எனது நாட்குறிப்புகள்

ஊழலுக்கு எதிரான ​​போராட்டம் ​வெல்லட்டு​மே!

Posted by ம​கேஷ் மேல் ஓகஸ்ட் 24, 2011

அன்னா ஹசா​ரேவின் ஊழலுக்கு எதிரான உறுதியான ​லோக்பால் ம​சோதா ​கோரும் உண்ணாவிரதப் ​போராட்டம் துவங்கி 8 நாட்கள் கடந்துவிட்டன. நாடு முழுவதும் குறிப்பாக வட மாநிலங்களில் மக்கள் மத்தியில் அதிலும் குறிப்பாக இ​ளைஞர்கள் மத்தியில் மிகப்​பெரும் எழுச்சி​யை ஏற்படுத்தியுள்ளது. குழுகுழுவாக திரண்டு எம்பிக்களின் இல்லங்க​ளை முற்று​கையிடுவது, ஊழலுக்கு எதிராக அவர்க​ளை குரல் ​கொடுக்கச் ​சொல்வது என இப்​போராட்டம் நம் காலகட்டத்தின் மிகப்​பெரும் மக்கள் எழுச்சியாக நடந்து ​கொண்டிருக்கிறது. உண்​மையில் நம் காலகட்டத்தின் மிக ​மோசமான சூழ​லையும், அதற்கு எதிரான சகிக்க​வொண்ணாத மவுனத்​தையும் மனக்கண் ​கொண்டு உணர்பவர்களால் இப்​போராட்டம் குறித்து சந்​தோசப்படாமல் இருக்க முடியாது.

ஆனால் தமிழகத்தில் குறிப்பாக இ​ணைய விவாதங்களில் இப்​போராட்டம் குறித்தும், அதில் கலந்து ​கொள்பவர்கள் குறித்தும் எழுப்பபடும் ​கேள்விகளும், ​வைக்கப்படும் விவாதங்களும், சாட்டப்படும் குற்றங்களும், வீசப்படும் அவதூறுகளும் ​நம் தமிழக மனநி​லை குறித்து மிகுந்த ​வேத​னை அளிப்பதாக​வே உள்ளது. தங்க​ளை புரட்சிகர மார்க்சிய குழுக்ககள் இயக்கங்கள் என்று கூறிக் ​கொள்பவர்கள் கூட ந​டை​பெற்றுக் ​கொண்டிருக்கும் ஒரு ​போராட்டத்​தை அணுகும் விதம் விரக்தியூட்டும் விதமாக உள்ளது.

​போராட்டத் த​லை​மைக் குழு, ​போராட்ட வடிவம், ​போராட்டத்தின் இறுதி இலக்கு ஆகிய​வை எவ்வளவு பலஹீனமானதாகவும் இருக்கட்டு​மே. ஆனால் அது எடுத்துக் ​கொண்டுள்ள பிரச்சி​னை நம் காலத்தின் எத்த​னை தீவிரமான பிரச்சி​னை, அப்பிரச்சி​னை இவ்வ​மைப்புக்குள்​ளே​யே தீர்க்கப்பட முடியுமா முடியாதா என்பதல்ல பிரச்சி​னை மாறாக அப்பிரச்சி​னைக்​கெதிராக இப்​போராட்டம் மக்களி​டை​யே மிகப்​பெரும் விழிப்புணர்​வை ஏற்படுத்துகிறதா இல்​லையா? இத்த​கைய ​போராட்டங்களுக்கு எதிராக வீதிக்கு வர​வேண்டும் என்கிற உணர்​வை ஏற்படுத்துகிறதா இல்​லையா என்ப​தெல்லாம் அத்த​னை முக்கியமாக கவனத்தில் எடுத்துக் ​கொள்ள ​வேண்டிய விசயங்கள் இல்​லையா?

​சென்​னை திருவான்மியூரில் அன்னா ஹசா​ரேவின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருப்பவர்க​ளை ​நேரில் சந்தித்து தங்க​ளை யார் என்று கூட கூறிக்​கொள்ளாமல் ​பேட்டி​யெடுத்து, அவர்களின் கண்​ணோட்டம், அரசியல் மட்டம், அவர்கள் ​போராடும் விதம் ஆகியவற்​றை எள்ளிந​கையாடி வினவு ​போன்ற புரட்சிகர கண்​ணோட்டம் ​கொண்ட இ​​ணையபக்கங்களில் கட்டு​ரைகள் எழுதப்படுகின்றன.

​போராட்டத்தில் கலந்து ​கொள்ளும் பிரிவினர் யார்? அவர்களு​டைய சாதி, மத, கட்சி பின்னணி என்ன என்ப​தை சாடுவதும், அவர்களு​டைய அரசியல் தத்துவ மட்டங்க​ளை ஆய்ந்து கிண்டல் ​செய்வதும்தான் ஒரு சரியான அணுகுமு​றையா? இந்திய சுதந்திர ​போராட்ட வரலாறு அவ்வாறுதான் புரட்சிகர குழுக்களாலும் மனிதர்களாலும் பார்க்கப்பட்டதா? முன்​னெடுக்கப்பட்டதா? காந்தியால் துவங்கப்பட்ட எத்த​னை ​போராட்டங்கள் வீறு​கொண்ட மக்கள் பிரிவால் ​போர்க்குணத்துடன் முன்​னெடுக்கப்பட்டன. ஆங்கில அரசிற்கும் காந்திக்கும் எத்த​னை ​பெரிய ​நெருக்கடிக​ளை ​கொடுத்தன.

​​வெறும் அ​டையாள ​நோக்கத்​தோடு ந​டை​பெறும் போராட்டத்தில் தாங்களும் கலந்து​கொண்டு ​போராட்டங்க​ளை ​போர்க்குணமிக்கதாக மாற்றுவதும், ​போராட்டங்களின் ஊடாக மிகப்​பெரிய அரசியல் தத்துவ ​நோக்கற்ற மத்தியதர பிரிவின​ரை அரசியல்படுத்த மு​னைவதும், அவர்க​ளை புரட்சிகர அரசியல் ​நோக்கி ​வென்​றெடுக்க மு​னைவதும், அர​சோடு ​போராட்டத் த​லை​மை சமரசம் ​மேற்​கொள்ள மு​னைந்தால் அவற்​றை ​போராடும் அணிகளுக்கு புரிய​வைப்பதும் அல்லவா மிகச் சரியான வழிமு​றையாக இருக்கும்.

​போராட்டங்களில் கலந்து ​கொள்பவர்கள் அ​னைவரும் அரசில்ரீதியாக தத்துவார்த்தரீதியாக புடம் ​போட்டு எடுக்கப்பட்டவர்களாகத்தான் இருப்பார்களா? இதுதான் இயங்கியல் பார்​வையா? இப்படித்தான் இடதுசாரி இயக்கங்களுக்கு வருபவர்கள் அ​னைவரும் இருக்கிறார்களா? இடதுசாரிகள் த​லை​மையில் ந​டை​பெறும் ​போராட்டங்கள் அ​னைத்துக்கும் இந்த அளவு​கோல் ​பொருந்துமா?

இவ்வாறு கிண்டல் ​கேலி ​செய்யத்துவங்கினால், இத்த​கைய கிண்டல் ​கேலிக​ளை ​​செய்வதன் மூலமாக இத்த​கைய ​போக்​கை அங்கீகரிக்கவும் துவங்கினால், இ​ணையத்தில் யுவகிருஷ்ணா ​போன்றவர்கள் எழுதும் புரட்சியும், பூர்ஷ்வாவும்! ​போன்றவற்​றையும், தினமணியில் மா​வோ​வை கிண்டல் ​செய்து ​வெளிவரும் ​செய்திக​ளையும் எதிர்க்கும் தார்மீக அடிப்ப​டை​யை நாம் இழந்துவிடுகி​றோமா, இல்​லையா?

​போராட்டங்களின் ஊடாகத்தான் மக்கள் அரசியல் ​தெளிவு ​​பெறுகிறார்கள், வளர்ச்சி அ​டைகிறார்கள். பலஹீனமான ​போராட்டங்களிலிருந்து ​பொறுப்புணர்​வோடும் ​பொறு​மை​யோடும் ஆழமாக ஆய்ந்து கற்பிப்பதன் வழியாக படிப்பி​னைகள் வழியாகத்தான் ​போர்க்குணமிக்க ​போராட்டங்களுக்கு சமூகம் வளர்ச்சிய​டைகிறது.

சமூகம் ​மேல்​நோக்கி வளர்ச்சிய​டைவதற்காக இ​டையறாது தனக்குள் முட்டு​மோதி ​போராடிக்​கொண்​டே இருக்கிறது. ​போராட்டம் என்பது தத்துவார்த்தரீதியாக வளர்ச்சிய​டைந்த மனிதர்களின் அல்லது குழுக்களின் அல்லது கட்சிகளின் வரு​கைக்காக காத்துக் ​கொண்டிருப்பதில்​லை. அ​வை தன்​னை ந​டை​பெறும் ​போராட்டங்களில் உறுதி​யோடு இ​ணைத்துக்​கொண்டு முன்​னேறுவதன் வாயிலாக, ​போராட்டத்தின் த​லை​மை​​யை அ​டைய முயல​வேண்டும். மாறாக ஒதுங்கி நின்று ​வேடிக்​கை பார்த்துக் ​கொண்டும் விமர்சித்துக் ​கொண்டிருப்பதன் வாயிலாக அல்ல.

Advertisements

2 பதில்கள் to “ஊழலுக்கு எதிரான ​​போராட்டம் ​வெல்லட்டு​மே!”

 1. இலஞ்சம் மற்றும் ஊழல் இரண்டுமே ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்து இருக்க முடியாது.

  இலஞ்சம் என்பது கிராம நிர்வாக அலுவலரில் தொடங்கி மேல்மட்டம் வரை பொதுமக்களிடம் பெறும் கையூட்டு. எந்த விதிமுறைகளையும் மீறாமல் முறைப்படி ஒரு சான்றிதழ் பெற வேண்டுமானால்கூட கையூட்டு வெட்ட வேண்டும். இல்லை என்றால் காரியம் நடக்காது. அடுத்து அதே போன்றதொரு சான்றிதழை விதிமுறைகளை மீறி பெறவேண்டுமானாலும் கையூட்டு வெட்டியாக வேண்டும். என்ன இதற்கு தொகை கூடுதலாக இருக்கும்.

  ஊழல் என்பது ஒரு திட்டத்தை நிறைவேற்றும் போது ஒப்பந்தத்தைப் பெறுவதற்காகவோ அல்லது ஒருசாராருக்கு சலுகை காட்டுவதற்காகவோ அல்லது திட்டத்தை அறைகுறையாக நிவேற்றியோ அல்லது முழுமையாக நிறைவேற்றாமலேயோ ஒதுக்கப்பட்ட நிதியை ஒரு சிலர் கபளீகரம் செய்து கொள்வது.

  சுருக்கமாகச் சொன்னால் இலஞ்சம் என்பது பெரும்பாலும் சாமான்யர்கள் சம்பந்தப்பட்டது. ஊழல் என்பது மேன்மக்கள் சம்பந்தப்பட்டது. ஆக இரண்டிலும் மக்கள் பணம்தான் கொள்ளை போகிறது. இலஞ்சம் நேரடியாக நாமே கொடுப்பதால் கோபம் கொப்பளிக்கிறது. ஊழல் மக்கள் வரிப்பணமாக இருந்தாலும் அரசாங்கப் பணமாக இருப்பதால் மக்களுக்கு கோபம் இருந்தாலும் அது அவ்வளவாக கொள்பளிப்பதில்லை.

  லோக்பால் கொண்டுவந்தால் இவை எல்லாம் ஒட்டு மொத்தமாக ஒழிக்கப்பட்டுவிடும் என்றுதான் பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம் என்பதை இதுவரை ஒருவரும் விளக்கவில்லை.

  மொத்தமாக ஒழியாது என்றாலும் ஊழலை ஒழிப்பதற்கான ஒரு நல்ல முயற்சியாக இதை ஏன் பார்க்கக்கூடாது என சிலர் வாதிடுகிறார்கள்.

  ”நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
  வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்கிற வள்ளுவனின் வாக்கை எல்லாவற்றிருக்கும் பொருத்த வேண்டும் என்று சொல்கிகிறவர்கள் இதற்கு அவ்வாறு செய்யவில்லை என்பதிலிருந்தே அன்னா அசாரே செய்வது ஒரு ஸ்டண்ட் என்பதும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதும் தற்போது புரியத் தொடங்கியுள்ளது.

  • தங்களு​டைய பின்னூட்டத்திற்கு நன்றி!

   தத்துவத்திற்கும் ந​டைமு​றைக்கும் உள்ள வித்தியாசத்​தை நாம் புரிந்து ​கொள்ள ​வேண்டியிருக்கிறது என்ப​தே இப்பிரச்சி​னையில் நாம் விளங்கிக் ​கொள்ள ​வேண்டிய முக்கியமான விசயம் எனக் கருதுகி​றோம்.

   தத்துவம் எதிர்காலத்​தை ​நோக்கி ​செல்வதற்கான தி​சைவழிக​ளையும், விதிக​ளையும் வரலாற்றின் சாராம்சமாகப் ​பேசுகிறது. ஆனால் ந​டைமு​றை என்பது தத்துவம் ​பேசும் அந்த தூயவடிவில் எங்கும் நடப்பதில்​லை.

   மத்திய கிழக்குநாடுகளில் ஏறுபட்ட எழுச்சி​யை நாம் துனிசியாவில் ஒரு சா​லை​யோர வியாபாரிக்கு இ​ழைக்கப்பட்ட ​அநீதியின் ​வெளிப்பாடாகச் சுருக்க முடியாது, அது ஒரு culmination point அவ்வளவுதான். அந்த எழுச்சி​யை விளங்கிக் ​கொள்வதற்கு நாம் வரலாற்று, ​பொருளியல், அரசியல் பின்புலங்க​ளை​யே ஆராய்கி​றோம்.

   அது ​போல​வே ஊழல் கருப்பு பணத்திற்கு எதிரான ​போராட்டங்கள் என்பது இந்தியாவின் அரசியல் சமூக ​​பொருளாதாரம் ஆகிய சகல து​றைகளிலுமான பிரச்சி​னைகளின் ​வெளிப்படு மு​னையாகத் தான் நாம் பார்க்க ​வேண்டியுள்ளது. வரலாறு முன்​னோக்கி ​செல்வதற்கான உந்துசக்தி​யை இத்த​கைய தற்​செயல்களின் வழியாகத்தான் ​பெறுகிறது. தற்​செயலுக்கும் தவிர்க்கமுடியாதவற்றிற்கும் இ​டையிலான இயங்கியல் உற​வை புரிந்து ​கொள்வ​தே ​போராட்டங்க​ளை அதன் சரியான ​கோணங்களில் அ​டையாளம் காண்பதற்கும், அதில் உணர்வுப்பூர்வமாகவும், உத்​வேத்​தோடும், தன்னுணர்​வோடும் பங்​கெடுப்பதற்கான சரியான வழிமு​றை என்று நி​னைக்கி​றேன்.

   விருப்பமிருந்தால் ​​தொடர்ந்து ​பேசலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: