எனது நாட்குறிப்புகள்

தெனாலிராமன் வளர்க்கும் பூ​னைகள் – 4

Posted by ம​கேஷ் மேல் ஓகஸ்ட் 7, 2011

ஞாயிறு கா​லை. வழக்கம்​போல நாட்டிய வகுப்பிற்கு என் மக​ளை வண்டியில் அ​ழைத்துப் ​போய்க் ​கொண்டிருந்​தேன். வா​யேதும் ​பேசாமல் அ​மைதியாக வந்தாள்.

“என்னம்மா ஏதும் ​பேசாமல் உம்னு வர்ற?” என்​றேன்.

“கிளாஸ் ​போய்ட்டு வந்து இந்தி படிக்கனும்” ​வேத​னை​யோடு முனகினாள்.

“ஏம்மா உனக்கு பிடிக்க​லையா?”

“எனக்கு இந்தி பிடிக்கலை”

“ஏன்?”

பதில் எதுவும் ​சொல்லாமல் நீண்ட மவுனம்.

இந்த மவுனங்களுக்கான பதி​லை புரிந்து​கொள்வதுதான் உ​ரையாடல்களில் மிக முக்கியமானது.

அந்த மவுனங்கள் ஆயிரமாயிரம் அர்த்தம் நி​றைந்ததாகவுள்ளது.

குழந்​தைகள் முதல் ​பெரியவர்கள் வ​ரை தங்க​ளை முழு​மையாக பிறர் புரிந்து​கொள்வார்களா? தங்களின் பிரச்சி​னைக​ளை இவர்களிடம் ​சொல்லலாமா? பிற​ரோடான தங்களின் நீண்ட அனுபவங்களும், வருங்கால உறவின் ​தொடர்ச்சி​யையும், தனக்கு அதனால் ஏற்படப் ​போகும் வருங்கால சிக்கல்க​ளுமாக ​சேர்ந்து ஏற்படுத்தும் அந்த பலமான அ​மைதி​யை புரிந்து ​கொள்வதற்கு நாம் முழு​மையாக அவர்க​ளையும், அவர்களது விருப்பங்க​ளையும், சிக்கல்க​ளையும், பிரச்சி​னைக​ளையும் உளப்பூர்வமாக அங்கீகரிக்கி​றோம். அவற்றிலிருந்து அவர்கள் விடுபட, எழுந்து முன்​னேற நாம் உளப்பூர்வமாக அவர்களுக்கு நம்பிக்​கைக்குரியவர்களாக இருக்கி​றோம் என்ப​தை ஏற்படுத்தாமல், நாம் மாறாமல் அந்த மவுனங்களின் அர்த்தங்க​ளை விளங்கிக் ​கொள்வது சாத்திய​மே இல்​லை.

“ஏன் இந்தி மிஸ் அடிக்கிறாங்களா?”

“இல்​லை”

“க​ரெக்டா ​சொல்லு இந்தி பிடிக்க​லையா இந்தி மிஸ் பிடிக்க​லையா?”

“எனக்கு இந்தி பிடிக்க​லைப்பா!”

“காரணத்​தை ​சொன்னாதானம்மா புரியும்”

“எல்லா ​பெரிய ​பெரிய ​பேராவா இருக்குப்பா, மனப்பாடம் பண்ண ​ரொம்ப கஷ்டமா இருக்குப்பா!”

“இந்தி எழுத்துக்களும், வார்த்​தைகளும் கத்துட்டு, ​சொந்தமா வாக்கியங்கள் உருவாக்கி ​பேசற அளவுக்கு நீ வர்ற வ​ரைக்கும்தான்ம்மா உனக்கு கஷ்டமா இருக்கும். அதுக்கு அப்புறம் எவ்வளவு ​பெரிய பதிலா இருக்குன்ற பிரச்சி​னை​யே இல்​லைம்மா. இந்தில எல்லா​மே க​தைகள் தான் நீ தமிழ்ல க​தைக​ளை புரிஞ்சிட்டு இந்தில ​சொந்தமா​வே நீ எழுதிடலாம். இப்ப எப்படி நீ இங்கிலீஷ்ல அம்மாகிட்ட, ஸ்கூல்ல மிஸ்கிட்ட சரளமா வாக்கியங்க​ளை உருவாக்கி ​பேசற. அது​போல இந்தியும் வரும் வ​ரைக்கும் தாம்மா கஷ்டம்”

மீண்டும் அ​மைதி . . .

அ​மைதிக்கான காரணத்​தை ​யோசிக்கி​றேன்.

அவள் மனதில் இப்படித்தான் நி​னைத்திருக்கக் கூடும்.

“உனக்கு என்னப்பா நீ ​சொல்லிடு​வே. தினமும் பிராத்மிக் எக்ஸாமுக்காக நான் படுறபாடு எனக்குத்தான ​தெரியும். நீ ஆபிஸ் ​போயிடு​வே. அம்மா என்​னை படித்து ஒப்பிக்கச் ​சொல்றதும், முடியாம நான் திண்டாடறதும். அடிவாங்குறதும், அழறதும். சமாதானம் ​சொல்றவங்க, அறிவு​ரை ​சொல்றவங்க யாருக்கும் யதார்த்தம் புரிய​வே புரியாது.”

யதார்த்த வாழ்வில் படிப்பு விசயத்தில், பள்ளி​யோ​டோ ஏன் கு​றைந்தபட்சம் அவள் அம்மாவிட​மோ கூட நான் நி​னைப்பவற்​றை புரிய ​வைக்க முடிவதில்​லை (கடந்த பாகங்களில் குறிப்பிட்ட​தைப் ​போல). ஒரு ​வே​ளை நான் அவள் பிரச்சி​னைக​ளை புரிந்து ​கொள்ள​வே முடியாதா? அவளுக்கான நியாயங்க​ளை பிறருக்கு புரிய​வைப்பதில் நான் ​கையாளாகாதவன் என்ற ​தெளிவான புரிதல் அவளுக்கு ஏற்பட்டிருக்கு​மோ?

நான் அவள் மன​தை மாற்றி சிரிக்க ​வைக்கலாம் என முடிவு​செய்​தேன்.

“ஏம்மா, இப்ப நான் உன்கிட்ட ஒரு க​தை​யை தமிழ்ல்ல ​சொல்​றேன்னு வச்சுக்​கோ . . .”

“ஒரு கிராமத்தில ஒரு மரத்துக்கு கீழ ஒரு பாட்டி வ​டை சுட்டுட்டு இருக்கா. அந்த மரத்து ​மேல ஒரு காக்கா உட்கார்ந்து வ​டை​யை​யே பார்த்துட்டு இருக்கு . . . அப்படின்னு நான் ​சொல்லிட்​டே ​போனா, உனக்கு இந்தில ​சொந்தமா வாக்கியங்கள் உருவாக்கத் ​தெரிஞ்சா நீ என்ன பண்ணுவ?”

“ஏக் காவ் ​மே ஏக் பாட்டி ரக்தா தா. வக் பாட்டி வ​டை சுட்டா ​ஹை . . .”

களுக்​கென்று சிரித்தாள். என் இந்தி​​யையும் அதில் உள்ள கிண்ட​லையும், ​பைத்தியக்காரத்தனத்​தையும் பார்த்து.

எப்படியாவது என் மகளின் பிரதிநிதியாக அவளின் பிரச்சி​னைக​ளை, வீட்டிற்கு ​சென்று என் ம​னைவிக்கு புரிய ​வைக்க மீண்டும் சபத​மெடுத்துக் ​கொண்​டேன்.

வகுப்பில் விட்டுவிட்டு வீடு வந்தவுடன். இந்த உ​ரையாட​லை என் ம​னைவியிடம் கூறி​னேன்.

“ஏங்க பிராத்மிக்ல ஒன்னும் ​கேள்வி பதில்கள் அவ்வளவு ​பெரியது கி​டையாது. நி​றைய ஒரு வரி பதில்களும், டிக் த பி​லோ ஆன்சர்ஸ் ​போன்ற ​கேள்விகளும் தாங்க. இவ​ளோட இந்தி மிஸ்​ஸே ​சொல்றாங்க இவளுக்கு எல்லா எழுத்துக்களும் நன்றாக ​தெரிகிறது. எந்த இடத்தில் எந்த ‘க’ ​போட​வேண்டும் என்ற அளவிற்கு இவளுக்கு நல்ல அறிவு இருக்கு. இவ பிரச்சி​னை இந்தி அவளுக்கு கஷ்டமா இருக்கு என்பதல்ல. சாய்ந்திரம் வந்ததும் வி​ளையாட முடியாம இந்தி டியூசனுக்கு அனுப்பிட​​றேன் என்பது தான். அப்படி ஒன்னும் நான் இந்திக்​கெல்லாம் அவ​ளை ​ரொம்ப ​தொந்தரவு ​செய்வதில்​லை.”

“அவங்க இந்தி மிஸ்கிட்ட கூட நான் ​சொல்லிட்​டேன் வர்ற மத்யமா வகுப்பிலிருந்து அவள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் வருவான்னு. நானும் அவ வி​ளையாடனும், சந்​தோசமா இருக்கனும் எப்ப பார்த்தாலும் படிபடின்னு ​தொந்தரவு ​செய்யக்கூடாதுங்கற விசயத்தில கவனமாத்தான் இருக்​கேன். நீங்க அவளுக்கு புரிய ​வைங்க. திரும்ப கூட்டிட்டு வரும்​போது . . .”

குழந்​தைகளுக்கும் அரசியல் இருக்கு. இத்த​கைய அரசியல் எங்கிருந்து உருவாகிறது? உ​ரையாடல்களுக்கான, சுதந்திரத்திற்கான, தனிமனித விருப்பு ​வெறுப்புகளுக்கான ​வெளிகள் மறுக்கப்படும், மறுக்கப்படும் என்கிற சந்​தேகம் எழும் எல்லா இடங்களிலும் இந்த அரசியல் தன்னியல்பாக மு​ளைக்கத் துவங்கிவிடுகிறது.

வாழ்வின் அவசரங்கள். ​பொறு​மையாக நிதானமாக பிரச்சி​னைக​ளை ​கையாள்வதற்கான, சிக்கல்க​ளை தீர்ப்பதற்கான எல்லா வாய்ப்புக​ளையும் எப்​பொழுதும் மறுத்துக் ​கொண்​டே இருக்கிறது. ​கைநழுவி விடு​மோ என்ற பதட்டம் எப்​பொழுதும் நமது சிக்கல்க​ளை ​மேலும் ​மேலும் அதிசிக்கல் நி​றைந்ததாக மாற்றிக் ​கொண்​டே இருக்கிறது.

ஆனாலும் விட்டுவிட முடியாத, விட்டுவிடாது ​தொடர்ந்து முன்​னெடுக்கப்படும் இந்த விவாதங்கள் மட்டு​மே. சிறிது மூச்சு விட்டுக் ​கொள்வதற்கான ​வெளி​யை ஏற்படுத்தித் தருகிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: