எனது நாட்குறிப்புகள்

தெய்வத்திருமகள்: நகல் அல்ல ​போலி

Posted by ம​கேஷ் மேல் ஓகஸ்ட் 3, 2011

திரு. ஷாஜி அவர்களுக்கு,

இம்மாத உயிர்​மையில் தங்களு​டைய ​தெய்வத்திருமகள் தி​ரைப்பட விமர்சனம் படித்​தேன். ​தொடர்ந்து உயிர்​மையில் தாங்கள் எழுதும் கட்டு​ரைக​ளை விருப்பத்துடன் படிக்கக்கூடியவன். இ​சை பற்றிய தங்கள் கட்டு​ரைகள் இ​சையறிவற்ற எனக்கு அதன்பால் நி​றைய ஆர்வத்​தை ஏற்படுத்துப​வை.

உங்களு​டைய இந்த விமர்சனம், எனக்கு சமீபத்தில் படித்த தமிழ்த் தி​ரைப்பட விமர்சனங்களி​லே​யே மிகவும் பிடித்திருந்தது. இத்த​கைய விமர்சனங்கள், நி​றைய விசயங்க​ளை ​யோசிக்க ​வைக்கவும் புதிய ​கோணங்களில் தமிழ்தி​ரைப்படம் குறித்த கருத்துக்க​ளை ​தொகுத்துக் ​கொள்ளவும் ​பேருதவியாக அ​மைகின்றன. எல்லாவற்றிற்கும் ​மேலாக ஆங்கிலம், இந்தி என்று பிற​மொழிகளில் வரும் நல்ல படங்க​ளை அறிமுகம் ​செய்வதாகவும் ஒப்பிட்டு நம் சமூகங்க​ளை புரிந்து​கொள்ள உதவுவதாகவும் அ​மைகின்றன.

தங்கள் கட்டு​ரை இரண்டுபாகங்களாக அ​மைகிறது. முதல் பகுதியில் படத்தின் முழு​மை​யின் மீதான விமர்சனத்​தையும், இரண்டாம் பகுதியில் வழக்கம்​போல சம்பவ சித்தரிப்புகளிலும், கதாபாத்திர வடிவ​மைப்பிலும் தமிழ்ச்சினிமா ​மேற்​கொள்ளும் அபத்தங்க​ளையும், ​கேவலங்க​ளையும், தர்க்கப்​பொறுத்தமற்ற அசட்டுத்தனங்க​ளையும் விமர்சிக்கிறீர்கள். இரண்டாம் பகுதி​யை​யேனும் நாம் பரவலாக தமிழ்தி​ரைப்பட விமர்சனத்தில் எல்லா இதழ்களிலும் காண முடிகிறது. ஆனால் முதல் பாகம் மிகவும் முக்கியமான​தென நி​னைக்கி​றேன்.

ஐயாம் சாம் என்னும் ஆங்கிலப்படத்தின் ஆத்மா​வை புரிந்து ​கொள்ளாமல் அதன் அடிப்ப​டை​யை சி​தைத்து தமிழ்ச்சினிமாவின் இலக்கணத்திற்​கேற்றபடி மறுஆக்கம் ​செய்யப்பட்ட ஒரு வியாபாரப் படம் என்றளவில் இல்லாமல், தங்களின் விமர்சனம் சினிமா என்றால் என்ன? வாழ்க்​கையின் எத்த​கையத் தன்​மை​யை ஐயாம் சாம் ​வெளிப்படுத்த மு​னைகிறது, அதன் அந்த ஆன்மா எவ்வாறு இந்தப் படத்தில் புரிந்து​கொள்ளப்படாம​லே​யே அல்லது மறுக்கப்பட்​டே மறுஆக்கம் ​செய்யப்பட்டுள்ளது என்ப​தை மிக அற்புதமாக விளக்கியுள்ளீர்கள்.

மனிதர்கள் ஏற்றுக்​கொண்ட வாழ்க்​கைக்கும் எதிர்பார்க்கும் வாழ்க்​கைக்கும்; மனிதர்களின் மீது திணிக்கப்படும் வாழ்க்​கைக்கும் அதன் ​போதா​மைகளுக்கும், ​போலித்தனங்களுக்கும்; சட்டங்களும் நீதிமன்றங்களும் நி​லைநாட்ட நி​னைப்பவற்றிற்கும் எதார்த்த வாழ்வின் உன்னதங்களுக்கும்; ​வெறும் வரவு ​செலவுகளாகவும், ​வெற்றி ​தோல்விகளாகவும் கணக்​கெடுக்கப்படுவதும் கணக்கு தீர்க்கப்படுவதுமான லாபநட்ட சமண்பாட்டு வாழ்க்​கைக்கு எதிராக முன்​வைக்கப்படும் அன்பு, பாசம், தன்மானம், சுயமரியா​தை, மனிதாபிமானம் இ​டையிலான முரண்பாடுகள் ​பொங்கிபிரவகிக்கும் வாழ்க்​கை​யின் அற்புதமான கணங்க​ளை எல்​லோ​ரோடும் பகிர்ந்து ​கொள்வதுதான் க​லை இலக்கியங்களின் உன்னதமான லட்சியங்களும் ​நோக்கங்களும் என்ப​தை ஐயாம் சாம் ​போன்ற படங்கள் ​வெளிப்படுத்துகின்றன என்ப​தை மிக அழகாக புரிய​வைக்கிறீர்கள்.

அ​தே ​நேரத்தில் ​தமிழ்ச்சினிமாவினால் ​தொடர்ந்து மலினப்படுத்தப்படும் வாழ்க்​கைச் சித்தரிப்புகளுக்கான காரணங்களாகக் கூறப்படும் “மக்கள் ரசிப்ப​தைத்தான் இயக்குனர்கள் படமாக்க முடியும்” என்பவற்​றை குறித்த சந்​தேகங்கள் சமீப காலங்களில் மிகவும் ஆழமாக ​கேள்விக்கு உள்ளாகிக் ​கொண்டிருக்கின்றன. ​மேற்​சொன்ன வாதம் தமிழ் இயக்குனர்களுக்கு எல்லாம் ​தெரியும் என்ற பாவ​னை​யை உள்ளடக்கி இருக்கிறது. தங்களு​டைய ஆழமான விமர்சனம் அந்த பாவ​னை​யை ​கேள்விக்குள்ளாக்குகிறது.

தமிழ் இயக்குனர்களுக்கு என்ன ​தெரியும் என்ன ​தெரியாது என்பது குறித்து தமிழ் அறிவுச்சூழல் புரிந்து ​கொள்வதற்காக அவர்களிடம் ​கேள்விகள் ​கேட்டு விளக்கம் ​பெற முடியாது. அதற்கு பதிலாக, அவர்கள் இது ​போன்று ​வேற்று ​மொழிகளில் வரும் படங்க​ளை மறுஆக்கம் ​செய்கின்ற மு​றைகளி​லே​யே அவர்களின் ​அடிப்ப​டை நேர்​மை, நாணயம், புரிந்து ​கொள்ளும் திறண் முதற்​கொண்டு நம் சமகால வாழ்க்​கை குறித்த அவர்களு​டைய ஒருங்கி​ணைந்த பார்​வையின் மட்டம், அவர்களு​டைய க​லை, இலக்கிய அழகியல் ரச​னை ஆகியவற்​றை புரிந்து​கொள்வதற்கான உ​ரைகல்லாக அ​மைகின்றன.

​தொடர்ச்சியான இத்த​கைய விமர்சனங்களால் மட்டு​மே தடம்மாறும், தி​சை​தெரியாமல் திண்டாடும் க​லை இலக்கிய ​தொடர்வண்டிக​ளையும், கப்பல்க​ளையும் இலக்​கை ​நோக்கி தி​சைகாட்டி இட்டுச் ​செல்ல முடியும் என்ப​தைப் புரிந்து ​கொள்ள முடிகிறது.

Advertisements

2 பதில்கள் to “தெய்வத்திருமகள்: நகல் அல்ல ​போலி”

 1. rajankurai said

  ஷாஜியின் விமர்சனம் இன்னம் படிக்கவில்லை. ஆனால் நீங்கள் தெய்வத்திருமகள் படத்தை முழுமையாக நிராகரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை (நகல் அல்ல போலி என்ற தலைப்பு உட்பட. இந்தப்படம் ஒரு தழுவல்). I am Sam இன் பிரச்சினை இந்தப் படத்தின் பிரச்சினையல்ல; அது “தமிழ் சினிமா” மயமாகியுள்ளது என்பது சரிதான். தமிழ் படத்தில் நிறைய தர்க்கப் பிழைகள் இருக்கிறது என்பதும் சரிதான். ஆனால் முற்றிலும் படைப்பூக்கமோ, அல்லது நுட்பமான அவதானிப்புக்களோ இல்லாத படம் என்று தெய்வத் திருமகளை தமிழ் சினிமா வரலாற்றுப் பின்னணியில் சொல்ல முடியாது என்றுதான் நினைக்கிறேன். காட்சிப்பிழை திரை இதழில் ஒரு விவாதம் வெளியிட்டுள்ளோம். இந்த வாரத்தில் கடைகளுக்கு வந்துவிடும். சந்தர்ப்பமிருந்தால் படித்துப் பாருங்கள்.

  • திரு. ராஜன்கு​றை அவர்களுக்கு,

   த​லைப்பு என்னு​டையதல்ல, உயிர்​மையில் வந்த திரு. ஷாஜியின் த​லைப்புதான். நான் அவரு​டைய விமர்சனத்​தை படித்துவிட்டு அவருக்கு எழுதிய கடிதத்​தைத்தான் என்னு​டைய வ​லைப்பூவில் மறுபதிப்பு ​செய்​தேன்.

   க​டையில் கி​டைத்தால் காட்சிப்பி​ழை படித்துவிட்டு தங்களுக்கு பதிலிடுகி​றேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: