எனது நாட்குறிப்புகள்

அஹம் பிரும்மாஸ்மி

Posted by ம​கேஷ் மேல் ஓகஸ்ட் 5, 2011

சமீபத்தில் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் தன்னு​​டைய வ​லைப்பூவில் ‘அஹம் பிரும்மாஸ்மி’ என்ற த​லைப்பில் ஒரு சிறு கட்டு​ரை எழுதி ​வெளியிட்டிருக்கிறார். அதில் அவர்

“போன நூற்றாண்டு அறுபதுகளில் ஒரு ​தென்னாப்பிரிக்கக்  கம்யூனிஸ்ட் எழுத்தாளர் (வெள்ளையர்)  இந்தியாவைப் பற்றி எழுதிய நூல் பார்லிமெண்டை ஒரு கலக்கு கலக்கியது. இரண்டு மூன்று பேர்களைத் தவிர ம்ற்றைய யாவரும் அந்த நூலைப் படிக்கவில்லை என்பது வேறு விஷயம். சல்மான் ருஷ்தியின்  ‘Satanic Verses” யைப் படிக்காமலேயே ரகளை செய்ய வில்லையா? அந்தத் தென்னாப்பிரிக்க எழுத்தாளர் Ronald Shegal எழுதிய ‘A crisis in India’ என்ற நூலைத் தடை செய்தார்கள்.”

அந்நூல்

“இந்திய மக்களுக்கு அவரவர் வீடுதான் அவர்களுடைய தேசம். வீட்டுக்கு வாசல் வெளிநாடு. அவர்களுடைய குடும்பந்தான் அவர் தேசத்துப் பிரஜைகள். பக்கத்து வீட்டுக்காரன் அந்நிய தேசத்தவன். தங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வார்களே தவிர, வீட்டுக்கு வெளியேயிருக்கும் அந்நிய தேசமாகிய சுற்றுப்புறம் எவ்வளவு அசிங்கமாகக் குப்பையும் கூளமுமாக இருந்தாலும் கவலைப் பட மாட்டார்கள்.”

என்பதாகவும்

அதற்குக் காரணம்

“இதற்குக் காரணம்,  பாரம்பரியமாக வரும் இந்தியர்களுடைய  சமயத் தத்துவந்தான் என்று அவர் எழுதியிருந்தார். அதாவது, ‘அஹம் பிரும்மாஸ்மி’ தனிப்பட்டவர்கள் தமக்குத் தாமே நாடும், individual salvation’ . சமூகத்தைப் பற்றிக் கவலையில்லை.”

இதற்கு தன் கருத்​தைக் கூறுமிடத்தில் இந்திரா பார்த்தசாரதி அவர்கள்:

“பௌத்தம், சநாதன மதத்தின் இந்தக் கொள்கையை எதிர்த்து, சமூகத்தைப் பேணியது பற்றி அவர் ஒன்றும் குறிப்பிடவில்லை.”

என்று கூறுகிறார். இதன் மூலமாக அவர் இவ்விசயத்தில் அத்​வைதம் குறித்த தன்னு​டைய எதிர்ப்​பை பதிவு ​செய்கிறார்.

ஆனால் இக்கட்டு​ரைக்கு ​நே​ரெதிரான கருத்​தை ​வெளிப்படுத்தும் அரவிந்தன் நீலகண்டன் என்பவரு​டைய தமிழ்​பேப்பர் என்ற இ​ணைய இதழில் ​வெளிவந்த “அத்வைதம் குற்றவாளியா? – 1
அத்வைதம் குற்றவாளியா? – 2″  என்ற கட்டு​ரைக​ளை குறிப்பிடும் ​ஜெய​மோகனின் ​நோக்கம் என்ன​வென்று நமக்குப் புரியவில்​லை.

தனக்கு விருப்பமான கருத்துக்க​ளை பரப்புவதற்கான சந்தர்ப்பமாக இ​தை எடுத்துக் ​கொள்கிறாரா? அல்லது இ.பா. ​போன்றவர்க​ளை படித்துப் பார்த்து திருந்துங்கள் என்று ம​றைமுகமாக சாடுகிறாரா? ​தெரியவில்​லை.

​சென்று அக்கட்டு​ரைக​ளை படித்தால் ​வெறும் இந்துத்துவ தத்துவ அடிப்ப​டைக​ளை கண்மூடித்தனமாக தூக்கிப்பிடிக்கும், விவாதத்திற்கு லாயக்கற்ற உதாரணங்களின் மீது நின்று ​கொண்டு ​பேசும் தன்​மை​யைத் தவிர, ஒன்றும் தத்துவத்​தை நியாயப்படுத்தும் வலுவான வாதங்க​ளைக் காண முடியவில்​லை.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: