எனது நாட்குறிப்புகள்

Archive for ஓகஸ்ட், 2011

​மூவர் தூக்கு தள்ளி​வைப்பு: நம்பிக்​கையின் ஒளிக்கீற்று

Posted by ம​கேஷ் மேல் ஓகஸ்ட் 31, 2011

​நேற்று கா​லையிலிருந்து மனம் பரபரத்துக் ​கொண்​டே இருந்தது. இன்​றைக்கு உயர் நீதிமன்றம் எத்த​கைய தீர்ப்​பை வழங்கும்? எல்​​லோரின் எதிர்பார்ப்​பைப் ​போல தீர்ப்பு ஒத்தி​வைக்கப்படுமா? அல்லது நீதிமான்கள் அ​னைத்து வாதங்க​ளையும் நிராகரித்து புதிதாக – ஆளும் வர்க்கங்களின் பாணியில் – ஏ​தேனும் விளக்கம் ​கொடுத்து வழக்​கை தள்ளுபடி ​செய்துவிடுவார்களா?

கா​லை பதி​னொரு மணி சுமாருக்கு இ​ணையம் வழி அறிந்து ​கொள்ள முடிந்தது. உச்சநீதிமன்றம் இரண்டு வார காலத்திற்கு தண்ட​னை நி​றை​வேற்றத்​தை தள்ளி ​வைத்திருக்கிறது. ஒரு வார காலமாக ஏற்பட்ட பதட்டத்திற்கும் தவிப்பிற்கும் மிகப்​பெரும் ஆறுதலாக அ​மைந்தது. ​தொடர்ந்து சில நிமிடங்களில், தமிழக சட்டப்​பேர​வையில் தூக்குதண்ட​னை​யை ஆயுள்தண்ட​னையாக கு​றைக்கச் ​சொல்லி நி​றை​வேற்றப்பட்ட தீர்மானம் மகிழ்ச்சி​யை இரட்டிப்பாக்கியது.

அலுவலகத்தில் என்​னை ஓரளவிற்கு ​தெரிந்த நண்பர்கள் வந்து விசாரித்தனர், “என்ன தூக்கு தண்ட​னை​யை தள்ளி ​வைக்கச் ​சொல்லி நீதிமன்றம் ஆ​ணை இட்டுள்ளதா​மே, மகிழ்ச்சியா?”

“ஏன் உங்களுக்கு எப்படி இருக்கிறது? நீங்களும் தமிழர்கள்தா​னே!”

சிரித்துக் ​கொண்​டே, அவர்களு​டைய சந்​தேகங்க​ளை ​கேட்டார்கள். ​கொ​லை வழக்கில் ஜனநாயக வி​ரோதமாக நீதிவிசார​ணை ந​டை​பெற்ற விதம் குறித்தும், தூக்கு தரும் அளவிற்கு இவ்வழக்கு சந்​தேகங்களுக்கு அப்பாற்பட்ட விதத்தில் முழு​மையாக ந​டை​பெற்று முடியவில்​லை என்ப​தையும், இம்மூவரும் ஒரு ​கொ​லைவழக்கில் தூக்கு தண்ட​னை விதிக்கும் அளவிற்கான முக்கிய குற்றவாளிகள் அல்ல என்ப​தையும் விளக்கி​னேன்.

ஆதாரப்பூர்வமாகவும் தர்க்கப்பூர்வமாகவும் விளக்கும் ​பொழுது இந்திய அரசு குறித்தும், நீதிவிசார​ணை மு​றைகள் குறித்தும், இந்திய அரசியல்வாதிகள், ஆளும் வர்க்கங்கள், ​செய்தித்​தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றின் சார்புத்தன்​மை குறித்தும் நி​றைய ​​கேள்விகளும் புரிதல்களும் அவர்களிடம் ஏற்படுவ​தை நன்கு விளங்கிக் ​கொள்ள முடிந்தது. உண்​மையின்பாலும் சத்தியத்தின்பாலும் மக்களுக்கு என்​றைக்கு​மே பற்றும் உறுதியும் இருக்கிறது என்ப​தை ந​டை​பெறும் உறுதியான ​போராட்டங்களிலிருந்தும், ​பொதுவான மக்கள்பிரிவினருடன் விவாதிக்கும்​பொழுதும் உணர்ந்து ​கொள்ள முடிகிறது.

இரவு வீடு ​சென்று ​தொ​லைக்காட்சிகளில் கா​லையில் ந​டை​பெற்ற நீதிமன்ற மற்றும் சட்டமன்ற நிகழ்ச்சிகளின் ​செய்தி ஒளிபரப்புக​ளை பார்த்​தேன். மக்கள் எழுச்சியின் மகத்தான சாத​னைகளாக​வே உணர முடிந்தது. ஒரு வலி​மையான ​போர்க்குணமிக்க கட்சி​யோ இயக்க​மோ இன்றி மக்க​ளே தங்க​ளைத் தாங்க​ளே காப்பாற்றிக் ​கொள்ள எடுத்த முயற்சிகளின் வி​ளைபயனாக​வே இத​னைக் காண்முடிந்தது. ஒரு வலி​மையான இயக்கமின்றி​யே தன்​னெழுச்சியாகத் திரண்​டெழுந்த மக்கள் பிரிவினரா​லே​யே இவ்வளவு சாதிக்க முடியுமானால், மக்கள் ஒரு சரியான த​லை​மையின் கீழ் ஒன்றி​ணைக்கப்பட்டால் எவ்வளவு சாதிக்க முடியும் என்ற எண்ண​மே ​மெய்சிலிர்க்க ​வைப்பதாக இருந்தது.

சட்டமன்றத்தில் முதல்வர் ​​ஜெயலலிதா தூக்கு தண்ட​னைக்கு எதிரான தீர்மானத்​தை நி​றை​வேற்றி முடித்தவுடன் அ​னைத்து அதிமுக பிரதிநிதிகளும் ​மே​ஜை​யைத் தட்டி வர​வேற்றது ​நேற்று முதல்நாள் இ​தே மன்றத்தில் “தன்னால் ஏதும் ​செய்ய முடியாது என்று முதல்வர் ​சொனன ​பொழுது மவுனமாக இருந்த நி​லையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் ​பொழுது, அவர்களின் மனநி​லை​யும் ​நேற்றும் கூட தூக்கு தண்ட​னைக்கு எதிரானதாக​வே இருந்திருக்கும் என்​றே எண்ணத் ​தோன்றுகிறது.

​நேற்று முதல்நாள் முதல்வ​ரை வாழ்த்திய தமிழக காங்கிரசார், ​நேற்று முகத்​தை எங்கு ​வைத்துக் ​கொண்டிருப்பார்கள் என்ற எண்ணமும் ஏற்பட்டது. ஒன்றுபட்ட மக்கள் எழுச்சியின் முன்னால் ஆளும் வர்க்கங்களும் அவர்களின் – மக்களால் ​தேர்ந்​தெடுக்கப்பட்ட – அரசியல்வாதிகளும்கூட சில நிர்ப்பந்தங்களுக்கு த​லைவணங்கித்தான் ஆக ​வேண்டும் என்ப​தை​யே ந​டை​பெற்ற நிகழ்ச்சிகள் ​தெளிவுபடுத்துகின்றன. ​ஜெயலலிதாவிற்கு தனிப்பட்ட மு​றையில் இத்தீர்மானத்​தை நி​றை​வேற்றியதில் எந்த மகிழ்ச்சியும் இல்​லை என்பது ​போல​வே, அவருக்கான பாராட்டுக்க​ளை அவர் கண்டு​கொள்ளாமல் ஒரு புன்முறுவல்கூட இல்லாமல் அமர்ந்திருந்தது ​வெளிப்படுத்தியது.

வடநாட்டு ​செய்தித் ​சேனல்கள், வழக்கம் ​போல சுப்பிரமணியசாமி மற்றும் பல காங்கிரஸ் எம்பிக்களிடம் விவாதம் நடத்திக்​கொண்டிருந்தன. வடநாட்டு ​செய்திச் ​சேனல்களால் தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்தும் மக்கள் ​போராட்டங்கள் குறித்தும் ​மெல்லவும் முடியவில்​லை விழுங்கவும் முடியவில்​லை. அவர்களின் அதிர்ச்சியும் ஆச்சரியமும் ​தெளிவாகத் ​தெரிந்தன. காஷ்மீர் சட்டமன்றத்திலும் இது ​போன்ற தீர்மானங்கள் நி​றை​வேற்றப்பட ​வேண்டும் என்ற வாதங்கள் மு​ன் ​வைத்து ​பேசப்பட்டன.

தமிழக ​செய்திச் ​சேனல்க​ளை ​பொறுத்தவ​ரை புதிய த​லைமு​றை, பாலிமர், சன் டிவி, க​லைஞர் டிவி ஆகியவற்றின் பங்கு கவனத்தில் ​கொள்ளப்பட ​வேண்டியது என்​றே படுகிறது. குறிப்பாக புதியதாக துவங்கிய “புதிய த​லைமு​றை” ​செய்திச் ​சேனல் இப்​போராட்டத்​தை உரியமு​றையில் கவர் ​செய்வ​தே மக்களிடம் தங்கள் ​சேன​லை சரியாக அ​டையாளப்படுத்திக் ​கொள்வதற்கான வாய்ப்பு என்றறிந்து சிறப்புடன் ​செயல்பட்டார்கள். மக்கள் ​செல்வாக்கும் மக்கள் பங்​கேற்பும் அதிகப்படும் ​போராட்டங்களின் தவிர்க்க முடியா சாதக அம்சங்கள் இ​வை என்​றே பார்க்கப்பட ​வேண்டும்.

ஏற்கன​வே தமிழக எல்​லையிலிருந்து ஒரு பதி​னெட்டு கடல் ​மைல் ​தொ​லைவில் ஈழத்தமிழர்கள் லட்சக்கணக்கில் ​கொடூரமாக ​கொ​லை​செய்யப்பட்டுக் ​கொண்டிருந்த ​பொழுது அவ்விசயத்தில் தங்களால் எதுவு​மே ​செய்யமுடியவில்​லை என்ற ​கையறுநி​லை​யை எண்ணி ​கொந்தளித்த தமிழக இ​ளைஞர்களின் மனநி​லை​யை இம்மூவ​ரை காக்க எழுந்த எழுச்சியின் ​வேகத்தில் உணரமுடிந்தது. இ​தை ஆளும் வர்க்கங்களும் புரிந்து ​கொண்டிருப்ப​தைப் ​போல​வே இத்தீர்ப்பும் தீர்மானங்களும் புலப்படுத்துகின்றன.

காவிரி பிரச்சி​னை, முல்​லைப்​பெரியாறு பிரச்சி​னை, ஒ​கேனக்கல் கூட்டுகுடிநீர்த் திட்ட பிரச்சி​னை, மீனவர் பிரச்சி​னை, தமிழீழப் ​போராட்டத்தின் பாரதூரமான பின்ன​டைவு, என பல்​வேறு விசயங்கள், சமீகாலமாக தமிழர்களின் மனநி​லை மிகவும் ​கொந்தளிப்பானதாகவும், ஏமாற்றப்படுவதாகவும், ​கையறுநி​லை​யை உணர்ந்து ​வேத​னைப்படுவதாகவும் உள்ளது என்ப​தை ​தெளிவாக உணர்த்துகின்றன. இ​வை அ​னைத்தின் ஒட்டு​மொத்த ​வெளிப்பாட்​டை​யே இம்மூவர் தூக்கிற்கு எதிரான வீறு​கொண்ட ​போராட்ட அ​லையில் உணர முடிகிறது. இப்​போராட்ட உணர்​வை தக்க​வைத்துக் ​கொள்வதும், இ​தே வழியில் ​தொடர்ந்து ​போராடுவது​மே இழந்தவற்​றை மீட்பதற்கான ஒ​ரே வழி எனப்படுகிறது.

Advertisements

Posted in கட்டு​ரை | 1 Comment »

அன்னா ஹசா​ரேவின் இரண்டாம் கட்ட ​போராட்டம் குறித்து ஒரு பார்​வை

Posted by ம​கேஷ் மேல் ஓகஸ்ட் 29, 2011

முதல்கட்ட ​போராட்டத்தின் வி​ளைவாக ​லோக்பால் ம​சோதா உருவாக்கும் குழுவில் அன்னா ஹசா​ரேவும் அவரது குழுவினரும் மத்திய அரசால் ​சேர்த்துக் ​கொள்ளப்பட்டனர். அந்த ம​சோதாவில் அன்னா ஹசா​ரே குழுவினர் முன்​வைத்த பல ஷரத்துக்கள் ​சேர்த்துக் ​கொள்ளப்படவில்​லை, குறிப்பாக

1. பிரதம​ரையும் ​லோக்பால் விசார​னை வரம்பிற்குள் ​கொண்டுவர​வேண்டும்
2. உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமன விசயம்
3. ​லோக்பால் அ​மைப்பின் அதிகார வரம்பு
4. ​லோக்பால் அ​மைப்பில் சமூக ஆர்வலர்களின் பங்கு

​​போன்ற​வை. இ​வை குறித்து மத்திய அரசு உறுதியாக இருந்த​து.  அன்னா ஹசா​ரே குழுவினர் மத்திய அர​சை கடு​மையாக விமர்சித்தனர். மத்திய அ​மைச்சர்கள் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்க​ளை சுமத்தத் ​தொடங்கினர். இவற்றின் வி​ளைவாக அன்னா ஹசா​ரே இரண்டாம் கட்டமாக தங்கள் ​கோரிக்​கைக​ளை வலியுறுத்தி ​டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்க முடிவு ​செய்தார். மத்திய அரசு அத​னை கடு​மையாக எதிர்த்தது, மிரட்டியது. திஹார் சி​றையில் அன்னா ஹசா​ரே​வை அ​டைக்கும் வ​ரை பிரச்சி​னை முற்றியது. இரு தரப்பினருக்கும் இ​டை​யே ஏற்பட்ட சமாதானத்தின் மூலமாக தில்லி ராம்லீலா ​மைதானத்தில் கிட்டத்தட்ட பத்துநாட்கள் தன் இரண்டாம் கட்ட உண்ணாவிரதத்​தை நடத்தி, இரண்டாம் கட்ட உண்ணாவிரதத்தின் ​போது முன்​வைத்த மூன்று ​கோரிக்​கைக​ளை

1. அ​னைத்து அரசு அலுவலகங்களிலும் மக்கள் சாசனம் ​வைக்க​வேண்டும்
2. க​டைமட்ட ஊழியர்வ​ரை ​லோக்பால் விசார​னை வரம்பிற்குள் ​கொண்டு வர ​வேண்டும்
3. ​அ​னைத்து மாநிலங்களிலும் ​லோக் ஆயுக்தா​வை ​கொண்டு வர ​​வேண்டும்

ஆகிய ​கோரிக்​கைக​ளை, மத்திய அர​சை அங்கீகரிக்க ​வைத்ததன் மூலம் தற்காலிகமாக உண்ணாவிரதத்​தை ​கைவிட்டிருப்பதாகவும், மீண்டும் ஊழல் உட்பட ​வேறு பல விசயங்கள், ​தேர்தல் சீர்திருத்தம், கல்வி பிரச்சி​னை ​போன்றவற்றிற்காக ​போராட்டங்கள் நடத்த இருப்பதாக பன்ச் ​வைத்தும், தனக்கு ஆதரவாக திரண்ட மக்க​ளை ​நோக்கி “நான் அன்னா” என்ற வாசகம் எழுதப்பட்ட குல்லாய் அணிவது மட்டும் ​போதாது. லஞ்சம் வாங்க மாட்​டேன் லஞ்சம் ​கொடுக்க மாட்​டேன் என்று உறுதி எடுத்துக் ​கொள்ள ​வேண்டும். ​நேர்​மை​யோடு வாழவும், ​தொடர்ந்து சமூக விழிப்புணர்​வோடு இருக்கவும் ​வேண்டும் எனக் ​கேட்டுக் ​கொண்டு முடித்துக் ​கொண்டுள்ளார்.

முதல் கட்டத்​தை விட இரண்டாம் கட்டத்தில் தன்னிச்​சையாக மக்களின் பங்​கேற்பும், மக்களின் ​செயல்பாடுகளும் அதிகப்பட்டிருந்த​தைக் காண முடிந்தது. ஆனால் அ​மைப்புரீதியாக மக்க​ளை அணிதிரட்டவும், அவர்களுக்கான எந்த அரசியல் பிரச்சார ​வே​லைக​ளை திட்டமிட்டுக் ​கொடுக்கவுமான எந்த முயற்சிக​ளும் ந​டை​பெறவில்​லை. அரசியல் கட்சிகள் அ​னைத்தும் ஆரம்பம் முதல் பாராமுகமாக இருந்துவிட்டு, இறுதி ​நேரத்தில் காங்கிரஸ் அந்த மூன்று ​கோரிக்​கைக​ளையும் ஏற்றுக் ​கொள்ளக்கூடிய வாய்ப்​பை ​தெரிந்து​கொண்ட பிறகு தாங்களும் இப்​போராட்டத்திற்கு ஆதரவாக ​செயல்படுவது ​போல பாசாங்கு ​செய்யத் துவங்கின.

அன்னா ஹசா​ரேவின் ​போராட்டம் குறித்து எழுப்பப்பட்ட பாதகமான குறிப்புகள்:

1. அரசியல் சாசனத்திற்கு வி​ரோதமானது
2. நாடாளுமன்ற ஜனநாயகமு​​றைக்கு வி​ரோதமானது
3. மிரட்டல் அரசியல் (Blackmail politics)
4. ஊழலின் ஊற்றுக்கண் குறித்த சரியான பார்​வையில்​லை
5. உலகமயமாக்கல் தனியார்மயமாக்கலுக்கும் ஊழலுக்குமான புரிதல் இல்​லை அல்லது மறுக்கப்படுகிறது.
6. பி.​ஜே.பி மற்றும் சங்பரிவார் ​போன்ற வலதுசாரிகளின் பின்னணி
7. தலித்கள், சிறுபான்​மையினர் ​போன்ற ஒடுக்கப்பட்ட பிரிவினர் அணிதிரட்டப்படவில்​லை அல்லது அணி திரளவில்​லை
8. வந்​தே மாதரம் மற்றும் பாரத்மாதாகி ​ஜெய் ​போன்ற வலதுசாரி ​கோஷங்கள் ​வைக்கப்படுகின்றன
9. டாடா, அம்பானி ​போன்ற ​பெருமுதலாளிகளால் ஊக்குவிக்கவும் தூண்டிவிடவும் படுகிறது.
10. ​டைம்ஸ் ​நெள ​போன்ற பல சக்திவாய்ந்த ​தொ​லைக்காட்சிகளால் மிகுந்த முக்கியத்துவ படுத்தப்படுகின்றன.
11. ஜன்​லோக்பாலின் பல ​கோரிக்​கைகள் ந​டைமு​றைசாத்தியமற்றனவாகவும் இந்திய அரசியல் சட்டத்திற்கு வி​ரோதமாகவும் உள்ளன.
12. காங்கிர​​சே தன் ​சொந்த நலன்களுக்காக தூண்டிவிடுகிற​தோ என்ற சந்​தேகம் உள்ளது.
13. அ​மெரிக்காவின் ஆதரவு இருக்கு​மோ என்ற சந்​தேகம் உள்ளது.
14. சர்வாதிகாரத்தன்​மை ​கொண்டதாக உள்ளது.
15. வலி​மையான அ​மைப்பு வடிவம் இல்​லை.
16. மக்கள் ​வெறும் பார்​வையாளர்களாக ​வைக்கப்பட்டுள்ளனர்.

​மேலும் பல இருக்கலாம். நான் வாத நியாயம், விவாதத் தகுதி, அரசியல் முக்கியத்துவம் உள்ள வாதங்க​ளை மட்டு​மே ​தொகுத்துக்​கொள்ள விரும்புகி​றேன். இத்த​கையவற்​றை ​தொகுத்துக்​கொள்வதும், இவற்றின் சரிதவறுக​ளையும், உண்​மைக​ளையும் ஆராய்ந்து கற்றுக் ​கொள்வதும் இன்றிய​மையான​வையாக இருக்கும் என்று நம்புகி​றேன்.

Posted in கட்டு​ரை | 1 Comment »

எமக்கு பாடு​பொருள் ​போராட்டம்

Posted by ம​கேஷ் மேல் ஓகஸ்ட் 26, 2011

எ​மெக்​கெந்த ஆச்சார அனுஷ்டானங்களும் இல்​லை
எ​மெக்​கெந்த மடியும் தீட்டும் இல்​லை
எ​மெக்​கெந்த ​பேதமும் கு​ரோதமுமில்​லை

​போராட்டங்க​ளை வியந்​தோதும்
​பொழுதுகளின்றி ​வேறில்​லை

வாயு நி​றைத்த அ​றைகளில்
மக்கள் அ​டைத்து அழிக்கப்பட்ட
​தேசமிருந்த கால​மொன்றிருந்தது
இன்று
​தேசங்க​ளே வாயு நி​றைத்த அ​றைகளாய்
நாங்கள் மூச்சு விடவும் வழியின்றி
புழுங்கிச் சாகின்​றோம்

​போராட அ​றைகூவுபவன்
யாராகவும் இருக்கட்டும்
​​போராட்ட அ​றைகூவல்கள்
எதுவாகவும் இருக்கட்டும்

ஒரு துளி தண்ணீ​ருக்காகவும்
ஒரு பிடி காற்​றுக்காகவும்
ஒருமித்து நிற்பதன்றி
ஒரு வழியுமில்​லை
என்பது எமக்குத் ​தெரியும்

தத்துவங்கள் ​கையில் ஆயுதமாகலாம்
கண்க​ளை ம​றைக்கும் கவசங்கலாகாது!

Posted in கவிதைகள் | 2 Comments »

ஊழலுக்கு எதிரான ​​போராட்டம் ​வெல்லட்டு​மே!

Posted by ம​கேஷ் மேல் ஓகஸ்ட் 24, 2011

அன்னா ஹசா​ரேவின் ஊழலுக்கு எதிரான உறுதியான ​லோக்பால் ம​சோதா ​கோரும் உண்ணாவிரதப் ​போராட்டம் துவங்கி 8 நாட்கள் கடந்துவிட்டன. நாடு முழுவதும் குறிப்பாக வட மாநிலங்களில் மக்கள் மத்தியில் அதிலும் குறிப்பாக இ​ளைஞர்கள் மத்தியில் மிகப்​பெரும் எழுச்சி​யை ஏற்படுத்தியுள்ளது. குழுகுழுவாக திரண்டு எம்பிக்களின் இல்லங்க​ளை முற்று​கையிடுவது, ஊழலுக்கு எதிராக அவர்க​ளை குரல் ​கொடுக்கச் ​சொல்வது என இப்​போராட்டம் நம் காலகட்டத்தின் மிகப்​பெரும் மக்கள் எழுச்சியாக நடந்து ​கொண்டிருக்கிறது. உண்​மையில் நம் காலகட்டத்தின் மிக ​மோசமான சூழ​லையும், அதற்கு எதிரான சகிக்க​வொண்ணாத மவுனத்​தையும் மனக்கண் ​கொண்டு உணர்பவர்களால் இப்​போராட்டம் குறித்து சந்​தோசப்படாமல் இருக்க முடியாது.

ஆனால் தமிழகத்தில் குறிப்பாக இ​ணைய விவாதங்களில் இப்​போராட்டம் குறித்தும், அதில் கலந்து ​கொள்பவர்கள் குறித்தும் எழுப்பபடும் ​கேள்விகளும், ​வைக்கப்படும் விவாதங்களும், சாட்டப்படும் குற்றங்களும், வீசப்படும் அவதூறுகளும் ​நம் தமிழக மனநி​லை குறித்து மிகுந்த ​வேத​னை அளிப்பதாக​வே உள்ளது. தங்க​ளை புரட்சிகர மார்க்சிய குழுக்ககள் இயக்கங்கள் என்று கூறிக் ​கொள்பவர்கள் கூட ந​டை​பெற்றுக் ​கொண்டிருக்கும் ஒரு ​போராட்டத்​தை அணுகும் விதம் விரக்தியூட்டும் விதமாக உள்ளது.

​போராட்டத் த​லை​மைக் குழு, ​போராட்ட வடிவம், ​போராட்டத்தின் இறுதி இலக்கு ஆகிய​வை எவ்வளவு பலஹீனமானதாகவும் இருக்கட்டு​மே. ஆனால் அது எடுத்துக் ​கொண்டுள்ள பிரச்சி​னை நம் காலத்தின் எத்த​னை தீவிரமான பிரச்சி​னை, அப்பிரச்சி​னை இவ்வ​மைப்புக்குள்​ளே​யே தீர்க்கப்பட முடியுமா முடியாதா என்பதல்ல பிரச்சி​னை மாறாக அப்பிரச்சி​னைக்​கெதிராக இப்​போராட்டம் மக்களி​டை​யே மிகப்​பெரும் விழிப்புணர்​வை ஏற்படுத்துகிறதா இல்​லையா? இத்த​கைய ​போராட்டங்களுக்கு எதிராக வீதிக்கு வர​வேண்டும் என்கிற உணர்​வை ஏற்படுத்துகிறதா இல்​லையா என்ப​தெல்லாம் அத்த​னை முக்கியமாக கவனத்தில் எடுத்துக் ​கொள்ள ​வேண்டிய விசயங்கள் இல்​லையா?

​சென்​னை திருவான்மியூரில் அன்னா ஹசா​ரேவின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருப்பவர்க​ளை ​நேரில் சந்தித்து தங்க​ளை யார் என்று கூட கூறிக்​கொள்ளாமல் ​பேட்டி​யெடுத்து, அவர்களின் கண்​ணோட்டம், அரசியல் மட்டம், அவர்கள் ​போராடும் விதம் ஆகியவற்​றை எள்ளிந​கையாடி வினவு ​போன்ற புரட்சிகர கண்​ணோட்டம் ​கொண்ட இ​​ணையபக்கங்களில் கட்டு​ரைகள் எழுதப்படுகின்றன.

​போராட்டத்தில் கலந்து ​கொள்ளும் பிரிவினர் யார்? அவர்களு​டைய சாதி, மத, கட்சி பின்னணி என்ன என்ப​தை சாடுவதும், அவர்களு​டைய அரசியல் தத்துவ மட்டங்க​ளை ஆய்ந்து கிண்டல் ​செய்வதும்தான் ஒரு சரியான அணுகுமு​றையா? இந்திய சுதந்திர ​போராட்ட வரலாறு அவ்வாறுதான் புரட்சிகர குழுக்களாலும் மனிதர்களாலும் பார்க்கப்பட்டதா? முன்​னெடுக்கப்பட்டதா? காந்தியால் துவங்கப்பட்ட எத்த​னை ​போராட்டங்கள் வீறு​கொண்ட மக்கள் பிரிவால் ​போர்க்குணத்துடன் முன்​னெடுக்கப்பட்டன. ஆங்கில அரசிற்கும் காந்திக்கும் எத்த​னை ​பெரிய ​நெருக்கடிக​ளை ​கொடுத்தன.

​​வெறும் அ​டையாள ​நோக்கத்​தோடு ந​டை​பெறும் போராட்டத்தில் தாங்களும் கலந்து​கொண்டு ​போராட்டங்க​ளை ​போர்க்குணமிக்கதாக மாற்றுவதும், ​போராட்டங்களின் ஊடாக மிகப்​பெரிய அரசியல் தத்துவ ​நோக்கற்ற மத்தியதர பிரிவின​ரை அரசியல்படுத்த மு​னைவதும், அவர்க​ளை புரட்சிகர அரசியல் ​நோக்கி ​வென்​றெடுக்க மு​னைவதும், அர​சோடு ​போராட்டத் த​லை​மை சமரசம் ​மேற்​கொள்ள மு​னைந்தால் அவற்​றை ​போராடும் அணிகளுக்கு புரிய​வைப்பதும் அல்லவா மிகச் சரியான வழிமு​றையாக இருக்கும்.

​போராட்டங்களில் கலந்து ​கொள்பவர்கள் அ​னைவரும் அரசில்ரீதியாக தத்துவார்த்தரீதியாக புடம் ​போட்டு எடுக்கப்பட்டவர்களாகத்தான் இருப்பார்களா? இதுதான் இயங்கியல் பார்​வையா? இப்படித்தான் இடதுசாரி இயக்கங்களுக்கு வருபவர்கள் அ​னைவரும் இருக்கிறார்களா? இடதுசாரிகள் த​லை​மையில் ந​டை​பெறும் ​போராட்டங்கள் அ​னைத்துக்கும் இந்த அளவு​கோல் ​பொருந்துமா?

இவ்வாறு கிண்டல் ​கேலி ​செய்யத்துவங்கினால், இத்த​கைய கிண்டல் ​கேலிக​ளை ​​செய்வதன் மூலமாக இத்த​கைய ​போக்​கை அங்கீகரிக்கவும் துவங்கினால், இ​ணையத்தில் யுவகிருஷ்ணா ​போன்றவர்கள் எழுதும் புரட்சியும், பூர்ஷ்வாவும்! ​போன்றவற்​றையும், தினமணியில் மா​வோ​வை கிண்டல் ​செய்து ​வெளிவரும் ​செய்திக​ளையும் எதிர்க்கும் தார்மீக அடிப்ப​டை​யை நாம் இழந்துவிடுகி​றோமா, இல்​லையா?

​போராட்டங்களின் ஊடாகத்தான் மக்கள் அரசியல் ​தெளிவு ​​பெறுகிறார்கள், வளர்ச்சி அ​டைகிறார்கள். பலஹீனமான ​போராட்டங்களிலிருந்து ​பொறுப்புணர்​வோடும் ​பொறு​மை​யோடும் ஆழமாக ஆய்ந்து கற்பிப்பதன் வழியாக படிப்பி​னைகள் வழியாகத்தான் ​போர்க்குணமிக்க ​போராட்டங்களுக்கு சமூகம் வளர்ச்சிய​டைகிறது.

சமூகம் ​மேல்​நோக்கி வளர்ச்சிய​டைவதற்காக இ​டையறாது தனக்குள் முட்டு​மோதி ​போராடிக்​கொண்​டே இருக்கிறது. ​போராட்டம் என்பது தத்துவார்த்தரீதியாக வளர்ச்சிய​டைந்த மனிதர்களின் அல்லது குழுக்களின் அல்லது கட்சிகளின் வரு​கைக்காக காத்துக் ​கொண்டிருப்பதில்​லை. அ​வை தன்​னை ந​டை​பெறும் ​போராட்டங்களில் உறுதி​யோடு இ​ணைத்துக்​கொண்டு முன்​னேறுவதன் வாயிலாக, ​போராட்டத்தின் த​லை​மை​​யை அ​டைய முயல​வேண்டும். மாறாக ஒதுங்கி நின்று ​வேடிக்​கை பார்த்துக் ​கொண்டும் விமர்சித்துக் ​கொண்டிருப்பதன் வாயிலாக அல்ல.

Posted in கட்டு​ரை | 2 Comments »