்​லை​யே!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: